You are currently viewing பிரச்னை நான் கொண்டு வருகிறேனா-3; மறைந்துள்ள பின்னணி நோக்கம்/மர்மம்  என்ன?
மூக்கை நுழைக்கும் பின்னணி நோக்கம் என்ன

பிரச்னை நான் கொண்டு வருகிறேனா-3; மறைந்துள்ள பின்னணி நோக்கம்/மர்மம் என்ன?

மறைந்துள்ள பின்னணி நோக்கம்…

பிரச்னை நான் கொண்டு வருகிறேனா-2; மறைந்துள்ள பின்னணி நோக்கம்/மர்மம் என்ன?

ஓர் உதாரணம்:-

மூக்கை நுழைக்கும் பின்னணி

அனைவருக்கும் தெரியும் திருடுவது தவறு, குற்றம் என்பது. ஆனால் எது திருட்டு அல்ல? எது திருட்டு? இதற்க்கு ஒரு வரையறை.

எங்கள் வாடிக்கையாளர், காவல் நிலையத்தில், ஒரு பொருள் திருடு போய் விட்டது என்று புகார் கொடுத்தார்.

அதிகாரி, பொருள் எங்கே வைத்தாய் என்று கேட்டார். பொருள், எனது நிறுவன கதவுக்கு முன் வைத்தேன் என்று சொன்னார்,

அதிகாரி விளக்கம் தந்தார். அதன் பெயர் திருடு இல்லை. அப்பொருளை எடுத்து அல்லது பொறுக்கி எடுத்து யாரோ சென்று விட்டனர்.

உனது நிறுவன எல்லைக்குள் பொருளை வைத்து, கதவு பூட்டி சென்று விட்டதை காணாமல் போய்விட்டது என்றால் அதன் பெயர் “திருடு போய்விட்டது” என்று பொருள்.

குப்பையில் எடுத்து செல்வது போல், நிறுவன வெளியில் இருந்து பொறுக்கி சென்றதை, இவர் திருடு என்பது கேள்விக்குறியானதாகிவிட்டது.

துணிவு என்ற திரைப்படத்தில், அஜித் கதாநாயகனுக்கு, எத்தனை நல்ல பின்னணி நோக்கம் இருந்தாலும், நெற்றிக்கண் திறப்பினும் அது திருடுதான். கொள்ளைதான்.

அது வங்கியின் சொத்துக்குள், அனுமதியின்றி ஆயுதம் தாங்கியது, குற்றம் குற்றமே.

********

மறைந்துள்ள பின்னணி நோக்கம்…

இன்னொரு உதாரணம்-பிரச்சனைக்கு மூலம் எனது தந்தை-நோக்கம்/மர்மம் என்ன

எனக்கு 10 வயது இருக்கும். டீ ஒரு கப்பில் ஊற்றி வர சொன்னார், ஊற்றி வந்தேன். அவர் ஒரு பெரிய தும்மல் போட்டார்.

நான் பயந்து கொஞ்சம் டீயை சிந்தி விட்டேன். ஆதி விழுந்தது.

டீயை சிந்தியது டீ கூட கொண்டு வர லாயக்கு இல்லை என்று வருந்தினார். எதற்கும் லாயக்கு இல்லாத பிள்ளைக்கு தந்தை என்று வருந்தினார். அவரின் பின்னணி புரிதல் எனது செயல் திறமை சம்பந்தமாக இருந்தது.

உண்மை, தும்மல் சத்தத்தில் பயந்து சிந்தியது என்று அவர் புரிந்து கொள்ளவில்லை.

ஒரு கப் டீ கொடுக்கும் திறமையும், அனுபவமும் அந்த வயதில் நிறையவே இருந்தது. சிறு பையன் என்பதால், எங்கள் நிர்வாணத்திலே வளர்ந்த நான், கடை மக்களுக்கு தினம் தினம் நான் டீ கொண்டுவருவது வழக்கம்.இங்கே சொல்ல வருவது, எது உண்மை பிரச்னை என்ற ஆராய்வு இல்லாமல் தண்டனை கொடுக்கப்பட்டது.

************

வலுக்கட்டாயமாக,இந்திய நாட்டில், திருமணம் செய்து வைத்தனர்..நோக்கம்/மர்மம் என்ன

1980 களில், மலேசியாவில் வாழ்ந்தவர்கள், தனது பிள்ளைகளுக்கு ஜாதி, அந்தஸ்து, வரதட்சணை அடிப்படையில், வலுக்கட்டாயமாக,இந்திய நாட்டில், திருமணம் செய்து வைத்தனர்.

அதில் சில துணிவான பிள்ளைகள், இங்கும் ஒரு பெண்ணை 2வது மனம் புரிந்து, நிறைய சம்பாதித்தும் விட்டனர்.

எனக்கு தெரிந்த ஒருவன் 2வது மனம் செய்துகொள்ள வில்லை. ஆனால், குடும்ப பொறுப்பும் உருப்படியாக செய்யவில்லை.

இது போன்ற பிரச்சனைக்கு, மூல கர்த்தா யார்? பிள்ளைகளா? ஜாதி, அந்தஸ்து, வரதட்சணைக்கு முக்கியம் கொடுத்த பெற்றோர்களோ?

மீண்டும் மீண்டும் பிரச்னை என்றால் எது என்பதை அடையாலம் காட்ட முயல்கிறேன்.

*******

ஒவ்வொன்றையும் தலைப்பாக்கி விலாவாரியாகவும்

கீழ்கணட் ஏகப்பட்ட தலைப்பில் ஒவ்வொன்றையும் தலைப்பாக்கி விலாவாரியாகவும், என்ன என்ன பின்னணி நோக்கங்களில் செயல் பட்டவர்கள், செயல் பட்டு இருப்பார்கள் என்றெல்லாம் கணிக்கலாம் என்று ஏகப்பட்ட ஆசை.

இதை எழுதுவதால், எனது மேல் எனக்கே வெறுப்பு வருகிறது. ஏன் படு முட்டாள்தனமாக, மற்றவர்களை ஆக்கிரமிக்க அனுமதித்தேன் என்றல்லாம் ஒரு வெறுப்பு வருகிறது.

ஆகவே இந்த பகுதியுடன் பழைய வெறுப்பு நிறைந்த எனது உறவுகளின் வரலாறை நிறுத்திக்கொள்ளப்போகிறேன். ஆனால், வரும் காலங்களில் தேவையில்லாமல்

உதாரணம் 1: 

சமைந்த பெண்களுக்கு மேக் அப் ஏற்பாடு-மூக்கை நுழைக்கும் பின்னணி

திருமண வீட்டில், 10 சமைந்த பெண்களுக்கு மேக் அப் ஏற்பாடு செய்து உள்ளார் அந்த திருமண வீட்டு காரர்.

அந்த 10 பெண்களில் பெற்றோர்கள் என் மகளுக்கு முதல் மேக் அப் போடு என்று சண்டை போட்டு, செத்த வீட்டில் அழுவது போல அழுதால், பிரச்னைக்கு பொறுப்பு திருமண ஏற்பாட்டாளர் இல்லை. தனது ஒருங்கிணைந்து போகும் திறமை இல்லாத பெற்றோர்கள்.

திருமண வீட்டில், 1000 வேலைகள் இருக்கும். உதவி செய்யாமல், ஒருங்கிணைய இயலாமல், இருப்பது பிரச்னையை உருவாக்குபவர்,கொண்டு வருபவர்  என்று பொருள்.

மேக் ஆப் செய்ய திருமண வீட்டு காரர், அவர் வசதிக்கு ஏற்ப, குறிப்பிட்ட மேக் ஆப் செய்யும் நபர்களை குத்தகை எடுத்து இருப்பார். கண்டிப்பாக, திருமண உரிமையாளர், நிர்வாகம் செய்ய இயலாது.

உதாரணம் 2: 

முக்கை நுழைத்து

கோவில் ஒன்றில் கமிட்டி என்று ஒன்று இருக்கிறது. அவர்கள் தனிப்பட்டு அவர் இவர் என்று மரியாதை செய்கின்றனர். அதில் போய் முக்கை நுழைத்து, இப்படி செய்வது சரி, தவறு என்று பிரச்சனை செய்வது, மூக்கை நுழைப்பவர் பிரச்னை செய்கிறார் என்று பொருள்.

அதற்காக, குறையே சொல்லக்கூடாதா. குறை சொல்வது எந்த பலனும் தராது. எப்படி கையாள்வது,  வேண்டும் என்ற முறைகள் இருக்கிறது.

ஒரு பெரியவர் துண்டை கட்டிக்கொண்டு கோவிலுக்கு வந்தால், எப்படி கையாள்வது என்ற முறைகளை கையாள வேண்டும்.

கமிட்டி ஜட்டீயும், தூண்டும் கட்டி வா கோவிலுக்கு, என்று கூறாது. ஆனால், தவறு தவறுதான்.

வெறும் குறை மட்டும் சொன்னால், தலைவனாக அல்லது தலைவியாக முடியாது.

வெறும் குறை சொல்வது, குறை சொல்பவர்களின் மதிப்பு உயர்வது சாத்தியம் இல்லை என்று நான் சொல்ல வில்லை. பல வித தலைமைத்துவ நூலாசிரியர்கள் கூறுகிறார்கள்.

இன்னும் நிறைய உதாரணங்கள் சொல்லப்படும், அடுத்த அடுத்த தொடர்ச்சியில். நினைவு வர வர எழுதப்படும்.

உதாரணம் 3: 

ஒரு முறை தான் வரும்

வாழ்வில், முதலிரவு, தலை தீபாவளி என்றெல்லாம் ஒரு முறை தான் வரும்.

தலை தீபாவளியன்று, தம்பதிகளுக்கு, ஒருவர் சினிமா டிக்கெட் எடுத்து கொடுத்து படம் பார்த்து விட்டு வீடு போக சொன்னார்.

தம்பதிகள் பார்த்து விட்டு மாலை பொழுதில் வீடு நுழைந்ததும், சமைந்த பெண் கேட்கறார். அம்மாவுக்கு முடியவில்லை, ஊர் சுற்றி வருகிறீர்களா?

அந்த காலக்கட்டத்தில், வீடுகளில் போன் இருப்பதில்லை. காலையில் அம்மா நன்றாக இருந்தார்?

அவர் பேசியது தவறாக தெரியவில்லை. அவரின் எதிர்பார்ப்பு புரியவில்லை. வீட்டிலே தலை தீபாவளிக்கு அடைந்து தம்பதிகள் அடைந்து கிடந்தது இருந்து இருக்கணுமா? அம்மாவுக்கு முடியாமல் போய்விடும் என்று ஜோசியம் தெரிந்து இருக்கணுமா?

அதை விட விசித்திரம், அம்மாவே மகளை கண்டிக்க வில்லை என்பதுதான். அதனால் தான் ” பிரச்சனைகள் பலவற்றுக்கு மூல காரணமாக இருந்தது நான்தான் என்பது எனக்கு தெரியாது என்பது எனக்கு தெரியாது” எனும் ஸ்தானத்தில் 40 வருடம் ஒட்டி இருக்கிறாரோ?

மேலும் மற்ற தலைப்புக்களை படிக்க இந்த லிங்கில் கிளிக் செய்யலாம்.

எனது முகநூல்

நான் பிறந்த ஊரான மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் முகநூல்

இப்படிக்கு,

MKP பாண்டுரெங்கன்

மலேசியா