You are currently viewing மாதம் ஒன்றிரண்டு வாழ்வின் எனது  அனுபவங்கள் ஜனவரி 2022/1, அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்
Kalugu

மாதம் ஒன்றிரண்டு வாழ்வின் எனது அனுபவங்கள் ஜனவரி 2022/1, அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்

அனுபவங்கள் ஜனவரி 2022/1…

மாதம் ஒன்றிரண்டு வாழ்வின் எனது அனுபவங்கள் ஜனவரி 2022/1, அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்

மாதம் ஒரு அனுபவம் பற்றி எனது வெப்சைட் ப்லோக்கில், எழுதுவதாக தீர்மானித்து உள்ளேன்.

இத்தலைப்பு நமது வாழ்வில் மற்றவர்களின் முடிவுகள் எப்படி
வயது,
உறவு
போன்ற அதிகாரத்தை வைத்து நமது வாழ்க்கையில் திணிக்கப்படுகிறது.

இதெல்லாம் எப்படி பாதிக்கிறது. என்பதை பற்றிய ஒரு கண்ணோட்டம்

முக்கியமாக பழைய வாழ்வின் பாடாவதி அனுபவங்களை எழுதுவதன் மூலம் யாரை வெறுத்து விடலாம், யாரை ஒதுக்கிவிடலாம் போன்ற ஒரு தெளிவு கிடைக்கிறது.

எழுத எழுத 40 வருடம் முன் நடந்த சம்பவங்களின் பின்னணி காரணம் திடீர் என்று புலப்பட ஆரம்பிக்கிறது. உண்மையான அன்பு என்று இருந்ததா? இது போன்ற கேள்விகள் நிறைய வருகிறது. சந்தேகங்கள் வருகிறது.

சுமை விழும்

முடிவுகள் எடுக்கும், விதம் மற்றும் அதனால் வரும் பாதிப்புகள்

அனுபவங்கள் ஜனவரி 2022/1

So…

அப்படி எழுதுவது, இவர் அல்லது அவர் கூறிய முடிவுகளால்…
இப்படி மற்றவர்கள் மேல் புகார் அல்லது குற்றம் கூற எழுதவில்லை. மற்றவர்களின் முடிவுகள் நம்மை எப்படி இயக்குகிறது, அதனால் உள்ள நல்லது அல்லது கேட்டது என்ன என்று ஒரு ஆராயும் மனப்பான்மையில் எழுதுகிறேன்.

M S உதயமூர்த்தி மற்றும் நெப்போலியன் ஹில் போன்ற ஆசிரியர்கள், நிறைய முடிவுகளின் முக்கியத்துவம் பற்றி நிறைய எழுதியுள்ளனர். ஒரு முடிவு மனிதர்களை உயர்த்தியதும் உண்டு, வாழ்வை அழித்ததும் உண்டு.

முடிவுகள், எப்படி நியாயப்படுத்தப்படுகிறது, எப்படி மற்றவர்கள் மேல் திணிக்கப்படுகிறது, அதனால், மற்றவர்கள் எப்படி பாதிக்கிறது. நிறைய அலசி ஆராயலாம் என்று எனக்காக, எனது திருப்திக்காக, எழுதுகிறேன்.

 

இதில் வரும் அணைத்தும் கற்பனையே. பொழுது போகவில்லை என்பதால், யாரையாவது நினைத்து நொந்து கொள்ள முழுக்க முழுக்க கற்பனையில் எழுதியது.

MKP Pandorangan

குணமே அடுத்தவர்களை குறை கூறுவதே

அனுபவங்கள் ஜனவரி 2022/1..

Additionally…

ஒரு மனிதன்,மலேசியாவில் திருமணம் செய்து ஒதுங்கி கொள்ள விரும்பினான். தொழில் உள்ள இடத்தில குடும்ப வாழ்வை விரும்பியதே காரணம். அன்றாட வாழ்வை தினம் தினம் வாழ்ந்து முடிக்க தொழில் உள்ள மலேசியாவில், ஒரு மனைவி எதிர்பார்த்தான் அந்த மனிதன்.

இந்திய பெண்ணை திருமணம் செய் என்று அழையாத ஆலோசகர்களாக வந்து ரூபாய் 2 க்கு டீ வாங்கி வற்புறுத்தியவர்கள், பிறகு யாரும் அவனின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையை தீர்க்க உதவ வரவில்லை.

அவர்களின் சிலரால், வந்த மருமகளை குறை கூறி மேலும் மன உளைச்சல்தான் அந்த மனிதனுக்கும், அவனின் மனைவிக்கும் கொடுக்க முடிந்தது.

நாம் ஐஸ் கிரீமை நக்கி நக்கி சுவைப்பது போல் ஒவ்வொரு பிரச்னையையும், ஒரு பெரிய மனிதனாக இருந்து, தீர்ப்பதை, விட்டு விட்டு, பிரச்னையை சுவைத்தார்கள் என்றே அவன் நம்புகிறான்..

ஒரு ஆன்மீகவாதி , கீதை மற்றும் பாகவதம் கரைத்து குடித்தவர் சொன்னார். சம்சாரம் என்பது ஒரு சொரி புண் மாதிரி. அதை சொரிய சொரிய மிக சுகமாக இருக்கும். சுகத்தை அனுபவித்த பிறகு ரத்தம் வந்து வேதனை தரும்.

இன்றய சீரியல் நாடகத்தில், இவள் அவளையும், அவள் இவளையும் நாக்கை புடுங்குவதை போல் கேட்பது, நாடகம் ரசிப்பவர்களுக்கு, ஒரு சுகம் கிடைக்கும். சீரியல், மற்றும் சினிமா, இது போன்ற பாதிப்புகள் ஏற்படுத்துகின்றது என்பது குறிப்பிட தக்கது.

(சினிமா வரும் முன்பு, ஒரு நாடக மேடையில் வில்லனாக நடித்துக்கொண்டு இருந்தவருக்கு, தலையில் ஒரு ரசிகரின் செருப்பு வந்து விழுந்தது. அவர் நடித்த கொடூர வில்லன் பாத்திரம், ரசிகரின் மனதை இப்படி பாதிப்பை ஏற்படுத்தியதாக, அந்த செருப்பு, அவர் பெருமையாக, எடுத்துக்கொண்டார்.)

அது போன்று, பெரிய மனித தன்மையில், ஒரு குடும்பத்தில் இல்லாவிட்டால், மாற்றி மாற்றி, சொரிந்து சொரிந்து சுகமும் வேதனையும் அனுபவிக்கலாம்.

உண்மையாக இருக்கட்டும்.

பல குறுகிய மனம் vs பெரிய மனம் /விரிவடைந்த மனம்/ விஸ்தாரமான மனம்-அனுபவங்கள் ஜனவரி 2022/1

In addition …

கடவுளின் புண்ணியத்தில், அந்த மனிதனுக்கு இன்று பிள்ளைகளின் தேனிலவுக்கு, வெளிநாடு -ஆஸ்திரேலியாவுக்கும், ஜப்பானுக்கும் – செல்ல அனுமதிக்க பண வசதியை விட விசாலலமான, திறந்த மனம் இருந்தது.

சர்வ சுதந்திரம் கொடுக்கும் பெரிய மனம் இருந்தது.

Thus..அந்த மனிதன் அனுப்பிவைத்ததுக்கு, வசதி இருந்தது என்பது அவன் பெருமை அடையவில்லை. அவர்கள் போய், திருமண வாழ்வில் பெற வேண்டிய சில இன்பங்களை பெற்று வர அனுப்புவதற்கு, பெரிய மனம் /விரிவடைந்த மனம்/ விஸ்தாரமான மனம் / இருந்தது வைத்து அந்த மனிதன் பெருமை அடைகின்றான்.

Additionally..அந்த மனிதனின் வாழ்வில் பல குறுகிய மனம் படைத்தவர்களின், செயல்ளுக்கு, அந்த மனிதன் பலியாகிய அனுபவங்கள் உண்டு.

அன்றைய காலக்கட்டத்தில் தேனிலவுக்கு, ஒரு தனி ரூம் கூட குற்றாலத்தில் கொடுக்க வக்கு இல்லையா, அல்லது மனம் இல்லாத தலைமைத்துவமா என்று புரியவே இல்லை.

இன்றய சில அன்புமிகுந்த குடும்ப உறுப்பினர்கள், தனது வீட்டில் திருமணம் நடந்தால், அன்றய இரவு பெண் மாப்பிள்ளை சந்தோஷமாக இருக்க அத்தனை ஆசை படுகிறார்கள்.

மருமகள் தோளில் மாப்பிளை கை போட்டான் என்று சந்தோஷப்படுகின்றனர். பிரச்னை செய்வதில்லை.

அனால் அந்த மனிதன், ஒரு குமுதம் போன்ற வார இதழின் பெயரை வைத்து குற்றாலத்தில்,அதிலும் பிரச்னை. அந்த பிரச்னை, பெரியவர்கள் வரை வந்து கண்டிப்புக்கு ஆள் ஆகவேண்டியதாகியது. படு கேவலம் நிறைந்த தலைமைத்துவமாகத்தான் இருக்க வேண்டும். என்ன கன்றாவியான தலைமையோ?

By the way..அந்த மனிதன், இந்தியாவில் திருமணம் வேண்டாம், என்னை ஆளை விடு ஒதுங்கிக்கொள்கிறேன் என்றாலும், விடவில்லை. அந்த மனிதனின் நலனுக்காக அல்ல. கௌரவத்துக்காக. சமுதாய ஆமோதிப்புக்காக. மதிப்புக்காக.

Practically..அந்த மனிதனின், தேவைக்காக இல்லை. செக்கு மாடுகள் போல், மலேசியாவில் இயந்திரம் போல் உழைப்பதற்காகவாக இருந்து இருக்கலாம். மனைவி தேவை என்பது அந்த மனிதனின் தனிப்பட்ட உரிமை என்ற அறிவு கூட இல்லாமல் இருந்தது, இன்றும் அந்த மனிதன் பிரமித்து போய் இருக்கிறான்.

Thus…அந்த மனிதனுக்கு என்ன வேண்டும் என்ற சிறு துளி அக்கறையும் யாருக்கும் இல்லை.

சுயமாக முடிவெடுப்போம்!

So..அந்த மனிதனிடம் உனக்கு என்ன வேண்டும்? ஏன் மலேசியாவில் பெண் வேண்டும்? யாரும் புரிந்து கொள்ள தேவையில்லை என்றாலும் கூட,. தெரிந்து கொள்ள கூட ஆர்வம் இல்லை.

நானே பெரியவன். எனக்கே எல்லாம் தெரியும்.

நான் சொல்வதை கேள். நீ உறுப்புடுவாய்.

போன்ற அறிவுரையும், பயமுறுத்தும் அதிகார தோரணையிலும் அந்த மனிதனிடம் வலியுறுத்தப்பட்டது.

சிலர் கட்டிங் டீ வாங்கி கொடுத்து அறிவுரை சொன்னார்கள். அந்த மனிதனின் தந்தையார், மற்றவர்களுக்கு, நிறைய விருந்து சோறு போட்டு விட்டிருந்ததால், அந்த தந்தையரின் கருத்துக்கு ஆதரவு சாப்பிட்டவர்கள் கொடுத்திருந்தது, இன்று புரிகிறது.

இன்று இதெல்லாம் அந்த மனிதன் யோசித்து பார்த்தால், அந்த மனிதன் அதில் எத்தனை ஆலோசனை சொல்லியவர்களின்:

கெளரவப்பற்று இருந்தது என்று உணர்கிறார் அந்த மனிதன்.

To say…அந்த மனிதன் மேல் உள்ள அன்பில் எதுவும் வரவில்லை. மன்னிக்கவும். அந்த மனிதன் மேல் அன்பே இல்லை. அன்பே இல்லை என்பதுதான் சரியான வார்த்தை.

ஆண்பிள்ளைகள் மலேசியாவில், சம்பாதிக்கும் இயந்திரமாக கருதப்பட்ட காலம் அது.

தான் சொல்வதை கேட்க வேண்டும். ஆலோசனை சொன்னவர்கள்:

ஒரு வகையில், அந்த மனிதனின் தந்தையிடம் பல வகை பலன் அடைந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது.

ஆனால் இதே ஆலோசனையை, கேட்டு, விரும்பாமல், பெரியவர்களின் ஆக்கிரமிப்புக்கு, பயந்து, திருமணம் செய்த அந்த மனிதனின் உறவினன் ஒருவன் , இன்று கோவிட் 19 முதல், தொழில் வரை பலவிதமான அவதிப்படுகின்றான்.

By the way..அந்த மனிதனின் உறவினரின் வாழக்கையை வீண் அடித்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும். அந்த உறவினரின் வாழ்க்கை வீண் ஆனதோ இல்லையோ, அவனை நம்பி வந்த பெண் வாழ்வு வீண் ஆனது உறுதி என்றே சொல்லலாம்.

ஒதுங்கிக்கொள்ளல்

ஓ ஓ ஓ ஓ
கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ
வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊ ருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே

*************

வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்கை வாழத்தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல

**********

தாயை தேர்ந்தெடுக்கும் தந்தையை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை  இல்லை
முகத்தை தேர்ந்தெடுக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை  இல்லை
பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை
எண்ணிப் பார்க்கும் வேளையிலே
உன் வாழ்கை மட்டும் உந்தன் கையில் உண்டு அதை வென்று எடு

மேலும் மாதம் ஒன்றிரண்டு வாழ்வின் எனது அனுபவங்கள் ஜனவரி 2022.

அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும் தொடர்பானவற்றை படிக்க விரும்பினால், கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:-

அனுபவங்கள் ஜனவரி 2022/2.
அனுபவங்கள் ஜனவரி 2022/3..

இன்னும் அனுபவங்கள் மனோவியல் சாஸ்திர ஆராய்ச்சிபூர்வமாக வரும்

இப்படிக்கு,

MKP பாண்டுரெங்கன்