நான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா 3?

சமமாக பார்க்கிறேனா 3?

குறுகியபார்வை யும்  vs  விஸ்தாரமானபார்வை யும்

ரமண மகரிஷி, அவர் தரும் தியானப் பயிற்சி “நான் யார்” என்று தொடங்கி அந்த “ நான்” கரையும் வரை “அந்த நான் யார்”’தான் கதி.

மிக சுலபமான தியானம் ஆனால் மிக கடினமான தியானம் தான். வடிவேலு சொல்வது போல வரும் ஆனால் வராது கதைதான் இது 

இந்த நான் யார் என்று தெரியாதா, தெரியாமலா நாம் வாழ்கிறோம்.

இந்த “நான்” நாம் எப்படி நிர்மாணித்துள்ளோம் என்று எனக்கே தெரியவில்லை என்பது தெரியவில்லை. அதுதான் பிரச்னை.

ஒரு கட்டிடத்தை உடைக்கும்போது, நாம் சற்று ஆராய்ந்தால் எப்படி செங்களால், காங்கிரேட் கலவையால் கட்டப்பட்டதா என்பது தெரிய வரும். நமதின்  இந்த நாணை உடைத்தால் தான் தெரியும் நமது நான் எப்படி, எந்த மூலப்பொருளால் கட்டப்பட்டது என்பது புரியவரும். அல்லது புரியாமலே வாழ்வை ஓட்டுபவர்கள் தான் 99%.

நமக்கு எதுக்கப்பா ஆன்மிகம்? நடைமுறை வாழ்க்கைக்கு வருவோமே!

சமமாக பார்க்கிறேனா 3?

Teach Your Child How To Think
Teach Your Child How To Think

இந்த ”நான்” எப்படி இயக்குகிறது?

“நான் சொல்வதே முடிவு, அதை கேள்வி கேட்காமல் செய்ய வேண்டும் “…”என்னை பற்றி உனக்கு தெரியாது” இப்படி பேசிய எனது தொழில் பார்ட்னர் ஆகட்டும் உறவுகள் ஆகட்டும் வாழ்க்கையில் ஒரு பருப்பும் வேகவில்லை.

இந்த ”நான்” எப்படி இயக்குகிறது? எத்தனை  பேர்களுக்கு  இந்த இவரின்/இவளின் “நானுக்கும்”, அந்த அவரின் அல்லது அவளின் நானுக்கும் வித்தியாசம் பார்க்க முடிகிறது?

ஒவ்வொரு மனிதனிடமும் அவன் அவனிடம் இந்த  நான் இருக்கிறது, இயங்குகிறது. அப்படி இருக்க உலகத்திலேயே நான்தான் சிறந்தவன் என்ற ஆணவத்தில் இருந்தால் அவனால் ஒரு நல்ல தலைமைத்துவம் செய்ய முடியாது. ஒவ்வொரு மனிதனும் குறைந்த பட்சம் தனது சொந்த பிள்ளைகளிடமும் மருமகளிடமும் நல்ல குடும்பத் தலைலைவன் அல்லது தலைவி என்றாவது மதிக்கப்பட வேண்டும் அல்லவா? பல குடும்பங்களில் மருமகள்கள் அல்லது நாத்தனார்கள் அரண்டு, பயந்து, நடுங்கிக்கொண்டு ஆமோதிப்பார்கள். இது ஒரு மூடத்தனமான தலைமைத்துவம். இது ஹிட்லரின் தலைமைத்துவம்.

திறமைதான் மனித உறவுகளையும் தலைமைத்துவதையும் மேம்படுத்தும்.

அவனவனின் நான் இருக்கும், அந்த அவவனவன் நான் களுடன் உறவு வைத்துக்கொள்வது ஒரு மாபெரும் திறமை. திறமைதான் மனித உறவுகளையும் தலைமைத்துவதையும் மேம்படுத்தும். அது ஒரு மாபெரும் வாழ்வியல் கலை யும் கூட .

புகுந்த வீட்டு  வழி நார்த்தனார்கள்  சரியில்லை. புகுந்த வீட்டு மச்சானும் கொழுந்தனும் சரியில்லை. உடன்பிறந்தவர் வழி நார்த்தனாரும் சரியில்லை. பிறந்த வீட்டு சகோதரர்களும் சரியில்லை. மகளுக்கு வந்த நார்த்தனாரும் சரியில்லை. அப்படியானால, தன்னுடைய அந்த “நான்” சரியாக இருக்கிறதா என்றுதான்  பரிசோதிக்கப்பட்ட வேண்டுமே ஒளிய,  மற்றவர் அனைவரும் சரியில்லை நான் மட்டும் சரி என்று யார் நம்புவார்கள்?

ஏன் வம்பு என்று நம்புவது போல் நடிக்கலாம். மதிப்பு மிக்க வேலைகளை விட்டு விட்டு, இது பற்றி விவாதிக்க விருப்பமில்லாமல் தப்பித்துக்கொள்ள ஒத்துக்கொள்வது போல் நடிக்கலாம்.

இக்காலத்தில் MGR பாடிய பழைய பொய்யடா என்பது போல், யாரும் நல்ல மதிப்பான வேலை உள்ளவர்கள் விவாதிக்க விரும்புவதில்லை.  எத்தனை காலம் இந்த பழைய பொய்யை நம்பி காலத்தை விரயம் செய்ய முடியும். மதிப்பான வேலை உள்ளவர்கள் இது போன்ற மதிப்பற்ற விவாதத்தில் ஈடுபட மாட்டார்கள்.

ஒரு கதை – இது கற்பனை அல்ல உண்மைக்கதை;

சென்ற வாரம் எனது நண்பர் ரகுபதி அவர்கள்  ஏதோ ஒரு  பொருள் எடுக்க வீட்டுக்கு வந்தார். வந்த இடத்தில், எனது 3 வயது பேத்தி ஒரு தாளில் கிறுக்கி நன்றாக இருக்கிறதா என்று அவரிடம் கேட்டது. இவர் மிக நன்றாக இருக்கிறது என்று அந்த கிறுக்கலை பார்த்து சொன்னது, எனக்கு ஒரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது.

அவர் விரைவில் சம்பந்தம் செய்யப்போகும் வயதில் இருப்பதாலோ என்னவோ அவருக்கு நாகரிகம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த கிறுக்கலை நல்லாயில்லை என்று சொன்னால் 3 வயது மனம் வலிக்கும் என்ற மனோவியல் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் .

ஆனால், சிலர் காலேஜில் படிக்கும் வயது பெண்ணிடம், அப்பெண் போட்ட ஆபரணம் சாதாரண கடை பொம்மை கடையில் வாங்கியது என்று ஒரு விசேஷத்தில் வலியக்க வந்து அதுவும் சம்பந்தம் செய்தவர்கள் சொல்வது அபரிதமான வேடிக்கையாக இருக்கிறது.

அந்த இளம் பெண்ணின்  மனம் புண்பட்டது கூட எனக்கு வருத்தமோ வேதனையோ இல்லை. சம்பந்தம் செய்த வயதினர் இது ஒரு தலைப்பாக எடுத்து வம்புக்கு போவது எனக்கு காமெடியாக இருக்கிறது.

யார் கருத்தும் அபிப்பிராயமும் கேட்கவில்லை. நாகரிகம் தெரிந்தவர்கள்

அப்பெண் எனது 3 வயது பேத்தி போல யார் கருத்தும் அபிப்பிராயமும் கேட்கவில்லை. நாகரிகம் தெரிந்தவர்கள், அந்த ஆபரணத்தை பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கலாம். கம்முனு இருந்தாலே பல பிரச்னையை தவிர்த்து விடலாம். சமபந்தமே இல்லாத ஒரு விஷயத்தை சம்பந்தம் செய்து பேரன் பேத்தி எடுத்தவர்கள் அப்படி ஒரு உருப்படாத தலைப்பை எடுத்து  பேசியது ஒரு மாபெரும் செம்ம  காமெடி தான்.

ஒன்று பாராட்டலாம் அல்லது கம்முனு இருக்கலாம். அபிப்ராயம் கேட்காத இடத்தில், வலியக்க போய் அது சரியில்லை அல்லது பொம்மை கடை யில் வாங்குவது போன்ற கருத்துக்கள் சொல்வது எந்த மாதிரி குடும்பத்தில் இருந்து வந்தனர் போன்ற கேள்விகள் எழுப்பப் படுகிறது.

வாழ்வில் உயர குறுகிய பார்வையை விட்டொழித்து விஸ்தார பார்வை வேண்டும்.

என் மனைவி அடிக்கடி என்ன செய்தி வந்தது, அதன் ஆழத்தை அலசி ஆராய கேள்வி கேட்பாள். நான் திட்டுவேன். பலவிஷயம் நான் தெரிந்து கொள்ளவே விரும்பவில்லை போட்டு ஆறு ஆறு என்று அறுத்து கொட்டாதே  என்பேன்.

ஆனால் வெள்ளி 500 அல்லது 1000 செலவு செய்து  பல விஷயம் தெரிந்து கொள்ள செய்வேன். அது மதிப்பு வாய்ந்த விஷயம். வாழ்க்கைக்கு ஏதோ ஒரு வகையில் உதவக்கூடிய தகவல் என்றால் பல ஆயிரம் செலவு செய்து தெரிந்துக்கொள்வேன்

சென்னையில் இருக்கும் எனது மருமகள் கூட இரண்டு நாள் முன்பு என்னை  பாராட்டியாக இளைய தங்கை கூறியது. எனது வயதிலும் கணினி சம்பந்த விஷயத்தில் ஆர்வம் மற்றும் கற்றுக்கொண்டதை பாராட்டியது.

எதுக்கும் உதவாத கருத்தோ அபிப்பிராயமோ சொல்வது சொல்பவர்

ஒன்று தனக்கு உதவனும் அல்லது மற்றவருக்கு உதவனும்.எதுக்கும் உதவாத கருத்தோ அபிப்பிராயமோ சொல்வது சொல்பவர்மற்றும் கேட்பவர் நேரம் கொல்லப்படுவது தான் மிச்சம்.

ஆனால் கேவலம் இது காவெரிங், தங்கம் இல்லை என்று மற்றவர் மனதை பாதிக்கவைப்பது, அதுவும் சம்பந்தம் செய்த வயதினர் செய்தது, அவர்களுக்கு மதிப்பு வாய்ந்த வேலைகள் இல்லாது இருக்க வேண்டும் அல்லது கற்றுக்கொள்ள விரும்பாமல் இருக்க வேண்டும்.

அந்த இளம் பெண் சுய அறிவுடனும், சுய தீர்மானத்தில்தான் ஆபரணம் பணம் குடுத்து வாங்கி அணிந்துள்ளது. அப்பெண்ணுக்கு சுய அறிவு இருக்கிறது. மற்றவர் அறிவும் ஆலோசனையும் இரவல் கேட்க வில்லை. பின் என் வலியக்க போய், அதுவும் பேரன் பேத்தி எடுத்த வயதினர் தனது சுய மதிப்பு, அந்த இளம் பெண்ணிடம் இழக்க வேண்டும்?

பழைய தலைமைத்துவம் வெறும் வயதை வைத்து முக்கியமாக மலேசியாவில் மதிக்கப்பட்டது. பெரிய வயதினரை கப்பளா என்று ஒரு பெயர் வைத்து கூப்பிடுவது பழக்கம். கப்பலா என்றால் தலைவா என்று பொருள்.

இப்பொழுது வெறும் கப்பலா பதவி உள்ளவர்களை மதிப்பதே இல்லை. சாதித்தவர்களை மட்டுமே மதிக்கப்படுகிறது.

பழைய கப்பலாக்கள் வெட்டி பஞ்சாயத்து பேசி, இது சரி, அது தவறு என்று கருத்து அல்லது அபிப்ராயம் கூறுவார்கள். அது வாழ்க்கைக்கும் , வாழ்வின் முன்னேற்றத்துக்கும் அதனை பலனற்ற தீர்ப்பாக இருக்கும் .

இன்னும் வரும்.

MKP பாண்டுரங்கன்

*************************

திருவள்ளுவர் பலன் தரும் விஷயத்தை மட்டும் பேசுவதின் அவசியாயத்தை அன்று சொன்னது, இன்றும் உதவுவது ஆச்சர்யம் தான்

அதிகார விளக்கம்

பயன் தராதவற்றை பெரியவர்கள் எப்போதும் உரைப்பதில்லை. பலர் வெறுப்படையும்படி பயன் இல்லாத சொற்களைப் பேசுபவர் எல்லோராலும் இகழப்படுவார். எந்த ஒரு விஷயத்தையும் ஐயமற அறிந்தவர்கள் தேவையற்றதைச் சொல்வதில்லை.

191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்.

பலர் முன்னிலையில் பயன் இல்லாதவற்றைப் பேசுபவர் எல்லோராலும் ஏளனமாக இகழப்படுவார்.

192. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கண் செய்தலின் தீது.

பலர் முன்னிலையில் பயனில்லாதவற்றைச் சொல்வது, நண்பர்களுக்கு நன்மையில்லாததைச் செய்வதைவிட தீமையானது.

193. நயனிலன் என்பது சொல்லும் பயனில

பாரித்து உரைக்கும் உரை.

ஒருவன் பயனில்லாதவற்றைச் சொல்லும்போதே, அவனால் நன்மை ஏதும் விளையாது என்று புரிந்துவிடும்.

194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லார் அகத்து.

பயன் இல்லாத பண்பில்லாத சொற்களைப் பேசுபவன் பலருடைய அன்பையும் இழப்பான், நன்மைகளையும் இழப்பான்.

195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை உடையார் சொலின்.

நற்பண்புகள் உள்ளவர்கள் பயனற்ற சொற்கள் சொன்னால், அவர்களிடம் இருக்கும் நற்பண்புகள் விலகிவிடும்.

196. பயனிலசொல் பாராட்டு வானை மகன்எனல்

மக்கள் பதடி எனல்.

எவருக்கும் பயன் இல்லாத சொற்களைப் பேசுபவனை குழந்தை என்று சொல்லாதே, பதர் போன்று யாருக்கும் பயன்படாதவன் என்று சொல்.

197. நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.

சொல்வதை இனிமையாகச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், பயன் இல்லாதவற்றைச் சொல்லாமல் இருப்பதே சான்றோர்க்கு அழகு.

198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.

அரிதான பயனை ஆராயும் அறிவுள்ளவர்கள், பெரிய பயனை விளைவிக்காத சொல்லும் ஒருபோதும் சொல்லமாட்டார்கள்.

199. பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்.

ஐயம் தெளிந்த அறிவாளர்கள், மறந்தும்கூட பொருள் இல்லாத சொல்களைப் பேச மாட்டார்கள்.

200. சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க

சொல்லின் பயனிலாச் சொல்.

சொல்வதென்றால் பயனுள்ள சொற்களைச் சொல்ல வேண்டும்; பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லக் கூடாது.

 குறிப்பு

இந்த அதிகாரத்தில் உள்ள குறள்கள் குறித்த விரிவான, தெளிவான விளக்கத்துக்கு தொடர்புகொள்ள – சிவயோகி சிவகுமார் (9444190205)

இன்னும் வரும்.

MKP பாண்டுரங்கன்Leave a Reply