நல்ல மனம் வாழ்க-நல்ல மனம் பற்றிய ஒரு விழிப்புணர்வு
So..நல்ல மனம் வாழ்க 1….
நல்ல மனம் என்றால் என்ன? அதை தெளிவு படுத்தான் இந்த கட்டுரை.
நாம் சராசரி மனிதர்கள், திருடுவது, கொலை போன்ற பெரிய தப்புக்கள் செய்வது இல்லை. அப்படியென்றால் நமது மனம் நல்ல மனம் என்று முடிவுக்கு வர இயலுமா?
திருட, கொலை செய்ய மனம் எப்படி அந்த தொழிலில் உள்ளவர்களுக்கு திறமையாக செயல் பட எப்படி மனம் இயங்குகிறதோ, அப்படிதான் சராசரி மனிதனுக்கு அவன் நோக்கத்தை பொறுத்து அமைகிறது.
கொலையா? தற்கொலையா?
சமீபத்தில், திருவாரூரில் ஒரு பெண் மரணம் அடைந்தது தெரிந்ததே. அந்த பெண் சிறு வயது, ஒரு குழந்தைக்கு தாய் என்று சொல்லப்படுகிறது. அது சிலர் தற்கொலை என்கின்றனர். பலர் கொலை என்கின்றனர்.
கொலை, தற்கொலை எதுவாக இருந்தாலும், அங்கே நல்ல மனம் இருந்ததா? அல்லது கணவன் மனைவி பிரச்னை யின் மூலகாரணம் என்னவாக இருக்கும்?
அங்கே பெண்ணை ஆதிக்கம் செய்தனரா? ஆணவம் அதிகம் ஆட்சி புரிந்ததா? யாருக்கு தெரியும்? நல்ல மனம் அங்கே இருக்கவில்லை என்று ஒரு முடிவுக்கு வரலாம்.
நான் நல்லவன் அல்லது நான் நல்லவள் என்று நாம் கூறிக்கொள்கிறோம். நமது மனம் இயங்கும் நுட்பம் நமக்கே தெரியவில்லை.
கல்யாணம் முடிந்ததா? எப்ப மாப்பிள்ளை தனிக்குடித்தனம் போகிறான்?
So…நல்ல மனம் வாழ்க 1….
ஒரு நல்ல மனம் கொண்ட பெண் “கல்யாணம் முடிந்ததா? எப்ப தனிக்குடித்தனம் போகிறான்?” இப்படி அற்புதமாக கல்யாணம் விசாரித்ததாக கேள்விப்பட்டேன். உண்மையில் நல்ல மனம் கொண்ட ஒரு மனிதன் இப்படி விசாரிப்பாரா?
இதில் வேடிக்கை என்ன வென்றால், திருமணம் முடிந்து 48 மணி நேரம் ஆவதற்குள் இந்த விசாரணை. எதிரியை கூட இப்படி விசாரிப்பது மாபெரும் பாவம். கர்ம வினை கண்டிப்பாக தேடிவரும்.
பல தரமான சுய முன்னேற்ற நூல்கள் அறிவுரை கூறுவது, ஒவ்வொரு மனிதனும் தனது குறிக்கோள் என்ன, அதை தர்ம வழியில்/அடுத்தவனுக்கு பிரச்னை கொடுக்காமல் அடைவது எப்படி, என்று சிந்திப்பவன்/ள் உயர்கின்றனர்.
அடுத்தவன் இப்படி, அப்படி வாழ்வது/நினைப்பது சரி அல்லது தவறு என்று தனது மனம் கறுத்து அபிப்பிராயங்கள் உற்பத்தி செய்யுமானால், தனது வாழ்வை வீண் அடிக்கின்றனர் என்பது திண்ணம்.
அண்ணனாகிய உன்னை கலந்து திட்டம் போடவில்லையா?நல்ல மனம் வாழ்க
இந்தவாரம் ஆரம்பத்தில், எனது சகோதரர் மகன் திருமணம் நடந்தது. அதில் பல குறைபாடுகள் இருந்தாலும், ஒரு செல்வாக்கான நபர், அண்ணனை கலக்காமல் எப்படி இதையும் அதையும் செய்யலாம் என்று வலியுறுத்தி பேசினார். இதற்க்கு பெயர் சாவி போடுதல், ஏத்தி விடுதல், பல பெயர்கள் உண்டு.
இன்னொரு தரமான மனிதரிடம் நானே குறிப்பிட்ட குறை இருந்தது என்றேன், “அண்ணே, ….இப்படி பல ஆறுதல் வார்த்தை பேசினார்.”
ஒரு ஆணும் பெண்ணும் படுக்கை அறையில் செய்வது, பெண்ணின் வயிறு பெரிதாகி, குழந்தை இருப்பதை வெளி உலகுக்கு காண்பிக்கும்.
So…தனக்கு உள்ளே உருவாகும் எண்ணங்கள், நமக்குள்ளே நடக்கும் உரையாடல் வெளி உலகுக்கு தெரியாது. ஆணும் பெண்ணும் அறையின் செயல்கள் போல.
But…ஆனால், அத்தனை எண்ணங்களும், வாயை திறந்து பேசினாலே உலகுக்கு, உள்ளே ஊறும் நல்ல/தீய எண்ணம் தெரிந்து விடும்.
பொறுப்பேற்க முடியாதவன் தாலி கட்ட மறுத்து தொலைந்து இருக்கலாம்-நல்ல மனம் வாழ்க
இந்த வாரம் ஆரம்பத்தில், செவ்வாய் கிழமை என்று நினைக்கிறேன், மதுரையில் இருந்து ஒரு போன் வந்தது. எனக்கு கொழுந்தியா முறை.
அந்த பெண்ணின் கணவனிடம் காலையில் பெரிய சண்டையாம். கணவன் மலேசியாவில், இருந்து கொண்டு, மனைவிக்கு செய்ய வேண்டிய எந்த கடமையும், பிள்ளைகளுக்கு செய்யவேண்டிய எந்த கடமையும் செய்ய தவறியவன்.
அந்த பெண் ரேஷன் கடையில் அரிசி வாங்கி சாப்பிடுவதாக சொல்லி அழுகிறது. இந்த உருப்படாத கணவனை, பெண்ணின் பெற்றோர்கள், உடன் பிறந்தோர்கள், தாலி கட்ட சொல்லி, அந்த பெண்ணின் வாழ்வை நாசம் செய்து விட்டனர்.
பல நேரங்களில், பெரியோர் என்று பேச்சை கேட்பதும் ஒரு வகை முட்டாள் தனமே. பெரியோரின் பயத்தில், 15 வயதில் பெண்ணை காட்டிக்கொடுக்க வேண்டும் என்று பல பெண்களை பாலும் கிணற்றில் தள்ளி விட்டு விட்டார்கள்.
நானும் இந்த பெண்ணுக்கு பல சட்ட ஆலோசனை கூறி வருகிறேன். செயல் பட தூண்டிக்கொண்டே இருக்கிறேன்.
அந்த பெண் ஒரு ஒப்புதல் கடிதம் லாயர் மூலம் எழுதி கொடுத்தால் போதும். மாற்றதை பார்த்துக்கொள்ள சிலர் தயார் நிலையில் மலேசியாவில் இருக்கின்றனர்.
மலேசியாவில் இருந்தே, சட்டப்பூர்வமாக அந்த பெண்ணுக்கு ஒரு நியாயம் கிடைக்க செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
பொறுப்பேற்க முடியாதவன் தாலி கட்ட மறுத்து தொலைந்து இருக்கலாம். கணவனிடம் நல்ல மனம் இருக்கிறதா?
மேலும் மற்ற தலைப்புக்களை படிக்க இந்த லிங்கில் கிளிக் செய்யலாம்.
நான் பிறந்த ஊரான மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் முகநூல்
இப்படிக்கு,
MKP பாண்டுரெங்கன்
மலேசியா