You are currently viewing இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா???
டி கடையில் வீண் பேச்சு

இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா???

ஆணவத்தை அளப்பது எப்படி?…..

நான் என்று சொல்லப்படும் எனது ஆத்மா ஆரோக்யமாக இருக்கிறதா அல்லது நோய்வாய் பட்டுள்ளதா?  5 7 2020

இக்கட்டுரை 5 7 2020ல் பிரசுரித்தது.

இப்பொழுது 11 7 2023ல் சற்று மெருகு ஏற்றி, இங்கும் அங்கும் தச் ஆப் செய்து மறு பப்லிஷ் செய்கிறேன். சிகப்பு வர்ணம் எழுத்துக்கள் புதிதாக சேர்க்கப்பட்டது.

ஆணவத்தை அளப்பது எப்படி?

“நான்” என்பது ஆத்மா என்று உணர்ந்தவர்கள், ஆத்மாவிற்கு இந்த பிறவியில் வழி நடத்த, இந்த வாகனமாகிய உடலை எடுத்திருக்கிறது என்று உணர்ந்தவர்கள், எதற்காக இந்த பிறவி, நம்மால் எவ்வாறு ஆன்மீக ரீதியாகவும், பிறருக்கு எந்த விதத்தில் உதவ முடியும் என்பதையும்  யோசிக்க முடியும். எல்லா வகையிலும் வெற்றி, சந்தோசம், மன நிறைவு ஆகியவற்றை பரிசாக எடுத்து செல்வர்.

ஓஷோ தனது பகவத் கீதையில் மூன்றாவது புத்தகத்தில் கூறுகிறார்: இளமையில் உடல் ஆரோக்யமாக இருக்கும் காலங்களில் கால் வலி, கை வலி, உடல் வலி தெரிவதில்லை. குழந்தைகளுக்கு நாள் முழுதும் விளையாண்டு உடல் வலி தெரியாது.

அது போல ஆரோக்யமான ஆத்மா உள்ளவனுக்கு நான் என்ற ஆணவம் இருக்காது. ஆக மற்றவர் தன்னை மதித்தாலும்  மதிக்காவிட்டாலும் உள்ளே வலிக்காது.

காய்ச்சலை அளப்பது போல், நமது ஆணவத்தை அளப்பது எப்படி?

 மிக சுலபம். நம் வாழ்க்கையில் கலந்து கொண்ட  விசேஷங்களில் எண்ணிக்கை எத்தனை? எத்தனை சதவீதம் மன உளைச்சல், வருத்தம் அல்லது பிரச்னை போன்று இல்லையோ அது ஆரோக்யமான ஆத்மா.

மற்றவர் நடத்தும் விஷங்களை அவர்கள் விரும்பும் விதத்தில் சர்வ சுதந்திரமாக நடத்த ஆரோக்யமான ஆத்மா ஆசிர்வதிக்கும்.

எனது “நான்”  தேவைக்கு அதிகமாய் விஸ்தாரமாகி இருந்தால் என்னை இப்படி அல்லது அப்படி கவனிக்க வில்லை என்ற குறையும், பிரச்னையும் தான் வரும்.

அந்நியன்

நாசர் அந்நியனை பல கேள்விகள் மூலம் அந்நியனின் மனோ நிலையை அறிந்து கொள்வார். ஆம், நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் தான் நமது ஆத்மாவின் ஆரோக்யத்தை காண்பித்து விடுகிறது.

“என்னை  பத்தி உனக்கு தெரியாது.” ” நான் யார் என்று அவர் அல்லது இவரிடம் கேட்டு தெரிந்து பேசு.” இது போன்ற வொக்கபுல்லரி (vocabullary) எனது “நான்” விரிவாக்கம் ஆகிவிடத்து என்று பொருள்.

“நான்” என்பதை இந்த உடல், அதிகமான தன்னாதிக்கம் கொண்டவர்கள் என்று நினைப்பவர்கள், தான் மட்டுமே உயர்ந்தவர், மதிக்கப்படவேண்டியவர் என்று எண்ணி வாழ்பவர்கள்,  கண்டிப்பாக தன்னுடைய கடமையையும், இப்பிறவி எடுத்த நோக்கமும் அறிவதற்கு வாய்ப்பில்லை. தேவை இல்லாத எண்ணங்களுக்கு முன்னுரிமை கொடுத்து,  வீண் மனஸ்தாபங்கள், வீண் வருத்தங்கள் பரிசுகளாக எடுத்து செல்வர்.

@@@@@@@@@@@

ஈகோ என்றால் என்ன?

“ஈகோ” என்ற சொல் சூழலைப் பொறுத்து பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. உளவியலில், ஈகோ என்பது ஒரு தனிநபரின் சுய அல்லது அடையாள உணர்வைக் குறிக்கிறது. இது ஒரு நபரின் எண்ணங்கள், நம்பிக்கைகள் மற்றும் நனவான அனுபவங்களை உள்ளடக்கியது. பொதுவான பயன்பாட்டில், ஈகோ என்பது மற்றவர்களை விட ஒருவரின் மேன்மையின் பெருமித உணர்வு அல்லது சுய-முக்கியத்துவ உணர்வைக் குறிக்கலாம்.

மீண்டும் சந்திப்போம்

நன்றி,

M.K.P.Pandorangan

Leave a Reply