இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா? II

சிந்தித்து பார்த்ததுண்டா II?

I Am Right, You Are Wrong
I Am Right, You Are Wrong

நமக்கு சரியான புரிதல் இருக்கிறதா?

வாருங்கள் மற்றவர்களை வாய்க்கூசாமல் குறை பேசி பேரின்பம் காண்போம்!!! – 

15/8/2020

நிறைய காய்கறி உள்ள சாம்பாரில் ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்தால், சாம்பார் போட்டியிலிருந்து காய்கறிகள் முதல் புயூஜியத்தில் இருந்து வந்தது தான், என்பது ஆழ்ந்த சிந்தனை உள்ளவர்களுக்கு தெளிவாக புரியும்.

சிந்தித்து பார்த்ததுண்டா II?

மனிதன் உருவானது உயிர் அணுக்கள் என்றால், உயிர் அணுக்கள் வந்தது நீர் நெருப்பு போன்ற ஐம்பூதங்களில் தான். அனைத்தும் பூஜ்யம்.

மனித உடம்பே பூஜ்யம் என்றால் நமது பிரச்சனையை, நாம் சொல்லும் முக்கியமாக குறையும் அந்த அகங்காரம் என்பதிலிருந்து வருவது அன்றி வீறு எதுவும் இல்லை என்பதும் ஆழ்ந்த சிந்தனை உள்ளவர்களுக்கு தெளிவாக புரியும்.

புத்தரிடம் அவர் மனைவி இந்த ஞானத்தை குடும்பத்தில் இருந்து பெற முடியாதா என்று கேட்டபோது அவர் சொன்னார். நான் இளவரசன், வருங்கால மன்னன், போன்ற அகங்காரம் அல்லது ஆணவம் இல்லாவிட்டால் குடும்பத்திலும் அடையலாம்.

இதை நடைமுறையில் பார்த்தால் ஆணவமும், போட்டி மனப்பான்மையும் இயற்கையில் வந்துவிடுகிறது என்பதுதான் உண்மை.

பிழைக்க வெளிநாடு செல்பவர்கள் 80% மேல் ஜெயித்துவிடுகிறார்கள். தனது சொந்த நாட்டில் வாழ்பவர்கள் வீண் பிரச்னையும், வீண் கதைகளும், வீண் குறைகளும் பேசியே வாழ்வை களைத்து விடுகின்றனர்

எனக்கு கேள்வி சிங்கப்பூர் பிரஜையை விட வெளிநாட்டவ ர்கள் நிறைய சம்பாதிப்பதாக கேள்வி. எத்தனையோ மலேசியர்கள் ஜப்பானில் நிறைய உழைத்து சம்பாதிக்கின்றனர். நிறைய மலேசியாவில் பிறந்தவர்கள் சம்பாதிக்க முடிவதில்லை. ஏன்?

இது ஒரு மனோவியல் பிரச்னை.

எனக்கு அதில் அல்லது இதில் உரிமை இருக்கிறது என்ற மனோவியலில் காலம் ஓடிவிடும். சம்பாதிக்கும் சிந்தனைகளும், அது சம்பந்தமான பேச்சும் இருப்பதில்லை.

என் அனுபவத்தில், நான் வளர்ந்த விதம் கடையில் அதிகம் தொழில் சம்பந்த பிரச்னை தான் பேசப்படும். காலை 7 மணிக்கு வேலை பார்க்க சொல்வார்கள். இரவு 7 க்கு வேலை முடிப்பார்கள். ஒரு தீபாவளி அன்று கூட வேலை பார்த்ததுண்டு.

இதிலெல்லாம் ஜெயித்தால் தான் தன மனைவி மக்களை பார்க்க வக்கு வரும்.

எம் ஜி ஆர் பாடியது போல விழித்து கொண்டவர்கள்தான் பிழைத்துக்கொள்வார்கள்.

பிரச்னை பேசுவது, குறை உருவாக்கி குறை கூறும் செயல்கள் நமது சம்பாத்தியத்துக்கு பங்கேற்காது.

ஒரு ஷேர் வாங்க வேண்டும் என்றால் அதை எப்படி வாங்குவது என்று திறமையை வளர்ப்பது லாபத்தை உற்பத்தி செய்ய திறமை பங்கேற்கும். அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று முடிவுகள் எடுத்து வீனா போனவர்களை நிறைய.

நமது வருமானத்துக்கு, ஆரோக்கியத்துக்கு, சந்தோஷத்துக்கு, இது போன்ற முன்னேற்றத்துக்கு  உதவும் திறமைகளை வளர்த்துக்கொள்வதில் நேரமும் பணமும் செலவு செய்வதை விட, குறை கூற ஆர்வப்படும் மக்களே அதிகம் என்று என்னும்போது நாம் வருந்தலாமே தவிர உலகை நாம் காப்பாற்ற முடியாதுதான்.

செய்தொழில் ஒன்றை கற்றுக்கொள் என்று பாடியது அன்றய நாள்.

அந்த தொழிலில் உல் நுட்பங்கள் தெரிய வேண்டிய அவசியம் இன்று நிறைய. நிர்வாகம், தலைமைத்துவம், மார்க்கெட்டிங், விற்பனை இப்படி நிறைய உள்ளது.

நமது தலைமைத்துவத்தை குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளும் படி திறமை இருந்தால் தான் தொழிலிலும் ஏற்றுக்கொள்ளப்படும். தலைமைத்துவம் என்பதும் ஒரு வகை திறமை என்றே இன்றய வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆனால் நமது திறமையை உயர்திக்கொள்ளாமல் நான் அழைப்பது:-

வாருங்கள் மற்றவர்களை வாய்க்கூசாமல் குறை பேசி பேரின்பம் காண்போம்!!!

இன்னும் வரும்.

 

MKP பாண்டுரங்கன்

இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா? III

இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா? II

இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா-I

Leave a Reply