You are currently viewing ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் நிர்வாக கமிட்டியின் பொறுப்புகள் எது? ஒரு அலசல்
சங்காபிஷேகம் 10 2 2023

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் நிர்வாக கமிட்டியின் பொறுப்புகள் எது? ஒரு அலசல்

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் நிர்வாக கமிட்டியின் பொறுப்புகள் எது? எது எது எல்லாம் அவர்களின் பொறுப்பு கிடையாது? ஒரு அலசல்

கமிட்டியின் பொறுப்பில் அடங்காதது எது என்ற ஒரு விளக்கமும், வரையறையும் இப்பொழுது தர வேண்டிய நேரம் வந்து விட்டது. கமிட்டியின் பொறுப்புக்கள் என்ன என்ன, என்று தெளிவான சட்ட திட்டங்களை வகுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

மேலே உள்ள விடியோவை பார்த்தால் கோவில் வளர்ச்சிக்கு தேவையான சிந்தனை செய்வதை விட்டு விலகி எப்படியெல்லாம் நாரத்தனமான சண்டையில் இறங்குகிறோம் என்று தெளிவாகும். கொஞ்சம் அறிவு மட்டும் இருந்தால் போதும், மேலே ஒரு ஆஸ்ரமத்தில் நடந்த கதையை, நமது கோவிலுடன் தொடர்பு படுத்திக்கொண்டு பாடம் கற்கலாம்.

கோவில், தொழில் போன்ற நிறுவன அமைப்புகளுக்கு தேவைப்படுவது, தலைமைத்துவம் செய்யும் நபர்கள், அவர்களுடன் ஒத்துழைக்கும் பொது மக்கள், பக்தர்கள், நன்கொடையாளர்கள்.

யார் இந்த கமிட்டி?

கமிட்டி உறுப்பினர்களின் நோக்கம் என்ன? கமிட்டியின் பொறுப்பில் அடங்காதது எது?

எப்படி பக்தர்களிடமும், நன்கொடை கொடுத்தவர்களிடமும் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்?

கமிட்டி உறுப்பினர் யாருக்கும் மற்றவரின் மனதை திருப்தி படுத்தும் பொறுப்பு இருக்கிறதா?

அப்படி இருக்குமாயின் ஏன் திருப்தியை எதிர்பார்க்கும் நபரிடம் கோவில் பொறுப்பை ஏற்று நடத்த அழைக்கக்கூடாது?

தெளிவான வரையரை இல்லாவிட்டால், எல்லையை தாண்டிய எதிர்பார்ப்புகள் உருவாகும். பிறகு எதை எடுத்தாலும் பிரச்னை வரும்.

நாம் இணைந்தது கோவிலை மட்டும் வைத்து. அப்படியென்றால், எல்லை உள்ள உறவில் இருப்பது கோவிலுக்கு ஆரோக்கியம். எல்லைக்குட்பட்டு உறவு வைத்து கொள்வது ஆரோக்கியம்.

தொழில் வாடிக்கையாளர்களிடம், முதலீட்டாளர்களிடம் கணவன் & மனைவி, சகோதர சகோதரி, மாமா மச்சான் உறவுகளை போல் வைத்துக்கொள்வது ஆபத்தானது. அதே போல கோவில் கமிட்டி, பக்தர், நன்கொடையாளர் எனும் உறவில் லயிக்க வேண்டும். இங்கே கணவன் மனைவி, மச்சான் மாமா என்ற உறவு கூடாது.

*************************************************

பல பல தலைப்புக்களை பற்றி எழுதினாலும், பலர் முழுதும் படிக்க முடியாது. ஆக இதன் சுருக்கத்தை கீழே கொடுக்கிறேன்:

  • ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் ஒரு தனிப்பட்ட நபர் போன்று கருத வேண்டும். அது ஒரு தனிப்பட்ட அமைப்பு.
  • அந்த அமைப்புக்கு பலர், அந்த ஊர் தெரியாத நபர்கள், எனது தொழில் நண்பர்கள் என்று நன்கொடை கொடுத்து இருக்கின்றனர்.
  • பணம் கொடுத்தவர்களுக்கு, கமிட்டி வைத்து சிறந்த நிர்வாகம் செய்து வருகிறோம் என்ற நம்பிக்கை.
  • கமிட்டி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து செயல் படுவது.
  • தற்போதைய கமிட்டியில் ஐயா தனபாலன், நிவாஷ், சுப்ரமணியம் மூவர் உள்ளனர்.
  • பார்த்திபன் கதாநாயகன் போல் மற்றவர்களுக்கு காட்சி அழைத்தாலும், அவருக்கு கோவிலில் எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை.
  • கோவில் நன்கொடையாளர்களுக்கு திருப்தி தரும் வகையில் நிர்வாகம் இல்லை என்றால், கமிட்டி உறுப்பினர்களிடம் முறையாக புகார் செய்யலாம்.
  • அணைத்து உறுப்பினர்களும் குறை உள்ளவர்களாக தெரிந்தால், கமிட்டி யில் தேர்தல் வைத்து, தானே கோவிலில் நிர்வாக பதவியை ஏற்றுக்கொள்ளலாம்.
  • எந்த கமிட்டி உறுப்பினரும், கோவில் நிர்வாக சேவையை அவர்களுக்கு தெரிந்த அளவுக்கு, கிராமத்து கலாச்சாரத்துக்கு ஏற்ப செய்வார்கள்.
  • மற்ற யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள். எந்த ஆக்கிரமிப்புக்கு கட்டுப்பட மாட்டார்கள். அவசியம் இல்லை. கட்டுப்பட வேண்டிய அவசியமும் கிடையாது.
  • மிக முக்கியமாக சுய மரியாதை இழந்து வேலை செய்ய முன்வரமாட்டார்கள்.
  • மீண்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது-கோவில் ஒரு தனி அமைப்பு. நன்கொடை கோவில் கட்ட கொடுத்தவர்களுக்கு, நம்பகமாக கமிட்டி அமைத்து கோவிலை நிர்வாகம் செய்ய வேண்டியது கையே நீட்டி பணம் பெட்ற அனைவரின் கடமை.
  • கடமை உணர்வில் உண்மையில் செயல்பட்டால், கோவிலில் ஒரு குறை இருந்தாலும், அதை எப்படி கையெயாளுவது என்பது புரியும். 
  • சாதாரண பக்தர்கள் பொங்கல் தரவில்லை, பொரியல் கொடுக்கவில்லை என்று சொல்லலாம். கோவில் சுவான்தாரிகளான MKP ஆண் பெண் வாரிசுகளுக்கும், கமிட்டி பொறுப்பில் உள்ள குடும்பத்தார்களும், எனக்கு குடம் தரவில்லை, பொன்னாடை போதவில்லை/ போர்த்தவில்லை என்று கூறுவது கோவில் ஸ்தாபகரின் பெயருக்கு கலங்கம் , அசிங்கம்.
  • ஒருவேளை கமிட்டி முடிவுகள் சரியில்லை என்று தோன்றினால், அதற்க்கு முறையான செயல் என்ன என்று வக்கீலிடம் கலந்து அவர் ஆலோசனை பேரில் செயல் பட நன்கொடை அளித்த அனைவருக்கும் உரிமை இருக்கிறது. 
  • நிர்வாகம் என்றால் எனக்கு தெரியாது என்பது எனக்கு தெரியாது என்ற புரிதல் ஸ்தானத்தில் இருப்பவர்களிடம் ஏற்றுக்கொள்வதை மட்டுமே ஏற்றுக்கொள்ளலாம்.
  • இதனால்தான் பெரும் பெரும் கோவில்களில் நிறுவன, தொழில், நிர்வாக அமைப்பில் உள்ளவர்கள் கமிட்டியில் இணைகின்றனர்.
  • கமிட்டி உறுப்பினர் என்பதால், சிறு சிறு, நிர்வாகம் சம்பந்தம் இல்லாத, விஷயங்களுக்கு பதில் அளிக்க இயலாது.

************************************************

கோவில் சேவகர்கள் முதலில் தான் ஒரு அடிமை இல்லை என்று நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்!!!!

பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் துஷ்பிரயோகம் செய்து விடாமல் தற்காத்துக்கொள்ள தெரிந்தால் மட்டுமே முறையான, திறன் வாய்ந்த நிர்வாகம் செய்ய கமிட்டி உறுப்பினருக்கு சாத்தியம்.

முன்பு பாலகிருஷ்ணன், ஒவ்வொரு கோவில் காரியத்துக்கும் அவருக்கு அழைப்பு தர வேண்டும் என்று சொன்னார்.

கமிட்டியின் பொறுப்பில் அடங்காதது எது?

கோவில் சேவகர்கள் என்றால், வெட்டியாக இருப்பவர் என்று பொருள் இல்லை. கோவிலுக்கு சம்பளம் வாங்காமல், எதிர்பார்க்காமல் வேலை செய்கின்றனர் என்று பொருள்.
அவர்களுக்கு கைநிறைய வருமானம் வருகிறது, ஆனால் ஒரு சிறு பகுதி அவர்களின் வருமானத்தையும், நேரத்தையும் கோவில் சேவையில் செலவு செய்கின்றனர் என்று பொருள்.

உதாரணத்துக்கு, கோவில் கட்ட நன்கொடை கொடுத்தவர்களுக்கு பணம் தேவை இல்லை என்று யாரும் கொடுக்க வில்லை. வேறு செலவுகள் இல்லை, பணம் புல் முளைத்து போய் இருக்கிறது என்று யாரும் கொடுக்கவில்லை.

அவர்கள் சம்பாதித்த பணத்தை, ஒரு சிறிய பகுதியை ஒரு நல்ல காரியத்துக்கு செலவு செய்ய வேண்டும் என்று நன்கொடை செய்கின்றனர்.

அதே மாதிரி, கோவிலில் சேவை செய்பவர்கள், அவர்களுக்கு மட்டும் நேரம் கடவுள் 36 மணிநேரம் தனியாக கொடுக்க வில்லை. அவர்களுக்கும் 24 மணி நேரம் தான்.

அவர்களின் அலுவல், குடும்ப கடமைகள் போக, சற்று நேரத்தை, கோவிலுக்கு கொடுக்க முன்வருகின்றனர்.

அதனால், அவர்களை மற்றவர்கள் அடிமையாக பயன் படுத்திக்கொள்ள விடாமல் தற்காத்துக்கொள்வது மிக முக்கியம். துஷ்ப்ரயோகம் செய்ய வாய்ப்பு தரக்கூடாது.

கமிட்டி உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு தேவை.

பார் என்ற அமைப்பு குடிக்கவும், நைட் கிளப் பெண்களுடன் அடி பாடவும் பயன் படுத்தப் படுகிறது.

அப்படியானால் கோவில் எதற்கு பயன் படுத்தவேண்டும்? எதற்கு பயன் படுத்தக்கூடாது? இதற்க்கு தெளிவான விளக்கம் கமிட்டி தர வேண்டும் என்று எதிர் பார்க்கிறேன்.

எதற்கு பயன் படுதாக்கப்படாது:

  • குடும்ப சண்டையை பயன் படுத்தும் இடமாக இருக்கக்கூடாது
  • பஞ்சாயம் செய்யும் இடமாக கூடாது
  • எனக்கு மரியாதை உனக்கு மரியாதை என்று போர் செய்யும் இடமாக கூடாது

எதற்கு பயன் படுத்தவேண்டும்:

  • வழிபாடு செய்ய கற்பிக்கும் இடமாக இருக்க வேண்டும்
  • கண்ட கண்ட பூஜைகளும், அபிஷேகமும் மந்திரங்களும் ஜபித்து பாசிட்டிவ் அதிர்வுகள் அதிகரிக்கவும், அதன் பலனால், பக்தர்கள் மீண்டும் மீண்டும் வர வேண்டும்.
  • வேண்டுதல் வைக்கும் பதர்களின் வேண்டுதல் நிறைவேற, நிறைய பூஜைகள் செய்து பராமரிக்கும் இடமாக இருக்க வேண்டும்
  • அழையாமல் வரக்கூடிய பக்தர்கள் வருவது அதிகரிக்க வேண்டுமானால், கோவிலில் விஷயம் இருக்கணும். கோவிலின் ஷக்தி தெரிந்து பக்தர்கள் வழிய வர வைக்க வேண்டும்

விநாயகரின் கோவிலை வளர்ப்போமா? கைவிட்டுவிடுவோமா? இதுதான் கேள்வி?

  • கமிட்டி அமைத்து விட்டால், அதன் உள்பொருள் கமிட்டி உறுப்பினர்கள் இணைந்து முடிவுகள் செய்ய அதிகாரம் கொடுத்து இருக்கிறோம் என்று பொருள்.
  • அவர்கள் ஒருவருக்கு 4 பொன்னாடை போர்த்தினாலும், 40 பொன்னாடை போர்த்தினாலும், கொடை பிடித்து வரவேர்த்தாலும் அவர்களுக்கு 100% சதவீதம் முடிவு எடுக்கும் சட்டப்பூர்வமாக அதிகாரம் உண்டு.
  • அவர்களின் முடிவு சரியில்லை என்றால், குறைந்தது 51% சதவிகித குடிவரி செலுத்துபவர்கள், நன்கொடை கொடுத்தவர்களின் எதிர்ப்பு தெரிவித்தால் கமிட்டியை, இஷ்டப்பட்டு சேவை செய்ய வரும் நபர்களை வைத்து புது கமிட்டி அமைக்கலாம்.
  • சுருங்கச்சொன்னால், புது கமிட்டி அமைக்க தேவையான நடவடிக்கை கூட எடுக்க இயலாத பட்சத்தில், தற்போதைய கமிட்டி முடிவுகளை ஏற்றுக்கொள்வதே சிறப்பு.

வேறு பார்வையில் பார்த்தல், செயல் படும் கோவில் உறுப்பினர்களுக்கு, குறிப்பிட்ட திறமை இருக்கிறது என்று பொருள்.

மதுரை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் உள்ள மருங்கூர் மைந்தர்களுக்கு திறமை இருந்தாலும், வாய்ப்பு உள்ளூரில் வாழ்பவருக்கே கிடைத்து இருக்கிறது.

ஆக, நமது இது போன்ற இயலாமையை சரி செய்ய உள்ளூரில் வாழும் அதுவும் இஷ்டப்பட்டு வேளை/சேவை செய்ய முன் வருபவர் மட்டுமே கோவிலை அடுத்த முன்னேற்றத்துக்கு கொண்டு செல்ல இயலும்.

அதனால் தான் எல்லைக்கு உட்பட்டு உறவாட வேண்டும். சுய மதிப்பு, சுய மரியாதையை இழந்து சேவை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

பெரியார் சுயமரியாதை இல்லாத பட்சத்தில் கடவுளே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

யாரோ ஒரு மலேசிய காரர் கோவில் கட்டினார். மாலைக்கும், தேங்காய்க்கும் சண்டை போட்டு கோவில் கட்டியவர் காணாமல் போய் விட்டார்.

36 வருடம் அந்த கோவிலுக்கு போக வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வரவில்லை என்பது தெரிந்த விஷயம்.

அரப்பூர் காமாட்சி அம்மன் என்னை தேர்ந்து எடுத்த காரணம், மேகலாவுக்கு எப்படி பிள்ளையாருக்கு செய்ய வேண்டும் என்ற கலப்படம் இல்லாத நோக்கம் இருந்ததோ, அதே மாதிரி கலப்படம் இல்லாத நோக்கத்துடன் என்னால் வழிநடத்த முடியும் என்று தேர்ந்து எடுத்து இருக்கலாம்.

அது மட்டும் அல்ல. அரப்பூர் காமாட்சி கோவில் உறுப்பினர்கள், குல தெய்வ வழிபாடு செய்பவர்கள், சிறு சிறு பிரச்னை செய்யும் தரத்தில் இல்லாதவர்கள்.

அவர்களின் தரம் உயர்வு என்பதால், கோவில் என்றால் அதிக சேவை செய்வது மட்டுமே தலையாய, கலப்படம் இல்லாத நோக்கம் உடையவர்கள்.

2023 சிவன் ராத்திரிக்கு 3 நாட்களில், 7000 சாப்பாடு செய்வதாக கேள்விப்பட்டேன். பெரிய தரம் வாய்ந்த, சேவை மனப்பான்மை உடைய சிந்தனை நிறைந்தவர்கள்.

அவர்களுடன், தரமான சிந்தனை நிறைந்தவர்களுடன் நான் பழகுவதால் கூட அம்மன் என்னை அனுப்பி இருக்கலாம். அவர்களுடன் பழகும்போதுதான், கலப்படம் இல்லாத தெளிவான சிந்தனை வளர்கிறது.

ஒரு வெள்ளை அடிக்க கூட ஆள் இல்லை, முன்வரவில்லை. வருடம் ஒரு முறை சென்று பொங்கல் வைத்து சாமி கும்பிட வில்லை.

இன்றய கௌரவ தலைவர் அரப்பூர் காமாட்சி அம்மன் கோவிலில் ஞானம் பெற்று, மேலமருங்கூருக்கு வர நினைத்த போது, பல விமர்சனங்கள் வந்தது.

“அந்த ஊரில் அத்துட்டு போய்டுவாங்க”.
“குளித்து விட்டு மாற்று உடை கூட இல்லாத கிராமம்.”

நேரடியாக சென்று பார்த்தால், மதுரை வாழ் மக்களை விட தரமாக வாழும் மக்களும் உண்டு. பரம ஏழையும் உண்டு என்று அறிய வந்தது.

36 வருடம் போகாத ஊரில் மாற்று உடை இல்லை என்று எப்படி அறிய முடிந்தது?

அப்படி மாற்று உடை இல்லாத கிராமமாக இருந்தாலும், இப்படி அடி மட்டமாக பேசலாமா என்ற அடிப்படை இறக்க அறிவுதான் வேண்டாமா? அப்படி பேசுவதில் அவசியம் என்ன வந்தது?

மேல மருங்கூரில் வாழ்ந்த ஒரே செட்டியார் குடும்பம் எத்தனை ஏழையாக வாழ்ந்தது என்பது மறந்து விட்டதோ? கடவுள் ஒரு காயை நகட்டினால், நமக்கும் மாற்று உடை இல்லாமல் போய் விடலாம் அல்லவா?

தரமான ஒரு சில மக்கள் சம்பளம் வாங்காமல், சொந்த செலவுகள் செய்து கோவிலுக்கு, அறப்பணி செய்கின்றனர். அவர்களை சுய மரியாதையை இழக்கும் வண்ணம் வேலை செய்ய சொன்னால் என்ன ஆகும்?

“நான் தான் கௌரவ தலைவர். வயதில் குறைந்த, நீ, கிராமத்தில் ஒவ்வொரு வீடாக ஏறி ஒவ்வொரு கோவில் பொது திருவிழாவுக்கு நீ அழைக்க வேண்டும். என்னை விட சின்ன பயல் தான் நீ. நான் சொல்வதை கேட்டால் உனக்கு நல்லது.”

“ஒவ்வொரு விஷேசத்துக்கும், எவர் விசேஷம் செய்தாலும், போய் சொல். உனது குடும்ப, அலுவல் வேலையே போட்டு விட்டு, போன் செய்து தெரிவிக்க வேண்டும். நீ சின்ன பையன். நான் சொல்வதை கேள் உனக்கு நல்லது.”

ஆனால், கௌரவ தலைவருக்கு போதிய விழிப்புணர்வு பற்றாது. அந்த சேவகர் வேலை சுய மதிப்பை இழக்கும் படி இருப்பதாக அவருக்கு தோன்றினால், அவர் கோவிலை விட்டு அவரே விலகிக்கொள்ளலாம். அந்த சர்வ சுதந்திரம் அவருக்கு, இந்தியா வாழ் மக்கள் அனைவருக்கும் இருக்கிறது என்ற விழிப்புணர்வு இல்லை. அவரும் இந்திய குடிமகன் அல்லவா?

  • எனக்கு தெரிந்த முட்டாள்தனமான தலைமைத்துவம், வழிநடத்தும் முறை வயதில் நான் பெரியவன் என்ற தலைமைத்துவம் என்று நினைக்கிறன்.
  • வயதை மட்டும் வைத்து பல வீணா போன தலைமைத்துவத்தை நிறைய நான் பார்த்ததுண்டு.

இப்பொழுது கேள்வி என்ன?

36 வருடங்கள் கோவில் செயல் பட வில்லை. அதன் அர்த்தம் என்ன?

கோவில் யாருக்கும் தெரியவில்லை. வருமானம் வர வில்லை. கோவிலில் அந்த நல்ல வைப்ரஷன் வளரவில்லை. இன்னும் நிறைய இழந்து முடிந்தது.

இன்றய கேள்வி, யாரும் யாரையும் ஆக்ரமிக்காமல் கோவிலை செயல் பட வைக்க முடியுமா? சேவை செய்பவர்கள் நமக்கு சித்தப்பா அல்லது அத்தை மகன் கிடையாது. அவர்களை சர்வ சுதந்திரமாக செயல் பட வைக்க தயாரா?

அல்லது, பழைய படி கோவிலை பாழடைய வைத்து விடுவோமா?

கோவில் வளர வேண்டுமா? அல்லது 36 வருடம் போல் போட்டுவிட்டு அவர் அவர் வேலைகளை பார்ப்போமா?

எத்தனை பணம் அனுப்பியிருந்தாலும், அந்த கோவிலுக்கு ஒரு விரல் விட்டு என்னும் அளவு சேவகர்கள் இன்றி கோவில் கட்டி இருக்க முடியாத காரியம்.

கும்பாபிஷேகம் முன் ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் கூட ஒருங்கிணைந்து இருக்க முடியவில்லை என்பது குறிப்பிட தக்கது. வாட்ஸ் ஆப் குரூப்பில், என்னை விலக்கிவிடு, உன்னை விளக்கி விடு என்று குடும்ப பூசல்களாக வடிவெடுத்தது தெரிந்த விஷயம்தான்.

நாரத்தனமான சண்டை என்றால் என்ன? ஒரு நல்ல உதாரணம்.

“10 2 2023ல் கௌரவ தலைவர் சிவஞானம் மனைவி கஸ்துரி, பனிமலர் MBBS – இவர்களுக்கு 4 பொன்னாடைகள் போர்த்தினார்கள். மூத்த கௌரவ தலைவருக்கு ஒரு பொன்னாடை போர்த்தினார்கள்”

“எனக்கு படு மட்டமான, சிறிய குடம் கொடுத்தார்கள். நான் என்ன குடமா கேட்டேன்?”

இப்படி மாறி மாறி குறை கூறி, கோவிலுக்கு சேவை செய்ய முன்வருபவர்களின் மனதை காயப்படுத்தி, விரட்டி அடிப்போமா?

அல்லது, குழந்தை வரம், திருமண வரன், உத்தியோக உயர்வு என்று கும்பாபிஷேகத்துக்கு பிறகு அளித்த, ஸ்ரீ செல்வ விநாயகரின் கோவிலை வளர்ப்போமா?

இதன் பொருள் என்ன? கமிட்டி முடிவு எடுக்கட்டும் என்று அனுமதித்து விட்டு, இப்பொழுது எனது மனம் அவர்களுக்கு 4 பொன்னாடை போர்த்தியது ஏற்க மறுக்கிறது. என் மனம் திருப்த்தி படுத்த வில்லை இந்த கமிட்டி.

(திருவிளையாடல் திரைப்படத்தில், பாண்டிய மன்னன், பொறுப்பான வேலையே பார்க்காமல், மனைவியின் கூந்தல் மயிரில் இருந்து வாசனை வருகிறதா? இப்படி ஒரு சந்தேகம் வந்து, சிவனே வர வேண்டிய நிலை வந்து விட்டது. இன்று சிவனுக்கும், வேளை உள்ள மனிதனுக்கும், மற்றவர்கள் மனதை திருப்தி படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை)

கோவில் முன்னேற்ற வேலைகளை விட்டு விட்டு இந்த மக்களின் மனதை திருப்தி படுத்தும் அலுவல் செய்வது சுய மரியாதையை பாதிக்கிறது.

கோவிலுக்கு சேவை செய்ய யாரும் வரிசையில் நிற்க வில்லை. நானும் கோவில் கட்டுகிறேன் என்று ஆரம்பிக்க வில்லை. மேகலா தான் முதல் காரணம்.

இப்பொழுது, இப்படியே பிரச்சனைகள் ஓடிக்கொண்டே இருக்குமாயின், முதலில் நான் விலகிக்கொள்ள தயாராக இருக்கிறேன். கோவில் காரியத்தில் செயல் பட, நேரமும், பணமும் செலவாகின்றது.

கோவிளுக்கு புது பக்தர்களை எப்படி கவரலாம்? சங்காபிஷேகம் அறிமுகப்படுத்தலாமா? அடுத்த கும்பாபிஷேகத்துக்கு எப்படி தயார் ஆவது? இன்னும் இது போன்ற ஆயிரம் கேள்விகளுக்கு பதில் தேடாமல், நார சண்டை போட்டால்? நான் நேரமும் பணமும் செலவு செய்ய தயாராக இல்லை.

வீட்டில் மனைவியிடம் சண்டை போட்டு விட்டு, ஆபிசில், பணியாட்களிடம் முகத்தையும் மூஞ்சியையும் காண்பிப்பது போல், குடும்ப கருத்து வேற்றுமைகள், கோவிலில் திணிக்கப்படுகிறது என்று உணர்கிறேன்.

2021ல் கௌரவ தலைவர் குடும்ப கோவில் கமிட்டியின் முதல் வரவேற்பில் பிரச்னை வந்ததாக கேள்வி பட்டேன். பிறகு 2022ல் ஜூலை மாதம் கோவில் மீட்டிங்கில் குறை கண்டு பிடிக்கப்பட்டது. இப்பொழுது சங்காபிஷேகத்தில் பல குறைகள் சொல்லப்பட்டதாக கேள்விப்பட்டேன்.

“கிராமத்தில் இப்பொழுது எந்த பிரச்னையும் இல்லயாம். செட்டியார் குடும்பத்தில் தான் பல பல குறைகள் வருகிறது என்று ஒரு கிராமத்து நபர் கூறுகிறார்.”

எனது சகோதரன் பட்டர்வரத்தில், கோவில் திருவிழாவில் மோர் ஊற்றுவார். எங்கள் குடும்பத்துக்கு சொல்வதே இல்லை. அன்னதானம் செய்வார். எங்களுக்கு சொல்லுவதே இல்லை. ஆகையால், எங்கள் கடை நபர் ஒருவரை போய், வரிசையில் நின்று கடை மக்கள் மற்றும் எங்கள் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் சாப்பாடு 10 முதல் 15 பார்ஸல் எடுத்து வந்து விடுவது வழக்கம்.

கோவிலுக்கும், அன்னதானத்துக்கு கூப்பிடாமல் செல்லும் கலாச்சாரம் இங்கே இருக்கிறது.

இதை விட திறமையாக செயல் படும் குடும்பதை கோவிலை நிர்வாகம் செய்ய கமிட்டி வரவேற்கிறது. குறை மட்டுமே சொல்லும் குடும்பங்களுக்கு இது ஒரு சவால் தரும் அழைப்பு!!

முன் வாருங்கள். குறை சொல்வதை விட்டுவிட்டு, செயல் படுத்த, கோவிலுக்கு தலைமைத்துவம் செய்ய கமிட்டி வருக வருக என்று இரு கரம்களை நீட்டி வரவேற்கிறது. இதை சவாலாக ஏற்றுக்கொண்டு யார் வேண்டுமானாலும் கமிட்டியிடம் இரண்டு, மூன்று வருடம் தலைமைத்துவம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

ஒன்று திறமையை காட்டலாம். அல்லது, இப்போதய கமிட்டி முடிவுகளை ஏற்கலாம். இரண்டும் முடியாவிட்டால், கோவிலை விட்டு எல்லோரும் விலகி, அவர் அவர் வேலைகளை பார்த்து, பழையபடி 36 ஆண்டுகள் செயல் படாமல் இருந்தது போல் ஆகிவிடலாம்.

எனக்கு எதுவும் ஓகே. நோ ப்ரோப்லம். கமிட்டியின் பொறுப்பில் அடங்காதது எது???

கமிட்டீ உறுப்பினர்கள், குறை கூறும் நபர்களை பதவி வகிக்க அழையுங்கள். நாம் சற்று ஒடுங்கி நிற்போம்.

எனது தந்தை சொல்வார், எனது தாய் மாமாவிடம்: “அவனுங்கல் செய்யட்டும்டா, நீ சும்மா இருடா”

நானும் மற்றவர் செய்வதை வேடிக்கை பார்க்கும் வயது எனக்கும் வந்து விட்டது.

இப்படிக்கு

MKP பாண்டுரெங்கன்

பின் குறிப்பு:-
ஒரு வேளை குறை மட்டுமே சொல்ல தெரிந்த நபர்களுக்கு, செயல் பட தெரியாத பட்சத்தில், கமிட்டி இஷ்டப்பட்டால், நான் இஷ்டப்பட்டு, வரும் குறைகளை சட்டையில் மேல் விழும் தூசியாக கருதி தட்டிவிட்டு, தொடர்ந்து ஸ்ரீ செல்வ விநாயகருக்கு சேவை செய்ய தயாராகவும் இருக்கிறேன்.

100 பேர் சாதிக்க முடியாத ஒரு விஷயத்தை உங்களால சாதிக்க முடியும்! வீடியோவில் சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் இதுவரை வாட்ஸாப் போன்ற குழுவிலிருந்து விலகியது இல்லை. கமிட்டி உறுப்பினர்களை இன்னும் நிறைய சேவை செய்ய டார்ச்சர் செய்வேனே தவிர, மற்ற குற்றம் கூறியது இல்லை. எனக்கு தகுதி உள்ளது என்று நம்பலாம்.

***********************************************************************************

ஒவ்வொரு இந்திய பயணத்தின் போது ஒரு பிரச்னை நான் கொண்டு செல்கிறேனா? இதை பற்றி 1982 முதல் யோசித்து, ஆராய்ந்து விரைவில் எழுதலாம் என்று இருக்கிறேன்.

***********************************************************************************

கீழே லிங்கை “இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா???” விரும்பினால் கிளிக் செய்தும் படிக்கலாம்

இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா???