You are currently viewing பிரச்னை நான் கொண்டு வருகிறேனா-2: எது மூல காரணம்?
எது மூல காரணம்? எனது திருமணம்

பிரச்னை நான் கொண்டு வருகிறேனா-2: எது மூல காரணம்?

எது மூல காரணம்?

மூலகாரணம் என்றால் என்ன? எனது தவறு என்ன? எது மூல காரணம்?

பிரச்சனைகளை, விலாவாரியாக அலசி ஆராயலாம் என்று நினைத்தேன்.

எனது மனதில் தோன்றுகிறது. எனது திருமணத்தின் பின்னணியில், பல பல சூழ்ச்சியும், சுயநல நோக்கமும் நிறைந்து இருக்கிறது என்று சந்தேகம் நிறைய உள்ளது.

இதை பற்றி சிந்திப்பதாலோ, ஆராய்ந்து கண்டுபிடிப்பதாலோ எந்த பலனும் இருக்காது.

எனக்கு இந்தியாவில் திருமணம் செய்ய வற்புறுத்திய தந்தையார் கூட, மலேசியாவில் எனது விருப்பத்துக்கு, மலேசியாயாவில் மனம் செய்ய சம்மதித்து, ஒரு வீடும் வாங்கி விட்டார்.

அதற்கு பின் இருந்த மர்மம் என்ன? தெரியாது. ஆனால், அனைத்தும் சுயநல நோக்கம் தவிர்த்து வேறு எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை. அது மட்டும் நிச்சயம்.

இந்தியாவில் திருமணம் செய்ய வற்புறுத்திய அணைத்து நபர்களும், உறவினர்களும், ஒருவர் கூட உனது தொழில் பாதிக்குமா. உனக்கு என்ன வேண்டும் போன்ற எனது மேல் அக்கரையில் விசாரிக்க கூட இல்லை.

எது மூல காரணம்?

நான் சொல்லி விட்டேன். நான் சொல்வதை கேள். எனது பேச்சை கேட்டவன் கெட்டது இல்லை என்ற தற்பெருமையான பிரச்சாரம் செய்யப்பட்டது.

வாழ்க்கை அனுபவம் முதிரும் போது தான் பல பல பின்னணி காரணங்கள் மேல் சந்தேகங்கள் வலுக்கிறது. அனுமானிக்க இயலுகிறது.

என்னை பொறுத்தவரை, இந்தியாவில்,இந்திய கலாச்சாரத்தில் வளர்ந்தவர்களுக்கு, ஒரு பொருளாதார, உறவு பாதுகாப்புக்கும். மற்ற குடும்ப பிரச்சனைகளை கையாள்கிறேன் என்ற போர்வையில், தனது தலைமைத்துவத்தை காட்டிக்கொள்ளவும் ஏற்பட்ட சூழ்ச்சியாக கூட இருக்கலாம்.

எல்லா பிரச்சனைகளுக்கும் மூலம், நான் திருமணத்துக்கு சம்மதித்தது தான்.

மனைவி நல்ல மனைவி. அது மட்டும் எனது அதிர்ஷ்டம்.

ஆனால், இன்றய பிள்ளைகள் செய்வது போல் மலேசிய மொழி, கலாச்சாரம் தெரிந்த பெண்ணை மணந்து இருந்தால், எனது பொருளாதார நிலை இன்று மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருந்து இருக்கும்.

காலங்கள் வீண் ஆகி விட்டது பற்றி, எனக்கு இந்தியாவில் திருமணம் செய்ய வற்புறுத்தியவர்களிடம், இன்று சொன்னாலும் அவர்களுக்கு புரியாது.

ஆனால், எனக்கு நான் கேட்காமல் ஆலோசனை கூறிய ஒரு மனிதன், தனது ஆசன வாயில் தங்கம் கடத்தி, பின் பிடிபட்டு, அவதிப்பட்டு உள்ளார். இவர் போன்ற நபர்கள் எனக்கு ஆலோசனை சொல்ல அனுமதித்தது எனக்கு என்னை நினைத்தால் படு கேவலமாக இருக்கிறது.

நான் வளர்ந்த இடத்தில், தந்தையார் முதல், தாய் மாமா உட்பட, இப்படி ஒரு கேவலமான ஆலோசனை சொல்லவே இல்லை. வளர்த்தவர்களுக்கு எனது தேவை புரிந்தது, ஆனால் சமுதாய பின்னணி ஒத்து வரவில்லை. அதனால் ஆதரவு தர இயலவில்லை.

ஆக காலங்களின் மதிப்பு அறியாதவர்களின் ஆலோசனை கூற அனுமதித்தது எனது தவறுதான்.

எது மூல காரணம்? மூல பிரச்னை நான் திருமணம் இந்தியாவில் செய்தது.

கீழே மற்ற பிரச்சனைகளை பற்றி ஆராய்ந்து, எழுத விருப்பம் இல்லை. கீழே பிரச்னையின் தலைப்புக்களை மட்டும் குறிப்பிட்டு விட்டு, இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

இப்படி முடிப்பதில் காரணம், பிரச்சனைகள் எவ்வளவு பாதித்து இருந்தாலும், அதை பற்றி மீண்டும் மீண்டும் யோசிப்பது, சிந்திப்பவரின் வாழ்வு உயராது என்று நிறைய வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

அவசியப்பட்டால், மட்டும் இன்னும் கீழ் உள்ள தலைப்புகளை விரிவாக்கி, ஒவ்வொரு தலைப்பிலும், ஒரு ஒரு பெரிய கட்டுரை எழுதுவேன். அவசியம் வரக்கூடாது என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

  • தலை தீபாவளி வாழ்வில் ஒரு தடவை வந்தது. வீடு வந்ததும் ஒரு வயது பற்றாதவருடம் ஒரு பிரச்னை.
  • மூத்த மகனுக்கு, தலை முடி போட ஏன், எனது மனைவி பிறந்த வீட்டு மக்களை அனுமதிக்க வில்லை?
  • இரண்டாவது, மகன் பிறந்து, தகவல் தெரிவித்த இடத்தில, வாசலிலே பேசி அனுப்பியத்தின் நோக்கம் என்ன? அன்று அவர்கள் பணம் இல்லாத குடும்பத்தை சேர்ந்தவர்கள், அன்று. இன்று நம்மை தாண்டி விட்டார்கள் சம்பாத்தியத்தில்.
  • ஏன் வடக்கு மாசி வீதி, கிரகப்பிரவேசத்தில், வருகை தந்த விதம் அப்படி இருந்தது? வேறு மாதிரி சொன்னால், ஏன் எனது வீட்டு விசேஷத்தில் பிரச்னை உருவாக்கப்படுகிறது?
  • ஏன் மேலமருங்கூர் முதல் கும்பாஷிஷேகத்துக்கு, எனது மனைவிக்கு அழைப்பு இல்லை?
  • ஏன், எனது தாம்பத்திய வாழ்வில் தலையீடு நடந்தது? இதில் பின்னணியில் ஏதும் சூழ்ச்சி இருந்ததா?
  • ஏன், சம்பாதிக்க பயன் படுத்திக்கொண்ட என்னை, எனக்கு நல்ல வாழ்வை வாழ அனுமதிக்கப்படவில்லை.
  • முதல் மகன் திருமண வீட்டில், மேக்கப் பிரச்னை என்று, துக்க வீட்டில் இருந்தது போல் நடந்து கொள்ள வேண்டும்? ஏன்?
  • முதல் கும்பாபிஷேகத்துக்கு அழைக்க வில்லை. 36 வருடம் அதை பற்றி யோசிக்கவும் யாரும் முன் வர இல்லை. கட்ட ஆரம்பித்ததும், அதில் எத்தனை மூக்கு நுழைப்புக்கள்?

இன்னும் நினைவுக்கு வர வர, இன்னும் தலைப்புக்கள் இப்பகுதியில் சேர்க்கப்படும். 

இப்படிக்கு

MKP பாண்டுரெங்கன்

இன்னும் வரக்கூடாது என்ற நோக்கத்தில், இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். இனி சேர்க்கப்படும் விஷயங்கள், கீழே சிவப்பு வர்ணத்தில் இணைக்கப்படும்.

முற்றும்

பிரச்னை நான் கொண்டு வருகிறேனா-1 பிரச்னை என்றால் என்ன-ஒரு வரையரை அல்லது விளக்கம்

மருமகள் “வாங்க” என்று வீட்டுக்கு வந்தவரை கேட்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு வந்தது. வீடு வந்த மருமகள் வாங்க என்று கேட்டாளா, கேட்கவில்லையா. என்று முதலில் பெரியவர்கள் விசாரிக்கவில்லை. கேட்கவே இல்லை என்றாலும், ஒரு தொழில் செய்யும் நபர் இன்னோர் ஊரில் இருந்து வந்து கையாளப்பட்ட விதமே, அவரின் கால விரயம் அறியாதவராக இருக்கிறார் என்று தெளிவாகிறது. இவர்களுக்கு எப்படி புரியும், ஒருவன் மலேசியாவில் திருமணம் செய்யும் நோக்கம் பற்றி?

வாங்க என்று வற்புறுத்தி கேட்க வைப்பது, “அன்பான வாங்கவாக” இருக்குமா?

பழைய விஷயங்களை ஆராயும் போது, எனக்கு தெளிவாக புலப்படுவது, சர்வ சுதந்திரம் அடுத்தவருக்கு உண்டு என்ற உரிமை கொடுக்காமல் தான், தலைமை நடந்து இருக்கிறது. அது உறுதி.

*******************

தலைமைத்துவமும் கழுகு பார்வையும்.

எறும்புக்கு பக்கத்தில் உள்ள உணவு மட்டுமே கண்ணுக்கு தெரியும். கருடன் உச்சியில் பறக்கும்பொழுது ஒரு ஊரே தெரியும்.

தலைமைத்துவம் என்பது, வாங்க சொல்லவில்லை, சேலையை திருடிவிட்டால் என்ற குற்றம் சுமத்துவது இல்லை.

தரம் வாய்ந்த தலைமை தகுதி இருப்பவர்கள், வாங்க கேட்கவில்லை என்றாலும், சேலை திருடி இருந்தாலும் கூட, ஒருங்கிணைத்து, அரவணைத்து குடும்பத்தை ஒட்டி செல்ல முடியும். அந்த தகுதி எங்கள் குடும்ப தலைவர்கள், தலைவிகளிடம்…?????

*************************