பிரச்சனைகளின் மூலாதாரம் என்ன – 2-இதில் எதை பற்றி ஆராய்வோம் என்று எண்ணும்போது ஒரு படம் நெட்பிலிக்ஸில் பார்த்தேன்.
அப் படம் பார்க்கும்பொழுது, என் மனைவி, இது கதை என்று பார்க்குகிறீர்களே,
என்று நொந்துகொண்டது.
S0…
அந்த படத்தில் எனக்கு நிறைய குளு அல்லது சில படிப்பினை கிடைத்தது.
அந்த படிப்பினை தலைமைத்துவம் பற்றியது.
பிரச்சனைகளின் மூலாதாரம் என்ன – 2 ல் தலைமைத்துவம் பற்றி ஆராய்வோம். நிறைய பாடம் கிடைத்தது.
கங்கூபாய் & பிரச்சனைகளின் மூலாதாரம் என்ன – 2
அந்த கங்கூபாய் என்ற பெண்மணி சிவப்பு விளக்கு பகுதியை சேர்ந்தவர், என்ற கதை என்றதும், எனது மனைவியாரும், சற்று வெறுப்பாக கடுப்பாக இருந்தார்.
So..
அப்படியானால், அது ஒரு கதை என்று படம் ஏன் எடுக்க வேண்டும்? அந்த பெண்மணியை ஏன் சிவப்பு விளக்கு பகுதியில், இன்றும் ஏன் தெய்வமாக வழிபடுகின்றனர்?
பிரச்சனைகளின் மூலாதாரம் என்ன – 2 அறிய இப்படம் அவசியம்
தலைமைத்துவத்தின் முக்கியம் அறிய இப்படம் அவசியம்.
Additionally..
குடும்பத்தில் நான், பார்த்ததுண்டு. கோவிலில் பார்த்ததுண்டு. தொழிலில் பார்த்ததுண்டு. போட்டி போட்டுக்கொண்டு, என்னை மதி, என்னை மதி. நானே தலைவன். நான் தலைவன். நானே தலைவன் என்று முந்திக்கொண்டு விளம்பரம் செய்கின்றனர். பிரச்சாரம் செய்கின்றனர்.
Again..
ஆண்மை இல்லாதவனை, பெண்மை இல்லாதவளை, திருமணம் செய்ய தகுதி இல்லை என்று தீர்மானிக்கிறோம். திருமணத்துக்கு, ஆண்மை, பெண்மை மட்டும் அல்ல, இன்னும் பல தகுதிகள் தேவை.
Additionally..
So why..
சில குடும்பங்களில், ஜாதி, மதம், கலாச்சாரம், பண வசதி போன்ற பல தகுதிகளை கணக்கில்,எடுத்துக்கொண்டாலும், ஆண்மை பெண்மை முதன்மையான தகுதி இருப்பது அவசியம்.
ஏன் நான் தலைவன் அல்லது தலைவி என்று சற்றும் ஆராய்வது இல்லை. சிலர் வயது வைத்து தலைவன்/தலைவி என்கின்றனர். தலைவன்/தலைவியாக இருக்க என்ன தகுதி வேண்டும் என்று சிந்தித்தால் போதும்.
அப்படத்தின் சில தகவல்கள் யு டியூப்பில் பெறலாம். முடிந்தவர்கள் இந்த படத்தை குறைந்தது 3 தடவையாவது பாருங்கள். இது எனது வேண்டுகோள். இந்த படம் பார்த்து விட்டு அப்பறம் கேட்கலாம், என்னை கோவிலில், குடும்பத்தில், தொழிலில் தலைவனாக்கு என்று.
அந்த விபச்சாரியின், கதையை, உண்மைக்கதையை தெரிந்து கொண்டு அப்புறம் தலைமைத்துவம் என்றால் என்ன என்று புரிந்து கொண்டு, அதன் படி செயல் படும் தகுதி இருந்தால், கண்டிப்பாக நாம் தலைமை பதவிக்கு போராடலாம்.
So..
அந்த படத்தின் கதை படி விபச்சார 4000 பெண்களுக்கு, சில உரிமைகள் வாங்கி கொடுத்துள்ளார்.
அந்த பெண்ணை தள்ளிக்கிட்டு போனதே ஒரு அயோக்கிய காதலன். மீண்டும் அந்த கால கட்டத்தில், தனது கிராமம் சென்றால், கிராமத்து மக்களின் பேச்சால், தற்கொலை செய்ய வேண்டும். ஆக உயிர் வாழ அங்கே தங்கினாலும், 4000 விபச்சார பெண்களுக்கு, பல உரிமைகளை வாங்கி கொடுத்தார்.
கிராமங்களில் இன்னும் இளம் பால்ய வயது திருமணம் போன்று செய்து, பல உரிமைகளை கொன்று விடுகின்ற சமுதாயத்தில், சிவப்பு விளக்கு பகுதியில் என்ன பெரிய சர்வ சுதந்திரம் இருந்து விடப்போகிறது?
விடுமுறை, போன்ற சில அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுத்த தலைவி.
Thus..
அந்த பெண் 10, 15 வருடம் களித்து, தனது அம்மாவுக்கு போன் செய்த போது அம்மா, ஏன் போன் செய்தாய் என்று வேண்டா வெறுப்பில் பேசி, போனை கட் பண்ணி விட்டார்.
என்னால் என்ன செய்ய முடியும் உனக்கு? தலைமைத்துவத்தின் தகுதி
என்னால் என்ன செய்ய முடியும் உனக்கு?
உனக்கு என்ன வேண்டும்? என்னால் உனக்கு என்ன செய்ய முடியும்? இந்த சமுதாயத்துக்கு நான் என்ன செய்ய முடியும்? இந்த கிராமத்துக்கு நான் என்ன செய்ய முடியும்? இப்படி யோசித்தவர்கள், யோசிப்பவர்கத்தான், கடந்தகாலத்தில், தகுதியுடன் செயல் பட்டனர்.
நிகழ் காலம், வருங்காலத்தில் தலைமை தகுதியுடன் செயல் பட முடியும்.
என் மதத்தில் இணையவில்லை என்றால், உன் தலையை வெட்டுவேன். நான் சொல்லும் பெண்ணை/ஆணை, திருமணம் செய்யவில்லை என்றால்..? நான் சொல்வதை நீ கேட்கவில்லை என்றால்..? இது பயமுறுத்தும் தலைமைத்துவம். கொடுங்கோல் நிர்வாக முறை. நீ செருப்பு போட்டால்..? நீ மேலாடை போட்டால்..?
இந்த முறைகளால்தான், பெரியார், அம்பேதக்கூர் போன்றவர்கள் தேவைப்பட்டனர். முழுமையான வெற்றி அடையவில்லை பாவம், அவர்கள்.
இளம்பிள்ளை திருமணம் என்றால் வேறு ஒன்றும் இல்லை? பெரியவர் இன்னாருக்கு இன்னார் என்று தீர்மானித்த முடிவுக்கு கட்டப்படுத்துவதுதான். 18 வயதில் பெற வேண்டிய சர்வ சுதந்திரத்தை, இளம் வயதில் முறித்து விடுவதுதான்.
அத்தை மகன்/மகள் , சகோதரி மகன்/மகள், மாமா மகன் மகள் பின் மனம் மாறி விடுவர் என்ற அவநம்பிக்கையை பெரியோர்கள் செய்யும் சூழ்ச்சியே, இளம் வயது திருமணம்.
இன்றய தலைமைத்துவம், நவீன தலைமைத்துவம் வேறு. அன்றய தலைமைத்துவ கோட்பாடு, இன்று பர்மாவில் இருப்பதாக செய்திகள் நிறைய வருகிறது.
வளரும் நாடுகளில் இன்று அந்த கோட்பாடு செல்லாது. நல்ல தலைவன்/தலைவி யாகவும் இந்த கோட்ப்பாட்டில் வர முடியாது.
அது மட்டும் உண்மை.
தலைமைத்துவம் என்பது நான் உன்னை ஆக்ரமிப்பதுதான் என்றால், இதன்னை புத்தகங்கள் தேவை இருக்காது அல்லவா?
கீழே உள்ள (பெயர்) லிங்கை கிளிக் செய்து, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பானிஷ் என்று பழமொழிகளில் வெளிவந்து, 20, 30, 40 ஆண்டுகளாக விற்பனை ஆகும் தலைமைத்துவம் நூல்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
தலைமையத்துவம் என்றால் என்ன என்று ஒன்றும் தெரியாதவர்களை தலைவன் என்று ஏற்றுக்கொள்வது சுத்த மடமைதான். அவன் சொன்ன ஆக்கிரமிப்பில், மேலாடையும், செருப்பும் போடாதவர்களும் ஒருபக்கம் அறியாமை, பாவம் என்றாலும், அதிலும் ஒரு மடத்தனம் இருக்கத்தான் செய்கிறது.
சகோதரன் சகோதரியை தள்ளிவிட்டால்தான் எனக்கு வரன் கிட்டும். சகோதரியின் ஜாதகம் போதிய பொருத்தம் இல்லாவிட்டாலும், பெண் கொடுத்து பெண் எடுத்தால், எனக்கு சாதகம் போன்ற முடிவுகள் சுயநலம் நிரம்பியது. நமது கலாச்சாரத்தை அப்படியே கண்மூடித்தனமாக ஏற்பதும் ஆபத்து நிறைந்ததுதான்.
பிரச்சனை, சிக்கல்களின் மூலாதாரம் என்ன?
இதுதான் நமது ஆய்வு.
நமது கல்வி தகுதி, செயல் பாடு தகுதி என்ன என்று ஆராய்ந்து தலைவர் பதவிக்கு வர விரும்புவதை விட, பதவி, மதிப்பு ஆசையை வைத்து, கொஞ்சம் அதிகாரம் இருந்தால் அதை வைத்து, தலைவன் ஆகி விடுவது.
ஒத்துழைப்பு தரும் மக்கள் இல்லாமல் தலைவன் என்ற பேசுக்கே இடம் இல்லை. அப்படி மக்கள் ஒத்துழைக்க விரும்பினால், அவர்களை, வழி நடத்தி தேவையான, பொது நலம் நோக்கம் உள்ள பாதையில் அழைத்து செல்வதுதான் நல்ல தலைமைத்துவம்.
மேலமருங்கூர் என்ற ஊரில், நான் தலைவன், எனக்கே தேங்காய் மூடி என்று அடித்துக்கொண்டு, 36 வருடம் கோவிலை பாழாக்கிய கதை தெரிந்ததே.
2020 முதல் செயல் பட்டு வரும் தலைவர்கள் என்ற பெயர் இல்லாத
2020 முதல் செயல் பட்டு வரும் தலைவர்கள் என்ற பெயர் இல்லாத, கமிட்டீ குழு எப்படி சிறப்பாக செயல் படுகிறது? கமிட்டீ உறுப்பினர்கள், இன்று வரை ஒரு பரிவட்டமும், காளாஞ்சி என்று மரியாதையாக சொல்லப்படும் தேங்காய் முடியும் பெற்றுக்கொள்ளாமல், எப்படி மக்களை, பக்தர்களை, வழி நடத்துகின்றனர்? இதுதான் சிறப்பு வாய்ந்த தலைமைத்துவம்.
So..
ஒரு கோவிலை, ஒரு காரியத்தை கையில் கொடுத்தால், அந்த காரியத்தை திறம்பட, சுயநலம் நோக்கம் இல்லாது வலி நடத்துபவர்கள் இவர்கள்.
Thus..
காரியத்தை கொடுத்த நோக்கம் அறிந்து வளர்ச்சி பாதையில் வழி நடத்துபவர்களுக்கு, இயற்கையிலேயே சரியான தகுதி இருக்கின்றது.
By the way..
இவர்களுக்கு கங்கூபாய் என்ற படம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்களிடம் தேவையான தகுதி, இயற்கையிலேயே இருக்கிறது.
ரூபாய் 100 மதிப்புள்ள துண்டை தலையில் காட்டிக்கொள்வது தலைமையில் சிறந்தவன் என்று அர்த்தமாகிவிடாது. 1000 பேருக்கு முன் ஒரு தேங்காய் மூடி வாங்கி விட்டால் தலைவன் அல்லது பெரிய மதிப்பு என்றாகிவிடாது.
என்னை பொறுத்தவரை, கங்கூபாய் என்ற அந்த (கொச்சையில் தேவடியாள் என்று அழைக்கப்படும்) விபச்சாரிக்கு தலை வணங்குகிறேன்.
In result..
காரணம், 4000 பெண்களுக்கு, விடுமுறை, விபத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் உரிமை போன்ற பல சேவைகள் புரிந்து இருக்கிறார். நேரு, அந்த நேரத்து பிரதமரை 15 நிமிடம் சந்தித்து 4000 பெண்கள் பிரச்சனை பற்றி பேசியிருக்கிறார்.

ஒரு விபச்சாரியிடம் (கொச்சியில் இருந்தும் இருந்தும் ஒரு தேவடியாளிடம்) தலை வணங்க எனது ஈகோ எனப்படும் ஆணவம் மறுத்தாலும், அந்த பெண்மணி தலைமைக்கு தகுதி உள்ளவர் என்ற மதிப்பு அவர் நிறைய வருகிறது.
தலைமைத்துவ கோட்பாடு
தலைமை என்பது மறைமுக அர்த்தம் சேவகன் என்று பொருள். அம்பேதக்கூர், காந்தி, பெரியார், ஜான்சி ராணி, MGR போன்ற நல்ல தலைவர் என்ற பெயர் எடுத்த யாரையும் அலசி ஆராயுங்கள்.
எனக்கு தலைவர் பதவி கொடுங்கள் என்று கேட்டதாக இருக்காது. எதோ ஒரு சேவை தேவைப்படும் இடத்தில் சேவகர்களாக நுழைந்து இருப்பார்கள்.
பெரியார், ஒரு உதாரணம். ஒவ்வொரு ஜீவனுக்கும் சுய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்று பாடு பட்டார். அவர் பிறந்த வசதியான வாழ்வை உதறிவிட்டு, மற்றவரின் சுய மரியாதை க்காக பாடுபட்டார். செருப்பு போடாதே, மேலாடை போடாதே போன்ற ஆக்கிரமிப்பை தடுக்க பாடுபட்டார்.
நல்ல சேவகனே சிறந்த தலைவன் என்று மீண்டும் மீண்டும் சரித்திரம் நிரூபிக்கிறது.
இன்னொரு நமக்கு தெரிந்த உதாரணம், தேங்காய் மூடிக்கும், பரிவட்டத்துக்கும் அலைந்த நபர்கள், மேல மருங்கூர் கோவிலை பாழடைய வைத்து சாதனை செய்தனர்.
இன்று மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகரின் சேவகனாக செயல்படும் கமிட்டி, இந்த ஓராண்டில் போட்ட அன்னதானம் கூட 36 வருடம் போட இயலாவில்லை.
மேலமருங்கூர் வருஷாபிஷேக திருவிழா அன்னதானம்
1.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்னதானம்
அப்படியும் சொல்ல முடியாது. தேங்காய் மூடியிலும், பரிவட்டத்திலும் இருந்த கவர்ச்சி, அன்னதானத்தில், கோவில் மேம்பாட்டிலும், வளர்ச்சியை நோக்கின நிர்வாகம் செய்ய கவரப்படவில்லை, நோக்கம் வரவே இல்லை.