My Life Experience

நியதி, சட்டம், ஒழுக்கம், கோட்பாடு

October 10, 2020 …சிந்தித்தது உண்டா? 0

நமது வாழ்வில் என்றாவது ஏன் இந்த சட்ட ஒழுங்குகள் வந்தது என்பது பற்றி சிந்தித்து இருக்கிறோமா? இது போன்ற விதிகள் எப்போதிலிருந்து இது போன்ற விதிகளை கடைபிடித்து வருகிறோம் என்று யோசித்ததுண்டா?

நான் சின்ன வயதில் ஒரு விருந்தாளியை வந்த இடத்தில வாங்க என்று வரவேற்க வில்லை. அப்பாவிடம் உரையாடி விட்டு வந்தவரை வா என்று கேளு தம்பி என்று அறிவுரை சொல்லி சென்றார். அப்பாவும் நிறையவே திட்டினார்.

ஏன் வா என்று கேட்க வேண்டும்? யார் இந்த சட்டத்தை கொண்டு வந்தது? எப்போ கொண்டு வரப்பட்டது? யோசித்தது உண்டா?

நமது நாட்டில் மட்டுமே பல வித நியதிகள் உருவாகி, பல அழிந்து விட்டது. பல நிலைத்து விட்டது. மனு நீதி, ஸ்ரீ ராமரின் நியதிகள், போன்ற நியதிகள் இருந்தன, அழிந்தன, சில இன்னும் சிலர் கடை பிடிக்கின்றனர், பலர் புறக்கணித்து விட்டனர்.

சூரியன் அஸ்தமிக்கும் திசை நியதி மாறவில்லை. செடி, மரம், பயிர் கல் விதைக்கும் மற்றும் வளரும் நியதி மாறவில்லை.

சமுதாயத்தில் நியதிகள், சட்டங்கள் மாறுகின்றது. ஏன்?

திருட்டு, கொலை, கற்பழிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கிறது. அக்குற்றங்களேயே, சட்டம் சரியாக ஒழிக்க இயலவில்லை, பிறகு மற்ற ஒழுங்குகளை யார் சீர் திருத்துவது?

சொத்து பிரச்சினை, சீர் செய்யும் கலாச்சாரத்தை, சாதகமாக்கி மாமியார் மருமகள், மற்றும் நாத்தனார் பிரச்னைகளாகி….

இப்படி எத்தனையோ பிரச்சனைகள். இதனால் தான் தலைமைத்துவம் ஒரு பெரிய படிப்பாகி, நல்ல தலைவர்கள் செயலாக்கம் செய்ய தேவை படுகிறார்கள்தான்.

ஏன் எனில் தேவையற்ற கலாச்சாரத்தையும், இன்று பயன்படாத சட்டங்களையும், ஒழித்துக்கட்ட சரியான தலைவர்கள் அவசியம் தேவை படுகிறது.

ஸ்ரீ ராமர் சூத்திரன் கல்வி கற்றான் இன்பத்துக்காக சிரச்சேதம் தண்டனையாக கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

மயிகா என்ற இடத்தில்தான் பிரசவம் பார்க்கவேண்டும், என்றும் பிள்ளைகள் பொதுவாகவும் அரசுடைமையாக இருந்ததாம். பெற்றவர்களுக்கு பிள்ளைகளையும், பிள்ளைகளுக்கு பெற்றவர்களையும் தெரியாதாம். அப்படி ஒரு சட்டம் இருந்ததாம். அங்குதான் பிரசவம் பார்க்க வேண்டும் என்பது சட்டமாம்.

இது போன்ற பண்டைய சட்டங்களிலிருந்து பரிணாம மாற்றமாகி, இன்றய சட்டங்கள், நியதிகள், உருவாகி விட்டன.

பண்டைய சட்டத்தில் கணவனை இழந்தவளை உடன்கட்டை ஏற்ற வேண்டும் என்ற மகா மட்டமான சட்டத்தை உருவாக்கியது யார்? முற்றும் சுயநல வாதிகளோ?

இன்று அவன் அவனுக்கு அல்லது  அவள் அவளுக்கு மனதில் தோன்றுவதெல்லாம் நியதியாகவும் கோட்பாடுகளாகவும் இருக்கிறது. அதனால்தான் யாரும் யாருக்கும் இன்று கட்டுப்படுவதில்லை.

சட்டம் இயற்றும் முன்பு அனைவருக்கும் பொருந்துமா என்று யோசிப்பது இல்லை.

அனைவரும் அவர் அவர் என்னை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மனோவியல் நியதி எப்படி இயங்குகிறது என்று யோசிப்பது இல்லை.

நான் ஒரு பெரிய வியாபாரியிடம் ஒரு திருமணத்தில் உரையாடினேன். திருமணம் நடத்தும் பெரியவர் வந்து அவர் கழுத்தில் மாலைபோட்டார். எனக்கு போடவில்லை. இந்த இடத்தில சமமாக மதிக்கவில்லை என்று வருந்தினாள் நமது மடமையாகத்தான் இருக்கும்.

அவர் சாதித்தவர். சமுதாயத்துக்கு நிறைய செய்தவர். அதுக்கு உள்ள பலன் தான் அவர் அவருக்கு கிடைக்கும்.

காலத்துக்கு தக்க சட்டம், கலாச்சாரம் மாறுகிறது. இத்துடன் ஒத்து இயங்காதவன் தோல்வியைத்தான் தழுவுகிறான்.

கிராமத்தை உயர்த்தி படம் எடுத்தார் பாரதிராஜா. படத்தை சுவாரஸ்யமாக எடுத்து, அதில் பல வகை மூட நம்பிக்கைகளையும் – வாழைப்பழத்தில் ஊசி சொருகியது போல் சொருகினார். மழை நிற்க கன்னிப்பெண்ணை நிர்வாணமாக கிராமத்தை சுத்த  வைப்பது போன்றவைகளில் ஒன்று.

சாணக்கியன் இயற்றிய சட்டம் சில இன்றும் மதிக்கப்படுகிறது. பண்டைய சட்டம் இன்றும் மதிக்கப்படும் காரணம் அதில் ஒரு சாரார் சுயநலம் இன்றி இயற்றிய நியதிகள்.

ஸ்ரீ ராமர் காலத்தில் சூத்திரன் கலவி கற்க கூடாது என்ற சட்டம் இருந்தது பிராமணர்களை உயர்ந்த குளத்தில் நிலைநாட்டிக்கொள்வதர்க்காக அன்றி வேறு எதுவாக இருக்க முடியும்.

நமது குடும்ப சொத்து, மாலை போட்டு மதிப்பு கொடுத்தல், பாகப்பிரிவினை செய்தல் போன்ற அனைத்திலும் இயற்றும் சட்டத்தில் சுய நலம் பின்னால் இருக்கும்.

எனது குடும்பத்தில் கூட எனது அப்பா எழுதிய, விரும்பிய படி கூட சொத்துக்கள் பகிர்ந்து கொடுக்கப்படவில்லை. நடுவராக இருந்து எனது தாய் மாமா பிரித்த படி கூட செயல் படவில்லை.

உண்மை அப்பா அப்பா என்று கூறலாம், தெய்வம் எனலாம், அவர் உயில் எழுதியதில் சாதகம் இல்லை என்றால் அதன் படி நடக்க மாட்டேன். இதுதான் இன்றய நியதி என்றால் நாம் யாருக்கும் கட்டுப்பட தேவையில்லைதான்.

நம்மை சுற்றி எத்தனை நியதிகள், சட்டம், ஒழுக்கம், கோட்பாடு இயங்குகிறது என்ற விழிப்புணர்வு வந்துவிட்டால் எனது எழுதிய இம்முயற்சி வெற்றி என்று கருதுகிறேன்.

சற்று நேரம் கிடைக்கும்போது இன்னும் வரும்

இப்படிக்கு

அன்புடன்

MKP பாண்டுரங்கன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *