புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 1

புரிதல் பற்றிய புரிதலும் 1

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்

எது சரியான புரிதல்? ஒவ்வொரு சிந்தனை,செயல்கள் சரியான புரிதலில் இருக்கிறேனா?

சில வருடங்களுக்கு முன்பு லங்காவி என்ற தீவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் சார்பாக ஒரு யோகப்பயிற்சியில் கலந்து கொண்டேன். அதில் ஒரு ரஷியாவை சேர்ந்த ஓரி இளம் பெண் என்னை ஒரு வெறுப்புணர்வுடன் பார்த்தும் நடந்தும் கொண்டார்.

அப்பயிற்சி 6 நாட்கள் நடந்தது. இறுதியில் 6வது நாளில் என் தோல் மீது காய் போட்டு படம் எடுத்துக்கொண்டார்.

Krishan Verma Ji Teurapic Yoga Program at Langkawi Island on 31/5/2015 to 6/6/2015
Krishan Verma Ji Teurapic Yoga Program at Langawi Islnd on 31/5/2015 to 6/6/2015
Krishan Verma Ji Theurapic Yoga Program at Langkawi Island on 31/5/2015 to 6/6/2015
Krishan Verma Ji Theurapic Yoga Program at Langkawi Island on 31/5/2015 to 6/6/2015
Krishan Verma Ji Theurapic Yoga Program at Langkawi Island on 31/5/2015 to 6/6/2015

புரிதல் பற்றிய புரிதலும் 1

முதல் நாளில் அவரின் புரிதலிலும், குருஜியின் போதனைக்கு பிறகு வந்த புதலிலும் நிறைய வித்தியாசம் இருந்தது.

என்னிடம் மட்டும் அல்ல நிறைய பேரிடம் அவர் அப்படி வெறுப்புணர்வுடன்தான் நடந்து கொண்டார்.

அந்த 6 நாட்களில் அவர் முகம், நாடு,மொழி,தோற்றம் எதுவும் மாறவில்லை. புரிதல் மட்டும் மாறி விட்டது.

 

துருவ மகாராஜாவின் புரிதல் – ஸ்ரீமத் பாகவத்திலிருந்து

“துருவ சரித்திரத்தைக் கேட்பதன் பலன் துருவ மன்னரின் புகழ்மிக்க வரலாற்றை கவனத்துடன் கேட்பவர் தனம், புகழ், நீண்ட ஆயுள் போன்றவற்றைப் பெறுவர், அனைத்து பாவங்களும் நீங்கப் பெறுவர். பக்தியுடன் இச்சரிதத்தைக் கேட்பவர் தூய பக்தித் தொண்டை நிறைவேற்றும் பாக்கியத்தைப் பெறுவர். துருவ மஹாராஜரைப் போன்ற உயர்ந்த குணநலன்கள் வாய்க்கப் பெறுவர். துருவரின் வரலாறு மரணமற்ற வாழ்வை அடைவதற்குரிய மேன்மையான ஞானமாகும்.”

துருவ மகாராஜாவின் சரித்திரம் தெரிய விரும்புபவர்கள் ஸ்ரீமத் பாகவதம் படியுங்கள்.

நான் சொல்ல விரும்பிய விஷயம் துருவ மஹாராஜா அப்பாவின் இளைய தாரத்து பிள்ளைக்கு முக்கியம் கொடுத்ததால் அப்பாவின் மடியில் உட்கார சித்தி அனுமதிக்கவில்லை. 5 வயது பையனாகிய துருவ மகாராஜா, கடும் தவம் இருந்து பகவானை காணும் வாய்ப்பு கிட்டியது.

அவர் LKG, UKG கூட செல்லாமல் அவரின் புரிதல் மாறியது. கடவுளிடம் அப்பாவின் மடிக்கு பதிலாக, உன்னை மறவா வரம் வேண்டும் என்று கேட்டார்.

5 வயது பையனுக்கு ஆத்ம ஞானம் கிட்டியது. இவர் தான் துருவ நட்சத்திரமாக இருப்பதாக புராணம் கூறுகிறது.

மன ஒழுங்கின் அவசியமும் சரியான புரிதலும்

காலையில் வாழ்படுதல் (ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்), தியானம், யோகப்பயிற்சி, பலதரப்பட்ட விரதங்கள், மாதம் சில புத்தகங்கள் படித்தால் போன்ற ஒழுங்குகள், எதாவது ஒன்றிரண்டு ஒழுங்குகளை பழக்கப்படுத்திக்கொண்டாள் சற்று சரியான புரிதல் வரலாம்.

சரியான மற்றும் தவறான புரிதலை நாம் அன்றாடம் பார்க்கலாம். ஒரு டி கடைக்கு போங்கள். சற்று கூர்ந்து கவனியுங்கள். எத்தனை சிகரெட் விற்பனையாகிறது என்று பாருங்கள். நீங்களும் ஒரு சிகரெட் அட்டையுடன் வாங்கி படித்துப்பாருங்கள். அதில் கண்டிப்பாக சிகெரெட் புகைப்பதால் புற்று நோய் வரும் என்று விளம்பரம் செய்து இருப்பார்கள்.

இப்போது சிகரெட் வாங்கிய அன்பர்களை ஆராயுங்கள். எத்தனை பேர் படிக்க தெரியாததால் தவறுதலாக வாங்கியுள்ளனர் என்று ஆராயுங்கள்.

இதே ஆராய்ச்சியை மதுபான கடையிலும் ஆராய்ச்சி செய்யலாம். தயவு செய்து சொல்லுங்கள் வாங்கியவர் சரியான புரிதலுடன் செயல்படுகின்றார்களா? சரியான புரிதல் இல்லை என்று உணர்கிறீர்களா?

திருவள்ளுவர் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து சில மன ஒழுங்குகளை கடை பிடித்து எழுதிய குறளை, நாம் யூனிவர்சிடி போன்ற இடங்களில் கற்றாலும் புரிதல் வருவதில்லையே,ஏன் ?

Leave a Reply