You are currently viewing மாதம் ஒன்றிரண்டு வாழ்வின் எனது அனுபவங்கள் பகுதி III பிப்ரவரி 2022 , அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்
Fairness

மாதம் ஒன்றிரண்டு வாழ்வின் எனது அனுபவங்கள் பகுதி III பிப்ரவரி 2022 , அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்

குறை கூறுவது பற்றி

  அனுபவங்கள் பகுதிIII பிப்ரவரி 2022- இதில் குறை கூறுவது பற்றி ஆராயலாம்.  
“ உங்கள் தூண்டுதல்கள் எதுவாக இருந்தாலும், மற்றொரு நபரை அவதூறாகப் பேசவோ அல்லது இழிவாகப் பேசவோ கூடாது. வதந்திகள், சிறு பேச்சுகள் மற்றும் பிறரைப் பற்றி அவதூறு பேசுவதை விட ஒருவரின் ஆன்மீக நிலையின் வளர்ச்சிக்கு ஆபத்தானது எதுவுமில்லை. வெற்றிகரமான மக்கள் இந்த மோசமான பழக்கத்தில் ஈடுபட மாட்டார்கள். இது ஒருவரின் சொந்த ஆன்மாவை அவமதிப்பது, எல்லையற்ற நுண்ணறிவு மீது உந்துதல்.”   நெப்போலியன் ஹில்
  By the way… அனுபவங்கள் பகுதிIII பிப்ரவரி 2022… So.. அடிக்டட் என்ற ஆங்கில வார்த்தைக்கு அடிமை என்று ஒரு பொருள். போதைக்கு, மதுக்கு, மாதுக்கு   அடிமை என்பார்கள். Additionally.. சமீபத்தில் ஒரு சீரியலில், ஒரு மனைவி கணவனுக்கு துரோகம் செய்வாள். இறுதியில், மனோவியல் ரீதியாக, அவளும் அடிக்டட் என்று மனோவியாதி மருத்துவர் வைத்தியம் செய்கிறதாக கதை வரும். So.. இதில் நுட்பம் நிறைய உள்ளது. அதை ஆராய இதில் இடம் இல்லை.

ஆடை தமிழ் படம்

ஆடை என்ற ஒரு தமிழ் படம். அதை நான் பார்க்க போகிறேன் என்றதும், பலர் முகம் சுளித்து விமர்சனம் செய்தனர். ஆடை உடுத்தாமல் நடிக்கிறாள் கதாநாயகி, என்றும், நான் பார்க்க போவது தப்பு என்று சொல்ல முடியாமல் சொன்னவர்கள் உண்டு. இன்றய தொழில் நுட்பம் நிறைந்த காலத்தில், ஆபாச படங்கள் இனாமாக அறவே மறைக்க படாமல் பார்த்து விடலாம். அதை விடுத்து ஆடை ஏன் பார்க்க வேண்டும்? என்னை பொறுத்தவரரை அந்த படம் எடுத்தவரின் நோக்கம் அறிய மிக ஆவல். So.. திரைக்கு பின் இருக்கும் டைரக்டர், தயாரிப்பாளர் நோக்கம் என்ன? இதை அறிவதில் ஆர்வம்.

மீண்டும் அடிக்ட்டட்

நமது தலைப்பு அடிக்ட்டட். மது மாது அடிமையாய் இருப்பது உயிரை எடுத்து விடும். நோய்வாய் ஆக்கும். But.. ஆனால் அதை விட கொடுமை யான  விதத்தில் பாதிப்பது, குறை சொல்வதற்கு அடிமையாக இருப்பது. மது மாது வருவது ஒருவன் வெற்றி அடைந்த பொழுது. மலேசியாவில், மாபெரும் சாதனை செய்த வியாபாரிகள், மது மாது அடிமை யானது, வாழ்வை அழித்து விட்டது நான் கண்ணால் பார்த்ததுண்டு. But.. ஆனால், குறை போன்ற அவதூறுகள் பேச அடிமை ஆனவர்கள் வாழ்வில் வெற்றி என்பதை சுவைத்து இருக்க வாய்ப்பு மிக குறைவு அல்லது இல்லை என்கிறார் நெப்போலியன் ஹில்.

ஆடை திரைக்கு பின்னால் என்ன என்பது போல, குறை கூறும் அடிமை பழக்கத்தின் பின் என்ன என்று பார்த்தல்..?

விதை போட்டு விதைத்து, தாவரங்கள் வளர்க்கப்படும் பகுதியை பல் பெயர்களில் அழைக்கிறோம். நெல் வயல், தென்னை தோப்பு, மல்லிகை தோட்டம் என்கிறோம். அனால் எல்லாம் நிலம் அல்லது மண் தான்.  மொத்தமாக, ரியல் எஸ்டேட் என்றும் சொல்கிறோம்.

ஆன்மீக எஸ்டேட்

நம்மிடம் ஆன்மீக எஸ்டேட் என்று ஒன்று இருக்கிறது. Thus.. இந்த ஆன்மீக எஸ்டேட்டிலிருந்து தான், மனிதன் உருவாக்கிய தொழில், வர்த்தகம், விமானம், வீடு உலகத்தில் உள்ள மனிதன் உருவாக்கிய ஆணைத்துப்பொருளும் வந்தது. Additionally.. எப்படி விவசாயம் செய்பவர், நிலத்தில் ரசாயனம், டீசல், போன்ற விஷப்பொருள் போடக்கூடாதோ, அதே போன்று, வாழ்வில் வெற்றியை சுவைக்க விரும்புபவர் அவதூறு பேசக்கூடாது. இது ஒரு வகையான மனிதனுக்கு தேவையான தரம். So.. பலவகையான தரங்களில் இது ஒரு முக்கியம் வாய்ந்த அக்குமார்க் போன்ற தரம். நமது ஆன்மீக எஸ்டேட்டை அழிக்க விரும்பினால், நிறைய குற்றம் குறை சொல்ல வேண்டும்.  

பிப்ரவரி முதல் பகுதியை படிக்க கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்க

இதில் எப்படி குடும்பம் முதல் தொழில் வரை பிரச்சனைகள் உருவாகிறது? ஏன் உருவாகிறது?

அனுபவங்கள் பகுதி II பிப்ரவரி 2022 – பரிணாம வளர்ச்சி & முன்னேற்றம்

ஜனவரி 2022ல் எழுதிய அனுபவங்களை படிக்க கீழ் உள்ள ஒவ்வொரு லிங்க் தனித் தனியாக கிளிக் செய்த்தால் படித்து அறியலாம்.

1, அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்
2, அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்
3, அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்
   

பழக்க அடிமைத்தனம் (addiction) என்பது ஏதாவது ஒரு பழக்கம் தொடர்பில் அளவுக்கு அதிகமான ஈடுபாடு கொண்டிருத்தலைக் குறிக்கும். பல சமயங்களில் உடலளவிலும், உள்ளத்தளவிலும் இத்தகைய பழக்கங்களில் தங்கியிருத்தலையும் இது குறிக்கும். போதைப்பொருள் பாவனை, மதுபானம்அருந்துதல், சூதாட்டம், புகைத்தல் அல்லது புகையிலை பிடித்தல் போன்றவற்றில் ஏற்படக்கூடிய பழக்கங்கள் இத்தகையவை ஆகும். சில பழக்கங்கள் தீங்கு தரும் பின் விளைவுகளைத் தரக்கூடியவையாக இருப்பினும், அவற்றினால் கிடைக்கும் திருப்தி காரணமாக, தொடர்ந்து குறிப்பிட்ட பழக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு மூளைச் சமநிலையற்ற தன்மை பழக்க அடிமைத்தனமாகும்.

 

Addiction is a brain disorder characterized by compulsive engagement in rewarding stimuli despite adverse consequences. A variety of complex neurobiological and psychosocial factors are implicated in the development of addiction. Classic hallmarks of addiction include impaired control over substances or behavior, preoccupation with substance or behavior, and continued use despite consequences. Habits and patterns associated with addiction are typically characterized by immediate gratification, coupled with delayed deleterious effects.