You are currently viewing பிரச்னை நான் கொண்டு வருகிறேனா-1 பிரச்னை என்றால் என்ன-ஒரு வரையரை அல்லது விளக்கம்
ராவணன்

பிரச்னை நான் கொண்டு வருகிறேனா-1 பிரச்னை என்றால் என்ன-ஒரு வரையரை அல்லது விளக்கம்

பிரச்னை என்றால் என்ன?

இந்த கேள்விக்கே பதில் தெரியாமல் தான் “நீ பிரச்னை பண்ணிகிறாய்”, “நான் பிரச்னை பண்ணுகிறேன்” என்று சதா தகராறு செய்து கொள்வோம்.

இந்த கேள்விக்கு முதலில் அடிப்படை விளக்கத்தை தெரிந்து கொள்வோம். இந்த கேள்விக்கு தெளிவான பதில் தெரிந்து விட்டால், நமது சிந்தனையில் தெளிவு வந்து விடும்.

பிரச்னை நான் கொண்டு வருகிறேனா-1 பிரச்னை என்றால் என்ன-ஒரு வரையரை அல்லது விளக்கம்..சொல்லும் தருணம் வந்து விட்டது.

நீங்கள் ஒரு பிரச்னை கொண்டு வருகிறீர்கள்….

“ஒவ்வொரு முறையும் ஊருக்கு வரும் பொழுது, நீங்கள் ஒரு பிரச்னை கொண்டு வருகிறீர்கள்”.

மிக அருமையான ஒரு குறை. அற்புதமான ஒரு குறை. எனது திருமண நாள் முதல், நடந்த சம்பவங்களை சிந்தனை அசை போட தூண்டிய குறை. எனக்கு இந்த குறை மேல் அப்படி ஒரு காதல் வந்து விட்டது.

இது எந்த அளவுக்கு உண்மையாக இருக்க முடியும்? அறிவுப்பூர்வமாக ஆராய வேண்டும் என்றால்?

பிரச்னை என்றால் என்ன என்ற ஒரு அடிப்படை புரிதல் தேவை. அடிப்படை புரிதல் இல்லாமல்

இது பிரச்னை…

…அது பிரச்னை

என்று குற்றம் சுமத்துவதை அறிவு உள்ளவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.

குடும்ப வரலாறுகளை ஆராய வேண்டிய தருணம் வந்து விட்டது.

வரலாறு, செயலின் பின்னணி நோக்கம், இதல்லாம் ஆராயாமல், இது குற்றம் அது குற்றம் என்றால், வடிகட்டிய முட்டாள் கூட ஏற்க மாட்டான். சில நேரங்களில் கலாச்சாரத்தையும் ஆராயந்தால் தான் புரிய வரும்.

ஒரு சில சாதாரண அடிப்படையான விஷயம்:

ஷஷ்டி, திருமணம் என்று நல்ல காரியத்துக்கு அழைப்பு கொடுத்தால், ஒரு கோடி குறை இருந்தாலும், சிறப்பிக்க போக முடியாவிட்டால், அந்த நிகழ்ச்சிக்கு போகாமல் இருப்பதே சிறந்தது.

மருமகள் அல்லது நாத்தனார், என்றால் அடிமையில்லை. குடும்பத்தில் பங்கேற்க வந்தவர் என்று பொருள். தனது உடலையும், மனதையும் அந்த வீட்டு மாப்பிள்ளை பையனுக்கு கொடுக்க அல்லது பகிர்ந்து கொள்ள வந்தவள் என்று பொருள்.

எத்தனை பேர் பெண் கிடைக்காமல் தற்கொலை செய்தனர் என்ற விஷயம் தெரிந்து இருப்பது ஒரு முக்கியம்.

அவன் அவனுக்கு, ஏழையோ, பணம் படைத்தவனுக்கோ, தனது  மனைவிதான் தனக்கு மஹா ராணி . அதற்கு அப்புறம் தான் மற்ற உறவுகள்.

முக்கியமாக இந்த “மனைவிதான் முக்கிய உறவு” என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மனம் என்ன செய்யும்?

மகனும் மருமகளும் தோளில் கைபோட்டுக்கொண்டால், மகளும் மருமகனும் தோளில் கைபோட்டுக்கொண்டால், சகோதரனும் அவன் மனைவியும் தோளில் கைபோட்டுக்கொண்டால் மனம் கொந்தளிக்கும். அருவருப்பாக இருக்கும். பிரஷர் ஏறும்.

நிம்மதி இருக்காது.

வெளி உலகத்தில் போய் குறை சொன்னால், உலகம் அவன் அவன் பொண்டாட்டி தோளில் கைபோடுவது தவறு, குற்றம் என்று ஏற்று தொலையாது இந்த உலகம். 

பிரச்சனைகளுக்கு மூலகர்த்தாவாக இருப்பவர்,

  • மற்றவர்களுக்கு சர்வ சுதந்திரம் கொடுக்க மறுப்பது.
  • ஆக்கிரமிக்க முயலுவது என்று எடுத்துக்கொள்ளலாமா?

பிரச்னை என்றால் என்ன? ஏன் வருகிறது? பிரச்சனைகளின் அடிப்படை, மூலாதாரக்காரணமாக இருப்பது எது? காரணம் என்ன?

பிரச்னை என்றால் என்ன என்ற ஒரு அடிப்படை புரிதல்-பிரச்சனை என்ற சொல்லுக்கு வரையரை

நான் பிரச்சனைகளை சரி செய்வதில்லை. நான் என் எண்ணத்தை சரிசெய்கிறேன். பிரச்சனை தங்களை அதுவாகவே சரி செய்து கொள்கிறது

I don’t fix problems. I correct my thinking. Problems tend to fix themselves

I dont fix problems
I dont fix problems

in the first place

ஒரு குறிப்பிட்ட பஞ்சு மூலப்பொருளில் செய்யும் உடைகளை, பல பெயர்களில் அழைக்கிறோம். வேஷ்டி, சேலை, சட்டை என்று இன்னும் பல பெயர்களில் அழைக்கிறோம்.

கேரளாவில் பெண்கள் வெள்ளை உடை கட்டுவதால் உடனே சேலை என்ற முடிவுக்கு வர முடியாது. பெண் உடுத்திவிட்டால் அது சேலை என்று பொருள் இல்லை. அங்கே பழைய கலாச்சாரத்தில் உள்ள பெண்கள் வேஷ்டியை உடுத்துகின்றனர்.

இந்தியாவில், சில பகுதிகளில் பெண்கள் வெள்ளை உடை உடுத்திவிட்டால், அது வேஷ்டி என்ற முடிவுக்கு வர முடியாது.

தான் விதவை என்று அடையாளம் காட்டிக்கொள்ள வெள்ளை சேலை கட்டுவது ஒரு கலாச்சாரமாக இருக்கிறது.

அதே பஞ்சில் உருவான பொருட்களை, ரவிக்கை, ஆண் சட்டை, பேண்ட், என்றெல்லாம் பெயர் உண்டு.

பிரச்சனைகள் பல விதம்

நானே மகனாகவும்/மகளாகவும், அப்பாவாக/அம்மாவாகவும், பேரன், தாத்தா, மாமா, மருமகன் போன்ற பல ரூபத்தில் இருப்பது போல நாம் பிரச்னை என்று எதை குறிப்பிடுகிறோம்?

also,

தொழில் நிர்வாக பிரச்சனைகள், கோவில் நிர்வாக பிரச்சனைகள், வேலை நிர்வாக பிரச்சனைகள், ஆரோக்கிய நிர்வாக பிரச்சனைகள், கணவன் மனைவி தேவைகள் நிர்வாக பிரச்சனைகள், இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

நாம் இங்கே ஆராய போவது

  • குடும்ப உறவுகளில், எது பிரச்னையை உருவாக்குகிறது?
  • நாம் குற்றம் சுமத்தும் அத்தனையும் உண்மையில் பிரச்னை என்று லேபல் குத்த தகுதியானவைகளா?

அல்லது குழந்தைகள்

  • ஆப்பிளை ஆரஞ்சு,
  • பேனாவை பென்சில் என்று

தவறாக அடையாளம் செய்துகொள்ளுவது போல நாம் தவறாக புரிந்து கொள்கிறோமா?

நீதான் பிரச்சனை க்கு காரணம் என்று சொல்லி விட்டால் நீதான் காரணமா? அறிவுப்பூர்வமாக ஆராய்வோம்.

குடும்பப்பிரச்சனை

in addition..and… likewise,

பிரச்னை என்றால் எதை குறிப்பிடுகிறோம்? ஒரு தெளிவான சிந்தனை தேவை.

ஒரு தனி மனிதனின் மனம் உடைந்து விட்டது என்று வைத்துக்கொள்வோம்.

நீ என்ன இப்படி பேசுகிறாய்? எனது மனம் புண் பட்டு விட்டது. அதனால்

  • நீயே பிரச்னை உருவாகிவிட்டாய் என்று கண்டிப்பாக பொருள் படாது.

நாங்கள் பழைய லாரி உதிரி பாகங்கள் விற்பனை செய்கிறோம். எங்கள் கடை பொருட்களுக்கு எதற்கும் உத்தரவாதம் கொடுப்பது இல்லை.

சில வாடிக்கை யாளர்கள், அது எப்படி 1லட்ச ரூபாய்க்கு பொருள் வாங்கி இயங்கவில்லை என்றால் தெருவிலா போட முடியும்? என்று கேட்பார்கள்.

நான் ஜவுளி கடையில், 1000 ரூபாய்க்கு சட்டை வாங்கி அதில் குறைபாடு இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

ஆனால் எங்கள் பொருள் அப்படிதான். சுமார் 40 வருடமாக, நான் மட்டும் இல்லை, மலேஷியா, இந்தியா, தாய்லாந்து, ஜப்பான் போன்ற அணைத்து நாடுகளிலும் அப்படிதான் வர்த்தகம் செய்யப்படுகிறது.

நீ தெருவில் போடுவாயா? எனக்கு தெரியாது.

  • எங்களின் பாலிசி இதுதான்.

அது தொழில் பாலிசி.

அதே போல ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் அவனுக்கு தனிப்பட்ட பாலிசி, விருப்பு, வெறுப்பு இருக்கும்.

  • அது சர்வ சுதந்திரமாக, இருக்க அனுமதிக்கிறோமா?

சர்வ சுதந்திரமாக அவர்களின் தேவையை நிர்வாகம் செய்துக்கொள்ள அனுமதிக்கிறோமா?

மற்றவர்களின் பிரச்சனைகளில் எந்த எல்லை வரை மூக்கை நுழைக்கலாம் என்று யாரும் ஒரு வரையறை சொல்லியதுண்டா?

உதாரணம், நாம் ஒரு டாக்டர் அல்லாத பட்சத்தில், நம்மிடம் ஆலோசனை கேட்கப்படாத பட்சத்தில், கணவன் மனைவி உறவின் போது இப்படி அப்படி இருந்ததா என்று மூக்கை நுழைத்து கேட்கலாமா?

கண்ணை மூடிக்கொண்டு, சற்றும் யோசிக்காமல் அல்லது மூக்கை நுழைக்கிறோமா? மூக்கை நுழைப்பதில் தான் பிரச்னை ஆரம்பம். மூலகர்தா.

எங்கள் தொழிலில் உத்தரவாதம் கொடுக்கத்தான் வேண்டும். அதுதான் சரி என்று ஆலோசனை சொல்லும் ஒவ்வொரு கஸ்டமரிடமும், நாங்கள் சொல்லுவது:

பொருள் எங்களுடையது. தொழில் எங்களுடையது. நாங்களே பாலிசி உருவாக்கும் தகுதி உடையவர்.

பணம் உன்னுடையது. உனக்கு இந்த பொருளை வாங்காமல் போக சர்வ சுதந்திரம் இருக்கிறது. உனக்காக எங்கள் பாலிசியை மற்ற இயலாது. மன்னித்துவிடு.

in the first place…not only …

எதிலும் மூக்கை நுழைப்பது vs தனது எல்லையை அறியாமல் இருப்பது

but also..as a matter of fact..in like manner

எனக்கு உரிமை இருக்கிறது. நானே மூத்த மகன், மருமகன், மகள். ஆகவே எனக்கு எதிலும் மூக்கை நுழைக்க உரிமை இருக்கிறது .

இந்த வீட்டுக்கு வரும் மருமகள், எப்ப பிள்ளை பெறலாம், எங்கே பிள்ளை பெறலாம், என்பதை நானே முடிவு செய்வேன்.

“பிள்ளை பெற தடை சாதனம் பயன் படுத்த கூடாது. அதுவே எனது நம்பிக்கை. எனது நம்பிக்கையே வேத வாக்கு.”

இது போன்ற முட்டாள்தனமான நம்பிக்கை எங்கு இருந்து வந்தது?

இது போன்ற மூக்கு நுழைப்பதை, தனது பெண்ணின், புகுந்த வீட்டில் தனது பெண்ணுக்கு நடந்து இருந்தால், வேதனை படும் பெற்றோர்கள், மருமகளிடம் மூக்கை நுழைக்கும் மகளுக்கு நாலு அரை விடாததுக்கு என்ன அர்த்தம்?

மகள், மருமகள் சமமாக மதிக்கபடவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

நம்பிக்கையே வாழ்க்கை???? எந்த நம்பிக்கை வாழ்க்கை?

பற்பசை நம்பிக்கை

நம்பிக்கையே வாழ்க்கை என்று கேள்வி பட்டு இருப்போம்.

அப்படி என்றால் என்ன என்று யோசித்து இருக்க மாட்டோம். 99% நபர்களுக்கு அதற்கு விளக்கமும், அர்த்தமும் கொடுக்க இயலாது.

ஒரு உதாரணம். பல் விலக்காமல் உயிர் வாழ முடியும். இறந்து விட மாட்டோம். நாம் குரங்கு மனிதனாக இருந்த காலத்தில் பல் விலக்காமல் தான் வாழ்ந்துள்ளோம்.

பிறகு படி படியாக சில வகையில் பல் விளக்குவது அவசியம் என்று கற்க ஆரம்பித்தோம். பலர் சாம்பல், வேப்பம் குச்சி பயன் படுத்தினோம்.

பல் துலக்கும் கலாச்சாரம் விரிவாக, விரிவாக, பல்பொடி, பற்பசை என்று பல கோடி ரூபாய் வர்த்தகம், தொழிற்சலை, வேலை வாய்ப்பு என்று உருவாகிவிட்டது.

இன்று பல பல பிராண்டுகள், கோல்கேட், விக்கோ, டார்லி, என்று போட்டிபோட்டுக்கொண்டு நானே சிறந்த பற்பசை என்று நம்மை நம்ப சொல்கிறது.

கோல்கேட் பிராண்டை நம்பும் குடும்பங்களும் உண்டு. மற்ற மற்ற பிராண்டுகளை நம்பும் குடும்பங்களும் உண்டு.

வாழ்விலும் நாம், இதை நம்பு. அதை நம்பு என்று திணிக்கப்படுகிறோம்.

நான் செய்வதே சரியான செயல், நான் நினைப்பதே சரியான தரமான எண்ணம், இப்படி வலியுறுத்தப்படுகிறது.

கோல்கேட் வாங்காமல், விக்கோ வாங்கினால், மன துன்பம் வராது. சர்வ சுதந்திரமாக எந்த பிராண்ட்டும் வாங்கலாம்.

உறவுகள் இப்படித்தான் செயல்பட வேண்டும். இப்படித்தான் நம்பவேண்டும் என்று விளம்பரம் செய்யாமல், வார்த்தை ஜாலங்களால் நம்மை ஆக்கிரமிக்கிறது.

உறவுகளில் நான் சொன்னதை கேட்கவில்லை, நம்பவில்லை என்று குறை சொல்வார்கள். யார் சொல்வதை நம்பலாம்? இவர் சொல்வது உண்மையில் எனது மேல் உள்ள அக்கரையில் சொல்கிறாரா?  அல்லது சுய நல பின்னணி நோக்கம் அடிப்படையில் வரும் உத்தரவா? இது போன்ற கேள்விகளே கேட்காமல் நம்ப வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள்.

*********

in addition..again..to

இன்னொரு உதாரணம், வைகிங் என்ற சரித்திர சீரியல் பார்த்தால், ஒரு விஷயம் புரியும். ஒடின், தோர் போன்ற கடவுள்களை, கிறித்துவ மதம் கொன்று, அழித்து விட்டு, கிறிஸ்துவ மதத்தை நிலை நாட்டியுள்ளது என்பது புரிய வரும்.

அதுவே முதல் தீவிர வாத மதம் என்று கருதப்பட்டது.

பாண்டி, முனி போன்ற தமிழ் கடவுளர்களை அழிப்பதில் தோல்வி கண்டு விட்டதால்தான், அவர்களை காவல் தெய்வங்களாக வைத்து உள்ளார்களாம்.

இங்கே நான் மத சரித்திரம் பேச வரவில்லை. இதை நம்பு. அதை நம்பு என்று திணிக்கப்படுகிறோம்.

நம்பிக்கையின் உதிரி பாகங்கள்

ஒரே ஒரு பல் துலக்கும் பழக்கத்துக்கே ஒரு பெரிய சரித்திரம் எழுதலாம். எப்படி நமது நம்பிக்கையை கவர்ந்து, அதே குறிப்பிட்ட பிராண்டுக்கு அடிமை ஆகிறோம் என்று ஆராய்ச்சி பூர்வமாகவும் எழுதலாம்.

நமது நம்பிக்கையின் உதிரி பாகங்கள் என்ன என்பதே 99% மக்களுக்கு தெரியாது. தெரியாது என்பதே தெரியாது. அதுதான் பிரச்னை.

வீட்டில், மாவு ஆட்டும் கிரைண்டர், மிக்ஸி போன்ற பொருளுக்கு உள்ளே இருக்கும் பாகங்கள் தான், அந்த பொருட்களை இயக்குகிறது என்பதே பலருக்கு, விழிப்புணர்வு இருக்காது.

உடலின் இயக்கத்தை உடலின் உதிரி பாகங்கள் நிர்ணயிக்கிறது. கிட்னி, இருதயம், குடல் போன்ற பாகங்கள் நிர்ணயம் செய்கிறது.

மனோவியல் தேவையை, நமது நம்பிக்கை தீர்மானிக்கிறது. இந்த நம்பிக்கை எங்கே இருந்து பிறக்கிறது? அந்த நம்பிக்கை நமக்கு பொருந்துமா? அதை நாம் ஆராய்வது கிடையாது.

ஜாதி நம்பிக்கை, மத நம்பிக்கைகள், கலாச்சார நம்பிக்கைகள், உழைப்பின் நம்பிக்கைகள், மற்றவர்களை மட்டம் தட்டி பேசும் நம்பிக்கைகள், நான் சொல்லுவதே சரி எனற நம்பிக்கைகள், கர்ம வினை நம்பிக்கைகள், இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

இப்படி கோடிக்கணக்கில் நம்பிக்கையின் உதிரி பாகங்கள் நம்மை ஆக்கிரமித்து, நமது செயலை நிர்ணயிக்கிறது. நமது செயல்கள் மற்றவர்களின் அபிப்பிராயங்களை உருவாக்குகிறது.

இவன் நல்லவன், இவன் வந்தாலே அந்த இடம் பிரச்னை நிறைந்துவிடும், இவன் உருப்படாதவன், இவன் சுயமாக ஒரு தொழிலை உருவாக்கியவன், இவன் மாமன் கையை நம்பி உள்ளவன், சோம்பேறி, வெட்டிக்கதை பேசுபவன், வெட்டி பஞ்சாயம் செய்பவன், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

உண்மையான கலப்படம் இல்லாத உறவு என்றால் என்ன? ஒரு வரையறை.

and..also..then

ஒரு பெண்மணி, மூத்த அண்ணன் அவன் பொண்டாட்டி வந்ததும், அவன் சரியில்லை. ஆகவே எனக்கு இளைய அண்ணன் ஒரு அண்ணன் தான் உண்டு என்று சொன்னார்.

பிறகு இளைய அண்ணன் பொண்டாட்டி வந்ததும், இளையவனும் சரி இல்லை. பச்சோந்தி போல, மூத்த அண்ணன்தான் சரி என்ற ஒரு முடிவுக்கு வந்தார்.

இங்கே உறவு என்பது, தனது எதிர்பார்ப்பு நிறைவேறினால் மட்டுமே நல்ல அண்ணன், கெட்ட அண்ணன் என்று முடிவு செய்யப்படும். உறவுகள் உண்மையான உறவா?

பல நேரங்களில் தான் புகுந்த வீட்டில் பிறந்த வீட்டு உறவுகள் தரமாக செய்வார்கள் என்று காண்பிக்க, உதவும் அண்ணணை மட்டும் உறவாக வைத்துக்கொள்வதும் உண்டு.

முக்கியமாக நல்லது கெட்டது புகுந்த வீட்டில் நடக்கும் நேரங்களில் அண்ணன் பயன் உள்ளவராக இருப்பது, அண்ணனின் தரமாக செய்யும் சேலையிலும், பணத்திலும் அடங்கியுள்ளது உறவு என்பது.

அண்ணன் பல வேளைகளில், பழையதை மறந்து போல நடிப்பதும் உண்டு. அற்பமான விஷயங்களில் இருந்து விடுபட்டு, தரமான சிந்தனையில் இருப்பதற்கு, மறதி நிறைய உதவிகரமாக இருக்கிறது.

ஜப்பானிய வியாபார மற்றும் குடும்ப உறவுகள்-கலாச்சார வரையறை

as well as..together with

நான் ஒரு பொருளை 100,000 ரூபாய்க்கு வாங்கி, முன்பணம் செலுத்தி விட்டேன். மறுநாள், மற்றொருவர் 110000 ரூபாய்க்கு கேட்டால் ஜப்பானியர்கள் விற்றுவிடுவார்கள்.

நான் உனக்கு 10 வருட நண்பன். இப்படி விற்றது சரியா? இப்படி நான் முறையிட்டால், ஜப்பானியர் சொல்லும் பதில்,

“ஆம் நாம் 10 வருட நண்பர்தான். உனது நண்பன் 10000 ரூபாய் கூட லாபம் பார்த்ததுக்கு, 10 வருட நண்பனாகிய நீ சந்தோஷப்பட வேண்டும்.”

“இல்லாவிட்டால் நீ என்ன மயிறுக்கு நண்பன் என்று கேட்பார்கள்?”

அதன் உள் விஷயம், உண்மையான உறவு, நண்பன் என்றால், நான் அதிக பலன் அடைந்தாள் நீ சந்தோசம் அடைய வில்லை என்றால், நீ என்ன உறவு? அது அவர்களுடைய கலாச்சாரம், என்று விட்டு விட முடியாது.

நீ மலேசியாயாவில் குடும்பம் உருவாக்க நினைக்கிறாயா?

நீ குழந்தையை மலேசியாவில் பெற திட்டம் வைத்து இருக்கிறாயா?

கூட ஒரு பிள்ளை பெற போகிறாயா?

குற்றாலத்தில் புது மண தம்பதிகளுக்கு தனி ரூம் போட்டு, தனித்து விடவா?

எனது மருமகளும் மகனும், அவர்கள் ரூமில் பிரைவசி யாக இருக்க வேண்டும். இத்தனைக்கும் நான் ஆதரவு ஆதரவு தருவேன்.

இப்படி எத்தனை மாமியார்கள், நார்தனார்கள் முன் வந்தனர்?

படித்த மாமியார்களும், நார்த்தனார்களும் நிறைய பழமையிலிருந்து மாறிவிட்டனர். சென்ற வருடம் திருமணம் முடிந்த பெண்ணின் மாமியார் அவர்களின் தொழிற்சாலைக்கு செல்லும் பொழுது, மருமகள் உடைக்கும் குடத்தில் குறை சொல்ல நேரம் இல்லை.

குடும்பத்துக்கு பலன் தரும் வேலைகள் மனதை ஆக்கிரமித்து இருக்கும் பொழுது, இது செய்தால் சரியும், அது செய்தால் தப்பு என்றும் சட்ட திட்டங்கள் வகுக்க நேரம் இருப்பது இல்லை அந்த மாமியாருக்கு.

சரியும் தவறும் என்று பஞ்சாயம் பேச, ஒரு ஊரிலிருந்து, இன்னொரு ஊருக்கு ஒரு சிறு தொழில் உரிமையாளர் வந்தார் என்றால், பெரிய விசித்திரம் தான்.

மலேசியாயாவில், மூத்தவர் என்ற வயதை வைத்துக்கொண்டு, கப்பலா என்ற ஒரு பட்டப்பெயரை வைத்துக்கொண்டு, மலேசியாவில், அவர்கள் பஞ்சாயம் செய்தது மட்டுமே.

நான் வயதில் பெரியவர், கப்பலா என்று சொல்லிக்கொண்டு, பஞ்சாயம் செய்து சாதித்தது ஒன்றும் இல்லை. மதிப்பை இழந்தது மட்டுமே சாதனை.

மனித உறவுகள் எப்படி இயங்குகிறது என்பதே புரிந்துகொள்ள எந்த முயற்சியும் செய்வதில்லை.

தொழிலில் கவனம் செலுத்தாமல், இவன் காபியையம், டீயையும் ஆட்டி ஆட்டி கொண்டு வந்தது தவறு போன்ற பஞ்சாயம் செய்து கொண்டு வாழ்ந்தனர்.

கப்பலா பதவி கொண்ட வர்களை விட இளையவர்கள், தான் உண்டு தொழில் உண்டு என்று மாபெரும் தொழில் அதன் மூலம் பொருளாதார வசதிகளை பெருக்கியவர்கள் பலர் உண்டு.

தனது கவனம் காபியில் டீயிலும் மற்றும் அற்ப விஷயங்களில் வைத்துக்கொண்டு குறை அல்லது நிறை கண்டு பிடித்தால் தானும் முன்னேற முடியாது.

அந்த குறையை கேட்டு, அதற்க்கு நியாயப்படுத்தும் காரணங்கள் சொல்லிக்கொண்டு இருப்பவனும் உருப்பட வாய்ப்பு இல்லைதான்.

மீண்டும் அடிப்படை தலைப்பு: பிரச்னை என்றால் என்ன? ஓர் வரையறை

of course..likewise..comparatively

ஒரு அழைப்பு கொடுத்த மற்றவர் வீட்டு விசேஷத்துக்கு மெனெக்கட்டு போய், குறையாய் சொல்லி வருவது சென்றவர் தான் பிரச்னை கொண்டு செல்கிறார் என்று பொருள்.

ஏன்?

ராவணன் என்ற ஒரு நூல். இராமச்சந்திரன் தொகுதி 3ல், கன்னியாகுமரி என்று கருதப்பட்ட ஒரு பெண்ணிடம் தர்மம் என்பது சிக்கல் நிறைந்தது என்று ஒரு சம்பாஷணை, ராவணனுடன் பேசுவாள்.

அந்த சம்பாஷணையின் ஆர்வம் உள்ளவர்கள் அந்த நூலை வாங்கி படிக்கலாம்.

இங்கே தர்மம் என்பது, பிச்சைக்காரர்களுக்கு தர்மம் செய்வதால் நன்மை என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது.

அன்னதானம், கோவில் பணிக்கு உதவுவது போன்ற செயல்கள், தர்மம் நிறைந்த செயல் என்று கருதப்படுகிறது.

ஒருவர் தனது குடும்பத்துக்கு, லட்சக்கணக்கில் செலவு செய்து சுப காரியங்கள் செய்யும் பொழுது, அந்நபர் ஒரு கோடி குறை நிறைந்தவராக இருந்தாலும், நமக்கு பிடிக்கவில்லை என்றால், போகாமல் இருப்பது மாபெரும் தர்ம செயலாக கருதலாம்.

கோவில் பனி, அன்னதானம் போன்ற தர்ம காரியத்துக்கு இணையான செயல் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஏன் இப்படி குறை சொல்ல தோன்றுகிறது? குறையின் மனோவியல் பின்னணி என்னவாக இருக்கும்? குறை சொல்லுபவரின் மனம் அதன் மனோவியல் பின்னணி நோக்கம் எதுவாக இருக்கலாம்?

விஞ்ஞான ரீதியாக ஆராய்வோம், அடுத்த தொடர்களில். அப்படியென்றால், நான் எனது திருமண காலத்துக்கு முன் போக வேண்டும். இருந்தாலும் இது மாபெரும் மனத்தெளிவை தருகிறது.

ஒரு சின்ன குளூ. ஒவ்வொரு அனுபவ கதைகளை எழுதி நானே சரியானவன், நியாயம் நிறைந்தவன் என்று கூறினால் அது ஒரு பைத்தியக்காரத்தனமாக அமையும்.

அப்படி எல்லாம் உலகத்தில், தானே சரியாக இருக்க ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியம் இல்லை.

ஆங்கிலத்தில், “possessiveness” என்று சொல்லப்படும் மனப்பான்மை , எல்லாவற்றிலும் எல்லையற்ற, உரிமை கொண்டாடுவதில் பிரச்சனைக்கு மூலகாரணமாக கூட இருக்கலாம். பல பிரச்சனைகளுக்கு வித்திடலாம்.

******

இப்பக்கம் நிறைய எழுதி விட்டதால், இன்னும் உண்மையான அனுபவங்களுடன், பிரச்னையை ஆராய்வோம். பல உதாரணங்களுடன் ஆராய்வோம்.

ஒரு வகையில் நேரம் விரயமாக இதை எழுதுவதில் தெரிந்தாலும், மற்றொரு புறம் மனம் தெளிவடைகிறது.

அது மட்டும் அல்ல, ஒவ்வொரு பிரச்சனைகளிலும் பின்னணி நோக்கம் என்னவாக இருக்கலாம் என்று ஒரு புரிதல் கிடைக்கிறது.

சில இடங்களில் நானும் தவறு செய்துள்ளேன் என்றும் ஆழ்ந்த புரிதல் கிடைக்கிறது. இன்னும் எழுதுகிறேன், இன்னும் வரும்….

இப்படிக்கு

MKP பாண்டுரெங்கன்

இன்னும் வரும் ..

பிரச்னை நான் கொண்டு வருகிறேனா-2: எது மூல காரணம்?