My Life Experience

நான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா? பாகம் 4

September 19, 2020 …சிந்தித்தது உண்டா? 0

எந்தபார்வையில்சரி, தவறு, தப்பு, அவமதிப்பு,குற்றம், மோசடி????? எந்தகண்ணோட்டத்தில்நாம்பார்க்கிறோம்?

ஸ்வாமி ராம்தேவின் அப்பா,  ராம்தேவை அடி அடி என்று அடிப்பார், மிதி மிதி என்று மிதித்தார். அப்பா கெட்டவர் என்று அர்த்தம் இல்லை. அவரின் பார்வையில், நாம் கீழ் ஜாதி, ஒதுக்கப்பட்ட ஜாதி, தீண்டத்தகாதவர். நாம் படிக்க ஆசை படுவது தவறு, பாவம் என்று நம்பினார்.

ராம் தேவ் செய்த அறிவுபூர்வமான விஷயங்கள், கற்று சுயநலத்திற்கு பயன்படுத்திக்கொண்ட பல ரை  கேள்விகல் கேட்டது அப்பாவிற்கு அவமானமாகிவிட்டது.

ஷாம்புகா என்ற ஒரு கீழ் ஜாதியில் பிறந்த ஒரு சாது வை ஸ்ரீ ராமபிரான் கொன்ற கதை தெரியுமா? ஷாம்புக செய்த குற்றம் கற்றது. அன்றய சட்டம் பிராமின் தவிர யாரும் கற்கவோ ஞா னத்தை பிரச்சாரம் செய்யக்கூடாது.

இந்த கொலையை பெரியார் கட்சியினர் கடவுளே கீழ் ஜாதிக்காரர்  கற்ற மற்றும் கற்பித்த குற்றத்துக்காக கொலை செய்தவரை எப்படி கடவுளாக ஏற்பது என்று கேட்கின்றனர்.

ஷாம்புக் என்ற சூத்திர சாது கொல்லப்பட்டது திருட்டு, கற்பழிப்பு, கொலை குற்றத்துக்கு அல்ல. சட்டத்தை மதிக்காமல் கற்றத்துக்காகவும் கற்பித்ததற்காகவும் மட்டும்தான்.

ஷாம்புகா ஒரு சாது வை ஸ்ரீ ராமபிரான் கொன்ற கதை:-

https://en.wikipedia.org/wiki/Shambuka

https://ccnmtl.columbia.edu/projects/mmt/ambedkar/web/texts/6755.html

மேல் கண்ட தளங்களில் ஆர்வம் உள்ளவர்கள் நீங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள்.

இப்படி நாம் வணங்கும் கடவுளே எது தவறு என்று புரிய முடியாத போது, நாம் சாதாரண மனிதர்கள் என்ன செய்ய முடியும்? கடவுளுக்கே மூட நம்பிக்கை இருந்ததால் நம்மிடம் தாராளமாக மூட நம்பிக்கை வைத்துக்கொண்டு மற்றவரை துன்பத்துக்கு ஆளாக்குவது தவறு இல்லைதான்.

மழையை நிறுத்த பெண்ணை நிர்வாணமாக உரை சுற்ற வைப்பதில் தவறேதும் இல்லை. 8 வயதில் திருமணத்தை முடித்து கணவன் 10, 12 வயதில் இறந்ததும் விதவை இல்லத்துக்கு அனுப்புவதில்…

அன்று பொண்ணு மோட்டார் ஓட்ட கற்பது தவறு. நைடீ அணிவது தவறு. திருமணத்துக்கு முன் பெண்ணும் மாப்பிள்ளையும் சந்திப்பது தவறு. பெண் வேலைக்கு போவது தவறு. மேல் படிப்பு படிப்பது தவறு. மறுமணம் செய்வது தவறு.

கணவனை இழந்தவளை உடன் கட்டை ஏற்றாமல் விடுவது தவறு.

தமிழ் நாடகம் பார்க்காமல் ஸ்வாமி ராம் தேவ் போன்ற சுய சரிதம் பார்த்தல் உலகம் தெளிவாக புரியும்.

கணவன் மனைவி தோளில் கைபோடுவது தவறு. நல்லவேளை, இத்தனை  சட்டம் உருவாக்கியவர்கள் படுக்கை அறையில் எப்படி நடக்க வேண்டும் என்ற சட்ட திட்டம் போட இயலாமல் போய் விட்டது. அதிலும் சின்ன காப் அல்லது ஓட்டை கிடைத்தால் அதிலும் குற்றம் கண்டு பிடித்து சட்டம் போடும் ஆட்களும் உண்டுதான்.

மலேசியாவில் வாழும் ஆண் கண்டிப்பாக இந்தியாவில் செட்டியார் பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும். மலேசியாவில் திருமணம் செய்ய விரும்புவது தவறு.

மலேசியாவில் திருமணம் செய்து அவனின் சம்பாத்தியம் இந்தியாவுக்கு பொது செலவுக்கு வராமல் போவது தவறு.

 அனால் குடும்பத்தலைவர் இறுதியில் என்ன உணர்ந்தார், காலம் முழுவதும் உழைத்த ஆண் வாரிசுகளுக்கு என்ன போய் சேர வேண்டும் என்று தீர்மானம் செய்து உயில் எழுதி வைப்பதும் தவறு. அவர் என்ன விரும்பினார் என்று கேட்க கூட ஆள் இல்லை.

எனது தந்தை சொத்து சம்பந்தமாக என்ன விரும்பி உயில் எழுதினார்? இந்த கேள்வி யாரும் கேட்கவே இல்லை. அவர் ஆத்மா ஷாந்தி அடைய அவர் எழுதியபடி செயல் படுத்தும் ஆர்வமும் இல்லை.

அவர் உயில் எழுதும்போது என்னை வக்கீல் ஆபீஸ்க்கு அழைத்து சென்றார்.

நேற்று ஒரு கரும கிரிகை செய்யும் வீட்டுக்கு சென்றேன். அவர் சொன்னார், வடக்கு மாசி வீதியில் இருக்கும் ஒரு நபரின் கிரிகை மூன்றே நாளில் செய்ததாக குறை கூறினார். அப்படி செய்த காரணம் கரி எடுத்து சாப்பிடாமல் இருக்க இயலாதாம். அந்நபர் மலேசியாவில் இருந்து சம்பாத்தியம் செய்து அனுப்பியவர்.

1980 களில் ஒரு சமையல் தாத்தா இருந்தார். 70 வயதில் வந்து அடுப்பில் கிடந்தது உழைத்தார். அவர் சொல்வார் “”பாண்டி, தேடுறவன் பழனியாண்டிடா, அதை உண்பவன்  அளிப்பவன் வேறு வித ஆண்டிடா””. அவரின் மகன்களும் மகள்களும் 70 வயது கிழவனை அனுப்பி சம்பாதிச்சு அனுப்ப சொன்னால் ????

வலனயில் இருந்த உறவினர் ஒருவர் என்னிடம் ஒரு முறை கேட்டார் “”எனது  மாமனார் பணம் அனுப்பவில்லையே ??? என்ன செய்து கொண்டு இருக்கிறார்???

அனால் அவர் மாமனார் தள்ளாத வயதில் குப்பையில் பொறுக்கி சம்பாதித்து …அப்பா …இப்படியெல்லாம் எதிரிக்கு கூட நடக்க கூடாது. மிக கொடுமை…

தொடர்ந்து பலவித உண்மை கதைகளை மையமாக வைத்து எடுத்த நாடகங்கள் அல்லது படங்கள் பார்த்தால் மிக எளிமையாக புரிவது மற்றவர்களை கட்டுப்படுத்துவது கட்டுப்படுத்துபவர்களின் சுயநல அடிப்படையில்தான்.

கடவுள் படைத்த இந்த உலகில் அது என் இடம் என்று சண்டை போட்டு நாட்டை ஆள்வது சுயநலம் அடிப்படையில்தான். எனது நம்பிக்கைக்கு நீ பலியாக வேண்டும். என் மதத்தை நீ கடைபிடிக்க வேண்டும். என் கலாச்சாரத்தை நீ ஏற்றுக்கொள்ளவேண்டும்.

நீ மலேசியாவில் இருந்து அரிசி கொண்டு வா, என்னிடம் உமி இருக்கிறது. அரிசியும் உமியும் கலந்து பின் ஊதி ஊதி சாப்பிடுவோம்.

அடிப்படை கோட்பாடு சுயநலமே. பல பல வடிவத்தில் வரும் சுயநலமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *