புரிதல் பற்றிய ஒரு புரிதலும் 2…
இக்கட்டுரை 3-1-2021பிரசுரிக்கப்பட்டது. 25/1/2024ல் மீண்டும் சில வற்றை சேர்த்து மறு பிரசுரம் செய்கிறேன்.
சிவப்பு வர்ணத்தில் உள்ளவைகள் புதிய சேர்த்தல்
நமது எண்ணங்களை கூர்ந்து கவனித்தலின் அவசியம் பற்றி பல வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். தன்னையே அறிய அது உதவும்.
உதாரணம் ஓஷோ சொல்வது போல, நாம் ஈகோ ஏனும் ஆணவத்தை காக்கவே திருடுவது இல்லை.
நான் திருடினால் மற்றவர் நம்மை பற்றி தப்பாக நினைத்து விடுவார்கள் என்ற பயத்தில் 70% மக்கள் திருடுவது இல்லை. சட்டத்துக்கு பயந்து மற்றவர் திருடுவது இல்லை.
திருடுவது தவறு, பாவம் என்றெல்லாம் திருடாமல் இருப்பது 1% மக்கள் கூட தேறாது.
சமீபத்தில் தண்டட்டி எனும் திரையை பார்த்தல் நிறைய புரிய வரும்.
https://youtu.be/djIKKhh_ONg?si=XWOsftWHo_O1IXtD
இன்றய நிலையில், professional திருடு வங்கிகள் செய்வதை, துணிவு எனும் திரையில், ஒரு அரவாணி சொல்லும் விதம் அருமை. அந்த வங்கி அலுவலகர் நியாயப் படுத்தும் விதமும் அருமை. அஜித்திடம் அரை வாங்குவதும் அருமைதான்.
https://youtu.be/jnBZboK17_A?si=1p1rEeorcw0U9cmY
எது சரியான புரிதல்? ஒவ்வொரு சிந்தனை,செயல்கள் சரியான புரிதலில் இருக்கிறேனா?
நுட்பமாக நமது புரிதலை பற்றி ஆழ்ந்து ஆராய்ந்தாள், நாம் நமது வாழ்வின் நோக்கத்தை ஆராய்ந்து, அறிந்து, அதை அடையும் முயற்சி யில் போதிய எண்ணங்கள் போட்டு, நமது எண்ணங்களை வழி நடத்துவதை நாம் செய்வதில்லை என்பது புரிய வரும்.
நமது எண்ணங்களை நாம் நிர்வகிப்பது இல்லை. அதற்குப் பதிலாக, நமது எண்ணங்களை ஆக்கிரமிப்பது, நமது பழைய தேவையற்ற, வாழ்க்கைக்கு உதவாத, மூட நம்பிக்கைகள், அபிப்பிராயங்கள் போன்றவைகளே.
எண்ணங்களை நிர்வகிக்க…
நாம் சரியாக எண்ணங்களை நிர்வகிக்க தெரிந்து விட்டாள், நாம் பல பல நூல்களை, ஆலோசகர்களை, ஞானிகளை, புறக்கணித்து விடலாம்.
எண்ணம் போல் வாழ்வு என்பதை கற்பிக்க எத்தனை நூல்கள்,எத்தனை போதகர்கள்.
எப்படி அறையில் நடந்தது கர்ப்பிணி பெண்ணின் வயிறு காண்பித்து விடுமோ, வாழ்வில் நாம் அனுபவிக்கும் பலன்கள் – ஏழ்மை, செழிப்பம், நட்பு, பகைமை – நாம் ரகசியமாக என்ன எண்ணங்களை உற்பத்தி செய்தோம் என்பதை வெளிப்படுத்திவிடும்.
நமது எண்ணமே எல்லாவற்றையும் உருவாக்கும் என்றால், நாம் உருவாக்கும் எண்ணங்களை உற்பத்தி செய்யும் திறனை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
2021 ஆண்டு பிறக்கும் முன்பே கீழ் கண்ட ஒரு புத்தகத்தை இரு தடவைகள் படித்தேன்.
புரிதல் பற்றிய ஒரு புரிதலும் 2…
இந்த வருடம் முழுவதும் இதை மீண்டும் மீண்டும் படிக்க தீர்மானித்துள்ளேன். இது 1860ல் எழுதப்பட்டது. இன்றய நவீன ஆசிரியர்கள் எளிமை படுத்தி எழுதுகின்றனர்.
“and bear in mind that the only way in which you can assist the world in growing rich is by growing rich yourself through the creative method—not the competitive one.”
― The Science of Getting Rich
இந்நூலை படித்து, அதில் சொன்னதை கடை பிடித்து இரகசியம் என்ற நூல் எழுதி, அந்த ஆசிரியை மாபெரும் புகழ் பெற்றது தெரிந்த விஷயம்.
“the competitive mind is not the creative one.”
― The Science of Getting Rich
செல்வம் என்பது வரதட்சணை மூலம் வர வேண்டும். பூர்விக சொத்து மூலம் வரவேண்டும். அல்லது மற்றவரை ஏமாற்றி பெறவேண்டும். இன்னும் இது போன்ற மூட நம்பிக்கையில் நானும் நிறைய மூழ்கியது உண்டு.
“the competitive mind is not the creative one.”
மேற்கண்ட வாக்கியத்தை ஆழ்ந்து தியானம் செய்து பார்த்தாள், ஆழமான புரிதல் வரும். 1860ல் வாழ்ந்தவர் புரிந்தது நமக்கு புரியவில்லை என்பது புரியவரும்.
தொழிலாக இருந்தாலும், உறவாக இருந்தாலும், பொது சேவையாக இருந்தாலும், நாம் போட்டி மனப்பான்மையில் செயல் படும் போது, நமது வாழ்வில் முன்னேற வாய்ப்பே இல்லை என்பது புரிய வரும்.
“By thought, the thing you want is brought to you; by action you receive it.”
― The Science of Getting Rich
நானும் என் மனைவியும் வாழ்வில் நடந்த ஒவ்வொரு குடும்ப உறவு, தொழில், இன்று கோவில் கட்டும் சேவை போன்ற செயல்களின் வரும் பிரச்சனையை சற்று ஆராய்ந்தால், அந்த பிரகனைகளின் மூல வேர்:
1) ஈகோ
2) போட்டி
3) மற்றவர்களை ஆக்ரமிப்பு செய்வது
ஈகோ
எனக்குதான் மரியாதை, என்னை கவனிக்கவில்லை, என்னை மதிக்கவில்லை, இது போன்று ஆயிரம் உதாரணம் கூறலாம்.
போட்டி
என்னை விட அவள் நல்ல சேலை காட்டியுள்ளார், என்னை விட அவன் பணம் சம்பாதிக்கின்றான்.
மற்றவர்களை ஆக்ரமிப்பு செய்வது
நான் சொல்லும்படி நடக்கவேண்டும், போன்று பல ஆயிரம் உதாரணம் கூறலாம்.
மதங்கள், பழைய சாம்ராஜ்யங்கள் எல்லாம் ஒரு வகை ஆக்ரமிப்புதான். பெரியார் போன்ற போதனைகளை கேட்டால் அக்ரமைப்பு எப்படி இயங்குகிறது என்று புரிய வரும்.