நான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா2?

சமமாக பார்க்கிறேனா2?

கலாச்சாரத்தின் பார்வையில்/கண்ணோட்டத்தில்

ஏன் பாகப்பிரிவினை என்ற ஒரு முறை வந்தது? அதன் அவசியம் என்ன ?

Teach Your Child How To Think
Teach Your Child How To Think

கலாச்சார  ரீதியாக பழைய காலங்களில் அப்பா, அவரின் சகோதரர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள்.  அதாவது இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள் சேர்ந்து வாழ்ந்தனர். அவர்களுக்குள் பிரச்னை என்று வரும் போது  பாகப்பிரிவினை என்ற தேவே வந்தது. பாகப்பிரிவினை என்பது மனிதன் கண்டுபிடித்தது தான். மன வேற்றுமையில் பிறந்தது தான்.

அந்த பங்காளிகள்  பாகப்பிரிவினை செய்யும் போது, பெண் வாரிசுக்கு நகை போட்டு கரையேத்தின பிறகு  ஒரு கணிசமான தொகை கொடுப்பது கலாச்சாரமாக இருந்தது, வழக்கமாக இருந்தது

“எது நன்மையாக ஒரு காலத்தில் கருதப்பட்டத தோ, அதை புழிந்து எடுக்கும்  போது அதுவே தீமையாக மாறுகிறது” என்று நான் சொல்ல வில்லை. அப்படி சிவன் சொன்னதாக சிவா முத்தொகுதியில் அமிஷ் எழுதியுள்ளார்.

சீர் செய்யும் பண்பு அருமையானதுதான். தனது அன்பை வெளிப்படுத்த பெற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு. அதை துஷ்பிரயோகம் செய்வதால் தான் இன்று பெண் கிடைப்பது கஷ்டமாகி விட்டது. பெண் கிடைத்தாலும் பெண் கேட்பவரிடம் என்ன தகுதி இருக்கு என்று பெண்ணே நேரடியாக கேட்க ஆரம்பமாகி விட்டது.

அந்த காலக்கட்டத்தில் எது நியாயம் என்று நிர்ணயிக்கவில்லை. பெரியவர்கள் தீர்ப்பு , பஞ்சாயம் என்று தீர்மானம் செய்தனர். பாகப்பிரிவினயில் பஞ்சாயம் தீர்ப்பு சொல்வதை கேட்பதை தவிர வேறு வலி இல்லை.

அனால் இன்று எதிலும் சுயநலம் இருப்பதால், பெரியவர் மற்றும் பஞ்சாயம் செல்லாக்காசாகி விட்டது.

பஞ்சாயத்து தீர்ப்பு சொல்பவராகவும், குடும்ப பெரிய மனிதராகட்டும், தான் சொல்லும் தீர்ப்பு விருப்பு வெறுப்புக்கு உட்பட்ட தாக இருக்கும். யாரும் திருவள்ளுவர் சொன்ன நடுநிலைமை மனதில் வைத்து. இந்த நியதிக்கு உட்பட்டு தீர்ப்பு சொல்வதில். அதனாலோ என்னமோ சட்டத்துறை மிக பெரிய படிப்பாகிவிட்டது.

என் அனுபவத்தில் இந்த உருப்படாத பஞ்சாயத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மனிதர் எனது தந்தை ஸ்தாபித்த நிறுவனத்தில் இன்றும் இருக்கிறார்.

தொழிலில் எனக்கு பஞ்சாயம் செய்ய வந்த எத்தனையோ பேரை-பெரிய மனிதர்களை – நான் புறக்கணித்ததுண்டு.

               மனோவியல் கண்ணோட்டத்தில்-சமமாக பார்க்கிறேனா2?

மனோவியல் படி பழைய முறை ஓரு வகை கம்யூனிஸ்ட் வழிமுறையாக    இருந்தது. ஒருவன் உழைப்பில் பலர் வாழ்வார்கள் .

திறமையை வளர்க்காமல், சோம்பேறியாக உள்ளவனுக்கும் அதே வாழ்வு, உழைத்து முன்னேற பாடு படுபவனுக்கும் அதே பலன் . இந்த நடைமுறை காலப்போக்கில் உழைப்பவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. இந்த சிஸ்டம் செத்துவிட்டது , ஜெயிக்கவில்லை.

                  சட்டத்தின்  கண்ணோட்டத்தில்-சமமாக பார்க்கிறேனா2?

சட்டத்தின் கண்ணோட்டப்படி அவர் அவர் களுக்குள்ள பங்கு, உரிமை சரியாக போய் சேர வேன்டும்.

அவர் அவர் உழைப்பின் பலன் அவர் அவருக்கு போய் சேர  வேண்டும். உழைப்பவன் அல்லது சம்பாதிக்க திறமையும், நுட்பமும் அறிந்தவனை, சம்பாதித்து வரி காட்டினாள் தான் நாடு வளரும்.

அந்த அடிப்படையில் தான் சட்டத்தில் எது நியாயம் அல்லது எது நியாயம் இல்லை என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

சட்டம் நிர்ணயம் செய்யும் நியாயம், ஒவ்வொரு குடி மகனையும் சுயமாக சம்பாதிக்க தூண்டவும், முக்கியமாக வரி கட்டவும் உதவும் வகையில் நிர்ணயம் செய்தனர்.  ஆரோக்யமான நாடு வளர அதன் சட்டம் சோம்பேறிகளை உருவாக்கி – உருவாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.

இன்னும் பொதுவாக சொன்னால் சட்டம் உருவாக்கிய நோக்கம் நியாயமாக அவருக்கு சேர வேண்டியதை சேர்க்க வேண்டும். எது  ஞாயம், எது நீதி , போன்ற விஷயங்கள் ஆராயாமல் சட்டமாக்குவதில்லை. நான் லாயரிடம் பழகுவதால் பல வித தகவல் கிடைக்கும். இதை பற்றி பேசினால் இதுவே பெரிய தலைப்பாகி விடும்.

பாகப்பிரிவினை –    சமமாக பார்க்கிறேனா2?          

இன்றைய சட்டம் பெண்ணுக்கும் சம உரிமை என்கிறது. அனால் அப்பா காலத்தில் பெண்களுக்கு நிறைய செய்தும்,  பாகப்பிரிவினை, விடுதலை ஒப்பந்தமும் செய்த பிறகும், பெண்வாரிசுகளுக்கு எதிர்பார்ப்பு இருக்கலாமா?

நுட்பமான நியாயங்கள் ஆண் வாரிசுகளுக்கு கிடைக்கிறதா?  அல்லது ஆண் வாரிசுகள் உழைக்கும் இயந்திரமாக சமுதாயம் கருதுகிறதா?

* நமது நியாயம்-சமமாக பார்க்கிறேனா

நமது வீட்டு பெண் நன்றாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்போம். நமது வீட்டுக்கு வந்த பெண்ணின் சந்தோஷத்தை பற்றி கவலை பட மாட்டோம். சீர், வசதி போன்ற விஷயங்களை ஒப்பிட்டு ஒப்பிட்டு கண்கலங்க வைப்போம். இதுவே நமது நியாயம்.

ராம்தேவ் போன்ற  ஆன்மீக மஹான்கள் வாழும் நாட்டில் இது போன்ற உருப்படாத ஞாயங்கள் நடைமுறையில் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

ஒரு கதை – இக் கதை கற்பனையே யாரையும் குறிப்பிடவில்லை

நான் வளர்ந்தது எங்கள் கடையில், கம்பெனியில்.

எனது உறவினனும் அங்கே வளர்ந்தான். அவன் பெயர் ராமன் என்று வைத்துக்கொள்வோம்.  ராமன் அப்பா குடித்து விட்டு இரும்பு பிரேக் வயரில் அடித்து வளர்த்தார். எதற்கு அடிப்பார் என்பது அவருக்கே தெரியாது. அப்படி அடிப்பதில் என்ன ஞாயம் இருக்கிறது என்றும் தெரியாது.

அடி வாங்கியவன் மனம் செத்து தான் போயிருக்கும். அடி வாங்கிய மனம் தலைகிழாக இருந்தாலும் ஆரோக்யமாக இருக்காது. அம்மணம் தாழ்வு மனப்பான்மையில் மூழ்கி போன மனமாகத்தான் வளரும்.

காலங்கள் ஓடியது. குடிப்பதை நிறுத்தினார். அதன் காரணம் தனது மூத்த மகள் இறந்து விட்டதால் மனம் மாறிவிட்டேன் என்கிறார்.

அவர் மகனிடம், ராமனிடம் ஒரு பெண் கழுத்தில் தாலிகட்ட ஊருக்கு கிளம்ப  சொன்னார். அவன் மலேசியாவில் பெண் வேண்டும் என்றான். பயங்கர கெட்ட வார்த்தையில் திட்டி  விளக்கினார் ” உன் தங்கச்சிக்கு நல்ல வரன் வந்துள்ளது

பெண் கொடுத்து எடுக்க சம்மதமாம், ஆகையால் வந்து தாலி கட்ட சொன்னார். இன்று அவன் வாழ்வு மட்டுமல்ல அவனை நம்பி வந்த பெண்ணின் வாழ்வும் வாழ்வாக இல்லை. விளங்காமல் போய் விட்டது அவர்கள் வாழ்க்கை.

சிகப்பு ரோஜா என்ற படத்தில் கொலைகாரனாகவும், சைக்கோவாகவும் நடித்த  கமலஹாசன் கூறியது போல, நாம் சுகத்துக்கு மனைவியை அணுகி குழந்தை பெற்றுக்கொள்கிறோம். ஏன் அந்த ஆண் பிள்ளைக்கு என்ன வேண்டும் என்று நினைக்க கூட உரிமை சாக அடிக்கப் பட்டது.

யாரும் தவம் இருந்து ஜபம் செய்து பிறகு உறவு செய்து பிள்ளை பெற்றுக்கொள்வது இல்லை. ஹரே கிருஷ்ணா பக்தர்கள் அதை செய்வார்கள். 64 X 108 தடவை பகவான் நாமத்தை ஜபம் செய்து விட்டுத்தான் மனைவியை தொடுவார்கள்.

மலேஷியா வில் வாழ்ந்த ஆண் பிள்ளைகளிடம் கற்பிக்கப்பட்டது சம்பாதி, ஊருக்கு அனுப்பு அல்லது பணத்தை அப்பா கை ஆளட்டும். பணத்தை பொதுவாக போட்டு நிர்வாகம் பண்ணட்டும். உனக்கு என்று எந்த விருப்பமும் கூடாது. இதுவே மந்திரம். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற ஒரு விளங்காத பழமொழி வேறு.

இந்த சிஸ்டமும் இக்காலத்தில் தோற்று விட்டது.

எனது அனுபவத்தில் எனது மனைவிக்கு ரூபாய் 1000 முதல் முதலாக டிராப்ட் அனுப்பிய பொது, எப்படி தனியாக அனுப்பலாம் என்ற கேள்வி எழுந்ததாக கேள்விப்பட்டேன்.

ஆதி காலங்களில் 5 வயது பிள்ளைகளுக்கு திருமணம் செய்வார்கள். கணவன் இறந்து விட்டால், 5 வயதி விதவையாம். அந்த கலாச்சார சட்டத்தின் கீழ் மறுமணம்  செய்தால் விதவையை சமுதாயம் அடிக்கலாம், கொள்ளலாம், எரிக்கலாம்.

இன்னும் மாற்று ஜாதியில் திருமணம் செய்த பிள்ளைகளை கொள்ளும் கதைகளை படங்களில் பார்க்கிறோம்.

இது போன்ற அனைத்திலும் சட்டம் தலையிடுகிறது.

என் மனைவிக்கு, கணவனை மலேசியாவில் விட்டு வாழும் என் மனைவிக்கு, என் சுய சம்பாத்தியமான ருபாய் 1000 அனுப்பியது எந்த சட்டத்தின் கீழ் தவறு என்பது இன்று வரை எனக்கு புரியவில்லை. ஜாதி அடிப்படையிலா, அல்லது ஒதுக்கப்பட்டவர் என்ற அடிப்படையிலா?

குடும்ப பிரச்னை எப்படி ஆரம்பமாகின்றது? தனது எல்லை புரியாமல் தலையிடுவதுதான் பெரிய காரணம். இந்த இடத்தில பெரியவர்களும் உன் எல்லையை தாண்டி வர வேண்டாம் என்று எச்சரித்தும் இல்லை. நடு நிலைமை மனம் பற்றி போதித்த திருவள்ளுவர் வேஸ்ட் .

இன்றும் என் மனைவியை திட்டுவேன். வியாபாரிகள் குடும்ப உறுப்பினர்களை யாரையும் உன் எல்லை மீறி பேசாதே, கருத்துக்கள் கூட சொல்ல கூடாது என்று திட்டுவேன்.

நான் மன்மதனும் இல்லை, நீ ஐசுவராயும் இல்லை. எந்த கருத்தும், அபிப்பிராயங்களும், வர்ணனையும் தேவையில்லை  தேவை இல்லை என்று திட்டுவேன். நான் கணவன், குடும்ப தலைவன் மட்டும் அல்ல, குடும்பத்தில் எல்லை எது என்று புரியாமல் தலையிடாமல் பார்த்துக்கொள்ளும் ஒரு வீரம் நிறைந்த ஆண்மகன்.

சின்னக் கவுண்டர் படத்தில் ஒரு நீதிபதி ஆச்சர்ய பட்டத்துக்கு காரணம் அந்த நியாயத்தை, எப்படி அன்னப்பறவை தண்ணீரில் கலந்த பாளை தனியாக எடுத்து உண்ணுவதை போல், அந்த நியாயத்தை சின்னக் கவுண்டர் காண முடிந்தது.

இன்னும் வரும்.

MKP பாண்டுரங்கன்

Leave a Reply