இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா???

சரியான புரிதல் இருக்கிறதா 4

நமக்கு சரியான புரிதல் இருக்கிறதா?

என்றாவது நான் சரியான புரிதலில் இருக்கிறேனா என்று எனக்குள் கேட்டதுண்டா? 2020/07/25

சரியான புரிதல் இருக்கிறதா 4

பாகம் 4

விழிப்புணர்வு எனக்கு உண்டா?  என்றாவது இது பற்றி எனக்குள் யோசித்தது உண்டா?

புத்தர் பற்றிய அற்புதமான ஹிந்தி நாடகம் பார்த்து வருகிறேன். புத்தர் ஒரு ஆஸ்ரமத்தில் சேர்ந்து இரண்டு நாட்களில் புத்தரின் குருவுக்கு புத்தரின் மகிமையை உணர்ந்து, புத்தரை சீடராக ஏற்றுக்கொள்வார்.

ஒரு வாரம் முன்பு புத்தர் எந்த காட்டு பயல் என்று யாருக்கும் தெரியாது அந்த ஆஸ்ரமத்தில். ஆனால் மற்றொரு சீடன் குருவிடம் இரண்டு நாளில் எப்படி புத்தரை சீடனாக ஏற்கலாம், என்னை பலவருடம் கழித்த பிறகு சீடனாக ஏற்றீர்கள். நான் செய்யாத சேவையா?

இந்த பொறாமை ஆஸ்ரமத்தில் கூட விட்டு வைக்கவில்லை என்பது ஆச்சர்யம்தான். புத்தர் யார், எந்த  காட்டு பயல், ஒருத்தருக்கு பிறந்தவனா, எதுவும் தெரியாமலேயே பொறாமை ஒரு வாரத்துக்குள் வந்து விடுகிறது. எப்படி பொறாமை உணர்வு உருவாகிறது என்று உல்நோக்கி கவனித்ததுண்டா?

https://youtu.be/5c5eJ1lvVgg
இந்த ஐந்து குணங்கள் இருப்பவர்களிடம் இருந்து விலகி இருப்பதை விட இந்த ஐந்து குணங்கள் நம்மிடம் இல்லாமல் பார்த்துக் கொள்வதே சிறந்தது.

33 வருடமாக நான் பிறந்த ஊரில் என் தந்தையார் கட்டிய பிள்ளையார் கோவிலில் உள்நாட்டில் தங்கிய யாரும் வருடம் ஒருமுறையாவது போய் ஒரு தேங்காய் உடையது சாமி கும்பிட்டது இல்லை. மலேசியாவில் தங்கிய நானும் அந்த கிராமத்துக்கு போனது இல்லை என்பதை விட விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால், அரப்பூர் காமாச்சி கோவில் கும்பாபிஷேகம் சென்று கலந்ததால், எதோ ஒரு ஞானம் உதயமாகி சில முயற்சி செய்து அந்த கோவில் கட்டப்படுகிறது. அது எனது பங்கை விட பெரிய பங்கு அந்த கிராம மக்கள் பங்கு எடுத்து கொண்டனர்.

ஆனால், 33 வருடமாக அந்த கிராமம் பற்றி தெரியாத மக்கள் என்னிடம் பல வித கேள்விகள், உத்தரவுகள், அடேய் அப்பா….

உருவாக்க யாரும் அவர்களாக முன் வரும் ஆற்றல் இருப்பதில்லை. அடுத்தவர் உருவாக்க ஆரம்பித்தாலே போதும் – எங்கிருந்து கருத்துக்களும், பொறாமை வடிவிலும், குற்றம் சாட்டும் வடிவத்திலும் அடா  அடா …..

திருடன் திருடும் நோக்கம் தவறு என்று உணர்வது இல்லை. பிடிபட்டு விடுவோமோ என்ற உணர்வுதான் ஆக்கிரமிக்கும். அது போல நாம் அன்றாட வாழ்வில் சரியான நோக்கத்தில் உள்ளோமா?

வாழ்வின் அணைத்து அனுபவங்களும் எழுத சாத்தியம் இல்ல விட்டாலும் ஒரு உதாரணம் எடுத்துக்கொள்வோம்.

வியாபாரிகள் அழைப்பு கொடுத்த அவர்கள் குடும்ப சுபகாரியங்களில் நான் கலக்கும்போது எந்த ஒரு குறையும் மனதில் படுவதில்லை. சாப்பாடு, மேடைக்கு அழைத்தாள் அல்லது அழைக்காமல் இருத்தல், கவனித்தால் கவனிக்காமல் விட்டுவிடுதல்-ஏய்த்துவும் குறையாக தென்படுவதில்லை.

ஒரே தலையாய நோக்கம் என்னை அழைத்ததால் எனது வருகை அவர்களுக்கு ஒரு சிறப்பை சேர்க்கவே அல்லது வாழ்த்த மட்டும் செய்து விட்டு வந்து விடுவேன். அந்த விசேஷம் அடுத்த தெருவில் இருந்தாலும் சரி இந்தியாவில் நடந்தாலும் சரி.

ஆனால் சில உறவினர்களின் விசேஷங்களில் எனக்கு மாலை போடவில்லை, என்னை மதிக்கவில்லை, நான் மேடை ஏற்கமாட்டேன் -என்னை முதலில் கூப்பிடவில்லை வரை குறை குறை குறை.

ஓஷோ சொல்லும் இந்த நான் இருக்கும் வரை நாமும் மகிழ்ச்சி அடைய முடியாது, விசேஷம் நடத்துபவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்க முடியாது.

இந்த நான் இந்த எனது சரியான நோக்கத்தை அறிய விடாது.

==========================

முழு பிரக்ஞை நிலை என்பது முழுமையான
விழிப்பு நிலைதான்..இந்த பிரக்ஞை நிலையில் தான் உங்களிடம் கருணை பிறக்கிறது ..

அப்போது உங்கள் அகங்காரம் அழிந்து விடுகிறது..உடலைப் பற்றிய உணர்வும் மனதில் தோன்றும் அகங்காரமும் ஒரு மனிதனை ஆட்டிப் படைக்கிறது ..

ஆனால் உங்கள் பிரக்ஞை தன்மை
அதாவது தெய்வீகத் தன்மை உடல் மனம் இரண்டையும் கடந்து நிற்கிறது …

நீங்கள் முழுமையான விழிப்புணர்வு
பெறும்போது நீங்கள் உடலாகவும் மனமாகவும் இல்லை என்பதை போகப் போக உணர்ந்து கொள்வீர்கள் ..

அப்போதுதான் நீங்கள் ஒரு சாட்சியாக இருந்து
இந்த உடலையும் மனதையும் உங்களுக்கு
சம்பந்தம் இல்லாதது போல் பார்க்க முடியும் …

உஙகள் பிரக்ஞை நிலையில்தான்
இந்த சாட்சித் தன்மை வேலை செய்யும்..
இந்த பிரக்ஞை தன்மையும் விழிப்புணர்வும் எப்பொழுது ஏற்படுகிறதோ அப்போது உண்மை தன்னை வெளிப் படுத்திக் கொள்ளும் ..

அப்போது நீங்கள் தெய்வீக நிலையை
அடைந்து விடுகிறீர்கள் ..

ஓஷோ
தந்த்ரா …

சமூகம் 💕

முன்னொரு காலத்தில் கிதர் என்றொரு ஞானி இருந்தார்.ஒரு நாள் அனைவரையும் கூப்பிட்டு அவர் சொன்னார்.

”நாளையிலிருந்து உலகம் முழுவதும் தண்ணீரின் குணம் மாறிவிடும்.அதனைக் குடிப்பவர்கள் அனைவரும் பைத்தியம் ஆகி விடுவார்கள்.

இப்போது தண்ணீரை கொஞ்சம் மிச்சப் படுத்தி வைப்பவர்கள் மட்டுமே இந்த கொடுமையிலிருந்து தப்பிக்க முடியும்.”

யாரும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஒரே ஒருவன் மட்டும் கொஞ்சம் தண்ணீரை மிச்சப்படுத்தி வைத்துக் கொண்டான்.

மறுநாள் ஞானி சொன்னது போலவே நடந்தது.அந்த ஒரு ஆளைத் தவிர அனைவரும் பைத்தியம் ஆகி விட்டார்கள்.

இவன் ஒருவன் மட்டும் எப்போதும்போல இருந்தான்.

அனைவரும் பைத்தியம் ஆகி விட்டதை அவர்கள் நடவடிக்கைகளிலிருந்து தெரிந்து கொண்டான்.

அந்தப் பைத்தியக்காரர்களிடமிருந்து தான் தனித்து நிற்பது அவனுக்கு மெல்ல மெல்ல விளங்கலாயிற்று.

ஊர் மக்கள் அனைவரும் இவனைப் பைத்தியம் என்று கூற ஆரம்பித்தார்கள்.

பாவம்!இவன் ஒரு தனி ஆள்.அவனால் தான் பைத்தியம் இல்லை என்றும் மற்றவர்கள் அனைவரும் பைத்தியம் என்றும் எப்படி நிரூபிக்க முடியும்?

பொறுக்க முடியாமல் ஒரு நாள் அவனும் புதிய தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டான்.

அவனும் இப்போது பைத்தியம் ஆகி விட்டான்.ஊர் மக்கள் இப்போது சொன்னார்கள்,”நம்மிடையே ஒரு பைத்தியக்காரன் இருந்தான்.அவனும் இப்போது குணமடைந்து விட்டான்..”

இந்தக் கதையின் கருத்து என்ன?

ஓஷோ சொல்கிறார்:

சமூகம் மக்களின் மனோதத்துவத்தில்தான் வாழ்கிறது.உண்மையைப் பற்றிய கவலை சமூகத்தில் யாருக்கும் கிடையாது.

மற்றவர்களுடன் கருத்து வேறுபாடின்றி இருப்பதிலேயே அது கவலை கொள்கிறது.

சமூகத்துடன் ஒருவன் எவ்வாறு ஒத்துப் போவது என்ற கவலையே அது கொள்கிறது.

சமூகம் பொய் என்றால் அவனும் பொய்யாகி விட வேண்டியிருக்கிறது.

மனிதன் மிகவும் தனியானவன்.சமூகமோ மிகப் பெரியது.

–ஓஷோ

 

Leave a Reply