oகலைச்செல்வி – பொறுப்பற்ற கணவனுக்கு வாக்கப்பட்டு படும் துன்பங்கள்-1
கலைச்செல்வி – பொறுப்பற்ற கணவனுக்கு 1
தப்பித்தல்..Escapism
கலைச்செல்வியின் கணவன் பெயர் “ரெங்கராஜன்”. இந்த பெயர் ஒரு கற்பனை பெயர். இவனை சுருங்க ராஜன் என்று இக்கட்டுரையில் குறிப்பிடுகுறேன்.
இந்த ராஜன் ஒரு கிருஷ்ணா பக்தன் என்ற போர்வையில், பொறுப்புக்களை ஏற்காதவன்.
பொறுப்புக்களில் இருந்து தப்பிக்க பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவத்தை உதாரணம் காண்பிப்பவன்.
“பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டு என்று நினைக்குமாம்.” இப்படி ஒரு பழமொழி உண்டு.
ராஜன் தனது பொறுப்புக்களில் இருந்து தப்பிக்க, ஸ்ரீமத் பாகவத்தையும், பகவத் கீதையையும் உபதேசிப்பவன். அந்த இரண்டு நூல்களிலும், இஸ்கான் அமைப்புகளில் பக்தர்கள் கூறுவதையும் உதாரணம் கூறுபவன்.
ஆனால் ராஜன் சரியான புரிதலில் இயங்குகிறானா? அல்லது தப்பிக்க மட்டும் பக்தி தகவல் சேர்க்கிறானா?
பக்தி வாழ்வுக்கு முன்…பக்தி வாழ்வுக்கு பின்..

பக்தி வாழ்வுக்கு முன்…பக்தி வாழ்வுக்கு பின்..
மேற் தலைப்பு இந்த ராஜனை பொறுத்த வரை கடுகளவும் பொருத்தம் இல்லாதது.
எனக்கு பல இஸ்கான் பக்தர்களை தெரியும். பல நியாயமான, தரமான பக்தர்கள், பக்தி வாழ்வில் நுழைந்த பிறகு, உணவு முறைகள், மனைவியுடன் உறவு வைத்துக்கொள்ளும் முறைகள் கூட மாறும்.
மது அருந்த மறுத்தல் , மாது (விபச்சாரி தொடர்பு) மறுத்தல் , சூது ஆட தவிர்த்தல், மாமிசம் சாப்பிட மறுத்தல் இதுதான் பக்தி வாழ்வின் பிறகு நல்ல பக்தர்கள் பின்ற்றுவார்கள்.
இஸ்கான் மேற்கண்ட பழக்கத்தை மட்டுமே பரிந்துரைக்கிறது.
ஒரு சில அறிவற்றவன் செய்யும் செயல்கள், அதாவது குடும்ப பொறுப்பில் இருந்து தப்பிக்க செயல் படுவதால், பகவானுக்கே கெட்ட பெயர் தான் மிஞ்சும்.
இஸ்கான் தலைவர் அல்லது சாஸ்திரம் கூறுவது திருமண வாழ்வுக்கு என்ன கூறுகிறது?
“திருமண வாழ்வு எளிமையானது இல்லை. 25 வயதில், உனக்கு பிரம்மச்சாரிய வாழ்வு சரிவருமா என்று நீ முடிவு செய். அது உனக்கு பொருந்தாது என்று முடிவு செய்தால் திருமணம் செய்து முழு பொறுப்புடன் வாழ்ந்து, பக்தி வாழ்வை பின்பற்றலாம் என்கிறது.”
“திருமணம் முடிந்து, ஒரு குழந்தை பெற முயலும் முன் அந்த பிறக்கும் பிள்ளைக்கு அணைத்து கடமையையும் செய்ய சொல்கிறது சாஸ்திரம்”
அதன் அர்த்தம், என்ன?
அதன் அர்த்தம், என்ன?
Sஅதன் அர்த்தம் மனைவியை குழந்தை பெற அணுகும் முன், பிறக்கும் குழந்தையை 25 வருடம் பொறுப்புடன் வளர்க்க முடிந்தால் மட்டும் மனைவியை அணுக சாஸ்திரம் அனுமதிக்கிறது.
பகவான் கிருஷ்ணா இதை சொன்னார், அதை சொன்னார் என்று முழுமையாக புரிந்து கொள்ளாமல் பிதற்றுவது பொறுப்பில் இருந்து தப்பிக்க பேசுவது என்று பொருள்.
குழந்தை வளர்க்கும் பொறுப்பு என்றால் என்ன? குழந்தை பருவத்து, மூத்திரம், மோஷன் சுத்தம் செய்தல் முதல் 25 வயதில் சமுதாயத்தில் ஒரு பொறுப்புள்ள பிள்ளையாக உருவாக்கும் வரை என்று பொருள்.
இது மாதிரி பொறுப்பு ஏற்கும் தகுதியும், திறமையும் இல்லாதவன் மனைவியை அணுகாமல் இருக்க சாஸ்திரம் பரிந்துரைக்கிறது.
மனைவியிடம் படுத்துவிட்டு, குழந்தை பிறந்த பிறகு பொறுப்பேற்காமல் இருக்க. அல்லது தனது முட்டாள்தனம் நிறைந்த கையாலாகாமை தனத்தை நியாயப்படுத்த கீதை போன்ற நூல்களை பேசுவது, சுத்த பைத்தியக்காரத்தனம் என்று உலகம் கூறுகிறது. பேசுபவன் கலைச்செல்வி போன்று அபலை பெண்ணிடம் பேசுவதை விட, இஸ்கானில் நல்ல பக்தர்களிடம் சொன்னால் எடுபடாது.
எனக்கு தெரிய, இஸ்கானில், நிறைய பக்தர்கள் பெற்ற பிள்ளைகளை எத்தனையோ பொறுப்புடன் வளர்க்கின்றனர். கட்டிய மனைவியை மிக சிறப்பாக பார்த்துக்கொள்கின்றனர்.
வெளியுலகத்தையே காட்டாமல் மனைவியிடம் ஆயிரம் முட்டாள் தனம் நிறைந்த கதைகள் சொல்லி ஏமாற்றலாம், மோசம் செய்யலாம்.
ராஜன் குழந்தை வளர்த்த லட்சணத்தை வரும் காலங்களில் ஆழமாக ஆராய்வோம். அதில் எத்தனை பொறுப்புடன் வளர்த்தான் என்பதை ஆராய்வோம். புட்டு புட்டு, ஒவ்வொரு அங்கமாக ஆராய்வோம்.
கலைச்செல்வியின், உடன் பிறந்தோர்கள் பற்றியும் ஆராய்வோம். சுயநலம் என்றால் என்ன என்பது பற்றி ஆராய்வோம்.
நான் யார்?
எனது பெயர் பாண்டிக்கதிரேசன் (நிஜம் ஆனால் புழக்கத்தில் பயன் படுத்தாத, எனது தந்தையை தவிர யாருக்கும் தெரியாத உண்மை பெயர்)
பாண்டிக்கதிரேசன் ஆகிய நான் கலைச்செல்வியிடம் பல பல தனது புருஷனின் நடத்தைகளை கேட்டு, தெரிந்து எழுதுகிறேன்.
இனி நிறைய வரும்
கீழ்கண்ட தலைப்பில் நிறைய வரும் தகவல் கிடைக்க கிடைக்க எழுதப்படும்:
கலைச்செல்வி - பொறுப்பற்ற கணவனுக்கு வாக்கப்பட்டு படும் துன்பங்கள்
************************
இக்கட்டுரை முழுக்க முழுக்க கற்பனையே. பொழுது போகாமல் இருக்கும் பொழுது இது போன்ற வெட்டியான விஷயங்களை பாண்டிக்கதிரேசன் சொல்வதை எழுதி, எனது வெப்சைட்டில் பிரசுக்கிரேன்.
இப்படிக்கு
MKP பாண்டுரெங்கன்
மேலும் மற்ற தலைப்புக்களை படிக்க இந்த லிங்கில் கிளிக் செய்யலாம்.
நான் பிறந்த ஊரான மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் முகநூல்
இப்படிக்கு,
MKP பாண்டுரெங்கன்
மலேசியா..