நாம் நம்மை ஆக்கிரமிக்க அனுமதிக்கிறோமே ஏன்?
அல்லது,
ஏன், எப்படி, எது நம்மை நாம் மற்றவர்களை ஆக்கிரமிக்க நமக்கே தெரியாமல் அனுமதிக்கிறோம்?
இதற்க்கு ஒரே பதில் போதிய தனக்கு விழிப்புணர்வு இல்லை என்று சொல்லி விடலாம். ஆனால் பலருக்கு இது புரிய ஆயுட்காலம் போதாது.
வேறு விதத்தில் சொன்னால், போதிய விழிப்புணர்வு தனக்குள் வளர்த்துக்கொள்ள எந்தவித முயற்சியும் செய்யவில்லை என்று கூறலாம்.
மிக சாதாரணமான குடும்ப விவாதங்கள், சண்டைகள், பிரச்சனைகள் என்று ஒரு சில மனோவியல் ஆராய்ச்சியாளர்களை வைத்து, செலவு செய்து ஆராய்ய்ந்தால்?
குடும்ப விவாதங்களின், சண்டைகளின், பிரச்சனைகளின் மூலம் மிக சில காரணிகள் மட்டுமே தலைப்பாக இருக்கும். மனோவியல் வல்லுநர்களுக்கு செலவு செய்ய தயார் இல்லாத காரணத்தால், எனக்கு தெரிந்த சில காரணிகளை தருகிறேன்:
- எனக்கு சர்வ சுதந்திரம் வேண்டும். நான் என்னை, எனது குடும்பத்தை, எனது செயல்களை நான் ஆழ வேண்டும்.
- நான் உன்னை, உனது குடும்பத்தை, செயல்களை, நாட்டை ஆழவேண்டும்
இதுவே மிக அடிப்படை என்று எனக்கு தோன்றுகிறது. நான் மனோவியல் வல்லுநர் இல்லை என்பது மட்டும் இல்லை. நான் அடிப்படை கல்வியே பெறாதவன்.
யாரும் இது பற்றி கருத்து தெரிவிக்க என்னை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.
அறிவுள்ளவனுக்கும் அறிவில்லாதவனுக்கும் உள்ள வித்தியாசம்-ஒரு விழிப்புணர்வு
அடி பட்டும் திருந்தாதவன்-அறிவற்றவன்
திருட போகும் ஒரு மாணவனை பார்த்து, ஒரு பெரியவர் தப்பு என்று அறிவுரை சொல்லி, அவன் மறுத்து திருட போவான். திருடும்போது, பிடிபட்டு, பிறகு அடியும் மிதியும் வாங்கி வருவான்.
உடன் நலம் பெற்றதும் மீண்டும் திருட செல்வான். மீண்டும் மீண்டும் வாழ்நாள் முழுதும் இதே திருடுவது, அடியும் மிதியும் வாங்குவது தொடர்ந்து நடக்கும்.
இவன் பட்டும் திருந்தாதவன் சங்கத்தை சேர்ந்தவன்.
அடி பட்டு திருந்துபவன்
ஒரு சில திருட்டுக்கு பிறகு, பிடி பட்டு, அடியும் மிதியும் வாங்கியபின், திருட்டை விட்டுவிடுபவன், பட்டு திருந்துபவன் சங்கத்தை சேர்ந்தவன்.
அறிவை பயன்படுத்துபவன் – சிறிது அறிவுள்ளவன்
முதல் திருட போகும்போது, ஒரு பெரியவர் பிடி பட்டால், அடியும் மிதியும் பற்றி விளக்கியதும், அவன் அறிவைக்கொண்டு கற்பனையில் வலியை உணர்ந்து திருட போவதை விட்டு விடுவான்.
அறிவு உள்ளவன் சங்கத்தை சேர்ந்தவன் இவன்.
விழிப்புணர்வும் அறிவும் நிறைந்தவன்- ஆக்கிரமிக்க அனுமதிக்கிறோமே ஏன்?
வா திருடுவோம் என்று நண்பர்கள் கூப்பிட்டால், இவனுக்கு பொருள் ஆசை வரும். ஆனால், வேதங்கள் போன்ற நன்னெறிகளை உடையவன், கற்று அறிந்து தேர்ந்தவன் என்பதால். தனது பொருள் ஆசையை விழிப்புணர்வுடன் ஆராய்வான். வேதங்கள் திருடுவதை ஆமோதிக்கிறதா என்றும் ஆராய்வான்.
ஒரு வகையில் பார்த்தல் இவனுக்கு சுய அறிவு இல்லாதவன் என்று கூறலாம். விழிப்புணர்வு நிறைந்தவன் என்று கூறவேண்டும்.
இவன் திருடவேண்டாம் என்ற முடிவுக்கு வர மூல காரணம் வேதம் போன்ற கற்ற அறிவு. வேதத்திடன் கடன் வாங்கிய அறிவு.
*****
நாம் அனைவரும் இந்த உலகத்தில் கடன் வாங்கிய அறிவில்தான் வாழ்கிரோம். பிறந்ததும் பால் குடிக்க வாயை சூப்பும் அறிவு மட்டும்தான் இருந்தது.
******
சிறு பிள்ளைக்கு உள்ள கதை
மேல் கூறிய திருடன் கதை அல்லது உதாரணம், ஒரு சிறு பிள்ளைக்கு உள்ள கதையாக இருந்தாலும், அது பல பல குடும்ப வாழ்வியளை உணர வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வாத்து தங்க முட்டை கதை சிறு வயதில் படித்து இருப்போம். ஆனால் அந்த கதையை வைத்து, தலைமைத்துவ செயல்திறன் பற்றி உலகம் முழுதும் விளக்கியவர் Stephen R Covey என்பவர்.
அவரின் நூல் உலகம் முழுதும் பல கோடி பல உலக மொழிகளில் விற்பனையாகியுள்ளது. தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
*****
பெரியவர்கள் கட்டுப்பாட்டில்- நாம் நம்மை ஆக்கிரமிக்க அனுமதிக்கிறோமே ஏன்?
சட்டம் சொல்கிறது குழந்தைகளை, பெரியவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று.
குழந்தைகள் ஐஸ் கிரீம் வேண்டாம், மொபைல் வேண்டாம் என்றால், பெரும்பகுதி பெரியவர்கள்தான் தோற்கின்றனர். குழந்தை தனக்கு வேண்டியதை ஆடம் பிடித்து சாதிக்கிறது.
குடும்பத்து சண்டைகள், பிரச்சனைகளிலும் இதே விஷயத்தை ஆழ்ந்து யோசிப்பவர்களுக்கு புலப்படும்.
நாம் பெரியவர்கள், ஐஸ் கிரீம் வயதை கடந்து விட்டோம். இளம் கணவன் மனைவி தம்பதிகள் தேவையான ஆசைகளையும் கடந்து விட்டோம்.
சாந்தி முகூர்த்தத்தில், மணப்பெண்
“எனது பேரன் கல்யாணத்தின் சாந்தி முகூர்த்தத்தில், மணப்பெண் நிச்சயதார்த்த புடவைதான் கட்டி அறையில் நுழைய வேண்டும்.”
“கூடாது, அவள் திருமண பாட்டுதான் கட்டி செல்ல வேண்டும்”
இப்படி இரு பெரிசுகள் சண்டை போட்டுக்கொண்டாள்?
அதன் உள் மனோவியல் அர்த்தம்/காரணம் என்ன?
இரு பெருசுகளும், நான் சொல்வதே சரி. தனது குடும்ப கலாச்சாரமே சரி. நான் சொல்வதை மற்றவர் கேட்க வேண்டும். எனது கருத்து இந்த குடும்பத்தில் சட்டமாக இயங்க வேண்டு,
இந்த இரு பெருசுகளில், ஒன்று பலகீனமாக இருந்தால், ஒடுங்கி அடங்கி போங்கப்பா என்று பின்வாங்கி விடும். இரண்டு பெரிசுகளும் வலுவானதாக இருந்தால் தெரு சண்டை ஆகிவிடும்.
பேர பிள்ளைகளுக்கு நல்லது செய்கிறேன் என்ற மூடநம்பிக்கையில், நிம்மதியற்ற சாந்தி முகூர்த்தமாக போய்விடும்.
சாந்தி முகூர்த்தத்தை நாசப்படுத்துவது, உடுத்தும் உடையில் மட்டும் இல்லை. சீர் சண்டைகள், போன்ற நிறைய உள்ளது.
*******
உயிருடன் எரித்தனர்-நாம் நம்மை ஆக்கிரமிக்க அனுமதிக்கிறோமே ஏன்?
சில வருடங்கள் முன்பாக, ராமநாத புறத்தில், ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்ததால், தம்பதிகளை மரத்தில் கட்டி, மகள்/மகன் என்று பார்க்காமல் உயிருடன் எரித்தனர் என்று கேள்வி பட்டேன்.
எல்லாமே “நான் சொல்வதே சரி”, “நானே/எனது கருத்தே இந்த ஊர்/நமது ஜாதி மக்களை வழிநடத்த வேண்டும்”…இது போன்ற என்ன விதைகளில் முளைத்து மரம் ஆகியதின் விளைவுதான்.
“பாரத நாடு போல் ஆகுமா?” வெளிநாடு சென்றவர்கள், இது போன்ற கலாச்சாரத்துக்கு அஞ்சி பாரத நாட்டுக்கு திரும்ப விரும்புவது இல்லை.
சுருக்கம்-நாம் நம்மை ஆக்கிரமிக்க அனுமதிக்கிறோமே ஏன்?
நாம் நம்மை ஆக்கிரமிக்க அனுமதிக்கிறோமே ஏன்?
இதன் சுருக்கம் சர்வ சுதந்திரமே அவசியம் என்று ஒரு கூட்டமும், நானே ஆழ வேண்டும், நானே ஆக்கிரமிக்க வேண்டும் என்று ஒரு கூட்டமும் உலகத்தில், நமது சமூகத்தில் வாழ்கிறது.
இந்த இரண்டும் கருத்துக்கள் சண்டைகள் போடுகிறது. பலகீனம் அடங்கி பொய் விடுகிறது. வலுவானது ஆக்கிரமிக்கிறது.
இந்த கருத்துக்கள் வேற்றுமை சண்டைகள், அரசியல், தொழில், கோவில், குடும்பம், சமூகம் என்று எல்லா இடங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நான் சொல்வது உண்மை என்று அறிய பெரிய பெரிய புத்தகங்கள் படிக்க தேவையில்லை. கீழ் கண்ட சில சரித்திர சீரியல் பார்த்தல் நிறைய புரிந்துவிடும்.
https://youtu.be/eKEqjRbK24k
https://youtu.be/1ojgx651vYs
https://youtu.be/9GgxinPwAGc
https://youtu.be/Yi4YnwFT7Gk
மேலும் மற்ற தலைப்புக்களை படிக்க இந்த லிங்கில் கிளிக் செய்யலாம்.
நான் பிறந்த ஊரான மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் முகநூல்
இப்படிக்கு,
MKP பாண்டுரெங்கன்
மலேசியா