My Life Experience

இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா???

July 11, 2020 Uncategorized 0

நமக்கு சரியான புரிதல் இருக்கிறதா?

என்றாவது நான் சரியான புரிதலில் இருக்கிறேனா என்று எனக்குள் கேட்டதுண்டா?

பாகம் 1

கோவிட் 19 கற்பித்த பாடம்

சரியான புரிதல் இருந்திருந்தால், நமது சமுதாயத்தினர் சஷ்டி திருமணம் போன்ற வைபவங்கள் வைத்திருக்க மாட்டார்கள்.

இக்கிருமி, யாரிடம் இருந்தாலும், சிறிது விலகி நின்றால், நம்மை அணுகாது. நம்மை காப்பாற்றி கொள்ளலாம். ஆனால், இந்த வைபோகங்களுக்கு போயே ஆவேன் என்ற பிடிவாதத்தால் ஏற்பட்ட விளைவு தான்  இத்தனை பாதிப்புகள்.

ஆழ் மன கண்டிஷன்

என் வீட்டு விசேஷங்களுக்கு அவர் வந்தார். நான் எப்படி அவர் விசேஷத்துக்கு போகாமல் இருப்பது?

சமீபத்தில் மலேசியாவில் வெறும் 20 பேர் வைத்து திருமணம் செய்கின்றனர். மலேஷியா மக்கள் ஓரளவாவது சட்டத்துக்கு கட்டுப்படுகின்றனர்.

ஒரு ஓலா டாக்ஸி ஓட்டுனரிடம் பெல்ட் போடுகிறேன் என்றேன். தேவையில்லை என்றார். சட்டம் சொல்லுதே என்றேன். அவனுங்க அப்படித்தானே சொல்லுவானுங்க, நாம் கேட்க தேவையில்லை என்று கூறினார். இதை போல் ஆயிரம் உதாரணம் சொல்ல முடியும்.

என்னுடைய மிக மதிப்பிற்குரிய ஓஷோ அவர்களின்  பகவத் கீதை 3ஆம் பாகம், 67ஆவது பக்கத்தில் கொடுத்திருக்கும் விஷயம் கீழே : செய்யும் விஷயம் சரியா தவறா என்று நாம் யோசிப்பது இல்லை. சுற்றத்தார், ஊர் மக்கள் என்ன சொல்லுவார் என்றே யோசித்து பழக்கபட்டோம். வீடு புகுந்து திருட வரும் திருடன், திருட வருவது தவறு என்று ஒருபோதும் யோசித்தது. பிடிபட்டால் என்ன செய்வோம் என்றே யோசிக்கிறான். “நீ பிடிபட போவதில்லை ” என்ற நம்பிக்கை யாரேனும் கொடுத்தால், நம்மில் எத்தனை பேர் திருடாமல் இருப்பார்கள் என்று சற்றே யோசிக்க வேண்டிய விஷயம். நம்மையும் நம் நாட்டையும் காக்கும் காவல் துறையினர், நீதி இல்லை, மன்றங்கள் 24 மணி நேரம் அவர்கள் வேலை செய்யாமல் இருந்தால், நல்ல மனிதர்கள் எத்தனை பேர் நல்லவர்களாக இருந்து விடுவார்கள்?  24 மணி நேரத்திற்குள், தவறு செய்பவர்களுக்கு வெகுமதி கிடைக்கும், நன்மை செய்தவர்கள் அவமானப்படுத்தப்படுவார்கள் என்று தீர்மானம் வெளியிட்டால், இன்னும் கடினமாகிவிடும்.    இல்லை நாம் தவறுசெய்வதிலின்று ஒதுங்கி இருக்க நினைப்பதில்லை. தவறு செய்வதனின்று ஒதுங்ககூட நாம் அகங்காரத்தையே பயன்படுத்திகிறோம். ” ஜனங்கள் என்ன சொல்வார்கள்? அவர்களிடையே நாம் மதிப்பு என்ன ஆவது? குல பெயர், குடும்ப பெயர் என்ன ஆகும்? மானம்,  மரியாதை,  மதிப்பு என்ன ஆகும்? “என்று யோசிப்பதுனாலேயே, கூறுவதனாலேயே, தவறுகளிலிருந்து மனிதர்களை தடுத்து வருகிறோம். ஆனால் தடுப்பதற்காக நாம் எதை உபயோகிக்கிறோம், அது பாவத்தின் ஆணிவேர். நாம் விஷத்தை பாய்ச்சியே, நாம் தீமையை அழிக்க முயற்சி செய்து வருகிறோம். அதனால், ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகியும், தீமைகள் அழியவில்லை விஷம் மட்டுமே பெருக்கெடுத்து ஓடுகிறது. தீமை, புதிய புதிய பாதைகளில் சென்று வெளிப்படுகிறது.    
ஸ்ரீமத் பாகவதம் சொல்லும் கொள்கை

நம்மை சமுதாயத்தில் இயங்க வைக்க சிறு வயதில் மிருகங்கள் பற்றிய கதைகள் சொல்லப்பட்டன. பிறகு வயதுக்கு வந்ததும் மிருகக்தைகள் நாம் நம்ப மாட்டோம் என்பதால் புராணக்கதைகள் கற்பிக்கப்பட்டன.

பாண்டவர்கள் யாகம் செய்ய பல வண்டிகளில் தங்க கட்டிகளை  எடுத்து சென்று யாகம் செய்து, பிறகு ஒன்றிரண்டு வண்டி தங்கம் மிஞ்சி விட்டதாம். அப்பெட்டிகளை வைத்து,  அந்த இடத்தில் மறு வருடம் யாகம் செய்ய வேண்டியிருந்ததால் அங்கே போட்டு விட்டு வந்தனராம்.

மறு வருடம் அப்பெட்டி அங்கையே இருந்ததாம். காரணம் நான் சம்பாதிக்காத எதையும் தொட மாட்டேன் என்ற கொள்கை உள்ள மனிதர்களே இருந்தார்களாம்.

இதன் உள்கருத்து,  தான் சம்பாதிக்காத எதுவும் நாம் சொந்தம் கொண்டாட  கூடாது என்பதை போதிக்கத்தான்.

வைபவங்களில் எத்தனை பேர் பந்திக்கு முந்து என்று போதிக்கின்றனர். எத்தனை பேர் அவன் ஒரு ஏமாளி, அவன் சொத்தை சுலபமாக எழுதி வாங்கி விடலாம் என்று போதிக்கின்றனர்.

இந்திய தொடர்பிலிருந்த  எங்கள் வாடிக்கையாளர்கள்,  சொத்து சம்பந்த கதைகள் கேட்கும்போது என் தாய் நாடு என்று சொல்ல அதனை விருப்பம் இருப்பது இல்லைதான்.

மூட நம்பிக்கை என்ற விதையில் உருவான வேர், இழை, மரம், கொப்புக்கள், காய்கள், கனிகள், மற்றும் விதைகள்.

பல வித அனுபவங்களை பகிர முடியவில்லை. ஆனால், ஒரு நிஜ அனுபவத்தை பகிரலாம் என்று இருக்கிறேன். எனக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்த பிறகு, மச்சினன் எதோ ஒரு முறை செய்ய வேண்டும் என்று மாப்பிள்ளை கை கெடிகாரம் பரிசு அளித்தார். அந்த கடிகாரம் மலிவானது என்று ஒரு பெரிய தகராறு நடந்தது.பெண்  வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் கார சாரமாகே பேசிக்கொண்டனர்.

இறுதியில் மைத்துனன் வந்து எனக்கு பிடிக்கவில்லையா என்று கேட்டார். நான் அதிக உழைப்பதில் கவனம் செலுத்தியதால் கெடிகாரம் எனக்கு அவசியம் இல்லாதது. ஆனாலும் பிடித்து இருக்கிறது என்றேன்.

புத்தர் கடவுள்  என்று, இந்து மதம் மட்டும் சொல்கிறது. மற்ற மதங்கள் அவர் ஞானம் அடைந்தவர் என்றுதான் கூறுகிறது.

அவர் சரித்திரம் ட்ராமா நெட்டபிலிக்ஸில் பார்த்து வருகிறேன். புத்தர் வெளி உலகை பார்க்க சென்ற போது, விவசாயிடம், அரசாங்க ஊழியர்கள் சாட்டையால் அடித்து சற்று அதிகம் வரி வசூல் செய்யும் காட்சியை பார்த்து அவரால் முடிந்த அதிரடி நடவடிக்கை எடுக்கிறார்.

இரண்டாவதாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நெறிமுறைவாதி பல காரணங்களுக்காக எப்போதும் தனது நெறிமுறையை பிறர்மீது திணிக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறான். முதலாவது தனது நெறிமுறையை அவன் தன்மீது அதிகாரம் செலுத்த உபயோகப்படுத்துகிறான். இயல்பாக மற்றவரிடத்திலும் அவன் அதையே செய்கிறான். அவன் தனது நெறிமுறையை மற்றவர்மீது அதிகாரம் செலுத்த பயன்படுத்துகிறான். அவன் நெறிமுறையை தனது சொந்த லாபங்களுக்காக பயன்படுத்த தொடங்குகிறான். இயல்பாக அவன் இந்த தந்திரத்தைக் கற்றுக்கொள்கிறான். அவன் தனது நெறிமுறையை மற்றவர்கள் மீது திணிக்கமுடிந்தால் பிறகு செயல்கள் எளிமையாகிவிடும். எடுத்துகாட்டாக, நெறிமுறைவாதி உண்மையை பேசினால், அவனுடைய உண்மை ஆழமானதல்ல, அடி ஆழத்தில் பொய்கள், பொய்கள் மட்டுமே உள்ளன. ஆனால் சமுதாயத்திலாவது அவன் உண்மை பேசுவதைப் போல நடிக்கிறான். அவன் மற்றவர்களிடமும் அவனுடைய உண்மையை திணிக்க முயல்வான். அவன் மற்றவர்கள் அனைவரும் உண்மையை பேச வேண்டும் என விரும்புவான். ஏனெனில் அவன் தன்னை யாராவது பொய் சொல்லி, குறுக்கு வழியில்,ஏமாற்றிவிடுவார்களோ என மிகவும் பயந்துகொண்டிருப்பான்……அவன் நாம் சாதுரியமான வார்த்தைகளால் மக்களை பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவான். ஆனால் மேலோட்டத்தில் அவன் உண்மையை காப்பாற்றுகிறான். அவன் எல்லோரும் உண்மையாக இருக்கவேண்டும் என கத்திக் கொண்டேயிருக்கிறான் அவன் மிகவும் பயந்திருக்கிறான். அவன் மற்றவர்களை ஏமாற்றுவதைப் போல மற்றவர்களும் அவனை ஏமாற்றலாம் என அவனுக்குத் தெரியும்.

http://www.osho-tamil.com/?p=677

ஒரே  ஒரு விதையில் உருவாகி அது இலையாகவும், மரமாகவும், காய் கனியாகவும் கட்சி அழிப்பது போல, நமது உள் கோட்பாடு தான் நமது  எண்ணங்களை தோற்றுவிக்கிறது.

பெண்ணை பெற்றவர் அவர் மகளுக்கு முடிந்ததை சீராக கொடுக்க அனுமதிக்காமல், அவர்களை பலாத்காரம் செய்வது சரிதானா?

நான் என் செல்வாக்குக்கு என் பிள்ளைக்கு ராடோ கடிகாரம் போடுவதில்லையா? ஐந்து பெண்ணை பெற்றவர்களை சீர் கேட்கும் கலாச்சாரத்தில் ஓட்டாண்டியாக்குவது நல்ல கலாச்சாரமா? புத்தர் கண்டிப்பாக வர மாட்டார். சரியான புரிதல் வந்தாதான் பெண்ணை பெற்றவர்கள் காப்பாற்ற படுவார்கள்.

ஆனால் இயற்கை, அன்றைக்கு நாம் செய்த கொடுமைகளால் இன்று நாட்டில் பெண் கிடைக்க அவதி படுகிறார்கள். இன்றைய பெண்ணே மாப்பிளைக்கு என்னை திருமணம் செய்ய என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்களாம்.

அரசன் ஊழியர்கள் சாட்டையால் அடித்து வரி வசூல் செய்ததும், பெண் வீட்டாரிடம் பலாத்காரமாகி வசூலிப்பதும் ஒரு விதையில் உருவான உள்நோக்கம் தான்.

மூட நம்பிக்கை என்ற விதையில் உருவான வேர், இழை, மரம், கொப்புக்கள், காய்கள், கனிகள், மற்றும் விதைகள்.

பல வித அனுபவங்களை பகிர முடியவில்லை. ஆனால், ஒரு நிஜ அனுபவத்தை பகிரலாம் என்று இருக்கிறேன். எனக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்த பிறகு, மச்சினன் எதோ ஒரு முறை செய்ய வேண்டும் என்று மாப்பிள்ளை கை கெடிகாரம் பரிசு அளித்தார். அந்த கடிகாரம் மலிவானது என்று ஒரு பெரிய தகராறு நடந்தது.பெண்  வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் கார சாரமாகே பேசிக்கொண்டனர்.

இறுதியில் மைத்துனன் வந்து எனக்கு பிடிக்கவில்லையா என்று கேட்டார். நான் அதிக உழைப்பதில் கவனம் செலுத்தியதால் கெடிகாரம் எனக்கு அவசியம் இல்லாதது. ஆனாலும் பிடித்து இருக்கிறது என்றேன்.

புத்தர் கடவுள்  என்று, இந்து மதம் மட்டும் சொல்கிறது. மற்ற மதங்கள் அவர் ஞானம் அடைந்தவர் என்றுதான் கூறுகிறது.

அவர் சரித்திரம் ட்ராமா நெட்டபிலிக்ஸில் (Netflix) பார்த்து வருகிறேன். புத்தர் வெளி உலகை பார்க்க சென்ற போது, விவசாயிடம், அரசாங்க ஊழியர்கள் சாட்டையால் அடித்து சற்று அதிகம் வரி வசூல் செய்யும் காட்சியை பார்த்து அவரால் முடிந்த அதிரடி நடவடிக்கை எடுக்கிறார்.

ஒரே  ஒரு விதையில் உருவாகி அது இலையாகவும், மரமாகவும், காய் கனியாகவும் கட்சி அழிப்பது போல, நமது உள் கோட்பாடு தான் நமது  எண்ணங்களை தோற்றுவிக்கிறது.

பெண்ணை பெற்றவர் அவர் மகளுக்கு முடிந்ததை சீராக கொடுக்க அனுமதிக்காமல், அவர்களை பலாத்காரம் செய்வது சரிதானா? நான் என் செல்வாக்குக்கு என் பிள்ளைக்கு ராடோ கடிகாரம் போடுவதில்லையா? ஐந்து பெண்ணை பெற்றவர்களை சீர் கேட்கும் கலாச்சாரத்தில் ஓட்டாண்டியாக்குவது

இன்னும் வரும்

இப்படிக்கு

MKP Pandorangan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *