சமமாக பார்க்கிறேனா 5?

இரண்டு நாட்கள் முன்பு எனது வாடிக்கையாளரிடம் ஏற்பட்ட அடிப்படை உரையாடலுடன் எனது சிந்தனை யும் கலந்து எழுதுகிறேன்.
தென்னை மரத்தில் மேல் மற்றும் கீழ் உள்ளவனின் பார்வையை விளக்கியது 100% எமது வாடிக்கையாளர்.
தென்னை மரத்தின் உச்சியில்-சமமாக பார்க்கிறேனா?
ஒருவன் தென்னை மரத்தின் உச்சியில் உட்கார்ந்து சுமார் ஒன்றிரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊர். நடமாடும் மனிதன் மற்றும் வாகனம் மிருகம் போன்ற விஷயங்களை தன்னால் பார்க்க இயன்றதை விவரித்தான்.
கீழே தென்னை தூரின் அடியில் , தரையில் நின்றவன் கூறினானாம்:
“முட்டாள் மாதிரி பேசாதே, அவ்வளவு தூரம் எனக்கு தெரியவில்லை, உனக்கு தெரிவதாக கூறி எங்களை ஏமாற்றாதே”.
நாம் நல்ல ரெஸ்டாரண்டில் 40 ரூபாய்க்கு விற்கும் காப்பி ரூபாய் 50,60 என்று விலை ஏற்றினால் நாம் பல குறைகள் அல்லது போராட்டம் செய்வோம்.
ஆனால் அதே மூலப்பொருளான காப்பிக்கொட்டையில் தயார் செய்யும் ஸ்டார் பாக் நிறுவனத்தில்:
ருபாய் 200, 300 க்கு காப்பி சாப்பிட்டு விட்டு செல்பி எடுத்து பேஸ் புக்கில் போடுவோம்.
பார்வையின் வேற்றுமை அடங்கியுள்ளது
இதுதான் தென்னை மேல் ஸ்தானத்தில் உள்ளவனுக்கு தென்னை தூரில் அல்லது தரை ஸ்தானத்தில் உள்ளவன் பார்வையின் வேற்றுமை அடங்கியுள்ளது.
தென்னை மேல் உள்ள ஸ்தானத்தில் உள்ளவனுக்கு ஸ்டார் பாக் வாடிக்கையாளரின் நடவடிக்கையும் புரியும், சாதாரண ரெஸ்டாரன் வடிக்கையாளரினவிஷயமும் புரியும்.
இதுதான் இலக்கம் என்பதும் புரியும். உலகத்தோடு ஒத்துப்போக நாம் எப்படி செயல் படுவது என்பதும் புரியும்.
நான் சொல்லும் ஸ்தானம் என்பது நன்கு படித்தவன், தன்னை விட உயர்ந்தவர்களிடம் நட்புக்கொண்டு அனுபவ அறிவு கொண்டவனின் பார்வையும், மற்றவர் அறிவுகளை, பார்வையை அறிய முற்படாதவன் பார்வையும் தென்னை மேல் இருந்து பேசுபவனுக்கும் தரையில் இருந்து பேசுபவனுக்கும் உள்ள வேற்றுமை கண்டிப்பாக இருக்கும்.
தரையில் நிற்பவன் கிணற்றுத்தவளை போன்ற அறிவு இருக்கும். தென்னை மேல் இருப்பவனுக்கு விஸ்தாரமான அறிவு இருக்கும்.
கல்வி என்பது பள்ளிக்கூட அறிவு என்று பொருள் அல்ல. பள்ளிக்கு செல்லாதவர் கூட, எடிசன் போன்றவர்கள் மாபெரும் சாதனை படைத்தவர்கள்.
தன்னை விட உயர்ந்தவர்களிடம், சாதனை படித்தவர்களிடம் நம்மால் கற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் பழக முடிகிறதா? அல்லது நம்மை விட சாதித்தவர்களோடு பழகும் போது நமது மனம் ஆணவத்தில் இயங்குகிறதா?
ஒவ்வொரு மனிதனும் தனது பார்வையை விஸ்தாரப்படுத்தி கொள்ள பொறுப்பு எடுத்து கொள்ள முடியவில்லை என்றால், அவர் அப்படி ஒன்றும் பல விஷயங்கள் செயல் படுத்த முடியாது தான்.
தென்னை மேல் இருந்து பார்க்க கற்றுக்கொள்பவன் ஸ்டார் பாக் போன்ற கடை திறந்து ருபாய் 300க்கு காபி விற்பான்.
தென்னை கீழ் நின்று மட்டும் பார்க்க கற்றுக்கொண்டு, அந்த பார்வையிலிருந்து தப்பிக்க இயலாதவன்:
சாதாரண காபி கடை வைத்து 40 லிருந்து 45 ரூபாய்க்கு விலை உயர்த்தினாலே போதும் பல குறை பேச்சுக்கு ஆளாவான்.
உலகம் எப்படி இயங்குகிறது என்று புரிந்து கொள்ள இயலாதவனிடம் நாம் ஆலோசனை கல் கேட்டு செயல்பட்டால் கூட:
நாமும் வாழ்வில் பெரிதாக செயலாக்கம் பண்ண இயலாமல் போய் விடும்.
நமது கண் பார்வையில் பிரச்னை இருந்தால் உடனே தெரிந்து விடுகிறது.
நமது மனப்பார்வையில் குறை இருப்பது வாழ்வில் அநேகமாக 90 % மக்களுக்கு தெரியாமலே வாழ்ந்து மடிந்து விடுகின்றனர் என்பது வருந்தத்தக்கதுதான்.
தென்னை மேல் இருப்பவனுக்கு தூரத்து நோக்கு சிந்தனை பார்வை சிறப்பாக செயல் படுகிறது. தென்னை தூரில், தரையில் இருந்து பார்க்கவே பழக்கப்பட்டவனுக்கு ஒரு பெரிய கிணற்று அளவு தூரத்தை தாண்டி பார்க்க முடிவது இல்லை.
அந்நபரின் பார்வை மிக குறுகிய அருகாமையை தவிர சற்று தொலை தூரம் கூட அறியும் செயல் திறன் இருக்காது என்பது வருந்தக்கூடியது.
இன்னும் வரும்.