இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா-I

நாம் சிந்தித்து பார்த்ததுண்டா-I????

நமக்கு சரியான புரிதல் இருக்கிறதா?

வாருங்கள் மற்றவர்களை வாய்க்கூசாமல் குறை பேசி பேரின்பம் காண்போம்!!!

Five-Day Course in Thinking
Five-Day Course in Thinking

நாம் சிந்தித்து பார்த்ததுண்டா-I?????     8/8/2020

சென்ற வாரம் நான் செய்த தவறு

வியாபாரிகள் பல வித இன்னலைகளை சந்திப்பதை முன்னிட்டு ஒரு சங்கம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வாட்ஸாப்ப் குரூப்பில் ஒரு நண்பரை சேர்த்தேன். 

அடுத்த நாளில் அந்த நண்பர் டிக் டாக் பதிவை பகிர்ந்தார். உடனே பலர் கண்டித்தனர். மேலும் சில நாட்கள் கழித்து இன்னும் ஒரு பதிவு விபத்துக்குள் அன ஒரு பதிவை போட்டார்.

அணைத்து ப்பினரும் பேசி இனி இந்த மாதிரி தொழிலுக்கு சம்பந்தமில்லாத, இந்த சங்கத்துக்கு சம்பந்தம் இல்லாத எதுவும் போட்டால் குறிப்பில் இருந்து தூக்கிடுவோம் என்று எச்சரித்துள்ளனர்.

பதிவை போட்டவர் நான் செய்தது சரி என்று நம்புகிறார். நல்ல பதிவு போட்டால் என்ன தவறு என்பது அவருடைய வாதம். உறுப்பினர்கள் ஜோக்ஸ், ஆரோக்யம், எந்த நல்லதும் வேண்டாம் என்பது வாதம்.

சங்கம் சம்பந்தம் இல்லாத ஆயிரம் குரூப் இருக்கிறது. ஜோக்ஸ் முதல் ஆபாசம் வரை இருக்கிறது. சங்கத்தில் அந்த பொருத்தமில்லாத தலைப்பு போட்டால் நான் வெளியேறுகிறேன் என்று மிக பெரிய உறுப்பினர்கள் ஆத்திரம் அடைகின்றனர்.

இதெல்லாம் நாம் பெரிய பள்ளிக்கூடம் போய் படிக்கும் விஷயம் இல்லை. சாதாரண அனுபவத்தில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

ஒரு சாதாரண விஷயம் கூட புரியவில்லை என்பது ஒரு வியப்பு தான்.

இன்று எனது நண்பனும் வியாபாரியும் மாத்திரை இந்தியாவிலிருந்து தருவிக்கிறேன் என்று பலவகை சுங்கை வரி பிரச்னையில் அவதிப்படுகிறான்.

அவனுக்கு என் கிளார்க் மூலம் உதவி செயகிறேன் என்றாலும் அவன் அனுப்பிய முறையும் காரணமும் சொல்கிறானே ஒழிய விஷயத்தை எப்படி செயல் படுத்த வேண்டும் என்று புரியவே இல்லை.

இது போன்று 5000 கதை சொல்ல முடியும். ஆனால் 5000 கதைகளின் மூலம் ஒன்றுதான்.

அதன் பெயர் அறியாமை. என் நண்பன் கோடிக்கணக்கில் சம்பாதித்தவன் ஆனால் சம்பாத்தியதை தவிர்த்து எதுவும் தெரிந்து கொள்ளவில்லை.

இன்றய நிலையில் அவன் ஈப்போவிலிருந்து பினாங்கு செலவு செய்து வர துடிக்கிறான். ஆனால் ஒன்லைனில் தகுந்த டாக்டர் செர்டிபிகேட் அனுப்பினால் மாத்திரையை தருவோம்.

இன்று ஒன்லைன் தெரியவில்லை என்றால் நாம் வாழ முடியாது போல் ஆகி விட்டது. நேரே வந்தால் காரியம் சாதிக்க முடியாது என்று கண்டிப்பாக சொல்லி விட்டனர்.

மேற்கண்ட கதைகளில் இவ்வளவு எழுதிவிட்டு நானும் குறை சொல்வதாக எண்ணிவிட வேண்டாம். நான் சுட்டிக்காண்பிக்க விரும்புவது சரியான புரிதல் இல்லை என்பதுதான்.

பருவ வயது வரும் வரை காதல் புரிவதில்லை. பருவ வயது வந்தவுடன் காதல் இயற்கையிலேயே புரிந்துவிடுகிறது.

எத்தனை வயது வந்தாலும் சில புரிதல் வாழ்க்கையில் பலருக்கு வருவதில்லை என்பதும் உண்மைதான். அவர்களுக்கு சரியான புரிதல் வரவில்லை என்றால் நாம் அவர்களிடமிருந்து அறிவுரை மற்றும் தலைமைத்துவம் ஏற்றுக்கொள்ளாமல் இருந்துவிடுவது சிறப்பாக இருக்கும். நாம் நம்மை காப்பாற்றி கொள்ளலாம்.

ஆனால் நாம் திருமணம் போன்ற வைபவங்களில் நமது மனத்துக்குப்பட்ட குறைகளை சொல்லிவிடுவது எதற்கும் உதவாத பருப்பு என்று மற்றவர்களை உணர வைப்பது சாத்தியமா?

நமது பிள்ளைகள்,பேரப்பிள்ளைகளை இன்டர்நெட், ஒன்லைன் சம்பந்தமாக படி படி என்று வற்புறுத்தும் அளவுக்கு நமக்கு போதிய அறிவு வந்து விட்டது.

நேற்று சாம்பர் ஒப் கமெர்ஸ் இல் சீனா மாதிரி தெரு கடைகளில் இனி போன் ஆப் மூலமாகத்தான் ணம் கொடுக்க வேண்டும் என்ற நிலை வந்துவிடுமாம். ஆக ஒன்லைன் தெரியாதவர்கள் இனி வரும் காலங்களில் இருக்க முடியாது, அல்லது தனது காரியங்களை சாதிக்க முடியாது.

ஒன்லைன் பணப் பரிமாற்ற தெரியாவிட்டால் வாழ முடியாது என்பது படிக்காதவனுக்கும் புரிகிறது. ஆனால், வைபவங்களில் குறைகல் கூறுவதால் ஒன்றும் நமது வாழ்வாதாரத்தை பாதிக்க போவதில்லை. ஆகவே, குறை குரும் கலாச்சாரத்தை நாம் விட வேண்டிய அவசியமும் இல்லை.

எனக்குள் ஒரு கேள்வி. ஏன் சீ சீ தோ தோ என்று நல்ல திறமைகளும் அறிவும் தெருவில் விற்பனை செய்தாலும் அதை பிராயகித்து பயன் அடைய விரும்புவது இரண்டாவது பட்சம். அப்படி ஒரு விஷயம் இருக்கிறேதே தெறித்து கொள்ள கூட முன் வருவதில்லை. ஆனால் குறை கூற 5000 மோதல் 50000 வரையான நல்ல பட்டு கட்டிக்கொண்டு முன்வருகிறார்கள். இது எனக்கு புரியவில்லை. அப்படி யாரும் அதில் உள்ள புரிதலை தந்தாலும் எனக்கு அந்த புரிதல் வந்துவிடக் கூடாது என்று கடவுளை பிரார்த்திக்கிறேன்.

குறைகல் ஆயிரம் இருந்தாலும் குறைகளை சுட்டிக்காண்பிக்காமல் இருப்பதே நாகரிகம் என்பதை நான் பழகும் சமுதாயத்தில் பெரிய மற்றும் சம்பாத்தியத்தில் சாதனை செய்த மனிதர்களிடம் அறிந்து கொண்டேன்.

சற்று நேரம் முன்பு ஒரு ஒன்லைன் கல்வியில் எனது நிறுவன  பேஸ்புக் பற்றி குறை கூற கேட்டுக்கொண்டேன். ஆனால் ஆசிரியர் மிக மரியாதையான முறையில் எனது தவறை சுட்டிக்காண்பித்து அது அவரின் சுயகருத்த்து என்றும் மாணவன் சர்வ சுதந்திரமாக சிந்தித்து முடிவுகள் செய்யலாம் என்று போதிக்கிறார். இது நாகரிகம்.

அதனால் தான் அழைக்கிறேன் வாருங்கள் வாய் இனிக்க குறைகல் குருவோம் என்று.

இன்னும் வரும்.

MKP பாண்டுரங்கன்

    8/8/2020

இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா? III

இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா? II

இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா-I

Leave a Reply