புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 3

எது சரியான புரிதல்?

நான் உண்மையான சரியான புரிதலில்தான் இயங்குகிறேனா?

நமக்கு பருவ வயது வந்ததும், பல வித உணர்வுகளுக்கு ஆளாகின்றோம். அந்த உணர்வுகளை வெளிப்பாடு செய்ய சமுதாயம் திருமணம் போன்ற விஷயங்களை செய்து வைக்க பரிந்துரை செய்கிறது.

திருமணம் என்பது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. திருமணத்துக்குப்பிறகு, நாம் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி பயணம் செய்கிறோம்.

சிலருக்கு தொழில், வேளை அமைத்துக்கொள்கின்றனர். சிலர் சேவைகள், ஆன்மிகம் என்று பயணிக்கின்றனர்.

இதில் நான் சொல்ல விரும்புவது அடுத்தக்கட்ட வளற்சியின் அவசியத்தைத்தான்.

60 வயதில் வெறும் பெண்ணாசையில் வாழ்பவன் அடுத்தக்கட்ட வளர்ச்சி அடையவில்லை என்று பொருள்.

விஞ்ஞானிகள் மனிதனுக்கு முழுமை பெற மூன்று வகை தளங்களில் வளர்ச்சி அடையவேண்டுமாம்.

1) உடல்
2) மனம்
3)ஆன்ம வளர்ச்சி

18 வயதில் எனக்கு பொம்மை வேண்டும் என்றால் மன வளர்ச்சி இல்லை என்று பொருள்.

60 வயதில் எனக்கு ஒரு பெண் பார்க்கவேண்டும் என்றால், ஆன்ம மற்றும் மன வளர்ச்சிக்கு வரவில்லை என்று பொருள்.

30 வயதிற்குள் பெற வேண்டிய அனுபவங்களை பெற்று, அடுத்த படி ஏற வில்லை என்று பொருள்.

50, 60 வயதுகளில் நானே பெரியவன், என்னை மதிக்க வேண்டும், எனக்கு முக்கியத்துவம் தர வேண்டும், போன்ற சிந்தனையில் இருந்தால், மனா முதிர்ச்சியும், மன பக்குவமும் வரவில்லை என்று பொருள்.

18, 20, 25 வயதில் மிட்டாயும், பொம்மையும் கேட்டால், பெற்றவர்கள் கூட கேட்பவரை புறக்கணிப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

சரியான அந்த அந்த வயதில் அந்த அந்த பக்குவம் – மன பக்குவம் இல்லாதவர்களின் தேவையை பூர்த்தி செய்ய யாராலும் இயலாதுதானே?

சிவகங்கை பள்ளிக்கு சென்று, என்னை தலைமை ஆசிரியர் நாற்காலியில் உட்கார சொல்லவில்லை, என்று நான் குறை மட்டும் சொல்லவில்லை. எனது பெருமை, எனது தொழில், எனது கோவில் கட்டும் முயற்சி போன்ற காரணங்கள் சொல்லி, அந்த நாற்காலியை எதிர்பார்த்தால், நான் மூன்று வகை தளங்களின் முழுமை பெறவில்லை என்று பொருள்.

இது தான் வாழ்க்கை
தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர், தனது தொழிலில் ஒரு பத்து பேர், தனது வீதியில் ஒரு பத்து பேர், தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்..!!
இந்த நூறு பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த அறிவறியா சமுதாயம் ஒவ்வொரு மனிதனுக்கும் போதிக்கிறது.
எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அதை விட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும் அப்போது தான் மதிப்பு என்று போலியான வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்துகிறது.
அவன் அப்படி, இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்ததும் பிறரை ஏளனமாக, கேவலமாக நினைக்கச் சொல்கிறது.
இந்த நூறு பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனைப் பாதிக்கின்றன.
இதற்காக தன்னுடைய அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து, மனித ஜடமாக வாழும் பலருக்கு இந்த பூமிப் பந்து எழுநூறு கோடி மக்களால் நிறைந்தது என்பது தெரிவதில்லை.
என்னுடைய தாத்தாவின் தாத்தா எப்படி இருந்தார் என்பது எனக்குத் தெரியாது!
எப்படி வாழ்ந்தார் என்பது எனக்குத் தெரியாது!!
அவர் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது!!
அவர் பெயர் கூட எங்கள் தெருவில் பலருக்குத் தெரியாது, எங்கள் ஊரில் யாருக்கும் தெரியாது!!
இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும்!
நான் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளம் அத்தனையும் கால ஓட்டத்தில் மறையும்!!
ஆக எதற்காக இந்த நூறு பேரின் அங்கீகாரத்தை நான் கண்டு கொள்ள வேண்டும்????
யார் இவர்கள்????
என்னுடைய வாழ்க்கையில் யாரெல்லாம் வர வேண்டும், வரக்கூடாது என்பதை தீர்மானிக்க இவர்கள் யார்????
நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப் போவதில்லை!
அதிகபட்சம் இன்னும் சில ஆண்டுகள்!
அதுவும் வெகு தொலைவில் இல்லை!
சர்வமும் ஒருநாள் அழியும்!
மனித வாழ்க்கை அற்புதமானது. அழகானது!
தத்தமது வாழ்க்கையை யாரும் போலியாக வீணடித்து விடாதீர்கள்.
வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்!
தோற்றால் பரவாயில்லை, ஆனால் பங்கெடுக்காமலேயே அழிந்து விடாதீர்கள்.
நம் தாத்தாவின் தாத்தாவை நாம் பார்த்ததில்லை. அதே போல் நம் பேரனின் பேரனை நாம் பார்க்க இருக்கப் போவதில்லை. இது தான் வாழ்க்கை.
“பிறரை வஞ்சிக்காமல் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு இயலுமோ அவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள்.
இன்னார்க்கு நான் கணவன்/மனைவி,
இன்னார்க்கு நான் அப்பா/அம்மா,
இன்னார்க்கு நான் அண்ணன்/தம்பி,
இன்னார்க்கு நான் அக்கா/தங்கை,
இன்னார்க்கு நான் அதிகாரி/வேலையாள்,
இன்னார்க்கு நான் நண்பர்/எதிரி
இந்த வட்டத்துக்கு உள்ளேயே சாகும் வரை உழன்று கொண்டு இருக்காதீர்கள்.
எல்லோரையும் படைத்த இயற்கை என்னையும் படைத்திருக்கிறது.
இயற்கையின் ஒரு பகுதி நான்.
இயற்கைக்குள் நான்,
எனக்குள் இயற்கை.
நான் வேறு, இயற்கை வேறு இல்லை.
இயற்கை தான் நானாக இருக்கிறது
நான் தான் இயற்கையாக இருக்கிறேன்.
உங்கள் மனதை விரியுங்கள்,
அறிவு சிறகடித்து பறக்கும்.
அப்புறம் பாருங்கள் உங்களுக்குள்,
எப்போதும் பேரமைதி, பேரின்பம்.

Osho

https://youtu.be/5b8wIzhINIk

பெரும் பெரும் தலைவர்கள், எனக்கு பதவி மற்றும் மதிப்பு வேண்டும் என்று கேட்டு வாங்குவதில்லை.

சாதித்தவர்களுக்கு மதிப்பு தானே தேடிவரும்.

என்னால் முயற்சி, நேரம் அல்லது பணம் போடாமல் மதிப்பு வேண்டும் என்றால், இன்றய உலகில் சாத்தியம் இல்லைதான்.

பழைய காலங்களில் வயதை மட்டும் வைத்துக்கொண்டு, திறமையான சிறு வயதினரை ஆட்டி வய்த்த கதை மலேஷியா வியாபாரிகளிடம் சென்ற வாரம் கூட கேட்டேன்.

அவர் வர்த்தகத்தில் பணம் உற்பத்தி செய்வார் , மிக திறமை வாய்ந்தவர். எனக்கு 50 வருடங்களாக தெரியும். நான் படிக்கும் காளங்களில், அப்பாவை சந்திக்க வருவார்.

இளமை காலத்தில், அவரை பயன்படுத்தி, முதலாளி என்ற போர்வையில், முதலாளி அதிக பங்கு எடுத்துக்கொண்டதாக, அவரின் வாழ்க்கை வரலாறை கூறினார்.

இன்று, பெயர் மட்டும் போடும் முதலாளியை ஒழித்துவிட்டனர். இந்திரா காந்தி ராஜா சலுகைகளை நிறுத்தியது போல், மலேசியாயாவில் முதலாளி ஆட்சியை ஒழித்துவிட்டாச்சு.

என்ன சொல்கிறேன்?

செயல் திறமை வேண்டும்

அல்லது

பணம் செலவு செய்யும் திறமை வேண்டும்.

அல்லது

வசூல் செய்து சாதிக்கும் திறமை வேண்டும்.

இதெல்லாம் எதுவும் இல்லாமல், எனக்கு வயது மூப்பு, நான் எனது சமூகத்துக்கு தலைவன் போன்ற காரணங்கள் இன்று எடுபட வாய்ப்பு அறவே இல்லை.

மலேசியாவில் கண்டிப்பாக அறவே கிடையாது.

இன்று எல்லோரும் விழித்து விட்டனர்.

உழைத்தவனுக்கு நேரடி பலன் கிடைக்காவிட்டால், நீண்ட காலம் உழைப்பு நீடிக்காது. வயதை காட்டி பலன் மதிப்பும் மரியாதையும் பெற்றவர்கள் நிர்வகிக்கும் செயல் திறனும் இருக்காது. மீண்டும் 30 லட்ச ரூபாய் கோவில் பாழடைந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

மதிப்பு என்பதும் மரியாதை என்பதும் சம்பாதிக்க வேண்டிய விஷயம். பூர்விக சொத்தில் எனக்கு பங்கு உண்டு என்று கேட்டு பெறுவது போல், கேட்கப்படும் விஷயம் இல்லையே!

பாரதி கவிதையிலும், காந்தி சுதந்திர போராட்டத்திலும், மதிப்பும் மரியாதையும் பெற்றனர். பலர் வர்த்தகத்திலும், சிலர் பொது சேவையிலும், மதிப்பை பெறுகின்றனர். ஆக, செயல் பாடுகள், செயல் திறன் மட்டுமே நமது மதிப்பை நிர்ணயிக்கும்.

திருவள்ளுவரை போலும், காந்தியை போலும் என்னை மதியுங்கள் என்று யாரிடம் நான் கேட்டாலும் என்னை பார்த்து  உள்ளூர சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இன்று உலகம் எப்படி இயங்குகிறது என்ற புரிதல் இருந்தால் மட்டுமே
சரியான புரிதல் வரும்.

உலகம் நான் நினைப்பது, எதிர்பார்ப்பது போல் நடக்கவேண்டும் என்று நினைக்கலாம். அனால் அது அதன் பாணியில்தான் நடக்கும்.

 

Leave a Reply