மலேஷியா சொத்து பற்றிய சிந்தனைகள் 2024

மலேஷியா சொத்து பற்றிய சிந்தனைகள் 2024

மலேஷிய சொத்துக்களை பரிமாற்றம் செய்துகொள்ள பல பல கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டிய விஷயங்கள்

மலேஷியா சொத்து பற்றிய சிந்தனைகள்…

சொத்து விலையை குறைத்து நான் எதிர்பார்க்கிறேனா, பெண் வாரிசுகளுக்கு மாற்று வழியே இல்லையா? இது போன்ற பல கேள்விகளுக்கு கீழே உள்ள விஷயங்களை படித்து புரிந்து கொள்வது முதல் படி. புரியாமல் பேசுவது எந்த முடிவுக்கும் வர இயலாது.

இக்கட்டான முடிவு என்றால் என்ன? முதலில் இதை புரிந்து கொள்வோம் – மலேஷியா சொத்து பற்றிய சிந்தனைகள்

பல வேளைகளில் ஒவ்வொரு மனிதனும் இக்கட்டான நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை வந்த அனுபவம் கண்டிப்பாக இருக்கும்.

உதாரணம் 1:
மாமா சொத்தை தம்பி பெயருக்கு எழுதி கொடு என்றதும், வக்கீல் அது தவறு என்று சொல்லியும், சர்வ சுதந்திரம் இருந்தும், சர்வ சுதந்திரமான முடிவுக்கு வர இயலவில்லை. மறுக்க வலுவான உரிமை இருந்தும், மனபூர்வ விருப்பம் அற்ற நிலையில் தான் கையெழுத்து போடப்பட்டது. வற்புத்தி கையெழுத்து போட சொன்ன மாமாவும் பாதிக்கப்பட்ட பிறகு, பொறுப்பு ஏற்க வரவில்லை.

உதாரணம் 2:
எனது திருமண முடிவும் அப்படிதான். உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க யாரும் இல்லை. எனது வயது அதிகம் நான் சொல்வதை கேள், கௌரவம், வரதட்சணை போன்ற அடிப்படைகளை வைத்து, வலுக்கட்டாயப்படுத்தப்பட்டது. சர்வ சுதந்திரமாக முடிவு எடுக்க அல்லது சர்வ சுதந்திரமாக விருப்பத்தை சொல்ல அனுமதிக்கப்படவில்லை.

உதாரணம் 3:

தம்பி சூழ்நிலை சரி செய்து, இந்தியா வர முடிவு எடுத்தது, நான் தில ஹோமம் சம்பந்தமாக போவது அவசியம் என்ற காரணத்தை, அடிப்படையாக, வைத்து வர வேண்டிய கட்டாயமாகி விட்டது. வேறு வலி இல்லை என்ற அடிப்படையில், பெரிய விருப்பம் இல்லை என்றாலும், வருகிறேன். இந்த 3  வது உதாரணத்தில் மட்டுமே இக்கட்டான நிலையில், நான் சர்வ சுதந்திரமாக போவோம் எனும் முடிவுக்கு விருப்பம் இல்லாமல் வரப்பட்டது.

மேல் உள்ள உதாரனங்களில் மறுக்கவும் சர்வ சுதந்திரம் இருந்தும், மறுக்கவில்லை.

சொத்து சம்பந்தத்தில் இக்கட்டான நிலை என்ன?

உலகத்தில் உள்ள முதன்மை நீதிபதி, படிக்காத முட்டாள் நீதிபதி, கிராமத்து நாட்டாமை – இவர்கள் மூன்று நபர்களிடமும், நமது மலேசிய சொத்தை, வீட்டை விற்று நானும் தம்பியும் பணத்தை பிரித்து கொண்டு, தொடர்ந்து, சகோதரிகளுக்கும், சகோதரனுக்கும், வாடகை கொடுப்பதே நியாயம் என்ற ஒருமித்த மனதோடு தீர்ப்பு கூறுவார்கள்.

அந்த தீர்ப்பை தவிர, வேறு எதுவும் ஞாயமான தீர்ப்பாக அமையாது. சரிசமமான தீர்ப்பாக இருக்காது.

படிக்காத முட்டாளாக அமர்ந்து இருக்கும் நீதிபதிக்கும் எளிமையாக புரியும், நிலைமை புரியும் அளவுக்கு விஷயம் சுலபமானது. இது அப்படி ஒன்றும் சிக்கல் நிறைந்த, புரிந்து கொள்ள முடியாத விஷயம் இல்லை.

அப்படி செய்வதால், முக்கியமாக, மூத்தவன் பணத்தை தொட்டு பார்க்கலாம், கட்டி பிடிக்கலாம், பூஜை செய்யலாம், முத்தம் கொடுக்கலாம்.

ஆனால், இக்கட்டான நிலை என்ன? தம்பிக்கு வீடு வேணுமாம். தம்பி பகுதி கடையை, மாற்றி தருவாராம். யாரும் விரும்பாத வில்லங்க சொத்தை வாங்கி, எனது பேரில் வைத்துக்கொண்டு என்ன செய்வது?

சர்வ சுதந்திரமாக, கடையை கட்ட அரசாங்க அனுமதி பெற இயலாது. சர்வ சுதந்திரமாக விற்க முடியாது.

மீண்டும் தம்பியை தேவையில்லாத பொருளாதார சிக்கலில் மாட்டி வைக்க கூடாது, என்ற அடிப்படையில் வாங்க முன்வந்தால், வில்லங்க சொத்துக்கு தகுந்த விலையில் வாங்கினாலும், நட்டம் நட்டம் தான்?

அப்படி வாங்க பரிசீலனை செய்ய வேண்டும் என்றால், சர்வ சுதந்திரம் நிறைந்த முடிவுகள் எடுக்க எனக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டால் தவிர, நான் வாங்குவதை மறுக்க நிறைய உரிமை இருக்கிறது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

அந்த மூன்று நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை நினைவில் கொள்ள வேண்டும். ஒருவன் தலையில் மட்டும் சுமையை ஏற்றுவது, கண்டிப்பாக, ஞாயம் இருக்காது.

தம்பி சூழ்நிலை, சகோதரிகள் நிலை அறிந்து ஆராய்ந்து நான் வாங்க பரிசீலிக்கலாம். ஆனால், இதில் சகோதர சகோதரிகள் எப்படி எனக்கு உதவிகரமாக இருக்கப்போகிறார்கள்?

மாமா வலியுறுத்தியது போல், எனது திருமண முடிவுகளில் வற்புறுத்தியது போல இனி சரிப்பட்டு வராது.

எல்லோரும் ஒத்துழைத்தால் மட்டுமே பரிசீலிக்கலாம்.