சமமாக பார்க்கிறேனா 1?
நான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா? பாகம் 1
நான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா? பாகம் 1- 29 8 2020

குந்தி தேவி என்ற தாயின் பார்வை எப்படியான பார்வை ?
நாம் கர்ணன் என்ற படம் பார்த்திருக்கலாம் அல்லது படித்து இருக்கலாம். குந்தி தேவி திருமணம் செய்து கொள்ளும் முன்பே கர்ணனை பெற்று விட்டார், நதியில் விட்டும் விட்டார். தேரோட்டியிடம் வளர்ந்த கர்ணன் துரியோதனால் அரசனானான்.
சமமாக பார்க்கிறேனா 1?
ஒரு தடவை துரியோதனன் மனைவியின் இடுப்பில் எதோ ஆபரணம் கர்ணன் கை பட்டு ஆபரணம் விழுந்து முத்துக்கள் சிந்த துளியளவும் கர்ணனை சந்தேகிக்காமல் முத்தை பொறுக்க உதவிய துரியோதனன் எங்கே?
கிருஷ்ணன் பாண்டவர்களை ஜெயிக்க வைக்கும் ஒரே யுக்தியாக குந்தியிடம் கர்ணன் குந்தியின் மகன் என்றும் அவனிடம் வரம் கேட்க வைக்க, தான் பெற்ற பிள்ளைகளை சமமாக பார்க்க முடிந்ததா?
மஹாபாரதம் தொலைக்காட்சி தொடர் அல்லது அந்த புராணம் படித்தவர்களுக்கு நன்றாகவே தெரியும், கர்ணன் முதல் பாண்டவர்கள் வரை யாரும் குந்தியின் கணவன் பாண்டுவுக்கு ஒரு சாபம் காரணமாக பிறக்கவில்லை. பாண்டவ சகோதரர் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தந்தைகள்.
குந்தி மிக நல்ல பக்தி உள்ளவர் என்று புராணம் கூறுகிறது. அவரின் நடத்தை பற்றி சர்ச்சை செய்ய நாம் யாருக்கும் உரிமையும் தகுதியும் இல்லை. அந்த காலக்கட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலாச்சாரம்.
நான் சர்ச்சையாக்குவது அவரின் பிள்ளைகளை சமமாக பார்க்கவில்லை என்பதும் கர்ணன் மரணத்துக்கு அந்த தாய் ஒரு முக்கிய காரணம் என்பதும்தான்.
புரியாதவர்கள் கர்ணன் படம் பார்த்தல் புரிந்துவிடும்.
ஞானியின் பார்வை.
நாயையும், பன்றியையும், சாதுவாயும் ஆத்மாவாக பார்க்க முடிந்தவனே ஞானி என்று கருதப்படுகிறது. அனால் அப்படி சுலபம் இல்லை.
அந்தளவுக்கு ஞானியாக வேண்டாம். நம்மை நம்பி வரும் மருமகள்களிடம் சமமாக நடப்பதே மருமகள்கள் கை கூப்பி வணங்குவார்கள்.
உண்மையில் பிரபஞ்சத்தில் எதுவும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சொந்த பிள்ளைகள், அவர்களுக்கு வரும் மனைவிகள் நிச்சயம் ஒரே மாதிரி இருப்பதில்லை. குணம் பணம் திறமை எல்லாம் வேற்றுமை தான். நாம் பெற்றெடுக்கும் பிள்ளைகளும் அப்படிதான்
கல்வி அறிவு திறமைகள் கூடலாம் குறையலாம். அனைத்து பிரச்னையும் உன்னிடமே என்பது போல, நாம் அனைவரையும் ஏற்றுக்கொள்வதில்லை. சர்வ சுதந்தரமாக செயல் பட அனுமதிப்பதில்லை. நமக்கு தெரிந்த, நாம் நம்பும் ஒழுக்கத்திலும், நம்பிக்கையிலும் வந்த மருமகள்களை நிர்பந்தம் பண்ணுவதில் தான் குடும்ப நிம்மதி இருப்பதில்லை.
குந்திதேவி பாஞ்சாலி ஐவருக்கு மனைவியாக இருக்க அந்த நேரத்தில் பல சத்தியம் காரணமாக சம்மதிக்க வைத்தார். ராஜாஜி எழுதிய மஹாபாரதத்தில் பாஞ்சாலி அருவருப்பு அடைந்ததாக எழுதியிருந்தார். ஆனால் அப்படிப்பட்ட வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டார்.
காட்டில் கிடைப்பது அனைவருக்கும் பொது ஒப்பந்தம். பொதுவாகத்தான் பயன்படுத்த பட வேண்டும் என்ற ஒப்பந்த அடிப்படையில் பாஞ்சாலி ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டது.
ஒரு மாம்பழத்தை பங்கு போடலாம். சொத்தை பங்கு போடலாம். பெண்ணை பங்கு போடுவது கூட தவறு இல்லைதான்.
ஆனால் அந்த பெண்ணின் சமமதம் வேண்டும் என்ற அடிப்படை உரிமை கொடுக்கப்படுவது இல்லை.
இன்றய பெண் நண்பனோடு விரும்பி உறவு வைத்துக்கொண்டதை வைத்து வில்லன் கட்டாயப்படுத்தி, இவனே அவள் அப்படிப்பட்ட பெண் என்று:-
கருத்துக்களையும் அபிப்பிராயத்தையும் உற்பத்தி பண்ணி அவளை நிர்பந்தப்படுத்தியதால் வந்த வழக்கு சம்பந்தமான படம் நமது தலை நடித்து, வெற்றியும் கண்டது.
நமது கலாச்சாரத்தை, நமது நம்பிக்கையை, நமது வீட்டுக்கு வரும் மருமகளிடம் திணிப்பதும், பாஞ்சாலியிடம் திணிப்பதும் நிறைய வேற்றுமை எதுவும் கிடையாது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறுவது மாதிரி, மற்றவர்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் மன பக்குவம் இல்லாமையே நமது நிம்மதி கெடுகிறது.
ஒரு மரத்தில் இரு இலைகள் கூட சமமாக இருப்பதில்லை. அனால் நாம் என்னோடு உன்னையும் உன்னோடு என்னையும் வைத்து ஒப்பிட்டு ஒப்பிட்டு வாழ்வை வீணடிக்கிறோம்.
மருமகள் சரி இல்லை, பழக்க வழக்கம் தெரியவில்லை, போதிய சீர் கொண்டு வரவில்லை, என் மகளுக்கு போட்ட சீர் கூட இவள் கொண்டு வரவில்லை. இது போன்ற குறைகள் மருமகளை புண்படுத்துவது மட்டும் இல்லை, மகனின் நிம்மதியையும் நாசப்படுத்துகிறோம்.
திருமணத்தின் நோக்கம்
பருவ வயதில் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தேவைபடுகிறது. இப்படித்தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். ஆணும் பெண்ணும் கூடுவதே வாழ்வு இல்லை.
திருமணம் நோக்கம் இந்த பருவ வயது புத்தியில் உழன்று வீணடிக்காமல், அடுத்த இலக்கை நோக்கி பயணம் செய்வதுதான்.
அடுத்த இலக்கை நோக்கி வாழ்வில் பிரயாணம் செய்ய உதவுவதற்காகத்தான். பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை அல்லது பெண் பார்த்து விவாகம் செய்து வைக்க வேண்டுமே ஒழிய மற்ற கெளரவம், சீர் காரணங்களுக்கு செய்வது ……..
சாப்பிடுவது, தூங்குவது, உறவு கொள்வது, தற்காத்துக்கொளவது போன்ற செயல்களை மிருகமும் செய்கிறது. மனிதன் அடுத்த உயர்ந்த இலக்கை அடையவே திருமணம்.
வாழ்வில் அப்படி நல்ல விஷயம் சாதிக்க முடியவில்லை என்றால் அவர்களின் குடும்ப கலாச்சாரம். பிரச்சனைகள் உற்பத்தி செய்து பிரச்னையில் மூழ்கி இருக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளது.
https://youtu.be/aYwpXhO_PY4முக்கியமாக மற்ற அந்நிய குடும்ப பழக்க வழக்கங்களை ஏற்றுக்கொள்ள இயலாமையாக இருப்பதே பிரத்தியேக காரணமாக இருக்கும்.
From