மேலமருங்கூர் பற்றி எனது சுய கண்ணோட்டம்
நமது புரிதலை ஒரு ஆராய்தல்
ஒரு சினிமாவில் ஆர்யா மனித மிருகம் பற்றி பேசியது பல முறை வாட்ஸப் குழுவில் பகிர்ந்தது தெரிந்ததே. ஆர்யா பேசியதில் ஒரு குற்றம் கண்டேன். அதை பகிர்ந்து கொள்கிறேன்.
ஆர்யா ஒரு பகுதி மட்டும் சொன்னது முழுமையற்றது என்பது எனது வாதம்.
நாமெல்லாம் ஒரு வகை மிருகம், யோசிக்க தெரிந்த மிருகம் என்று கூறினார். அப்புறம் ஏன் ஒரு சிலரை அவன் மனிதனே இல்லை, மிருகம் என்று கூறுகிறோம்?
அப்படியானால் மிருகத்துக்கு என்று ஒரு தனிப்பட்ட நடத்தை அல்லது குணம் இருக்க வேண்டும் அல்லவா?
டெல்லி கிரைம் என்ற ஒரு சீரியல். அதில் ஒரு பெண்ணை ஆண்கள் எப்படி இரும்பு ஆயுதத்தை பயன் படுத்தி சின்னா பின்னமாக்கினார்கள் என்பது ஆரம்பத்தில் வந்தது. படம் பார்க்க நேரம் இன்மையால் தொடரவில்லை.
இந்த ஆண்கள் மிருகமாக நடந்தனர் என்று கூறுகிறோம். கண்டிப்பாக மனிதனுக்கும் மிருகத்துக்கும் ஒரு வேற்றுமை இருக்கிறது. இருக்கத்தான் செய்கிறது.
சமுதாயம். சமூக அமைப்பு என்றால் என்ன-ஒரு புரிதல்
நாம் பல வகை இயந்திரங்கள் பார்த்திருப்போம், அதில் நாம் கற்க வேண்டியது, ஒரு உதாரணமாக பிளாஸ்டிக் இயந்திரத்தை எடுத்துக்கொள்வோம். நாம் கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் விளங்கும். அந்த இயந்திரத்தின் அச்சு மனித ஆச்சு என்றால் மனித பொம்மையும், மிருக அச்சு என்றால் மிருக பொம்மையும் வெளிவரும்.
சமுதாயம் என்பதும் ஒரு இயந்திரமே. மேலமருங்கூர் எந்த மாதிரி அச்சு என்று தெரிய நாம் மக்களின் குணங்களை, நடத்தைகளை படித்தால் போதும்.
நம்மை வார்த்து எடுக்கும் அச்சு, நம்மை பெற்றவர்கள், வளரும் இடம் , பள்ளி, நண்பர்கள், போன்றவைகள் தான்.
ஒழுக்க நெறி
புராணங்கள் பலவித ஒழுக்க நெறியை புகட்டியது. ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு கதை உண்டு. பாண்டவர்கள் யாகம் செய்துவிட்டு மீத தங்கத்தை எடுத்து செல்ல வில்லை. மறு வருடம் அதே யாகம் செய்ய வேண்டியதால் அப்படியே போட்டுவிட்டு சென்றனர். மறு வருடம் தங்கம் அப்படியே இருந்தது.
அந்த நேரத்து மக்களின் ஒழுக்க நெறி அப்படி. எனது பொருள் இல்லை என்றால் அதை தொட மாட்டேன் என்பது அந்நேரத்து ஒழுக்கம்.
ஒரு பர்மா வியாபாரி எங்களுக்கு தர வேண்டிய பணத்தை எங்கள் இடம் வர சிரமப்பட்டு, ஈப்போவில் ஒரு வியாபாரியிடம் கொடுத்துவிட்டார். எங்கள் வியாபாரியிடம் ஒரு வாரம் கழித்து என்று வாங்கினோம். அந்த ஈப்போ வியாபாரி எங்கள் பணத்தை சற்று நுகர்ந்து கூட பார்க்கவில்லை.
இதை வேறு விதத்தில் சொல்வதென்றால், ஈப்போ வியாபாரியிடம் தினம் தினம் நடு ஜாமத்தில் எழுப்பி எங்கே எங்கள் பணம் என்று கேட்டால், அவர் தூக்கம் களைந்ததால் ஆத்திரப்படுவார், அனால் பணம் இருப்பதை அவர் காட்ட தயங்க மாட்டார்.
அவருக்கு சொந்தம் இல்லாத பணம் அவர் தொட, நுகர்ந்து கூட பார்க்க மாட்டார்.
இதுவே சமுதாயத்தில், நேர்மை, நாணயம், ஒழுங்கு என்றெல்லாம் பெயர் வைத்துள்ளனர்.
அபிப்பிராயம், கருத்து சொல்வது பற்றி ஒரு புரிதல்
மருங்கூரில் வசூல் செய்யும் ரசீது புத்தகம் வாங்கி இன்னும் பணம் செலுத்தாமல் இருப்பவர்களிடம் ஜாமத்தில் எங்கே பணம் என்று கேட்டால் ஈப்போ வியாபாரியை போல் பணத்தை எத்தனை பேர் காட்ட இயலும்?
ஒருவர் சம்பளம் போட்டவுடன் செலுத்தி விட போகிறேன் என்று ஆறுதல் கூறியது வெளிநாட்டில் வாழ்பவர்கள் நிச்சயமாக மதிக்கமாட்டார்கள்.
எனது ஊரில், நான் பிறந்த ஊரில் இப்படி நடக்கிறது என்றால் என் மதிப்பும் தொலைந்து போய்விடும். மதிப்பை சம்பாத்தியம் செய்ய 40 வருடம் தேவைப்பட்டது. துளைக்க சில நிமிடங்கள் போதும்.
என்னிடம் கோவிலுக்கு, முக்கியமாக என்னை நம்பி ஒரு தொகை கொடுத்தால், 2020 ஜூலை மாதத்தில் கொடுத்து முடிக்க வேண்டிய தொகையை, இன்று 2021ல் ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் கும்பாபிஷகத்துக்கு இன்னும் நான் கொடுக்கவில்லை. எனக்கு சம்பளம் போட்டவுடன் கொடுத்து விடுவேன் என்றால், என்னை காரி துப்பவும் தயங்க மாட்டார்கள்.
செட்டியார் நினைத்தால் முழு கோவிலும்-பாலாலயத்தில் உறுதி யளித்த எத்தனை பேர் இன்று பொறுப்புடன் இருக்கின்றனர்?
செட்டியார் நினைத்தால் முழு கோவிலும் கட்டிவிடலாம் என்று அபிப்பிராயம் அல்லது கருத்து சொல்வதில் என்ன பிரயோஜனம்?
நானே முழு பணமும் போட்டு கோவில் காட்டும் ஆற்றல் கடவுள் கொடுத்ததுக்கு நான் நன்றி சொல்லலாம்.
ஆற்றல் கொடுத்த கடவுளே வந்து என்னை கட்டு என்று உத்தரவு போட்டாலும் நான் கட்டுவேனா? பாலாலயத்தில் உறுதி யளித்த எத்தனை பேர் இன்று பொறுப்புடன் இருக்கின்றனர்?
எனது தந்தையார், எனக்கு மேலமருங்கூர் கோவில் செல்வதின் அவசியம் கற்பிக்கவில்லை. நானும் என் பிள்ளைகளிடம் கற்பிப்பேனா?
செய்துவிட்டு சொல்லிகாண்பிப்பது அதை விட கேவலம் வேறு எதுவும் இல்லை என்று அபிப்பிராயம் அல்லது கருத்து சொல்லி மட்டும் விட்டால் போதுமா?
தண்ணிய போட்டால் ஆயிரம் அபிப்பிராயமும், கருத்துக்களும் வரும். வந்து என்ன பிரயோஜனம்?
களப்பணியில் எத்தனை பேர் ஈடுபடுகின்றனர்?
முன்னுதாரணமாக முன் வந்து செய்து காண்பிக்க முடியவில்லையா?
செய்து விட்டு சொல்லிகாண்பிக்காமல் முன்னுதாரணமாக செயல் படும் நபர்கள் வேண்டுமே தவிர கருத்துக்களும் அபிப்பிபிராயங்களும் பிரயோஜனமற்றது. உலகத்தில் மிக கேவலமான மலிவாக கிடைப்பது கருத்துக்களும் அபிப்பிராயங்களும்தான் என்று நான் கூறவில்லை. மனம் தரும் பணம் எழுதிய ஆசிரியர் கூறுகிறார்.
மதிப்பை சம்பாதிப்பதா? அதுவா வருமா? மிரட்டி பறிப்பதா? ஒரு புரிதல்
எனக்கு கிராமம் பற்றி தெரியாது. என் தந்தையார் பல தகவல் கூறுவார்.
அதில் ஒரு தகவல், கிராமத்தில் சிலர் துண்டை இடுப்பில் அணிய வேண்டும், சட்டை போடக்கூடாது, செருப்பு போடக்கூடாது போன்ற தடைகள் இருக்குமாம்.
“என் முன்னே நீ செருப்பு போடடக்கூடாது, மேல் ஆடை அணியக்கூடாது-மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் உருவாகவில்லை என்று பொருள்”
இது போன்ற நிறைய பெரியார் சம்பந்தப்பட்ட யு டியூபில் பார்த்ததுண்டு.
சமீபத்தில் மேலமருங்கூரில் ஒரு பெண்மணி செருப்பு போட்டு நடக்க மகளிர் போராட்டம் செய்து பெற்றதாக கூறினார்.
இதைத்தான் மிருகத்தனம் என்று கூறுகிறேன். நான் செருப்பு போடுவதற்கு நீ எவண்டா சட்டம் போடுவது என்று கேட்காமல், போராட்டமா? இது உரிமை கூட கிடையாது. இது ஒரு அடிப்படை.
கணவன் இறந்ததும் மனைவியை உ டன் கட்டை ஏறுவது, குறிப்பிட்ட சமூகம் மேலாடை அணிய கூடாது போன்ற சட்டம் நீ எவண்டா போடுவது, நான் ஏனடா கேட்க வேண்டும் என்று கேட்கும் காலத்தில் அல்லவா வாழ்கிறோம்?
சர்வ சுதந்திரம் என்றால் என்ன வென்று தெரியுமாடா பொறுக்கி ராஸ்கல் என்று கேட்க வேண்டிய மகளிர் போராடி பெறுவதா?
ஒவ்வொரு மனிதனுக்கும் தண்ணி தவிக்கும், பசிக்கும், வெறும் காலில் நடந்தால் சுடும். நமது முன்னோர்கள் முட்டாள்தனமான, மிருகத்தனமான கலாச்சாரத்தை பின்பற்றியதை, அதை கடைபிடித்து என் காலத்தில் அந்த பெண்மணி கூறியது அருவருக்க வைக்கிறது.
இது போன்ற ஆதிக்கத்தை விரட்டி அடிக்காமல் இருந்ததுதான் 36 ஆண்டுகள் ஒரு மராமத்து கூட பார்க்கமுடியவில்லை.
ஜாதி, அதிகாரம், பதவி, பணம் இவைகளை வைத்து ஆதிக்கம் செய்பவர்களை எதை வைத்து அடித்து விரட்டினாலும் தவறு இல்லை.
மதிப்பு என்பது சம்பாதிக்க வேண்டியவை. ஆதிக்கம், அந்தஸ்து வைத்து பெறலாம். தற்காலிகமாக, அதிகாரம் இருக்கும் வரை, பணம் இருக்கும் வரை மற்றவர்கள் அச்சத்தில் நம்மை மதிப்பது போல் நடிக்கலாம். உண்மை மதிப்பை பெற முடியாது என்பது எத்தனை பேருக்கு புரியும்?
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண...
கன்னடத்துக் குடகமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
ஏர் வீழ்ச்சி காணாமல் இருக்கச்
சிவசமுத்திர நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்
வண்ணம்பாடி ஒரு வளர்தென்றல் தாலாட்டக்
கண்ணம்பாடி அணை கடந்து நலம்பாடி
ஆடதாண்டும் காவிரிப் பேர் பெற்று
அகண்ட காவிரியாய் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து
தஞ்சை வளநாட்டைத் தாயாகிக் காப்பவளாம்
தனிக் கருணைக் காவிரி போல்
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கிப் பேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளை என நாளும் பேச வந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக்கனி
எங்கள் இதயக்கனி இதயக்கனி
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
நீங்க நெச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே
என்றும் நல்லவங்க எலலோரும் உங்க பின்னாலே
நீங்க நெச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
என்ன வழி என்று எண்ணிப் பாடுங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
இந்த நாடெங்கும் இல்லாமை இல்லை என்றாக
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்
நாம் பாடுபட்டுச் சேர்த்த பொருளை கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
அமைதி என்றும் இல்லை
நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
பொதுவில் இருக்குது
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கெடக்குது
காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் இருக்குது
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கெடக்குது
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதன் இதயமே
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதன் இதயமே
உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே
அமைதி நிலவுமே
நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
கடலைப் போல விரிந்த இதயம் இருந்திடவேண்டும்
வானம் போலப் பிறருக்காக அழுதிடவேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்
விளங்கிட வேண்டும்
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
டாடா, பிர்லா, அம்பானி போன்றவர்கள் பணம் சம்பாதித்து மதிப்பை பெற்றனர். பிச்சைக்காரர்களாகிய புத்தர், ஹரே கிருஷ்ணா ஸ்தாபகர் பிரபுபாதா ஆன்மீக ரீதியாக மதிப்பை சம்பாதித்தனர்.
ஹென்றி போர்ட் வாகன உற்பத்தியாளரின் பேரன் இன்றும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் பணத்தை இறைக்கிறார். பெரிய சீடர்.
மற்றவன் முயற்சியில் கட்டும் கோவிலுக்கு நாற்காலிக்கு சண்டை போட்டு மதிப்பை பறிப்பது மதிப்பு இல்லை.
கிணற்று தவளை போல் ஒரு கிணற்றில் இருந்து கொண்டு எனக்கே மதிப்பு வேண்டும், நானே தலைவன். நான் வேண்டும் என்றால் எனக்கு இந்த பதவி வேண்டும் என்றால் அதன் பொருள் நானா நீனா என்ற கோட்பாடை, அந்த கிணற்றை தாண்ட முடியவில்லை என்று பொருள்.
நான் என் பிறந்தேன், நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்?
நான் சமூகத்துக்கு என்ன செய்தேன்? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு நான் கொடுத்தேன்?
என்னால் மற்றவர்களுக்கு என்ன பலன்? இது போன்ற கேள்விகளுக்கு உள்ள பதிலை வைத்துதான் எனது மதிப்பு உயரும்.
வெறும் என்னை மதி என்று பிட்சை எடுப்பதால் எனது மதிப்பு, உண்மையான மதிப்பு உயராது.
இன்று அத்தனை வியாபாரிக்கு பதில் சொல்லவேண்டியது எனது கடமை.
கோவிலுக்கு அதிக பணம் போட்டவன் நான். நான் கமிட்டீ ஆரம்பிக்க மோகன் சார் மகனிடம் சொன்னேன். அந்த பையன், பல லட்சம் செலவாகும் என்று கூறியது. நானும் அப்படியே நம்பிவிட்டேன்.
கமிட்டீ, ட்ரஸ்ட்டி, சம்பந்தமாக மோகன் சார் மகனிடம் சொன்ன பிறகு அது பற்றி யாரும், எந்த பெரியவரும் என்னை தொடர்பு கொண்டு என்ன என்று கூட கேட்க வில்லை, கேட்க முன்வரவில்லை.
கண்ட கண்ட வியாபாரிகளிடம் வசூல் செய்து மு கி பாலுச்சாமி செட்டியார் மாதிரி பணத்தை மருங்கூர் மக்களிடம் பணத்தை கொடுத்து விட்டு நான் போய் தொலைந்து இருக்கலாமே என்று நினைத்தார்களோ?
இன்ஸ்டால்மெண்டாக காட்டுவார்களா என்று நக்கல் அடிக்கின்றனர்
மேலமருங்கூர் மக்கள் எத்தனை ஐடியா கொடுத்தனர்?
ராமர் கோவில் கட்ட 1000 கோடி திட்டம் போட்டனர். வெப்சைட் மூலம் வசூல் 2001 கோடி வந்து விட்டது.
நமது மருங்கூரில் ஏன் சின்ன ஊரில் கமிட்டி? தேவையா? ஏன் மற்றவருக்கு முதல் மரியாதை?
தன்னால் செயல் படவும் முடியாது,தகுதியும் கிடையாது.
செய்பவனயும் செயல் பட வைக்கும் மனமும், திறமையும் கிடையாது.
இதுபோன்ற தகுதி இருந்தால் எனது அப்பவே பொருளாதார ரீதியாக சரி செய்து வைத்து இருந்து இருப்பார். நான் 36 வருடம் சென்று தேவைப்பட்டு இருக்க மாட்டேன். 13 வருடம் ஒரு முறை கும்பாபிஷேகம் நடந்து இருக்கும்.
அன்று கல்வி கற்றவர் இல்லை. இன்றும் அப்படியா?
இந்நாட்டில், என் ஊர் கதை சொன்னால், கோவில் கட்டும்போது பணம் கொடுக்காமல், வசூல் தொகையை 10, 15 வருடம் இன்ஸ்டால்மெண்டாக காட்டுவார்களா என்று நக்கல் அடிக்கின்றனர்.
ஊர் மக்கள் ஒன்று கூடி ஒரு நபரை நியமிக்கும் தகுதி மேல மருங்கூருக்கு இருக்கிறதா?
சரி, அப்படியே பணத்தை மட்டும் கொடுக்கிறேன் என்று சொல்லியிருந்தால், அந்த பணத்தை வாங்கும் தகுதி எனக்கு தான் உண்டு, உனக்கு இல்லை என்று அடித்துக்கொள்ள மாட்டார்களா? பணம் வாங்கும் தகுதி ஊர் மக்கள் ஒன்று கூடி ஒரு நபரை நியமிக்கும் தகுதி மேல மருங்கூருக்கு இருக்கிறதா? அது இருந்தால் பிள்ளையார் என்னை அழைத்து இருக்க மாட்டாரே.
ஒரு புளிய மரத்துக்கே அருவாள் வெட்டு சண்டை நடந்த ஊர்தானே நமது மேல மருங்கூர்.
பிறகு மற்றவர்களிடம் விசாரித்ததில் சில ஆயிரங்கள் தான் வந்தது.
இன்று கமிட்டி யும் அமைத்தாகிவிட்டது.
இன்று கமிட்டீ பவர் என்ன என்று போலீஸ் ஸ்டேஷனில் தெரிந்தும் விட்டது.
ஐயா பாலகிருஷ்ணன் என்னிடம் கூறினார், “உங்கள் தம்பி காவல் உதவியோடு செயல்படப்போகிறாராமே? எனக்கு சொந்தத்தில் போலீஸ் வக்கீல் இருக்கிறார்கள்…”
பிரதமர் மோடி எனக்கு பெரியம்மா மகன்தான். இரத்த உறவுதான். மக்கள் வரி மூலம் கிடைக்கும் சம்பளத்தை வாங்கி செயல்படும் எனது இரத்த உறவான பிரதமர், எனது கௌரவ இச்சை, பதவி இச்சை தீர்க்க உதவ மாட்டார்.
இரத்த உறவு வேறு, போலீஸின் கடமை என்ன என்று கூட புரியாமல் தனது இச்சையை எந்த வழியிலும் தீர்த்துக்கொள்ள தயாராகி விட்டார் ஐயா பாலகிருஷ்ணன் .
ஐயா பாலகிருஷ்ணன் கோவில் கட்ட சொல்லிவிட்டு, அவர் பதவியை மட்டும் அபகரிக்க திட்டம் போட்டாரோ?
போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செய்ய கூடிய நபர்களை எக்காரணம் கொண்டும் நம்பலாமா? கமிட்டி அமைக்காவிட்டிருந்தால் கண்டிப்பாக எனது தந்தையாருக்கு நடந்தது போல் தான் இருந்து இருக்கும்.
தந்தையருக்கு மரியாதை இல்லை என்பது எனக்கு வருத்தம் இல்லை. அவர் கட்டிய கோவில் பாழடைந்து போனது.
எனக்கு மரியாதை உனக்கு மரியாதை என்ற போர்வையில், கோவில் பாலானது. என்னை செல்வ விநாயகர் தான் இயக்குகிறார். நான் முதல் முதல் மேலமரங்கூர் கோவில் கட்ட ஒத்துக்கொண்ட போது, கமிட்டி பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
இன்று கமிட்டி தான் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. அப்பா காலத்தில், அன்று இது போன்ற பெரிய வியாபாரிகள் நன்கொடை கொடுக்கவும் இல்லை.
இன்று அத்தனை வியாபாரிக்கு பதில் சொல்லவேண்டியது எனது கடமை.
“ஏப்பா, உன்னை நம்பி தானே பணம் கொடுத்தோம். உன் ஊர் காரர்களை நம்பியா கொடுத்தோம். உனது ஊரில் பல பல லட்சம் போட்டவர்கள் கோவில் கட்டுவதில் ஆர்வமாக உள்ளனர்.
வசூல் புத்தகம் வாங்கி பதில் சொல்லாதவர்களும், 40 லட்சம் ரூபாய் கோவிலில் 1 1/2 % அதாவது ரூபாய் 60000 கூட போட தகுதி இல்லாதவர்கள் போலீசில் புகார், போன்ற பிரச்னை என்கிறாயே.
வசூல் எங்களிடம் செய்யும் முன்னே உனக்கு அறிவு வேண்டாமா? உனக்கு கோவிலை வழிநடத்த திறமை இல்லாவிட்டால் உன் வேலையே பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டியதுதானே.
முன்பு உனது அப்பா பணம் மட்டும். கோவில் பாழடைவதில் எங்களுக்கு கவலை இல்லை. இன்று எங்கள் பணம். பதில் செல்லப்பா.”
இது போன்ற கேள்விகளுக்கு நான் அல்லவா பதில் சொல்ல வேண்டும்? இந்த கேள்வியை பாலாலயத்தில் கையெழுத்து போட்டவர்களிடம் தான் நான் கேட்கலாம்.
மேலமருங்கூரை நம்பலாமா? இதுதான் எனது கேள்வி.
பிள்ளையார் தான் மையம். மையம் இல்லாவிட்டால் ஒத்தை காசு கூட நான் கொடுத்துஇருக்க மாட்டேன்.
ஐயா பாலகிருஷ்ணன் மையத்தை காட்டி, சுயநலத்துக்கு செயல்பட்டுஇருப்பாரோ? என் அந்த 8 நபர்கள் பெயரை இவரின் கிரிமினல் திட்டத்தில் சேர்த்துக்கொண்டார்? தீ இல்லாமல் புகையாது என்பார்கள்.
என்னை வைத்து ஆடு புலியாட்டம் ஆடுகிறார்களோ?
இப்படி பல கேள்விகள். விடை காண வேலை செய்தால் எனது தொழில் சம்பந்த வேலைகள் போய்விடும். விடை காண்பதும் ஒரு உருப்படாத, விளங்காதனமான வேலை என்றே கருதுகிறேன்.
அறிவுள்ளவன் , நாணயம் உள்ளவன் , நேர்மையாக இருப்பவன் பாலாலயத்தில், நாங்கள் ஒன்று சேர மாட்டோம், வசூல் புத்தகம் வேண்டாம், எங்கள் ஊர் காரர்களை நம்பி வசூல் செய்ய மாட்டோம் என்று கூறி இருப்பார்கள்.
ஒருவர் எங்கள் குடும்பத்தில் பணம் கொடுக்க சொன்னதால் கொடுக்கிறோம். கோவில் வேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே?
ஒன்று கூடி வேண்டாம் என்பது மிக சுலபமான விஷயம்.
அனால் இன்று களப்பணிக்கு ஆள் இல்லை.
தீ இல்லாமல் புகையாது – என் மன உறுத்தல்
ஐயரிடம் 8 பேர் போனதாக பாலகிருஷ்ணன் கூறினார். போலீஸிடம் 8 பேர் கையெழுத்து போட்டு கொடுத்தனர்.
சில காலம் முன்பு எனது பணியாளர் ஒரு தையல் இயந்திரம் கடனுக்கு என் பெயரை பயன்படுத்தி வாங்கி சென்று, என்னிடமிருந்து விலகி விட்டான்.
தையல் நிறுவனம் என்னை கேட்டது. என்னை கேட்டு கொடுத்தாயா என்று கடுமையாக பேசினேன்.
அனால் போலீஸிற்கும், ஐயரிடமும் நான் போகவில்லை என்று கூறும் நபர்கள், பாலகிருஷ்ணன் உண்மையில் பொய் கையெழுத்து போட்டு இருந்தால், இவர்களின் ஒப்புதல் இல்லாமல் செய்து இருந்தால், குழுவில் நாரவைக்க வில்லை. ஏன்?
அனால் கேசவன் சார், கமிட்டியை குற்றம் சாத்தினார். ஏன் பாலக்ரிஷ்ணனை கடுமையாக விமர்சிக்கவில்லை?
உண்மை என்ன? பார்த்திபன் சார் உண்மை பேசவில்லையே?
பதவிகள் கேட்டுவிட்டால் தகுதி உள்ளது என்று அர்த்தமா?
நானும் எனது தம்பியும் சற்று முன் கணக்கு செய்தோம். நம்மூர் காமாச்சி ரூபாய் 20000/- என்றால். 4000000 ருபாய் கோவிலுக்கு அந்த அம்மா 1/2 % முதலீடு செய்துள்ளது.
பதவி கேட்கும் முன் என்ன தகுதி வசூல் மற்றும் முதலீடு சம்பந்த தகுதி உள்ளது என்று பரிசீலிக்க வேண்டாமா?
பார்த்திபன் சார் நீங்கள் கணக்கு கொடுங்கள், நான் தனி நபர் சதவிகிதம் போட்டு தருகிறேன்.
ஆம் நான் மு கி பாலுசாமி செட்டியார் இல்லை. என் பெயர் பாண்டுரங்கன்.
இப்படிக்கு
MKP பாண்டுரங்கன்