அன்னதானம் செய்யும் கோவில்களின் அறக்கட்டளைகள்

அன்னதானம் செய்யும் கோவில்களின் அறக்கட்டளைகள்-எங்கே உள்ளது தெரியுமா?

அன்னதானம் செய்யும் கோவில்களின் அறக்கட்டளைகள் பற்றி கிணற்றுத்தவளைகளுக்கு தெரியாது.

So..

தனது ஊரிலே சொந்த மருமகள் கூட மதிக்காத மனிதர்களுக்கு தெரியாது.

ஒரு மருமகளின் ஆதங்கம்:

“நான் வாழ வந்த வீட்டுக்கு எதிரே இருக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள இயலாத வீட்டில் வாக்கப்பட்டு வந்துள்ளேன். எனது தலைவிதி.”

Thus..

அன்னதானம் சேவை செய்யும் கோவில்களின் அறக்கட்டளைகளில் நான் சமீபத்தில் செலவே இல்லாமல் சாப்பிட்டது, நாட்டரசன் கோட்டையில் கண்ணாத்தா கோவிலில்.

Additionally..

இன்னொரு மிகப்பெரிய அன்னதானம் சேவை செய்யும் கோவில்களின் அறக்கட்டளைகள், மாறான் என்ற பகுதியில் இருக்கும் மரத்தாண்டவர் கோவில்.

நாட்டுக்கோட்டை சமூகத்தார்கலின்அன்னதானம் செய்யும் கோவில்களின் அறக்கட்டளைகள்

நாட்டுக்கோட்டை சமூகத்தார்கலின் அன்னதானம் சேவை செய்யும் கோவில்களின் அறக்கட்டளைகள் ஏராளம். நான் கயாவில் சாப்பிட்டேன். காசியில் இருப்பதாக கேள்வி. இன்னும் எத்தனையோ?

By the way..

நாட்டுக்கோட்டையார் சமூகத்தில் பிறந்தவர்கள், அவர்கள் பிறந்த ஊரில் திருவிழா என்றால், தனது ஊர் திருவிழாவில் கலப்பது அவசியம் என்றும், முக்கியம் என்றும் பல நாடுகளில் இருந்து வந்து கலந்து கொள்ள முயல்கின்றனர்.

So..

மேற்சொன்ன கலாச்சாரம், பல பல பரம்பரையாக பல நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கின்றனர், என்பது தெரிந்ததே.

மலேசியாவில் இந்த சமூகத்தினரால், தைப்பூசத்திருவிழா, உலகப் புகழ் பெற்றது உலகம் அறிந்த உண்மை. கோவிட வரும் முன், மற்ற நாடுகளில் இருந்து, தைப்பூசத்துக்கு வருவதும் நான் சொல்லத்தேவையில்லை. தைப்பூசத்தால் நாட்டுக்கு அந்நிய நாட்டு பணம் நாட்டுக்கு வருகிறது என்பது குறிப்பிட தக்கது.

சில மேல மருங்கூரில் உள்ள வெறும் பசங்கள் புத்தி ஏன் குறுகிய புத்தியாக உள்ளது?

அன்னதானம் செய்யும் கோவில்களின் அறக்கட்டளைகள் & ஹரே கிருஷ்ணா

ஹரே கிருஷ்ணா பக்தர்களின் பிரசாத விநியோக புகைப்படங்கள் பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்க.

ஹரே கிருஷ்ணா பக்தர்களின் பிரசாத விநியோக 2-Food For Life

ஹரே கிருஷ்ணா பக்தர்களின் பிரசாத விநியோக 3-Mayapur

ஹரே கிருஷ்ணா பக்தர்களின் பிரசாத விநியோக புகைப்படங்கள் பார்த்தாலும் வெட்டிப்பசங்களுக்கு வெட்கம் வர வாய்ப்பு இருக்குமா?

கண்டிப்பாக வெட்கம் கெட்ட மனிதர்களுக்கு வெட்கம் வர சாத்தியம் இருக்காது இல்லையா?

நல்ல தரமான குடும்பங்களும் காணாமல் போய் விடும்

நமது அன்னதான சேவை கலாச்சாரத்தை வெளிநாட்டு மக்கள், எப்படி ஆர்வமாக எடுத்துக்கொண்டு, சேவை செய்கின்றனர்?
நாட்டுக்கோட்டை சமூகத்தினர், தனது ஊர் திருவிழாவில் கலந்து கொள்ள்கின்றனர்.
எத்தனை மருங்கூர் வாசிகள், தான் தனது பிறந்த, பூர்வீக ஊர் திருவிழா வரவேண்டும் என்று ஆர்வமாக உள்ளனர்?

ஒரு பாலகிருஷ்ணனும், 1986ல் கெடுதல் செய்த மாதிரி ஒரு சிலர் இருந்தால் போதும்.

என்னை போல் மேலமருங்கூர் போவதை 2019க்கு முன் தவிர்த்ததை போல் தவிர்த்து விடுவார்கள்.

மேலமருங்கூரில், விவசாயம் வருங்காலத்தில், செய்யாமல் போகலாம். இளைஞர்கள் படித்து, வெளியூர், வெளி நாடு செல்லலாம்.

ஒரு பாலகிருஷ்ணன், 1986ல் தேங்காய்க்கு அடித்துக்கொண்டு ஒரு கூட்டம் இருந்தால் போதும். அடியோடு, மு கி பாலுச்சாமி செட்டியார் குடும்பம் அந்த ஊரில் காணாமல் போனது போல் அணைத்து நல்ல தரமான குடும்பங்களும் காணாமல் போய் விடும்.

மேல மருங்கூரின் சாபக்கேடு

1986ல் கோவில் கட்டியவரை விரட்டி அடித்தது ஒன்று. அத்துடன், அடுத்த வாரிசு மேல மருங்கூரை மறந்து விட்டது.

சாதிக்க முடிந்தவர்கள் விரட்டியிருந்தாலும், பெருமை படலாம். வெறும் பசங்களின், வெட்டிப்பசங்களின் செயல்கள், 36 ஆண்டுகள் ஒன்னும் புடுங்க இயலாமையில் இருந்தது.

இன்றும் எனக்கு மதிப்பு மட்டுமே முக்கியம் என்ற பிடிவாதத்தால் வாழும் ஒரு குடும்பம், பல இடையூறுகள் செய்கின்றனர்.

36 வருட கோவில் வளர்ச்சியை, நாசப்படுத்தி விட்ட பெருமை அந்த எனக்கு அடையாளம் தெரியாத வெட்டிப்பங்களுக்கே சேரும்.

கொடுக்கின்றவன் கொடுக்கட்டும். சாப்பிடுகின்றவன் சாப்பிடட்டும். இவனுங்களுக்கு, அதாவது வெட்டிப்பசங்களுக்கு என்ன பிரச்னை?

தரம் வாய்ந்த மனிதர்கள், போட்டி போட்டுக்கொண்டு பெரிய பெரிய ஸ்தலங்களில் அறக்கட்டளை அமைப்பை உண்டுபண்ணி அன்னதானம் சேவை செய்கின்றனர்.

கீழே அன்னதானம் சேவை 10 நாள் திருவிழாவில், எத்தனை அன்னதானங்கள்? இந்த 2 வருடத்தில் எத்தனை அன்னதானங்கள்? இதை ஏன் இந்த 36 வருடங்களாக, கோவிலை கட்டியவரை விரட்டிய அறிவற்றவர்கள் இது போன்ற தர்ம காரியங்கள் செய்யவில்லை?

அன்னதானம் சேவை என்பது, கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கின்றனர். அதற்க்கு மூல காரணம், கடவுள் கொடுக்கும் வலிமையை கொடுத்தது ஒன்று.

கண்ணாத்தா கோவிலிலும், மரத்தாண்டவர் கோவிலிலும், கயா நகரத்தார் மடத்திலும் நானும் சாப்பிட்டு, பலன் அடைந்தேன்.

மருங்கூரின் சாபக்கேடுதான்

அதை போல் எத்தனையோ குடும்பங்கள் சாப்பிடும் புகை படங்கள் கீழே உள்ளது.

வேறு மாதிரி பேசினால், கொடுக்கின்றவன் கொடுக்கட்டும். சாப்பிடுகின்றவன் சாப்பிடட்டும். இவனுங்களுக்கு, அதாவது வெட்டிப்பசங்களுக்கு என்ன பிரச்னை?

36 ஆண்டுகளாக கொடுத்து தர்ம பலன் அடைவதையும், பிரசாதமாக சாப்பிட்டு கடவுளின் அருளை பெறுவதையும் கெடுத்தது, மருங்கூரின் சாபக்கேடுதான்

கோவில் எப்படி இருக்க வேண்டும்?

கோவில் என்றால் நான் தலைவன், என்னை கட்டிக்கொண்டு அழுங்கடா. வருடம் பல தூண்டும் தேங்காயும் கொடுங்கடா. என்னை பெரிய மனிதன் என்று நினைங்கடா, மதிங்கடா.

இந்த மாதிரி மனிதர்கள் இருக்கும் வரை கோவிலில் கடவுள் தங்க முடியாது. வெறும் கல் சிலை மட்டும் தூசி படிந்து இருக்கும்.

அயலூரில் எவனோ சம்பாதித்து, புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கோவில் கட்டி, 4 பெரிய மனிதன் என்று மாற்றி மாற்றி மரியாதை செய்து கொண்டு இருந்தால் கோவில் எப்படி உருப்படும்?

அதன் பெயர் கோவில் இல்லை. மனிதனுக்கு சேவை செய்யும் இடம் கோவில் இல்லை. தெய்வத்துக்கு தொண்டு செய்து வழிபடும் இடம் தான் கோவில் என்று பெயர்.

மனிதனுக்கு சேவை செய்யும் இடங்கள், ஆஸ்பத்திரி, மசாஜ், உணவகம், சுடுகாடு போன்று இன்னும் பல உள்ளன.

கோவில் எப்படி இருக்க வேண்டும்? மேல மருங்கூர் செல்வ விநாயகர் ஆலய அறக்கட்டளையிடம் கற்றுக்கொள்ளலாம்.

இந்த 2 4 2022 ல் மட்டும் 1200 பேருக்கு அன்னதானம். பொது மக்களை வேண்டுதல் வைக்க, அது நிறைவேற, திரும்ப அதே மக்கள் நன்றி செலுத்த, இப்படி நடவடிக்கை நிறைந்த (இரத்த ஓட்டம் நிறைந்த) கோவில் இப்படித்தான் இருக்க வேண்டும்.

செயல் பாடே இல்லாத பங்களா போன்ற கட்டடங்களை, பேய் பிசாசு சினிமா எடுக்க வாடகைக்கு விடலாம். வழிபட இயலாது.

அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு ஒரு சில சவாலான கேள்வி?

மேலமருங்கூர் பிறந்த நான், 3,5 அல்லது 5 பேர் அந்த ஊரில் தேங்காய் மூடி வாங்க, சில உருப்படாத கலாச்சாரத்தில் ஊறிப்போனதின் விளைவு என்னை போன்றார்கள் கோவிலுக்காக திரும்பி கூட 36 வருடங்கள் பார்க்கவே இல்லை.

கோவில் காட்டியவர் கூட தன் கட்டிய கோவிலை போய் பார்க்க விரும்பா ஆகிவிட்டது அந்த விளங்காத கலாச்சாரம். அவர் பிள்ளைகளுக்கும் அந்த கோவில் மேல் பற்று இல்லாமைக்கு அந்த நாசமாப்போற தேங்காய் மூடி கலாச்சாரம் காரணமாகி விட்டது.

உண்மை பக்தியில் செயல் படவில்லை என்பது உறுதி. உண்மையான பக்தி இருந்து இருந்தால், சிலரை ஏப்ரல் 2ம் தேதி 2022 திருவிழாவுக்கு அழைக்க வில்லை என்று குறை வந்ததாக, எனது சிற்றப்பா மகன் கோவிந்தன், மூலம் தெரிந்து கொண்டேன்.

இதில் உள்ள விசித்திரம், சுமார் 2000 பேர் அழைக்காமல் வந்து அன்னதானத்தில் கலந்து கொண்டனர். அவர்கள், பால் குடம் எடுத்தார்களா, பிரசாதம் சாப்பிட்டு சென்றார்களோ, சேவை செய்தார்களா, மொட்டை போட்டுக்கொண்டார்களா, என்பது முக்கியம் இல்லை. ஒரே வார்த்தையில் அவர்கள் உண்மையான பக்தியில் செயல் படுகின்றனர்.

மரியாதை, அழைப்பு இல்லை என்றால் எந்த நாசமாப்போற திருவிழா நடந்தால் எனக்கு என்ன? நான் வீட்டை பூட்டி விட்டு போய்விடுவேன் என்ற கொள்கை மிக கேவலமானதாகத்தான் நினைத்து நானும், பல வியாபாரிகளும் பகிர்ந்து, கேலி செய்து இருந்தோம்.

அறக்கட்டளை உறுப்பினர்களே? உங்கள் செயல் பாடுகள், வருங்கால மேலமருங்கூரில் பிறந்தவர்கள், திருவிழாவுக்கு வர ஆசைப்பட உங்கள் செயல்கள் அமையுமா? இல்லை, என்னை போல், மேலமருங்கூர் திசை பக்கமே திரும்பாமல் போக போறார்களா?

கடந்த காலங்களில் தேங்காய் மூடி வாங்கியவர்கள் வெறும் 4,5 பேரை ஊரோடு, வாய் பார்க்க போகிறார்களா? அல்லது, பக்தி சேவை புரியும் அனைவரையும் அரவணைத்து நிர்வாகம் செய்ய போகிறீர்களா?

தலைமைத்துவம் & என்னை மதிக்கவேண்டும் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்க