My Life Experience

வாருங்கள் மற்றவர்களை வாய்க்கூசாமல் குறை பேசி பேரின்பம் காண்போம்!!! – Part 1 1/8/2020

August 1, 2020 …சிந்தித்தது உண்டா? 0

நமது வெற்றி தொழில், மற்றும் அனைத்து வித உறவுகள் நமது சமுதாயத்துடன் இணையும் திறனை சார்ந்தது.

உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பல காற்றும் கல்லாதான் அறிவிலான் என்று வள்ளுவர் சொன்னதும் சமுதாய வாழ்வில் முன்னேற்றத்துக்காகத்தான்

குறை பேசுவதில் ஒரு இன்பம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் குறை கூறுவதில் தரத்தை பற்றி சற்று ஆராய்ந்த பிறகு முழுசாக குறை கூறுவோம்.

குறை கூறுவது பல பல தரமாக பிரிக்கலாம்.

மஹா மட்டமான குறையில் இருந்து சற்று தரம் வாய்ந்த குறை வரை ஆயிரக்கணக்கான தரம் உள்ளது. நாம் யாராக அல்லது எப்படியாக  இருக்கிறோமோ (மட்டமான தரம் அல்லது உயர்வான தரம்) அதன் படிதான் தரமான அல்லது மட்டமான குறை கூறுவோம்.

நாம் யாராக இருக்கிறோமோ அதன் படிதான் எண்ணங்கள் உதயமாகும்.

ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்:

ஒரு உறவினர் பிள்ளைக்கு திருமணம் வைபவத்தில் குறை பேசுகின்றனர். “அம்மாக்காரி பாரு தலையில் பூவை அல்லி வைத்திருக்கிறாள்” “அம்மாக்காரி பாரு ஒண்ணுமில்லாதவள் மாதிரி கொஞ்சமா பூ தலையில் வச்சுருக்கா”, ” எனக்கு அந்த குறிப்பிட்ட பூ தரவில்லை”

வைபவத்துக்கு போவது இரண்டில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும்:

1) நெருங்கிய உறவு என்றால் தனக்கு பூ, காய்கறி, சோறு, குறிப்பிட்ட இனிப்பு பண்டம் இல்லாவிட்டாலும் முடிந்த உதவி செய்வது

2) துரத்து உறவு அல்லது வியாபார பழக்கமாக போனால், போட்டதை தின்னு விட்டு வாழ்த்திவிட்டு வரவேண்டும்

இதுவே நாகரிகம். இன்றய உலகில் செல்வாக்காக வாழ இதுதான் வழி.

இதை தவிர்த்து உலகத்தை திருத்துகிறேன் என்றோ, மற்றவர் செய்வது நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே, என்று நிரூபிக்க நினைத்தால், குறை கூறுபவரின் செல்வாக்கு படு வீழ்ச்சியாக இருக்கும்.

சில வியாபாரியின் குடும்ப நிகழ்ச்சிக்கும்  என் மாற்றும்  மனைவியின் உடன்பிறந்த வர்கள் குடும்ப நிகழ்சிக்கலுக்கு மலேசியாவில் இருந்து கலந்ததுண்டு. எங்கள் குடும்பம் வந்து கலப்பது அவர்கள் சிறப்பு என்று அலைக்கும் பட்சத்தில், நாம் சுமார் அரை லட்ச ரூபாய் செலவு செய்து ஏதாவது குறை கூறினால் அவர்கள் மனம் புண்படுத்தி, நமது பணம் செலவு செய்து குறை சொல்வதற்கு அவசியம் போக வேண்டுமா.

அன்புள்ள ஓஷோ….

பொறாமை என்பது என்ன…???

அது ஏன் மிகவும் புண்படுத்துகிறது…???

பொறாமை என்பது மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தலாகும்

நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்குத்தான் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்

நம்மை எப்போதும் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்படி நாம் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்

யாராவது நல்ல வீட்டை வைத்திருப்பார்கள்

யாராவது நல்ல உடற்கட்டை உடையவர்களாக இருப்பார்கள்

யாராவது அதிகப் பணம் வைத்திருப்பார்கள்

இவர்களோடு எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கிறோம்

உன்னைக் கடந்து செல்லும் முன் ஒவ்வொருவருடன் உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தால்

உன்னுள் மிகப் பெரிய பொறாமை எழும்

இதுவரை நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு கற்றுக் கொடுக்கப்பட்டதன் விளைவுதான் அது

மற்றபடி நீ மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதை விட்டுவிட்டால்

பொறாமை இல்லாமல் மறைந்து போய்விடும்

அப்போது நீ, நீதான் என்றும்

நீ வேறு யாராகவும் இருக்க முடியாது

இருக்க வேண்டிய தேவையும் இல்லை என்பதையும் அறிந்து கொள்வாய்

நீ உனது உள்பக்கத்தை அறிவாய்

அடுத்தவர்களின் வெளிப்பக்கத்தை மட்டும்தான் அறிகிறாய்

அதுதான் பொறாமையை உருவாக்குகிறது

அதே போல் அடுத்தவர்களும் உனது வெளிப்பக்கத்தை அறிகிறார்கள்

தங்களின் உள்பக்கத்தையும் அறிகிறார்கள்

அது அவர்களைப் பொறாமை கொள்ளச் செய்கிறது

பிறரோடு ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது முட்டாள்தனமான செயல்

ஏனெனில்

ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்

ஒப்பிட முடியாதவர்கள்

இந்த அறிவு உன்னுள் தங்கினால் பொறாமை மறைந்து போகும்

கடவுள் எப்போதும் அசல்களையே உருவாக்குகிறார்

அவர் எப்போதும் நகல்களை நம்புவதில்லை 💥

🏵 ஓஷோ 🏵

இதனால் யாருக்கு என்ன பலன்? அடுத்த விசேஷத்துக்கு கூப்பிடவே தயங்குவார்கள். இது தேவையா. கண்டிப்பாக மனமார அழைக்கவே விரும்ப மாட்டார்கள்.

https://youtu.be/cVCJ7tWrm3o
இதை கேட்டுத்தான் பாருங்கலேன்
இதை கேட்டுத்தான் பாருங்கலேன்

நான் ஒரு மார்க்கெட்டிங் சம்பந்தமான ஒரு வகுப்பில் கலந்தேன். அதில் கற்பித்த முக்கிய பாடம் நாம் காந்தம் போல் மக்களை ஈர்க்க வேண்டும் என்றும்,நம் வழிக்கு வலுக்கட்டாயமாக இழுத்து நாம் ஒரு காலும் ஜெயிக்க முடியாது என்றும் போதித்தனர்.

இது தொழிலுக்கு மட்டும் அல்ல, உறவுகளுக்கும் பொருந்தும். இந்த அறிவுறை மிக பழமையானது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பே டேல் கார்னெகியின் நூலில் எழுதியிருக்கிறார். அப்புத்தகம் தமிழில் மிக மலிவான விலையில் கிடைக்கிறது.

அந்நூல் பலகோடி விற்றால் எனக்கு என்ன, நான் சொல்வதே சரி என்று தனது கருத்துக்கும், நம்பிக்கைக்கும் மற்றவர்களை  பிடித்து இழுக்கும் உறவு நியதிப்படி ஜெயிக்காது.

அடிமையாக வாழ்பவர்களை, மனோ திடம் இல்லாதவர்களை, கட்டுப்படுத்தலாம். சர்வ சுதந்திரத்தை கடைபிடிப்பவர்கள் கண்டிப்பாக கட்டுப்பட மாட்டார்கள்.

நட்பை வலுப்படுத்தும் நியதிகளை கடைபிடிக்காமல் வற்புறுத்தலில் நட்பு அல்லது உறவுகள் வலுப்படாது. நாம் காந்தமாக இருப்பது அவசியம். அதாவது அதிக நட்பும் உறவும் வேண்டும் என்பவர்களுக்கு காந்தமாக இருக்க வேண்டும். இதுவே தொழிலில் வருமானத்தை உருவாக்கும் ரகசியமும் ஆகும்.

மேலும் வரும்

இப்படிக்கு

பாண்டுரங்கன்

மலேஷியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *