விழிப்புணர்வின் அவசியம் என்ன?

எதற்காக விழிப்புணர்வு? அதன் முக்கியத்துவம் என்ன?

கீழ் கண்ட யூ டியூபில் பேசிய அளவு விழிப்புணர்வு வந்து விட்டால் நாம் எல்லாம் ஞானி ஆகி விடலாம்.

சரியான புரிதல் என்றால் என்ன?

சரியான புரிதல் என்றால் என்ன? நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேன் அல்லது சரியான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை, மறுக்கிறேன் என்ற விழிப்புணர்வு இருக்கிறதா?

கம்யூனிகேஷன் என்று சொல்லப்படும் தகவல் பரிமாற்றத்தில் குழப்பமும், பிரச்சனைகளும் வருகிறது என்றால், நமக்கு போதிய கம்யூனிகேஷன் திறமை இல்லை. மேலும் கூர்ந்து கவனத்துடன் அடுத்தவர் பேசுவதை கேட்டு புரிந்துகொள்ளும் ஆர்வம் இருப்பதில்லை.

விழிப்புணர்வின் அவசியம் என்ன?….

உன்னை நான் விரும்புகிறேன் புரிஞ்சுக்கோடி !!!

“உன்னை நான் விரும்புகிறேன் புரிஞ்சுக்கோடி !!!”. திரை படங்களில், கதாநாயகன் இப்படி பேசுவான். பாதி படம் கதாநாயகிக்கு நல்ல விருப்பம் வராது.

கதாநாயகன், ரௌடி தொழில் செய்பவனாக இருப்பான். பரம ஏழையாக இருப்பான். ஆனால் அவனின் காதலை புரிந்துகொள்ள, அவனின் காதலை ஏற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கிறான்.

திரை படங்களை குறை சொல்வது தப்பு. காரணம் சாதாரண சமூக மற்றும் காதல் படங்கள் தயாரிப்பு செய்பவர்கள், கதை எழுதுபவர்கள் எல்லாம், நடப்பதை கற்பனை என்று பெயரை மாற்றி செய்கின்றனர்.

ஒரு பகைவனை நீங்கள் படைப்பது போலவே அவனை அவ்வாறு படைக்காமலும் இருக்க முடியும்..அல்லது அவனை நண்பனாக மறுபடைப்புச் செய்யவும் முடியும் அதற்கு நீங்கள் முதலில் உலையாக வேண்டும்.
அதற்கு உங்களின் புரிதலின் ஆத்மாவின் துணை வேண்டும்..
ஆதலால் நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது இதை தான் நீங்கள் பிரார்த்தனை என்று ஏதாவது செய்ய விரும்பினால் முதலும் முடிவுமாக புரிதலை வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள்…
மிர்தாத்….🌹🌹🌹 OSHO

பார்வையின் மறுபக்கம் என்ன? உதாரணங்கள்

1) என்னை புரிந்துகொள்ள வில்லை அவள். என்னை வேலை இல்லாதவன் என்று ஒடுக்குகிறாள். இவளுக்கு ஆசான் இவளை பெற்றவர்கள்.

2) இவள் நாலு எழுத்து படித்த திமிரில், நம்ம ஜாதி பையன் என்று தெரிந்தும், வேலை இல்லை என்று ஒதுக்கிவிட்டால்.

3) இவள் ஒரு கிறுக்கச்சி. அவள் அப்படி ஒன்றும் அழகு இல்லை. அவன் மன்மதன், வேலை இல்லாதவன் என்று ஒதுக்குவது ஒரு முட்டாள்தனம்.

ஒரு ஆண் பெண் பருவ/திருமண வயதில் பல பார்வைகள், பலருடைய கருத்துக்கள், அபிப்பிராயங்கள் சர்வ சுதந்திரமாக முடிவு எடுக்க விடுவதில்லை. மன அழுத்தத்தை தருகிறது.

ஜாதி, மதம், நல்லவன்/கெட்டவன், நல்லவள்/கெட்டவள், அந்தஸ்து, கௌரவம், பொருளாதார வசதி, சீர், காதல், விருப்பு, வெறுப்பு என்று பலதரப்பு தலையீடுகள் பங்கேற்கின்றது.

எனக்கு பெண் குடும்பத்து உள்ள பகை இருந்தால், பெண் நடத்தை கெட்டவள் என்று இலவச பிரச்சாரம் செய்வேன். மாப்பிள்ளை குடும்பத்தில் பகை என்றால் அவன் நடத்தை கெட்டவன் என்பேன்.

https://youtu.be/q3IXEdmicME

என்னை புரிந்து கொள் – அடிப்படை மனோபாவம் அனைத்து செயலையும் பாதிக்கிறது.

தொழில்

எனக்கு எல்லா வேலையும் கற்று கொடுத்தால் செய்வேன் என்று வேலையில் கிளார்க் வேலையில் அமர்கின்றனர். பிறகு முதலாளி என்னை புரிந்து கொள்ளவில்லை என்று கூறுகின்றனர்.

அல்லது தனக்கு தெரியாத அல்லது தெரிந்து கொள்ளும் திறமை இளமைக்கு காரணமும், விளக்கமும் தருகின்றனர்.

எந்த முதலாளியும், சம்பளம் கொடுத்து, அலுவலை முடிக்கும் திறமையின்மையை புரிந்து கொள்ள விரும்புவது இல்லை.

கொத்தனாருக்கு சிமிண்டு பூச வராது..சமையல் காரருக்கு குழம்பு, ரசம் வைக்க தெரியாது…ஆசாரிக்கு மரம் அறுக்க தெரியாது என்ற விளக்கத்தை சம்பளம் கொடுத்து தெரிந்து கொள்ள யாரும் விரும்புவது இல்லை.

எத்தனை பேர் புரிந்து கொள்ள தொழில் செய்கிறோம்?

குடும்ப உறவு

உறவுகள் கூட போலித்தனமாகத்தான் உள்ளது. நீ என்னை கௌரவப்படுத்த வில்லை. நீ போதிய மொய் அல்லது இத்தனை ரூபாய்க்கு துணி எடுத்து கொடுக்க வில்லை.

பதிலுக்கு பதில் பேசுபவர்
பதிலுக்கு பதில் பேசுபவர்

நீ எனக்கு செய்யும் செய் முறையில் தான், எனது புகுந்த வீட்டு என்னை மதிப்பதும் மதிக்காததும் உள்ளது.

நான் உனக்கு செய்வேன். அது வட்டியில்லா கடன். என் வீட்டு விசேஷத்தில் நீ அப்படியே அல்லது சற்று கூட செய்து விட வேண்டும்.

செய்யும் செயலில் உண்மையும் நேர்மையும்
செய்யும் செயலில் உண்மையும் நேர்மையும்

சமீபத்தில், சிங்கப்பூரில் 3 டாலர் இயந்திரத்தில் போட்டு ஆரஞ்சு ஜூஸ் குடித்தேன். அது போல உறவு இயந்திர தனமானதாகி விட்டது.

அவனை/அவளை கட்டிக்கொள், நீ இதை செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும் போன்று ஒரு வலியுறுத்தும், உறவாகி விட்டது.

குறிக்கோள் அல்லது தலையாய நோக்கம் பற்றிய அவசியத்தை பற்றிய விழிப்புணர்வு

  1. அரசு தூதர்கள், மற்ற நாட்டு தலைவர்களை சந்திக்கும் முன் ஒரு தெளிவான ஒரு நோக்கம் இருக்கும்.

தொழில் உறவு என்பார்கள். மலேசியா இந்தியா சென்று இந்தியாவை மலேசியாவில் பனை என்னை வாங்க வலியுறுத்தியது. இன்னும் ஏகப்பட்ட விதத்தில் உறவுகளை நாடுகள் வளர்த்துக்கொள்கிறது. தெளிவான நோக்கத்துடன் வளர்த்துக்கொள்கிறது.

குடும்ப உறவுகள் ஒரு தெளிவற்ற தன்மையில் ஓடுகிறது. வலியுறுத்தும் தன்மையில் ஓடுகிறது.

 

சம்பாஷனைகளில் குறிக்கோள் இருப்பதில்லை-ஒரு தலைப்பை நோக்கி பேசுவதில்லை.

ஒரு நாட்டு தூதர் இன்னொரு நாட்டில் தூது போய் ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றிய விவாதித்து, ஒப்பந்தம் செய்து வருவார்.

உதாரணம், மலேஷியா வங்காள தேசம் சென்று, மலேஷியா வுக்கு வேலை ஆட்கள் கேட்டு சென்றது. ஒரு குறிக்கோள் பற்றி விவாதித்து, அதில் உள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து, தீர்வுகள் கண்டு பிடித்து…இப்படி ஒரு விஷயம் பற்றி மட்டும் கவனம் செலுத்தப்படும்.

உறவினர்களுடன் ஒரு தலைப்பை பேச போக, அந்த தலைப்பே காணாமல் போய் விடும் அளவுக்கு வெவ்வேறு, பலன் இல்லாத விஷயத்தில் மூழ்கடிக்கப்படும். எனக்கு நிறைய அனுபவம் உண்டு.

மற்றவரின் குறிக்கோளின் அவசியத்தை அல்லது சர்வ சுதந்திரத்தை உணர மறுப்பது. முக்கியத்துவம் என்று ஏற்றுக்கொள்வது இல்லை.

வந்தவர் எதை பற்றி பேச, விவாதிக்க, ஆலோசிக்க வந்தார் என்று விழிப்புணர் காணாமல் போய் விடும்.

தேடி வந்தவர் நோக்கம் என்ன? அதற்கு முக்கியத்துவம் தருவது முக்கியம். அந்த நோக்கத்தை ஆராய்வது அவசியம், போன்ற சிந்தனை இருப்பதில்லை.