புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 10-எது நாகரீகம்?

எது நாகரீகம்?

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் நிர்வாகத்தில், எது நாகரீகம், கமிட்டி, நன்கொடையாளர்கல், MKP வாரிசுகள், பக்தர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ?

MKP Pando

By MKP Pandorangan

எது நாகரீகம் என்று விரிவாக பார்க்கும் முன்பு சகுந்தலா தேவியை பற்றி சற்று பார்ப்போம்.

சகுந்தலா தேவி கணித மேதையை பற்றி நான் முதல் பெரும்பகுதி மக்களுக்கு தெரியாது. சினிமா இல்லாவிட்டால் பல பல உண்மைகள் தெரியாமல் போய் விடும்.

சகுந்தலா தேவி குறிக்கோள் அவர் அம்மா மாதிரி இருக்கக்கூடாது என்பதுதான். இக்குறிக்கோள் அவரை உலகத்துக்கு அவரை காட்ட முடிந்தது. சகுந்தலா தேவியை போல் அவர் மகள் இருக்க விரும்ப வில்லை.

இதில் சர்வ சுதந்திரம் என்பதை நிறையவே புரிந்து கொள்ளலாம். நான் சினிமா விமர்சனம் செய்ய வில்லை. அனால் ஓஷோ கூறும் விழிப்புணர்வு இல்லை என்றால், நாம் செய்வது சரியா என்பதே அறியாமையில் வாழ்வோம்.

“இக்கட்டுரையை ஸ்ரீ செல்வ விநாயகர் வலைத்தளத்தில் போடலாம் என்று நினைத்தேன். அனால் நமது உட் பூசல்கள் கோவில் தலத்தில் போடுவது கோவிலின் மதிப்பை குறைக்கும் என்பதால் எனது பர்சனல் தலத்தில் போடுகிறேன்.”

இப்படம் சகுந்தலா தேவி வரலாறு. சினிமா நடிகை சகுந்தலா தேவி & உண்மையான சகுந்தலா தேவி பல வகை தகவல்களை கொடுத்துள்ளேன்.

நாம் பல பல உணர்வுகளை பெற்றவர்கள்.

எப்படி பெற்றோம்?

நம்மை பெற்றவர்கள்,  ஆசிரியர்கள், நண்பர்கள், சமூகம் சினிமா, சீரியல் போன்ற இடங்களில் இந்த உணர்வுகளை தத்து எடுத்துக்கொள்கிறோம்.

அப்படியானால், நாம் தத்து எடுத்த அனைத்தும் 100 சதவீதம் சரி என்று பொருள் இல்லை, என்பதை நாம் அறியாவிட்டால் உலகத்தோடு ஒத்து போக இயலாது.

ஷாமி… எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்: ஏன் எனக்கு மஞ்சள் பை கொடுக்கவில்லை?

எனது மாமாவாகிய கோவில் தலைவருக்கு மஞ்சள் பை கொடுத்த கமிட்டீ, எனக்கு கொடுக்காததின் உண்மை தெரிஞ்சாகணும்?

இரண்டு நாள் எனக்கு தூக்கம் இல்லை. என்னை புறக்கணித்த கமிட்டீ எனக்கு மஞ்சள் பை கொடுக்காததை நினைத்து நினைத்து எனது ரத்தம் கொதித்தது. என் மனம் பட பட என்று வந்தது. என் மனம் திருப்தி அடையவில்லை.

பெரியவருடன் ஒரு உரையாடல்

பெரியவருடன் ஒரு உரையாடல்
பெரியவருடன் ஒரு உரையாடல்

கடுமையாக என் திருப்தி அடையாத மனதின் ஆதங்கத்தை ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வாட்ஸப் குழுவில் கொட்டி விடும் முன் ஒரு பெரியவரிடம் பேசினேன்.

“கேள்வி & பதில் உரையாடல் தந்துள்ளேன். எளிமையாக புரிந்து கொள்ளலாம் என்று கருதுகிறேன்.”

நெஞ்சு பொறுக்குதில்லையே-எனக்கு மஞ்சள் பை கொடுக்கவில்லை?

சுவாமி, “இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைத்து விட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே.”

காரியம் முடிந்ததும் கழட்டி விட்டு விட்டார்கள். எனக்கு மஞ்சள் பை கொடுக்க வில்லையே. நெஞ்சு பொறுக்குதில்லையே?

மகனே, தர்மம் என்றால் என்ன என்று புரியாமலே நீ தர்மம் செய்து விட்டாய் போல் தெரிகிறது?

ஸ்வாமி, என் மனம் பட பட வென்று அடித்தது, ரத்தம் கொதித்தது. உங்களுக்கு என்ன தெரியும் ஸ்வாமி?

இருக்கட்டும் மகனே, நீ பல வித திருமண விருந்துக்கு சென்ற அனுபவம் உள்ளவன். விருந்துக்கு அழைத்தவர் போடும் வெந்த சோத்தை தின்று விட்டுத்தான்  வரணும்.

நீ சைவம்.

கொல்வது பாவம் என்று நினைப்பாய். மற்றொருவன் வெறும் கோழி தானா என்பான்?

அடுத்தவன் கோழி குருமா உரைக்கிறது என்பான்.

இன்னொருவன் குருமா உறைப்பு பற்றவில்லை என்பான்.

ஒரு கோவிலுக்கு செல்பவன் பக்தி அடிப்படையில், அப்படி செய் இப்படி செய் என்பான்.

இன்னொருவன் மனிதனுக்கு மரியாதை இப்படி வேண்டும் அப்படி வேண்டும்.

இது செய்யத்தெரியாதவர்கள் எதுக்கு கமிட்டியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லையே என்பான்.

இத்தனை நொட்டணம் கூறுபவன் 36 வருடம் ஒரு தேங்காய் கூட பிள்ளையாருக்கு கொடுத்தவனாக இருக்க மாட்டான். கோவிலில் கண்ணாடி முதல் எதுவும் சுத்தமில்லாமல் தானே இருந்து இருக்கும், மகனே?

ஹிரண்யாக்ஷிபூ ஆணவத்தால், எனது நாமம் சொல்ல வேண்டும், என் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று போட்ட ஆட்டத்தில் என்ன ஆனது என்று புராணத்தை படித்தால் தெரியும்.

முக்கியமாக கோவில் தொண்டில் ஈடுபட்டால் கீழ் கண்டவைகள் ஒளியவில்லை என்றால் அந்த தொண்டு செய்யாமல் இருப்பதே மேல் :

1) நான் என்ற ஆணவம்.
2) ஆணவத்தின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்

இல்லை சுவாமி, என் மனம் திருப்தி அடையவில்லையே?

உனது மனதை நிர்வாகம் செய்வது உனது பொறுப்பு மகனே. திருவிளையாடலில் முத்துராமன் அரசர். அவர் கூந்தல் பிரச்னைக்கு, அவர் மனதை திருப்தி செய்து பரிசும் பெற புலவர்கள் வந்தார்கள்.

இன்று உன் மனதை பட படப்பு, கோபம், வெறுப்பு இல்லாமல் உன் மனதை நீதான் நிர்வாகம் செய்து கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் .உன் மனோவியல் கோளாறுக்கு எப்படி கமிட்டீ பொறுப்பேற்கும் என்று எண்ணுகிறாய்?

மற்றவர் செயல் உன் மனதை துன்பப்படுத்தினால், வேதனையை கொடுத்தால், அது முழுக்க முழுக்க உனது முட்டாள் தனம் தவிர வேறு யாரும் காரணம் இல்லை மகனே.

உனது Perception கோளாறு. நீ விரும்பிய படியோ, நீ எதிர்பார்த்த படியோ நடக்கவில்லை என்றால் உன் மனம் வருந்தினாள் அது கண்டிப்பாக உனது அறியாமை தவிர வேறு எதுவும் இல்லை, மகனே.

கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம் செருப்பு போட்டு நடக்க கூடாது என்ற சட்டத்தை கடை பிடித்தனர். கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏறுவது என்று கடைபிடித்தனர்.

இந்த ஈனத்தனமான உத்தரவும் சட்டமும் போட்டவங்களை ஒழித்துக்கட்ட அம்பேதகர், பெரியார் போன்றவர்கள் வாழ்நாளை போராடி போராடி இவனுகள்ட்ட இருந்து சர்வ சுதந்திரம் வாங்கி கொடுத்தனர்.

இன்று கமிட்டீ என்று அமைத்து விட்டு, அவர்களை சர்வ சுதந்திரமாக செயல் பட உன்னால் அனுமதிக்கும் மனப்பக்குவம் இல்லை. அதற்கு நீ கோவிலே காட்டாமல் இருந்து இருக்கலாம்.

தர்மம் என்பது எதையும் எதிர் பார்க்காமல் செய்வது. இல்லாவிட்டால் அது வியாபாரம். கேவலம் ஒரு மஞ்சள் பை ரூபாய் 3/= மதிப்பு உள்ளது. அவ்வளவுதான். அந்த ரூபாய் 3 மதிப்புள்ள பை உன்னை தூங்க விடவில்லை, மனம் திருப்தி ஆக விடவில்லை என்றால் உனது மதிப்பு ரூபாய் 3 யை விட மட்டமானதோ?

கும்பாபிஷேகம் செய்ய விடாமல் நிறுத்துவது, ஐயரை கும்பாபிஷேகத்து வரவேண்டாம் என்று சொல்லி பயமுறுத்துவது ஒரு மாபெரும் பாவம் என்று பெரியோர்கள் சொல்லிவைத்தார்கள். அது பல தலைமுறைக்கு அந்த பாவச்செயல் செயல் படும் என்றனர்.

எனக்கு தலைவர் பதவி கொடு, தேங்காய் கொடு என்று மட்டும் எதிர்பார்த்தவர்கள் ஏற்கனவே கோவிலை பராமரிக்கவே இல்லை என்பது தெரிந்ததே.

இன்று கமிட்டீ என்ற போர்வையில், கோவிலுக்கு சேவை செய்வது என்ற பரிசுத்தமான நோக்கத்தில் செயல் படும் மனிதர்களை, அவர் என்னை பற்றி என் பெயர் குறிப்பிட்டு பேசுவதில்லை, நான் கொடுத்த பொருட்களை சன்னதியில் பயன் படுத்தவில்லை, இது போன்று கமிட்டி பொறுப்பில் உள்ளவர்களை தாற்சர் செய்தால், “சீ” என்று உறுப்பினர் ஒதுங்கிக் கொண்டால் அந்த பாவம் கோவில் கும்பாபிஷேகத்தை நிறுத்துவதை விட மிகப்பெரியதாக இருக்கும்.

அறக்கட்டளை சம்பளம் ஒன்றும் கொடுக்கவில்லை. சம்பளம் வாங்காமல் கோவிலுக்கு சேவை இனாமாக செய்ய நினைக்கும் நபர்களை மிக சுலபமாக விரட்டி அடித்து விடலாம்.

விரட்டுவதற்கு முன் நீ போய் கிராமத்தில் இருந்து நிர்வாகம் செய்ய முடியுமா? எத்தனை பேர் உன் வழிக்கு வருவார்கள்?

கும்பாபிஷேகம் ஒரு சிறிய அங்கம். ஜுஜுபி. நிர்வாகமே பெரிய விஷயம். 36 வருடம் கோவிலை கொலை செய்து விட்டோம். தொடர் நிர்வாகம் யாரும் செய்ய முன் வரவில்லை.

கரண்ட் பில் கட்டியவரை கூட கேலி நக்கல் செய்தோமே ஒழிய, கேலி செய்தவர் உட்பட மற்றவர் யாரும் நான் முன்வந்து காட்டுகிறேன் என்ற கனவு கூட கண்டதில்லை.

எனக்கு மாலை போடு, தலைவர் பதவி கொடு என்று தானாக முன்வந்து கேட்டவர்கள், எத்தனை பேர் நான் வசூல் செய்கிறேன், நான் எனது சொந்த நேரம், பணம் போட்டு நிர்வாகம் செய்கிறேன் என்று வந்தார்கள், வருவார்கள்?

தொடர் நிர்வாகமே வருமானத்தை உண்டு பண்ணும், கோவில் பிரசித்தி பெரும். கிராமத்தை தாண்டிய வெளி பக்தர்கள் சேர்ந்தால்தான் அடுத்த கும்பாபிஷேகம் செய்ய போதிய பணம் வரும். வெளி பக்தர்களை கவர தொடர் நிர்வாகம் அவசியம். தொடர் நிர்வாகம் செய்ய விநாயகருக்கு சேவை செய்யும் மனப்பான்மையும், அவசியம் வரும்போது தன் சொந்த பணம் போட்டு ஒரு சில காரியம் செய்யும் மனமும் உள்ள மனிதர்கள் வேண்டும்.

பணம், நேரம், எதுவும் தரமாட்டேன். என்னை கேட்காமல் கோவில் சம்பந்த முடிவுகள் எதுவும் செய்யக்கூடாது. இது போன்ற உருப்படாத, விளங்காத மனப்பான்மை மட்டும், ஒரு புல்லை கூட அசைக்க முடியாது மகனே. இதெல்லாம் உனக்கு தெரியாதா?

அடிப்படை அறிவு

அடிப்படை அறிவு போதிய அளவு இல்லை என்பதை சித்தரிக்க இந்த படம் பார்க்க வேண்டும். காலேஜ் மாணவிக்கு சாதாரண A, B C D போதிய அளவு தெரியவில்லை என்பதை அல்லது அடிப்படை இன்னும் தெரிய வேண்டியுள்ளது என்பதை புரியாத, அலட்சியப் படுத்தும் மாணவி.

நிர்வாக அடிப்படை, தலைமைத்துவ அடிப்படை, இதெல்லாம் முதலில் புரிந்துக்கொள்ள கொஞ்சமாவது முயற்சி எடு மகனே.

பெரியவரிடம் பேசிய பிறகு எனது ஈகோ, அகந்தை, ஆணவம் குறையவில்லை. அனால் பல வித தெளிவும் சிந்தனையும் மட்டும் வந்தது.

என் மனம் திருப்தி அடையவில்லை.

எனது சிந்தனைகள்

PERCEPTION – இதன் பொருள் தமிழில் எனக்கு தெரியாது. அனால் இது தான் நமது எண்ணத்தின் அடிப்படை

PERCEPTION – இதன் பொருள் தமிழில் எனக்கு தெரியாது. அனால் இது தான் நமது எண்ணத்தின் அடிப்படை.

சகோதர சகோதரி திருமணம் செய்துகொள்ளும் நாட்டில், தனது பெற்றோர் காட்டிய வழியில் தனது பிள்ளைகளும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கும் தாய்.

ஒரு நாட்டில் சட்ட விரோதமாக தனக்கு மகன் மகள் அத்துடன் சொத்துக்களும் இருந்தால் சகோதர சகோதரிகள் திருமணம் செய்து வைக்கின்றனர். காரணம் சொத்து அடுத்தவனுக்கு போய்விட கூடாது.

இந்த கலாச்சாரத்தில் வந்த குடும்பத்தில், விஞ்ஞானம் ரீதியாக சிந்திக்கும் பிள்ளைகள், ஊனமான பிள்ளைகள் வந்து பிறந்து விடக்கூடாது, என்ற குறிக்கோளில் இன்றய சகோதர சகோதரிகள் மறுப்பார்கள்.

படிக்காத பெற்றவர்களுக்கு சொத்தை தாண்டிய அறிவு வராது. இது போன்ற இடங்களில் சகுந்தலா தேவிகள் நிறைய தேவைப்படுகிறார்கள்.

மலேசியா சீனர்களிடம் இந்திய தமிழர்கள் அக்கா மகளையும், இந்திய முஸ்லிம்கள் சிற்றப்பா மகள்களையும் எடுப்பது ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரு கலாச்சாரம் என்றால், அவர்கள் குடம் குடமாக வாந்தி எடுக்கின்றனர்.

தனது பெற்றோர்கள் கடைபிடித்து வந்த ஒரு பெண் நாள்வரை மணந்து கொள்ளும் பழக்கம் உள்ள நாட்டில் தனது பெண்ணை நாள்வரை மணக்க சொல்லும் பெற்றோர்.

தனது பழக்கம், குடும்ப கலாச்சாரம் தாண்டி அறிவு செயல் படாது. தனது மகளும் பாஞ்சாலி போல் வாழ வேண்டும், அதுவே குடும்ப கௌரவம் என்று கருதி, பிள்ளைகள் விரும்பாவிட்டாலும் திணிப்பார்கள்.

சகுந்தலா தேவி அம்மா வழி நம்பிக்கையை – வாய் திறக்காத, கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற முறையில் வந்த தாய் – உடைத்து எறிந்தவர். முட்டாள் தனமான கலாச்சாரம் இருந்தது என்பதை உணராமலே உடைத்துவிட்டார்.

நீ செருப்பு போட்டு நடக்காதே, மேலாடை போடாதே, நான் ரூபாய் 5000 க்கு அன்னதானம் செய்தால், என்னை விட தாழ்வான நீ பணத்திமிரில் ரூபாய் 10000 எப்படி அன்னதானம் செய்யலாம்?

இது போன்ற முட்டாள் தனமான, மனிதாபிமானம் இல்லாத கலாச்சாரத்தை உதாசீனம் செய்வதின் அவசியம் தெரியவேண்டும். சர்வ சுதந்திரத்தின் அவசியம் தெரிய வேண்டும்.

ஜப்பானியர் ஒருவர் அவர் மூதாதையர் ஆட்சியில் மலேசியாவில் நடத்திய கொடுமைக்கு, அவசியம் இல்லாமல் என்னிடம் சாரி கேட்கிறார். அவரின் நாட்டு கலாச்சாரமே மாறிவிட்டது. உயர்ந்த கலாச்சாரத்தை தத்து எடுத்து கொண்டார்.

நமது முன்னோர் செருப்பு போடாதே, மேலாடை போடாதே என்று ஆதிக்கம் செய்து இருந்தால், நாம் படித்தவர், மனிதாபிமானம் இருந்து இருந்தால் நாமே நமது முன்னோர்களை எதிர்த்து இருக்க வேண்டும்.

மனிதாபிமானம் உள்ளவர் மட்டுமே அதை செய்ய இயலும்.

மலேசியாவில் மனைவியுடன் வாழக்கூடாது என்ற ஒரு வகை ஆதிக்க மூட நம்பிக்கை இருந்தது.

இன்று அந்த மூட நம்பிக்கையில் இருப்பவர்கள் குடும்பத்தை பார்க்க இந்தியா செல்ல இயலாது. அந்த மூட நம்பிக்கையை நொறுக்கியவர்கள் (சகுந்தலா தேவியை போல்) இன்று மலேசியாவில் குடும்பத்துடன் வாழ்கின்றனர்.

அதே மூட நம்பிக்கையின் பலனாக 1980ல் சுமார் 300 வியாபார லைசென்ஸ் மஞ்சபுத்தூர் ஆயிர வைசிய செட்டியாரிடம் இருந்தது.

இது ஈப்போவில் மட்டும். இன்று விரல் விட்டு என்னும் அளவுதான் லைசென்ஸ் உள்ளது என்று வருந்துகிறார் ஒரு வியாபாரி.

ஆயிர வைசிய செட்டியார்களின் உருப்படாத முடிவுகளை, கலாச்சாரத்தை காரி துப்புகிறார்.

சினிமா & நாடகத்தின் ஆதிக்கங்கள்

கோவில் நிர்வாகிகள், வலைத்தளங்கள் நிர்வகிப்பவர்கள் சதா யாரை கௌரவப்படுத்தலாம், யாரை அசிங்கப் படுத்தலாம் என்று மட்டும் எண்ணி செயல் படுவதாக சிலர் நினைக்கின்றனர்.

இது போன்ற நிர்வாகிகளுக்கு சம்பளம் இல்லாமல் இப்படி அசிங்கப்படுத்தும், அவமானப்படுத்தும், கௌரவிக்கும், மதிப்பது, மதிக்காமல் இருப்பது போன்ற வேலைகள் பொழுது போக்காக செய்வதாக சீரியல் பார்க்கும் பலர் முடிவு செய்கின்றனர்.

இன்றய சீரியல் நாடகங்களில் அசிங்கப்படுத்துவது, பழிவாங்குவது போன்ற உருப்படாத விஷயங்களை மையமாக வைத்துதான் தயாரிக்கின்றனர்.

சீரியல் பார்ப்பவர்களுக்கு உருப்படியாக செய்ய ஒன்றும் இல்லை என்பதால் நிர்வாகிகளையும் அப்படி எடை போடுகிறார்கள்.

சரி நானே வந்து நிர்வகிக்கிறேன் என்று வந்து செயல் படவும் முடியவில்லை. முடியவில்லை என்பதை விட அந்த தலைமைத்துவம் அல்லது நிர்வாகம் செய்யும் திறமை இல்லை அல்லது வளர்த்துக்கொள்ள வில்லை என்பதே உண்மை.

எனது தந்தையார் ஒரு முறை கூறியது போல, தன்னால் முடியாததை அடுத்தவன் செய்வதை வாயை மூடிக்கொண்டு வேடிக்கை மட்டும் பார்தாள் போதும்.

ஒரு வாட்ஸாப் குழுவுக்கே தலைமை ஏற்று நடத்த முன்வர முடியவில்லை. குறை சொல்வதை விட வேறு ஒரு காரியமும் சந்திக்கவே முடியாது தான்.

நமது விழிப்புணர்வின் தரத்தை வைத்து, நாடகங்கள் நமது ஆழ் மனதை வசப்படுத்துகிறது.

ஒரு உதாரணம், பாசமலர் படத்தை வைத்து சகோதரர்கள் இப்படிதான், அல்லது அப்படிதான் இருக்க வேண்டும் என்று ஒரு காலக்கட்டத்தில் எதிர்பார்க்க பட்டது.

இது எல்லாம் சினிமாவின் உணர்ச்சிபூர்வமான ஆழ்மன தாக்கம். நல்ல வேலையாக அப்படத்தை, இன்று வரை நான் பார்க்கவில்லை.

புரட்சித் தலைவர் MGR படமாவது, புரட்சிகரமான ஆள் மன தாக்கத்தை தரும்.

சுவாமி என்னை மன்னிக்க வேண்டும்-ஸ்வாமி நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் அனால் என் மனம் மஞ்சள் பை கொடுக்காதது அதிருப்தியில் இருக்கிறது.

என் மனம் திருப்தி அடையவில்லை சுவாமி

இக்கட்டுரையின் சுருக்கம்

1) நிர்வாகிகளுக்கு தனி தனி யாக தொடர்புக்கொண்டு டார்ச்சர் செய்ய வேண்டாம். உதாரணம் எனக்கு மஞ்சள் பை கொடுக்காததை சொல்லி காண்பித்து டார்ச்சர் செய்வது

2) நிர்வாகம் செய்ய ஆட்களை கவர்வது சுலபம் இல்லை. சம்பளம் இல்லாமல் சேவை செய்ய முன் வருவது மிக்க கஷ்டம். அதுவும் கோவிலை கட்ட சொல்லி அழித்தவனே, 45 லட்சம் மற்றவர்களிடம் வசூல் செய்து கட்டிய பிறகு அறிவு கெட்ட அதே பயல் கும்பாபிஷேகத்தை நிறுத்த ஏற்பாடு செய்தவன் இருக்கும் ஊரில் சேவை செய்ய யாரும் முன் வர மாட்டார்கள்.

3) அது குறை, இது குறை என்றால் நிர்வாகிகள் a) போன் பிளாக் செய்யலாம் b) நிர்வாகத்தை விட்டு ராஜினாமா செய்யலாம்.

4) நிர்வாகிகளுக்கு நிம்மதியாக, சந்தோஷமாக சர்வ சுதந்திரமாக நிர்வாகம் செய்ய நாம் கம்முனு வேடிக்கை பார்த்தால் மட்டும், பேருதவியாக இருக்கும்.

5) அல்லது குறையாக தெரிந்தால், அந்நபர் சென்று நிர்வாக பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டாலும் சரிதான்.

Leave a Reply