குடும்ப உறுப்பினர்களின் மோட்டிவ் 1
எனது குடும்ப உறுப்பினர்களின் மோட்டிவ் என்னவாக இருந்து இருக்கும்?
நெப்போலியன் ஹில் அவர்களின் திங்க் & குரோ ரிச் நூலில் அவர் எச்சரிக்கிறார்:
“பழைய குப்பைகளில் மூழ்கிய சிந்தனையில் இருந்தால் நீ உருப்பட மாட்டாய்”
நான் அவரின் சீடன் என்ற முறையில், இக்கட்டுரை விருப்பம் இல்லாமல்தான் எழுதுகிறேன், காரணம் இது ஒரு பெரும் குப்பை கதை.
இதை ஆராய்வதில், ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. ஒரு புரிதல் கிடைக்கிறது. எது மனிதர்களை ஆட்டி படைக்கிறது என்பது புரிய வருகிறது.




மோட்டிவ் அல்லது உந்து சக்தி
மனித நடவடிக்கைகள் பின்வரும் 9 அடிப்படை நோக்கங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றால் ஈர்க்கப்படுகின்றன:
அன்பின் உணர்ச்சி
அன்பின் உணர்ச்சி – அன்பு மக்களை வேகமாகச் செயல்பட தூண்டும்
உடலுறவின் உணர்ச்சி
உடலுறவின் உணர்ச்சி அல்லது பாலியல் தூண்டுதல் – உடலுறவின் உணர்ச்சிகள் பலரைத் திருப்திப்படுத்துவதற்காக வேகமாகச் செயல்பட வைக்கும்.
பொருள் ஆதாயம்/நிதி ஆதாயத்திற்கான ஆசை
பொருள் ஆதாயம்/நிதி ஆதாயத்திற்கான ஆசை – நோக்கம் ஒரு வேலை அல்லது வணிக வாய்ப்புக்கு மிக எளிதாகப் பொருந்தும்; இருப்பினும், தற்காலத்தில் சிலர் ஒன்றன் பின் ஒன்றாக நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால், அதைச் சமாளிக்க விரும்புகிறார்கள்; மொத்தத்தில், மக்கள் உடனடி நடவடிக்கை எடுக்க நிதி ஆதாயம் ஒரு நல்ல உந்துதலாக உள்ளது
சுய-பாதுகாப்புக்கான ஆசை
சுய-பாதுகாப்புக்கான ஆசை – ஒரு விதியாக ஒவ்வொரு விவேகமுள்ள மனிதனும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தனது சொந்த உயிர்வாழ்வை உறுதிப்படுத்தவும் தனது சொந்த நலனுக்காக செயல்பட முனைகிறார். தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு உதாரணம், ஒரு பெரிய கரடி நெருங்கி வருவதைக் கண்டால் ஓடுவது. அன்புக்குரியவர்களுக்கு உணவளிப்பதற்கும் கவனித்துக்கொள்வதற்கும் ஒரு வேலையை வைத்திருப்பது அல்லது விரும்புவது சுய பாதுகாப்பின் மற்றொரு எடுத்துக்காட்டு
உடல் மற்றும் மனதின் சுதந்திரத்திற்கான ஆசை
உடல் மற்றும் மனதின் சுதந்திரத்திற்கான ஆசை – இந்த நோக்கத்தை ஒரு மிருகத்தனமான சர்வாதிகாரத்தின் கீழ் வாழும் மக்களால் எடுத்துக்காட்ட முடியும்; அவர்கள் உடல் சிறைக் கட்டிடத்தில் இல்லாவிட்டாலும், பொதுவாக அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் பிணைக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டதாக உணரலாம். பல நேரங்களில் அவர்கள் தங்கள் மனதில் உள்ளதைப் பேச அனுமதிக்கப்படுவதில்லை, ஏனென்றால் அவர்கள் ஒரு வழியில் அல்லது வேறு வழியில் அதிகாரங்களை புண்படுத்தக்கூடும். இயற்கையாகவே மனிதர்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள், சுதந்திரமாக சிந்திக்கவும் படைப்பாற்றல் பெறவும் தங்கள் மனதைப் பயன்படுத்துகிறார்கள்
சுய வெளிப்பாட்டிற்கான ஆசை
சுய வெளிப்பாட்டிற்கான ஆசை – இது சிந்தனையிலும் பொருளிலும் கட்டிடத்தையும் உருவாக்கத்தையும் குறிக்கிறது; எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்றோர் இந்த வகைக்குள் அடங்குவர்; இது உங்களுடையது மற்றும் உங்களை ஒரு நபராக வரையறுக்கும் ஒன்றை உருவாக்குவது பற்றியது
இறப்பிற்குப் பின் வாழ்வதற்கான ஆசை
இறப்பிற்குப் பின் வாழ்வதற்கான ஆசை – ஒரு நல்ல உதாரணம், சில சமயங்களில் மக்கள் “ஒரு மரபுவழியை விட்டுச் செல்வது” என்று பேசுவது, அதாவது அவர்கள் இல்லாத போது அவர்கள் யார், என்ன செய்தார்கள் போன்றவற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இந்த நோக்கத்தின் ஒரு வடிவமாக மனித இனப்பெருக்கத்தையும் பார்க்கலாம்
கோபம்/பழிவாங்கும் உணர்ச்சி
கோபம்/பழிவாங்கும் உணர்ச்சி – இந்த நோக்கமானது எதிர்மறை ஆற்றலுடன் கூடியது மற்றும் பிறருக்கு தீங்கு விளைவிக்க அல்லது சொத்துக்களை அழிக்க ஒரு நபரை நகர்த்தலாம். ஆனால் இந்த நோக்கத்தில் உள்ள எதிர்மறை ஆற்றலையும் நேர்மறையான திசையில் பாயச் செய்ய முடியும். இந்த அறிக்கையில் உள்ளது: “என்னால் ஒரு தொழிலை நிறுவவும் சொந்தமாகவும் முடியாது என்று ஏபிசி என்னிடம் கூறியபோது நான் மிகவும் கோபமடைந்தேன். கடைசியாக நான் ஏபிசியை சந்தித்தது இனிமையான வெற்றி. 3 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய கருத்தை நான் அவருக்கு நினைவூட்டினேன், இப்போது நான் ஒரு செழிப்பான வணிகத்தை நடத்தி வருகிறேன் என்பதை வெற்றியுடன் அவருக்குத் தொடர்ந்து தெரிவித்தேன்.
பயத்தின் உணர்ச்சி
பயத்தின் உணர்ச்சி – இங்கே எதிர்மறை ஆற்றலும் சம்பந்தப்பட்டிருக்கிறது, இருப்பினும் ஒரு நேர்மறையான முடிவை அடைய பயத்தால் ஒரு நபர் நகர்த்தப்படலாம்.
மோட்டிவ் இல்லாமல் எதுவும் அசையாது
ஒரு உந்து சக்தி, அல்லது ஒரு மோட்டிவ் இல்லாமல் எதுவும் அசையாது. இதை செய், அதை செய் அல்லது செய்யாதே என்று ஒருவர் அறிவுரை கூறினால், அந்த அறிவுரையை கேட்ட்பவன், அறிவுரை கூறுபவர்களின் பின்னணி மோட்டிவ் என்ன என்று அறியாமல், குருட்டுத்தனமாக கேட்டால், ஆபத்துதான்.
மலேசியாவில் அடிக்கடி தனது மனைவியின் முன்னால் கணவனுக்கு பிறந்த பெண் பிள்ளையை, பலவந்தம் செய்த செய்தி நிறைய வரும்.
இரண்டாவது மனம் செய்யும் பெண், தனது 2ம் கணவன் பின்னணி மோட்டிவ் என்ன என்று உணராமல், பிள்ளைகளை பழக விடுவது பெரும் ஆபத்தில் போய் முடிகிறது. குழந்தைகளின் வாழ்வு நாசமாகிறது.
பல ஆசிரியர்கள் மாணவர்கள் கற்று தேற வேண்டும் என்று எண்ணுகின்றனர். இது சரியான மோட்டிவ்.
பல ஆன்மீக தலைவர்கள், மக்கள் ஞானம் பெற உதவுகின்றனர். நித்யானந்தரும் ஆன்மீக குருதான். அவரின் நோக்கங்கள் அறியாமல் உள்ளே போனால் அவ்வளவுதான்.
பெண்களை பலாத்காரம் செய்வது ஒரு வகை மோட்டிவ்.
ஒரு எறும்பு உணவை தேடி போவதும் ஒரு மோட்டிவ். தனது தேவை சார்ந்த மோட்டிவ்.
ஒரு பெண் திருமணம் செய்த பின் தனது கணவனுடனான தாம்பத்திய வாழ்வுக்கும், தனது தாயாரின் 2வது கணவனின் துஷ் பிரயகத்துக்கும் – செயல் ஒரே மாதிரி இருந்தாலும் நிறைய வித்தியாசம் உள்ளது.
சுருங்க சொன்னால், தாயாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும், பின்னணி நோக்கம் அறியாமல், முடிவுக்கு வருவது பல நேரங்களின், வாழ்வை நாசமாக்கவும் வாய்ப்பு உள்ளது. பெற்றவர்களயே அப்படி என்றால், மற்றவர்களை பற்றி கூறத்தேவை இல்லை.
போட்டி எனும் மோட்டிவ் (Competing Motive)
போட்டி என்பது விளையாட்டுக்களில், கல்வியில் பார்க்கலாம். தனது படையில் உள்ளவர்களுக்கும் மல்யுத்தம் செய்து பழக போட்டிகள் பல வித நன்மைகளை சமுதாயத்துக்கு தருகிறது.
அதே போட்டி, மேக்கப், ஆடை ஆபரணங்கள் வாங்குவதிலும் போட்டி போட்டால் உறவுகளை சீரழிக்கும். கோவில் சேவையில் போட்டி. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
போட்டியின் நோக்கமே அறியாமல், அதுவும் 50 வயதை தாண்டியவர்கள் உருப்படாத போட்டி போடுவது ஒரு வேடிக்கைதான்.
என்னை மதிக்கவேண்டும் எனும் மோட்டிவ்
கண்டிப்பாக யாரும் யாரையும் மதிக்க வாழவில்லை. அவர் அவர் குடும்ப வாழ்வை வாழத்தான் வாழ்கின்றனர். பணம் சம்பாதிக்க வாழ்கின்றனர்.
இது தெரியாமல், ஒரு குடும்ப விசேஷங்களில், கோவில் விசேஷங்களில், என்னை குறைத்து மதித்தனர் என்று குறை படுவது ஒரு மூடத்தனம் என்றுதான் கருத தோன்றுகிறது.
எனது அனுபவத்தில், தனக்கு போதிய அளவு மதிப்பு கிடைக்கவில்லை எனும் கருத்தில், விஷேசம் முடியும் முன் பாதியில் ஓடுவது போன்ற செயல்கள், செலவு செய்து விஷேசம் செய்யும் குடும்பத்துக்கு ஒரு பெரிய தொந்தரவாக இருக்குமே என்ற அடிப்படை அறிவு கூட இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.
மலேசியாவில், வியாபாரிகள் இது போன்று செய்ய மாட்டார்கள். இந்தியாவிலும் வியாபாரிகள் இப்படி செய்வதில்லை என்று பல திருமணங்களில் பார்த்து இருக்கிறேன்.
குறிக்கோள் அல்லது திட்டம் இன்றி மூக்கை நுழைப்பது-குடும்ப உறுப்பினர்களின் மோட்டிவ் (மூக்கை நுழைத்து பேர் புகழ் வாங்கும் மோட்டிவ் – எனக்கே எல்லாம் தெரியும் எனும் ஒரு தவறான நம்பிக்கை)
புதுமண தம்பதிகளின், சாந்தி முகூர்த்தத்தில், குறிப்பிட்ட ஆடைதான் உடுத்தவேண்டும். இப்படி 10 குடும்ப உறவுகள் 10 வித ஆடைகள் பரிந்துரைத்தால் என்ன ஆகும்.
ஒருவர் நிச்சயதார்த்த சேலைதான் கட்டவேண்டும். இன்னொருவர் மாமியார் கட்டிய சேலை..
இப்படி ஆளுக்கு ஒரு கலாச்சாரத்தை முன் வைத்தால், நான் சொல்வதே சரி, எனது குடும்ப கலாச்சாரமே சரி என்று சண்டை போடுவது ஒரு பக்கம்.
புது தம்பதிகளுக்கு, சாந்தி முகூர்த்தத்தை விட எல்லா கலாச்சாரமும் சுத்த வேஸ்ட். அவர் அவர் குடும்ப கலாச்சாரத்தை கடை பிடிக்க சர்வ சுதந்திரம் கொடுக்க மறுப்பது ஒரு வீண் பிரச்னை.
திட்டம் இல்லாத மூக்கு நுழைத்தள் என்று பொருள்.
வயதில் பெரியவன். தான் சொல்லும் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்-குடும்ப உறுப்பினர்களின் மோட்டிவ்
தானே குடும்ப தலைவன்/பெரியவன் என்றெல்லாம் சொல்லி வற்புறுத்தி அவர்கள் வழிக்கு கொண்டு வந்து, பிறகு அது தோல்வி அடைந்து விட்டதும், எத்தனை பேர் பொறுப்பு எடுப்பார்கள்?
நான் பெரியவன் என்றும், எனது வழிக்கு வா என்று கூறும் நபர்களின் மோட்டிவ் என்னவாக இருக்கும்? உண்மையில் சுயநலம் நிறைய இருக்கும். அதில் எந்த சந்தேமும் தேவை இல்லை. எனது அனுபவம் பேசுகிறது.
*****
மோட்டிவின் சுருக்கம்
காம உணர்ச்சி மோட்டிவில் உள்ள இரண்டாம் கணவனின் வலையில் மாட்டிகொல்லாமல் இருக்க போதிய அறிவும் திறமையும் வேண்டும் மனைவிக்கும், முன்னால் கணவனுக்கு பிறந்த பிள்ளைகளுக்கும்.
‘பொருள் ஆதாயம்/நிதி ஆதாயத்திற்கான ஆசை ‘-இந்த மோட்டிவில் செயல் படும் மனிதர்கள், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்காமல், அவர்களின் வலையில் சிக்கி, மாட்டிகொல்லாமல் இருக்க போதிய திறமை இல்லையென்றால், அவதிதான்.
சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க முடியாத பட்சத்தில், நாம் மற்றவர்களின், சுய நல வலையில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு அதிகம்.
நம்மை கட்டாயப்படுத்தும் நபர்களின் பின்னணி மோட்டிவ் என்ன என்று ஆராய வேண்டும்.
ஆசிரியர்கள், மாணவர்களை நல்லா படிக்க தூண்டி, கட்டாயப்படுத்தினால், அவர்கள் மாணவனின் நன்மைக்காக செயல்படுகின்றனர்.
கோவிலில், எனக்கு பொன்னாடை போத்து என்று கட்டாயப்படுத்தினால், அது சுய கௌரவம், சுய நலனுக்காக செயல் படும் மோட்டிவில் இயங்குகின்றனர்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நமது பொறுப்பு மட்டுமே
குடும்ப உறுப்பினர்களின் மோட்டிவ் 1…
“*ஒரு அப்பாவும் மகனும் அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்திற்குப் போகிறார்கள்.*விருந்திற்கு முன்பாக தேநீர் வழங்கப்படுகிறது. அப்பா கையில் எடுப்பதற்கு முன்பு தேநீர் கோப்பை தவறி கீழே விழுந்து உடைந்து விடுகின்றது.அந்த சப்தம் கேட்டு நண்பர் வெளியே வந்து அதை பார்த்து , அழகான சீனக் கோப்பை இது. எவ்வாறு உடைந்தது ?, என ஆதங்கமாகக் கேட்டார்.*”எனது கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது”,* என அப்பா வருத்தமான குரலில்சொல்லவே,நண்பர் உடைந்த பீங்கான்களை அள்ளிக் கொண்டு சென்றார்.இதைக்கண்ட மகன் அப்பாவிடம் கேட்டான்… *”உங்கள் கை கோப்பையில் படவே இல்லையே. பின் ஏன் நீங்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டீர்கள்?”.*“உண்மைதான். தேநீர் கோப்பையைக் கொண்டுவந்து வைத்தது நண்பரின் மகள்.அவள் கவனமாக மேஜைமீது அதை வைக்கவில்லை.ஆகவே தவறி விழுந்து விட்டது.இந்த உண்மையைச் சொன்னால் நண்பர் ஏற்றுக்கொள்வாரா? நிச்சயம் என் மீது சந்தேகப்படவே செய்வார்.அதற்குப் பதிலாக செய்யாத குற்றத்தை ஏற்றுக் கொண்டுவிடுவதே சரி என நினைத்தேன்.ஒருவேளை இந்த உண்மைக்கு நீ தான் சாட்சி என விளக்கி சொல்லியிருந்தால் அவர் மகளைக் கோபித்துக் கொண்டிருப்பார்.அதன்பிறகு அவரது மகளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடும்.மெல்ல எங்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டுவிடும்.*”உறவுகளை உடை படாமல் காப்பாற்ற இப்படி சிறு பொய்கள் தேவைப்படவே செய்கின்றன”.**அப்பாவின் முப்பதுஆண்டுகால அனுபவம் தான் அவரை இந்த முடிவு எடுக்க செய்திருக்கிறது*.வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடம் இது போன்றது தானே!இதற்கு மாறாக சிலர் தங்களது சுயநலத்திற்காக குடும்ப உறவுகளை சிதைத்து கொள்வதுடன் மற்றவர்களின் சந்தோஷத்தையும் கெடுத்து விடுகிறார்கள்உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது எளிது.காப்பாற்றிக்கொள்வது எளிதல்ல.வீட்டுக் கொடுத்தலும், புரிதலும், அரவணைத்துப் போதலும் அத்தியாவசமானது.*நாம் யார் என்பதை நமது செயல்களே தீர்மானிக்கின்றன*.”
*****
பிரச்னை நான் கொண்டு வருகிறேனா-2: எது மூல காரணம்?
இப்படிக்கு