புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 4

புரிதலும் அதன் அவசியமும் 4……..

27 1 2021 அன்று இரவில் ஸ்ரீ செல்வ விநாயகர் வாட்சப் குழுவில் நம்பிக்கை சம்பந்தமாக சில விஷயங்கள் பேசினேன்.

உடனே தம்பி சிவஞானம் என்னிடம் சில விபரம் கேட்டார். முழுமையாக அவருக்கு தெளிவு என்னால் கொடுக்கப்படவில்லை என்பது மட்டும் புரிந்து கொண்டேன்.

நம்பிக்கையும் நேர்மையும் பகுதி 1

So…

பிள்ளையார் கோவில் கட்டிக்கொடுங்கள் என்று கேட்டு பிள்ளையார் சுழி போட்டது ஐயா பாலகிருஷ்ணன் அவர்கள். அவர் கேட்டுக்கொண்டதை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்ந்தன.

இன்று அதே ஐயா பாலகிருஷ்ணன் அவர்கள், என்னை, அதாவது என்னிடம் மட்டும், அல்லது செட்டியார் குடும்பம் வந்தால் மட்டும் அவர் ஒப்புக்கொண்ட தொகை கொடுப்பேன் என்கிறார். நம்பகமான நபர் யாரும் அந்த கிராமத்தில் இல்லை என்று உணர்கிறார்.

நம்பகமான நபர் அந்த ஊரில் இல்லை என்று தெரிந்தும், பின் எதற்காக மலேசியாவில் இருக்கும் என்னை கோவில் கட்ட கேட்டுக்கொண்டார்?

அவரின் பணம் மட்டும் உயர்மதிப்பானது, எனது பணம், நான் வசூலித்த வியாபாரிகளின் பணம் மதிப்பற்றதா? உழைக்காமல் வந்த பணமா?

நான் முதல், முதல் ஒரு மதுரையை சேர்ந்த என்ஜினீயர் அறிமுகம் செய்யும் பொது பல உறவினர்களை விசாரித்து நல்ல நாணயமானவரா என்று தீர்மானிக்க அனுப்பினேன்.

ஆனால் அவர், ஐயா பாலகிருஷ்ணன் அவர்கள் பேசிய ரூபாய் 50000/= செலுத்த நம்பிக்கையான நபர் இல்லாத ஊரில், என்னை கோவில் கட்டி கொடுக்க சொன்னதில் என்ன நியாயம் இருக்கிறது?

எனது தொகையும், நான் வசூலித்த தொகையும் சேர்த்து, தொகை போல 16 மடங்கு. என்னை பின்பற்றி வந்த மருமகள் தொகையும் சேர்த்தால் எத்தனை மடங்கு என்று கணக்கு செய்ய நேரம் இல்லை.

நாங்கள் ஒரு புது வாடிக்கையாளருக்கு கடன் கொடுக்கலாமா, என்று சக வியாபாரிகளிடம் கேட்போம். அவர் வரவு செலவு செய்து இருந்தால்..

அதாவது அவர் அந்த வாடிக்கையாளருக்கு கடன் கொடுத்து இருந்தால் எங்களை (அதாவது அவர் அந்த வாடிக்கையாளரை நம்பினால் மட்டுமே) கொடுக்கலாம் என்பார்.

அவர் நம்பவில்லை என்றாலோ, அவர் எனக்கு தெரியாது என்று கூறிவிடுவார். அவர் நம்பாத வாடிக்கைக்கு அவர் ரெக்கோம்மெண்ட் செய்ய மாட்டார்.

ஐயா பாலகிருஷ்ணன் அவர்களே நம்பாத ஊர்மக்களை நம்பி என்னை கோவில் கட்ட சொன்னது, எந்த வகையில் நியாயமானது என்பது எனக்கு தெரியவில்லை.

நம்பிக்கையும் நேர்மையும் பகுதி 2

Thus…

காமாச்சி என்ற அம்மணி நான் முதல் முதல் சேலை அந்த ஊருக்கு கொடுத்தபொழுது மேற்கொண்டு ஒரு சேலை வேண்டும் என்று சத்தமாக பேசி பிரச்னை செய்தார்.

அவர் செய்தது சற்று எனக்குகோபம் இருந்தது உண்மைதான். ஆனால், அவரிடம் ஒரு நேர்மை இருக்கிறது என்பதை மறுக்கவும் முடியவில்லை.

மோகன் சார் மொத்த வீடுகளை கணக்கு எடுத்து, நான் விரும்பியபடி வீட்டுக்கு ஒரு சேலை என்று கொடுக்க ஏற்பாட்டு உதவிகள் செய்தார்.
ஆனால் சேலை பற்றாக்குறையாகி விட்டது.

கண்டிப்பாக கணக்குப்பிள்ளை மகன் கணக்கில் கோட்டை விட வாய்ப்பு கடுகளவும் இல்லைதான்.

எப்படி பற்றவில்லை என்று ஆராய்ந்தால், அதாவது ரூபாய் 200-300 சேலையைப்பற்றி ஆராய முடிவு செய்தால், காமாச்சி அம்மனியிடம் கேட்டால் பல பல உண்மை தெரிந்துவிடும்.

மிக மிக சுலபமாக யூகித்து புரிய வருவது, யார் வீட்டுக்கோ ஒன்றுக்கு மேற்பட்ட சேலை போய் இருக்க வேண்டும்.

சரி, வெறும் ரூபாய் 200 – 300 மதிப்பு, ஆகையால் புறக்கணித்து விடலாம். ஒரு வேலை வீட்டுக்கு ஒரு வெள்ளி அல்லது தங்கம் என்று கொடுக்க நினைத்தால், என்ன ஆகும்?

நம்பிக்கையும், நேர்மையும் எந்த வித பாத்திரத்தில் (Role/Character) செயல் படுகிறது என்பது இதை படிப்பவர்களுக்கு புரிந்து விட்டால் நான் இதை எழுதியது வெற்றி என்று கருதுவேன்.

ஒரு உதாரணம், நான் ஒரு வீட்டுக்கு ஒரு சேலை என்று நிர்ணயித்தேன். யாரவது ஒரு நபர் வந்து, ஐயா மேற்கொண்டு 3 சேலை கொடுங்கள் ஐயா.

இந்த கிராமத்தில் 3 வீட்டில் மட்டும் மேற்கொண்டு இரு பெண்கள் உள்ளனர் என்று சொல்லி புரிய வைத்து கேட்டு வாங்குவது நேர்மையான செயல் என்று பெயர்.

பார்த்திபன் பல தடவை அன்னதானம் செய்யும் போது, எனது எண்ணிக்கையை விட சற்று சேர்த்தே சொல்லி கேட்பார். நான் 50 நபர் என்றால், அவர் 60 அல்லது 100 என்பார்.

அதன் பெயர் நேர்மை. அதிக பட்சம் நான் முடியாது என்று கூறுவேன். அப்படி நடந்தது இல்லை.

எவனுக்கு கிடைத்தால் என்ன எந்த வீட்டுக்கு கிடைக்காமல் போனால் எனக்கு என்ன? வரிசையில் என் வீட்டு 3 பெண்களை நிற்க விட்டு, உல்லூரில் எவனும் என்னை காட்டிக்கொடுக்க முடியாது, ஆக எனது வீட்டு எல்லா பெண்களும் சேலைகளை வாங்கிக்கொள்வோம் என்ற நோக்கம் இருப்பது, கொடுப்பவர் மூழ்கி விடப்போவது இல்லை.

அப்படி வாங்குபவர் மீது ஒரு மதிப்பும் நம்பிக்கையும் வராது. சுயநலத்தை அடிப்படையாக வைத்து, மற்றவர் பெறவேண்டியது அவர்கள் பெறமுடியாமல் போனாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தை மையமாக வைத்துக்கொண்டு, – எனக்கு கிடைத்தால் போதும் என்று என்னும், எண்ணி செயல்படும், நபர் கண்டிப்பாக ஒரு தலைவராக இருக்க அருகதையும் தகுதியும் இருக்காது.

அதுதான் சுயநலம் என்று கூறுவார்கள். சுயநலத்தலைவர் என்ற பெயரும் உண்டு.

பொறுப்பான புரிதலும் பொறுப்பற்ற புரிதலும்.

So…

பொறுப்பான புரிதல் பொறுப்பற்ற புரிதல், புரியாதது போல் நடித்தல் (தூங்குபவனை எழுப்பிவிடலாம், தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது) – இப்படி பல வகையில் இருக்கின்றது.

ஒரு தொழிலில், ஒரு கோவிலில் முதலீடு செய்தவர்களுக்குத்தான் அது சம்பந்தமான.  முடிவுகள் எடுக்க தகுதி இருக்கும். ஒன்று முதலீடு செய்து இருக்க வேண்டும். அல்லது பெரிய அளவில் வசூல்செய்து கொடுத்து இருக்க வேண்டும்  இருக்க வேண்டும்.

பள்ளியில் மாணவனுக்கு கல்வியில் உழைப்பை போட்டவன்தான் அதிக மார்க் பெறுகிறான். மாணவன் மார்க் கேட்டான் என்று கொடுக்கப்படுவது இல்லை.

முதலீடு செய்த முதலாளிதான் எப்படி நிர்வகிக்கப்பட வேண்டும் என்று முடிவு எடுப்பார். எப்படி தொழிலாளி உழைப்பை போடுகிறான் என்பதை வைத்துதான், உயர் பதவி கொடுக்கப்படுகிறது.

சரியான, பொறுப்பான முறையில் புரிந்து கொள்ள இயலவில்லை என்றால், அந்நபர் தானே வலிய ஒதுங்கிக்கொள்வதை அல்லது ஒதுக்கிவிடுவது தவிர வேறு வழியில்லை.

Blog-My View எனது பார்வையில்

இப்படிக்கு

MKP பாண்டுரெங்கன்

எனது முகநூல்

Leave a Reply