You are currently viewing மாதம் ஒன்றிரண்டு வாழ்வின் எனது  அனுபவங்கள் பிப்ரவரி 2022/, அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

மாதம் ஒன்றிரண்டு வாழ்வின் எனது அனுபவங்கள் பிப்ரவரி 2022/, அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்

நமது “பாராடைம்” (Paradigm) எப்படி நம்மை குருடாக்குகிறது?

Date: 1/2/2022

இந்த மாதம் அனுபவங்கள் பிப்ரவரி 2022/1….

இதில் எப்படி குடும்பம் முதல் தொழில் வரை பிரச்சனைகள் உருவாகிறது? ஏன் உருவாகிறது?

Actually..

திருமண இரவில் மணப்பெண் தாலிக்கட்டு பட்டு தான் கட்டி அறையில் நுழைய வேண்டும்…

கூடாது, கூடாது, மாப்பிள்ளையின் பாட்டி கட்டிய முதலிரவு பட்டுதான் கட்டவேண்டும்..

இல்லை, இல்லை வளைகாப்பில் கட்டிய பட்டு தான் கட்டி உள்ளே நுழைய வேண்டும்..

அது எப்படி, புது தம்பதிகள் கரு தடை சாதனம் பயன் படுத்தலாம்?

So…

இது போன்ற சாதாரண பிரச்சனைகளை எடுத்துக்கொள்வோம். எனது தொழில் பிரச்னை, சாதாரண மக்கள் புரிய கஷ்டம்.

Furthermore..

நான் ஒரு லாரி, உதிரி பாக வியாபாரி. நான் ஒவ்வொரு லாரி பாகமும் என்ன செயல் செய்கிறது என்பது அத்துப்படி.

But..

டாக்டர்களுக்கு, நமது உடலின் உதிரி பாகம் எப்படி செயல் படும் என்பது புரிகிறது அவர்களுக்கு.

ஒவ்வொரு குறிப்பிட்ட பாகத்தின் கடமை, நோக்கம் என்ன என்பது அவர்களுக்கு புரியும்.

Similarly..

மனோவியல் அறிந்தவர்களுக்கு ஒவ்வொரு நமது எண்ணங்களின் கூட்டு செயல் என்ன என்பது புரியும். அல்லது நாம் ஒரு செயல் செய்தால், அதன் அடிப்படை எந்த மாதிரியான எண்ணங்களுக்கு பிறந்தது என்பது புரியும்.

Thus..

அந்த எண்ணங்கள், மதம், கலாச்சாரம், பொறாமை, வெறுப்பு, ஆக்கிரமிக்கும் நோக்கம், போன்ற பல பல எண்ணம் என்ற விதையிலிருந்து வந்துஇருக்கலாம்.

Excactly..

தனது எண்ணங்களை ஆராயும் விழிப்புணர்வு என்பது இருப்பவர்களுக்கு மட்டுமே இதெல்லாம் உணர முடியும். தியானம் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு இருக்கும்.

மேற்கணட சில உதாரணம் எடுத்து பார்ப்போம். Thus…

உதாரணம் 1:-

“திருமண இரவில் மணப்பெண் தாலிக்கட்டு பட்டு தான் கட்டி அறையில் நுழைய வேண்டும்…”

“கூடாது, கூடாது, மாப்பிள்ளையின் பாட்டி கட்டிய முதலிரவு பட்டுதான் கட்டவேண்டும்..”

“இல்லை, இல்லை . வளைகாப்பில் கட்டிய பட்டு தான் கட்டி உள்ளே நுழைய வேண்டும்..”

மனோவியல் ரீதியாக பார்த்தல், குறிப்பிட்ட பட்டு தான் கட்ட வேண்டும் என்று விவாதிப்பது, அவர் அவர் வளர்த்து வந்த, குடும்ப பாரம்பரிய பழக்கத்தை ஆழ்ந்து நம்புகின்றனர்.

Additionally…

நான் சொல்லுவதே சரி, நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர் .

By the way..

firstly..

வளைகாப்பு பட்டுத்தான் கட்டவேண்டும் என்று 10 பேர் ஓட்டும், தாலிகட்ட பட்டு க்கு 2 ஓட்டும் இருந்தால்? ஜெயிப்பது 8 ஓட்டு.

So..

எது எப்படி போனாலும், திருமண இரவில், ஆடையே ஒரு தடை என்று நினைப்பது, புது தம்பதிகள்.

But..

secondly..

வேறு மாதிரி சொன்னால், வெளியில் எந்த பட்டை கட்டவேண்டும், சீர் எப்படி செய்து இருக்க வேண்டும் என்று அடித்துக்கொண்டு நாறும் குடும்பங்கள் எத்தனையோ.

இங்கே மணமக்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவ்வளவு கணக்கில் எடுப்பது இல்லை. மணமக்கள் குடும்ப வாரிசு உருவாக்கும் இயந்திரம் என்று கருதிய காலம் அது.

So..

வெளியில் சண்டை போடும் பெற்றோர்கள், உறவினர்களை பார்த்துவிட்டு, அறையில் எங்கே சந்தோஷம் இருக்கும்?

இன்றய நாகரீகம் சற்று முன்னேறி உள்ளது.

Additionally..

இதே மனோவியல் அடிப்படையில், ஒரு வீட்டு விசேஷத்துக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள், வந்த இடத்தில், சண்டையிட்டுக்கொள்வார்கள்.

தனக்கு நல்ல மேக் ஆப் தந்து உபசரிக்கவில்லை, தனக்கு தரமான பூ கொடுத்து உபசரிக்க வில்லை. சிறப்பிக்க அழைத்து, யார் சரி தப்பு என்று பஞ்சாயம் செய்யும் நிலை எத்தனை குடும்பங்களுக்கு வந்ததுண்டு?

So now..

உதாரணம் 2:-

குழந்தை பிறப்பை தள்ளி வைக்க, தடை சாதனம் கூடாது. இது ஒரு வாதம்.

எந்த அடிப்படையில் இது கூடாது? ஏன் கூடாது? சேலை கட்டுவதாவது தொலைகிறது என்று விட்டு விடலாம்.

காரணம் சேலை வாங்கும்போது, நண்பர், பெரியவர்களிடம் யோசனை கேட்பது ஒரு நடைமுறை.

தடை சாதனம் வாங்கும்போது, தெரியவில்லை என்றால், நம்பிக்கையானவர்களிடம் கேட்கலாம்.

நம்பிக்கையை காப்பாற்றுபவர்களிடம் கேட்கலாம். அல்லது பணம் செலவு செய்து டாக்டரிடம் கேட்கலாம்.

இந்த விஷயத்தில், முதலில், அறையில் படுக்கும் இருவர் மட்டுமே முடிவெடுக்க்க உரிமை உண்டு. கடவுளுக்கு கூட இதில் தலையிட உரிமை இல்லை.

அப்படி ஒருவேளை, தெரிந்தும் தெரியாமலும், மற்ற இளம் குடும்ப உறுப்பினர்கள் கணவன் மனைவி எடுக்க உரிமை உள்ள முடிவில் தலையிட்டு விட்டால்?

உடனடியாக, பெரியவர்கள், அறையில் உள்ள விஷயத்தில், மற்றவர்கள் தலையிட கூடாது, என்று கண்டிக்கவேண்டும். இல்லையேல், மணமக்களின் பெரியவர்கள் மீது எப்படி மரியாதை வரும்?

சரி இது போன்ற பிரச்சனைகள், பல ஆயிரம் கூறலாம். ஆனால், இதில் ஏன் இது போன்ற பிரச்சனைகள் உருவாகிறது என்ற கண்ணோட்டத்தில் ஆராய்வோம்.

Thus..

குறிப்பிட்ட கலாச்சாரங்கள் ஆகட்டும், பாரம்பரிய பழக்கமாகட்டும், எல்லாம் மனிதனின் அபிப்பிராயங்கள் வடிவெடுத்தவைதான்.

So..

நான் சொல்லறேன், குறிப்பிட்ட காரணத்துக்காக, நமது குல தெய்வம் இதுதான். இதுவே நமது வீட்டு தெய்வம்.

Additionally..

இப்படி வீட்டு விஷயத்தில் ஆரம்பித்து….

நானே தலைமை பூசாரி, ஆகவே இந்த கோவிலுக்கு, கண்டிப்பாக, ஒரு தேவதாசி அமைப்பு வரவேண்டும்….

கீழ் கண்ட சியாம் சிங்கா ராய் என்ற நெட்பிலிக்ஸில், திரை படம் பார்த்தேன். கற்பனை என்றாலும், உண்மை திணிக்கப்பட்ட கற்பனை.

But..

நமது பார்வை ஏற்பாடு உருவாகிறது, உருமாற்றப்படுகிறது? அதை விட மிக முக்கியமாக, நாம் எப்படி மற்றவரின் கண்ணோட்டத்தை, பார்க்க இயலாத பிறவி குருடாக இருக்கிறோம்?

நமது பார்வை, கண்ணோட்டம், பாராடைம் எப்படி உருவாகின்றது, உருவாக்கப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட பட்டு கட்டுவது முதல், கரு தடை சாதனம் வரை நமக்கு உருவாகும் அபிப்பிராயம், கருத்து எங்கிருந்து வருகிறது? என்றாவது இந்த கேள்வியை நமக்குள் நாமே கேட்டு இருக்கிறோமா?

Again..

பலர், கற்பது ஒரு முட்டாள் தனம், வேளை இல்லாதவன் செய்யும் செயல் என்பார்கள். ட்ராபிக் விளக்கின் சட்டம் தெரியாமல் நடந்தால் கூட, விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம்.

நான் வாகனம் ஓட்ட வில்லை. எனக்கு எதுக்கு, ட்ராபிக் சட்ட கல்வி? இந்த கேள்வியே ஒரு முட்டாள் தனமான கேள்விதான். குறைத்த பட்சம் சிவப்பு விளக்கு இருந்தால் மட்டுமே சாலையை தாண்டலாம், என்ற அறிவாவது இருக்கவேண்டும்.

வாகனம் ஓட்ட எனது பாட்டன் உயிர்தெழுந்து வந்தால், ஆழமாக ட்ராபிக் ரூல்ஸ் கற்க வேண்டும். இது ஒரு அடிப்படை அறிவு.

கற்பது முட்டாள்தனம் என்று நான் கருதி, அந்த கண்ணோட்டத்தில், சில விஷயங்கள் பாப்போம்.

மஹாபாரதத்தில், திருதராஷ்டனை, பிறவியில் கண் குருடு மட்டும் இல்லை, அறிவுகுருடனும் தான் என்று சித்தரிக்கப்படுகிறது.

கண் குருட்டுத்தனம் vs அறிவுக்குருட்டுத்தனம்

வேளை இல்லாத ஒரு காலேஜில் சில ப்ரொபசர்கள் ஒரு ஆராய்ச்சி செய்தனர்.

இந்த இளம் பெண் வரை படத்தை 5 நிமிடம் மட்டும் ஒரு வகுப்பு அறையில் பார்வைக்கு வைத்தனர்.

இளம் பெண் அனுபவம்

பிறகு அந்த படத்தை மறைத்து விட்டனர். அப்படத்தை பற்றி விவாதிக்க 10 நிமிடம் கொடுத்தார்கள்.

ஒருவன் நான் முத்தம் கொடுப்பேன் அந்த பெண்ணுக்கு, இன்னொருவன் அனைத்துக்கொள்வேன், திருமணம் செய்து கொள்வேன்….இப்படி இளைஞர்கள் பருவ வயது எண்ணங்களை அல்லி வீசினார்கள்.

Win Win
Not History Living
7 Habits of Highly Effective People
“அந்த காலம் இனி வருமா? பழைய கலாச்சாரம், இன்றய பிள்ளைகளுக்கு தெரியவில்லை. இப்படி சரித்திரத்தில் வாழ்வது மூடத்தனம், என்று எச்சரிக்கின்றனர் மனோவியல் நிபுணர்கள். நமது வாழ்வு துலைந்தாலும் பரவாயில்லை. மற்றவர்களை, அடிமையாக்கி விடாதீர்கள் என்று எச்சரிக்கின்றனர்.
அந்த காலத்து இளம் பிராய திருமணம் செய்வது, இளம் வயதில் கணவன் இறந்தால், குழந்தை பருவ மனைவியை விதவை ஆக்கி, பிறகு வேசி ஆக்குவது.
உடன் கட்டை ஏறியது சரி என்று விமர்சிப்பது, தேவதாசி முறை சரி என்று வாதிடுவது.
இன்றய விதவைகள் போட்டு வைப்பது தப்பு இல்லை என்று பயந்து பயந்து, வைத்துக்கொள்கின்றனர்.”

Furthermore..

அந்த இளம்பெண்ணின் வரை படத்தை மீண்டும் சற்று வர்ணம் எல்லாம் உள்ள முழு படம் எடுத்து, மற்றொரு வகுப்பு மாணவர்களையும் அழைத்து விவாதிக்க சொன்னார்கள்.

So..

முதல் வகுப்புக்காரன், கன்னத்தை தடவி, உன்னை காதலிக்கிறேன் என்றான். 2ம் வகுப்பு காரன் முட்டாள், ஒரு தாய் வயது காரியை, இப்படி தாரமாக பார்க்கிறாய் என்று குற்றம் சுமத்தினான்.

1ம் வகுப்பு மாணவர்கள், தாரமாகவும், 2ம் வகுப்பு மாணவர்கள் தாயாகவும், பாட்டியாகவும் விவாதித்தனர்.

old_lady
Both Lady

இந்த பிரச்னை தீராது. ஒரே ஒரு தலைமைத்துவம் தகுதி வாய்ந்த மாணவன் படம் அருகில் எதிர் வகுப்பு காரனை வரச்சொல்லி, இதோ பார் அவள் அழகிய கட்டை மூக்கு, என்றான்.

Then…

சில எதிர் வகுப்பு மாணவனை வரை படம் அருகில் வரவழைத்து விவாதிக்க ஆரம்பித்தனர்.

எதிரானவன், இல்லை அது மூக்கு இல்லை கண் என்றான். அதோ பார் அந்த 70 வயது கிழவியின் நீண்ட மூக்கை என்றான்.

Above all…

படத்தை சித்தரிக்க சித்தரிக்க, அதில் இளம் பெண்ணையும், வயோதிக பெண்ணையும், இரு தரப்பினர்களும் பார்த்தனர்.

Indeed..

தலைமைத்துவம் தகுதி இல்லாதவர்கள் நான் சொல்வதே சரி, நமது கலாச்சாரமே சரி, என்று சண்டை போடமுடியும் தவிர, காரியம் சாதிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது..

புரொபஸர்களின் ஆராய்ச்சி, அத்தனை பேரையும் பிரமிக்க வைத்தது. ஒரு வகுப்பு மாணவர்களிடம், இளம் பெண் வரை படமும், மற்றொன்றில் கிழவி படம் கொடுத்தது ஒன்று.

Although…

மாணவர்கள் வெறும் 5 நிமிடம் பார்த்தது, மற்றொரு பார்வையை குருடாக்கி விட்டது. கிழவியை பார்த்தவனால் குமரியை காண இயலவில்லை. குமரியை பார்த்தவனால், கிழவியை பார்க்க முடியவில்லை.

Anyway..

வாழ்நாள் முழுவதும் இந்த முறைதான் சரி அல்லது தவறு. இது போன்ற அபிப்பிராயங்கள் அசூர வடிவு எடுக்கும் போதுதான், புரட்சிக்காரன் என்று அழைக்கப்படும், பெரியார், அம்பேதக்கார், ஷியாம் சிங்கா ராய் போன்றோர்கள் வந்து, அடிமை வாழ்வு வாழ்வோராரின் வாழ்வை புதுப்பிக்கின்றனர்.

Of course…

அந்த ஆராய்ச்சி, நான் எனது அறிவுக்கண்ணில், என்ன வர்ண கண்ணாடி போட்டு இருக்கிறேன் என்ற விழிப்புணர்வு இல்லாதவர்கள், எதிலும் தலைமைத்துவம் பண்ணமுடியாது.

cultural-attributes-for-paradigm-shift-pgp-viva-vvit-8-638

So…

இந்த புடவை கட்டிதான், முதலிரவு செல்ல வேண்டும் என்ற கண்ணாடி போட்டுள்ளேனா?

Similarly..

கருத்தடை சாதனம் பயன் படுத்தக்கூடாது, என்ற கண்ணாடி போட்டுள்ளேனா? தேவதாசி முறை சரி, நமது கலாச்சாரத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற கண்ணாடி போட்டு இருக்கிறேனா?

Thus..

தேவை விப்புணர்வு.