You are currently viewing Bahubali Must Read Books to Understand Our Life-How We Think & Live
Sivagami Parvam Bahubali Puthagam 1 The Rise Of Sivagami Tamil

Bahubali Must Read Books to Understand Our Life-How We Think & Live

Bahubali Must Read Books-Yes they are must be read.

நம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள பாகுபலி புத்தகங்களைப் படிக்க வேண்டும் – நாம் எப்படி நினைக்கிறோம் & வாழ்கிறோம்.

பாகுபலி திரை படம் பார்த்தால், மிக பெரிய விஷயங்கள் புரியாது. Bahubali Must Read Books-Yes they are must to be read.

நான் முதல் பாகம் தமிழிலும், 2 & 3ம் பாகங்கள் ஆங்கிலத்தில் படித்தேன். இதை படித்தது உலகமே தெளிவாக புரிவது போல் ஓர் தெளிவு.

3வது பாகத்தின் முடிவில் சிவகாமி (ரம்யா கிருஷ்ணன் அவர்கள் நடித்த பாத்திரம்) தனது மகனுக்கும், தனது கொழுந்தன் மகனுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் வயதில் முடிகிறது.

எழுதிய ஆசிரியர், மிக தெளிவாக எழுதியுள்ளார். அன்றய சரித்திரம், உண்மை கதையா என்று தெரியாது. உண்மையா இருந்தாலும், கற்பனையாய் இருந்தாலும் இன்று அந்த கதை தெரிவதால் சோறு கிடைக்கப்போவது இல்லை.

சிவகாமி ராஜ்யத்துக்கு  வந்த நோக்கம் அந்த அரசாங்கத்தில் பலரை கொலை செய்ய. அவள் அப்பாவை அரசாங்கம் வீண் பழி சுமத்தி சோமதேவா என்ற அரசன் ( பிஜ்ஜலா தேவாவின் -நாசர் அவர்கள் நடித்த பாத்திரம்  – தந்தை) மரண தண்டனை கொடுத்து விடுவான்.

கட்டப்பா-Bahubali Must Read Books

கட்டப்பா (சத்யராஜ் அவர்கள் நடித்த பாத்திரம்)  ஒரு முட்டாள் அடிமை. திரை படத்தில் பார்த்தால், சிவகாமி, கட்டப்பா மேல் ஒரு பற்று வரும்.

கதையிலும் அப்படிதான். ஆழமாக புரிந்து கொண்டாள், இந்த முட்டாள்தனமான நம்பிக்கையை யார் விதைப்பது என்ற ஒரு கேள்வி வரும்.

நாசர் அவர்களின் கையை முடமாக்கியது, சிவகாமியின் உத்தரவின் பெயரில், கட்டப்பா வர்மக்கலையை பயன்படுத்தி பிஜ்ஜலாவின் கையை விளங்காதபடி செய்து விடுவார்,

உண்மையில் சிவகாமி தனது கணவனை கொள்ளவே விரும்புவாள். அரசியல் சதுரங்கத்தில், அவள் கொன்று விட்டால், விதவை ராஜ மாதாவாக இருக்க அனுமதி இல்லை.

மூத்த இளவரசன்-Bahubali Must Read Books

பிஜ்ஜலா (நாசர்) மூத்த இளவரசன். பதவிக்கு உரியவன். அவன் ஆண்டாள் நாடே நாசமாகிவிடும். பொல்லாதவன். மக்கள் இவன் அரசனாவதை விரும்பவில்லை.

பிஜ்ஜலாவுக்கு, மேகலை என்ற கடரிமண்டலம் என்ற நாட்டு இளவரசி மனைவி. கடரிமண்டலம் கலாச்சாரம், பெண்கள் ராஜ்ஜியம். எம் ஜி ஆர் நடித்த குலேபகாவலி கதை தான்.

பிஜ்ஜலா, அவளை மகிஷ்மதிக்கு அரசியாக்கி விடுவான். இதெல்லாம் ஒளித்து காட்டியது, சிவகாமி.

ஒவ்வொரு பாத்திரமும் எப்படி செயல் படுகிறது. என்ன நினைக்கிறது, எப்படி தனது நம்பிக்கையை வைத்துக்கொண்டு முடிவுகள் எடுக்கிறது என்பதை கற்றுக்கொள்ளலாம்.

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே, என்பது ஒரு நம்பிக்கை. கட்டப்பா, 3 தலைமுறையாக அடிமை. கட்டப்பா தம்பி மனைவியை கற்பழித்து கொள்வது பிஜ்ஜலா.

பழி வாங்க நினைக்கும் தம்பிக்கு ஆதரவு கொடுக்காதவன் கட்டப்பா. கட்டப்பா தம்பி சிவப்பாவை, கட்டப்பா கொன்று விடுவார். சிவப்பா, சர்வ சுதந்திரமாக வாழ நினைத்தவன். கட்டப்பா, தனது முன்னோர்கள் தங்கள் வாரிசு அடிமையாக இருக்க வாக்கு கொடுத்ததில், ஒரு வகை முட்டாள் தனமான மூட நம்பிக்கை உடையவர்.

கடமையை செய்வேண், பலன் எதிர்பார்க்க மாட்டேன் என்பவன் கட்டப்பாவும், அவரின் தந்தையும். சிவப்பாதான் தந்தையை கொன்றவன்.

எது நீதி ஞாயம் என்பது மாறிக்கொண்டே இருப்பதை இந்த கதை படிப்பது ஆழ்ந்த புரிதல் கிடைக்கும்.

அரசன் சோமதேவா (நசர் அப்பா) ஒரு முறை, பல பெண்கள் மேலாடை இல்லாமல் நடனம் பார்த்துக்கொண்டு இருப்பார். தலைமை வேசி, ஒரு அரசியல் ஆலோசனை சொல்லிவிடுவாள், அந்தரங்க நேரத்தில். சோமதேவாவுக்கு கோபம் வந்து, அவளை ஒரே குத்தில் மூக்கு உடைத்து ரத்தம் கொட்டும்.

அன்று அரசன் ஆண்ட விதம், தனது அதிகாரத்தை வைத்துதான். தனக்கு கோபம் வந்தால், மூக்கை உடைத்து கொலையும் செய்யலாம்.

அரசாட்சியை மக்கள் ஆட்சி ஒழித்துக்கட்டி விட்டது. படிப்படியாக, எது ஞாயம், என்று புது அர்த்தம் உருவானது. ஆனால் இன்னும் நமக்கு அடிப்படையான மிருக குணம் போதிய மாற்றம் பெற வில்லை என்பது தான் உண்மை.

சிவகாமிக்கு, பாகுபலிக்கும் நல்ல மதிப்பு வந்ததே, மக்கள் மேல் உள்ள அன்பும், பல வித மாற்றத்துக்கு அனுமதித்தது தான்.

இன்று ஒரு பெரும் தொழில் அதிபருக்கு உள்ள சர்வ சுதந்திரம், ஒரு நேசிக்கும் உண்டு. சிங்கப்பூர், அமெரிக்க போன்ற நாடுகளில், வேசி பேரம் பேசி முடிவுக்கு வரலாம்.

அரசாட்சியில், அரசனுக்கு பிடித்து விட்டால் போதும், எவன் பெட்ரா பிள்ளையையும் கொண்டு வரலாம். வைத்துக்கொள்ளலாம்.

என்னை மதிக்க வேண்டும்

என்னை மதிக்க வேண்டும் என்ற ஒரு மோட்டிவ், பல மனிதர்களுக்கு, உண்டு.

நமது கலாச்சாரத்தில் கூர்ந்து கவனித்தால், மற்றவரை மட்டமாக்கி பேசுவதில் ஒரு முறை இருக்கும்.

எத்தனையோ சீன வாடிக்கையாளர்கள், தான் இந்திய சுற்றுப்பயணத்தில், கிராமங்களில் அப்படியே, வேஷ்டியை தூக்கி, மலம் கழிக்க உட்காருவதை மட்டமாக, கேலியாக, என்னிடம் விமர்சித்தது உண்டு.

ஒரு ஆன்மீக இயக்கத்தில், சீனர்கள் கேவலமான  துடைக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்று தமிழ் பக்தர்கள் மட்டப்படுத்தியதுண்டு.

நீ என்ன கேவலமான சீர் கொண்டு வந்தாய் என்று மாட்டப்படுத்திய மாமியார், நாத்தனார் போன்ற உறுப்பினர்களை நான்  பார்த்ததுண்டு.

நான் அரசன், எனது ஆதிக்கமே செல்லும் என்ற அரசன் கோட்பாடும், சீர் பற்றவில்லை, துடைப்பவன் நீ, போன்ற செயல்களும் எல்லாம் ஒரே விதையில் உருவான மனோவியல் ரீதியான உறுப்பினர்கள் அல்லது சகோதர/சகோதரிகள்தான்.

மதிப்பு என்றால் என்ன ஒரு சம்பாஷனை

ஒரு அறிவு இல்லாதவனும், தெரிந்து கொள்ள விரும்புபவனும் இடையில் நடந்த உரையாடல்-கேள்வியும் பதிலும்.

தெரிய விரும்புபவன்:

யாரோ, எங்கோ சம்பாத்தியம் செய்பவர்கள், மற்றும் வசூல் செய்யும் திறமை உள்ளவர்கள் ஒரு கோவில் கட்ட முன்வரும்போது நீங்கள் ஒதுங்கி வேடிக்கை பார்க்கலாமே?

அறிவு இல்லாதவன்:

அது எப்படி முடியும். எனக்கு முதல் மரியாதை கொடுத்தால் தான் கோவில் கட்ட விடுவேன். இல்லாவிட்டால், இடையூறுகள் செய்வேன்.

தெரிய விரும்புபவன்:

மதிப்பு என்றால் கேட்டு வாங்குவது இல்லை. ஏதாவது சாதித்து இருந்தால், மதிப்பு வரும் என்று கேள்விப்பட்டேனே?

அறிவு இல்லாதவன்:

இருக்கலாம். ஆனால் எனக்கு முதல் மரியாதை வேண்டும்.

அவர்களுக்கு ஆயிரம் கோவில் உண்டு

தெரிய விரும்புபவன்:

சம்பாதித்து சாதித்தவர்களும், வசூலில் சாதித்தவர்களும், ஒன்னும் சாதிக்க இயலாத உனக்கு முதல் மரியாதை எப்படி கொடுப்பார்கள்?

அவர்களுக்கு ஆயிரம் கோவில் உண்டு வழிபட, சேவை செய்ய. உனது இடையூர்களால், கோவில் கட்டுவதை நிறுத்திக்கொண்டால் யாருக்கு என்ன லாபம்?

அறிவு இல்லாதவன்:

!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தெரிய விரும்புபவன்:

ஒரு உதாரணம், மேல மருங்கூரில், இந்த கோவிலில் எத்தனை எளியவர்கள் பயன் பெறுகின்றனர். கும்பாபிஷேகம் முடிந்து ஏழு மாதத்தில் எதனை அன்னதானம், பூஜைகள், வழிபாடுகள்?

இது போன்ற நல்ல விஷயங்கள், நமது கிராமத்தில் நடக்காமல் போய் விடுமே?

அறிவு இல்லாதவன்:

எவன் சாப்பிட்டால் எனக்கு என்ன? பட்டினியா கிடந்தாள் எனக்கு என்ன? எத்தனை வசதி இல்லாதவர்கள் நமது ஊரில் திருவிழா கொண்டாட வாய்ப்பு இல்லாமல் போனால் எனக்கு என்ன?

எனக்கு முதல் மரியாதை தந்துவிட்டு அனைத்தும் செய்து தொலையட்டும்.

விஸ்தாரமில்லாத அறிவு உனக்கு

தெரிய விரும்புபவன்:

நீ பாகுபாலிகாலத்தில் உள்ள கட்டப்பா மாதிரி ஆட்கள் இப்போது இல்லை. நீதான் பாகுபலி காலத்து பிஜ்ஜலதேவா (நாசர் ) மாதிரி இருக்கிறாய்.

உலகம் நிறைய மாறிவிட்டது. கட்டப்பா வாரிசுகள் படித்து, பெரிய சாதனை வீரர்களாய் இருக்கின்றனர். உன்னை கேட்டு கேட்டு கோவில் நிர்வாகம் செய்ய இயலாது. காரணம், நீ ஒரு கிணற்றுத்தவளை. வெளி உலகம் தெரியாத மனிதன்.

உன்னால், டி கடையில் உட்கார்ந்து, சீனன் துடைப்பவன், அவள் சீர் கொண்டு வரவில்லை என்று கறுத்து பரிமாற்றம் செய்யலாமே தவிர, உன்னால் ஒன்றும் செயல் படுத்த முடியாது.

உன் பேச்சை இந்த ஊரில் எத்தனை பேர் கேட்க முன் வருகின்றனர்?

அறிவு இல்லாதவன்:

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்த கோவிலை கட்ட விடாமல், செயல் பட விடாமல் பல இடையூறுகள் செய்தேன் என்று பெருமை பட முடியும்?

தெரிய விரும்புபவன்:

நான் திருடன், நான் கற்பழிப்பவன், நான் அடுத்தவன் மனைவியை தொடுபவன். நான் கஞ்சா விற்பவன், உபயோகிப்பவன் இப்படி எதனை பேர் ஊரெல்லாம் சொல்லி பெருமை அடைய முடியும்?

மேல் கூறியது சட்டப்படி திருடுவது கற்பழிப்பது குற்றம். மேற்கண்ட செயல் நமது குடும்ப உறுப்பினர் செய்தாலும், நாமக்கு அறிவு என்று ஒன்று இருந்தால், வெட்கப் படுவோம், அல்லது வருந்துவோம்.

அதெ போல் சட்டப்படி குற்றம் இல்லாத செயல் பல உள்ளது. ஒரு உதாரணம்-எனது அப்பன், மகன் குடிக்கு அடிமை, என்றும் பெருமை அறிவுள்ளவன் அடைய மாட்டான்.

எத்தனை பேர் நான் இந்த கோவிலை கட்ட விடாமல், செயல் பட விடாமல் பல இடையூறுகள் செய்தேன் என்று பெருமை பட முடியும். எனக்கு தெரிந்து அப்படி அறிவுள்ளவன், தனது குடும்பத்து உறுப்பினர் செய்து இருந்தாலும், வெட்கப்படுவானே ஒழிய பெருமையடைய மாட்டான்.

கோவில் கட்டியவன், பண பலம் இல்லாதவன், கோவிலில் ஒரு செடியை நெட்டு வைத்து, அதுவும் முடியாதவன், வாசலை கூட்டி பெருமை அடைவதை நான் பார்த்து இருக்கிறேன்.

இது ஏற்றுக்கொள்ள கூடிய பெருமைதான்.

நீ எப்படி?

அறிவு இல்லாதவன்:

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தெரிய விரும்புபவன்:
டாக்டரிடம் சென்று நாம் நாக்கை நீட்டி, பணத்தை, கொடுத்து வைத்தியம் பெறுகிறோம். அவசியம் வரும்போது, இதயம், வயிறு போன்ற பகுதிகளை, கிழித்து, வைத்தியம் செய்ய சொல்கிறோம். ஏன்?

டாக்டரை ஏன் நம்புகிறோம்? அவரின் விஸ்தார வைத்திய படிப்பும், அவர் பெற்ற அறிவையும் நம்புகிறோம். மக்கள் நம்புகின்றனர்.

இண்டர்வீயூ என்ற பெயரில், இவர் ஆடிட்டர், இவர் டாக்டர், இவர் நர்ஸ், இவர் நிர்வாகி, இவர் ஆசிரியர், என்று தீர்மானம் செய்யப்படுகிறது.

நமது வீட்டு குழந்தைகளை, பள்ளி ஆசிரியர்களிடமும், வருமானத்தை ஆடிட்டரிடமும், நமது உடல் உபாதைகளை டாக்டர்கள் பொறுப்பிலும் விட்டு விடுகிறோம்.

உனக்கு என்ன தகுதி உள்ளது? கோவில் நிர்வாக தகுதி என்ன உள்ளது? நான் நமது ஊரில் உள்ள கோவிலை, பாழாகாமல் புல்களை புடுங்கி, சுத்தமாக வைத்து நிர்வாகம் செய்த தகுதியாவது இருக்கிறதா?

ஒளவை, கந்தையானாலும் கசக்கிக்கிட்டு என்றது போல், செலவு செய்ய வசதி இல்லா விட்டாலும், கோவிலை சுத்தமாக வைத்துக்கொள்ள, பராமரித்து பல சேவை செய்த தகுதியாவது இருக்கிறதா?

அல்லது நீ சொல்வதை கேட்டு, ஒருங்கிணைய, எதனை பேர் ஊரில் இருக்கின்றனர்? ஒருங்கிணைந்து, புல்லை புடுங்கவோ, கோவிலுக்கு வர்ணம் பூசவோ, கழுவவோ, எதனை பேர் நீ கூப்பிட்டால் வருகின்றனர்? நீ மரியாதை பெற என்ன தகுதி வைத்து இருக்கிறாய்?

அறிவு இல்லாதவன்:
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சொன்னதை பெரும் பெரும் தொழில் அதிபர்கள் கேட்டார்கள்.

தெரிய விரும்புபவன்:

ஹரே கிருஷ்ணா கோவில் ஸ்தாபகர், பிரபுபாதா வெறும் 40 ரூபாயில் அமெரிக்கா சென்று, ஆயிரக்கணக்கான, பக்தர்களை உருவாக்கி சாதனை செய்தார். அவர் சொன்னதை பெரும் பெரும் தொழில் அதிபர்கள் கேட்டார்கள்.

உனது பேச்சை எத்தனை பேர் கேட்கின்றனர்?

மற்றவர்களை உன்னால் ஒரு புல்லை புடுங்க வைக்க முடியுமா?

அறிவு இல்லாதவன்:

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தெரிய விரும்புபவன்:

சரி, முன்னோர்கள் கட்டின கோவில்தான் கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது தெரியுமா?

மருங்கூரில், பொதுவான, கோவில் கட்ட வந்ததால் பிரச்னை என்று கேள்வி பட்டேன்.

ரூபாய் 50 லட்சம் செலவு செய்தவர்களுக்கு, சில படித்தவர்கள் ஒரு கமிட்டீ அமைத்து, ஒரு இடத்தை வாங்கி ஒரு புது கோவிலை உருவாக்க அதிக நேரம் பிடிக்காதே?

(இதை சூரக்குடி வக்கீல் ஐயா அவர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.)

அறிவு இல்லாதவன்:

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

Leave a Reply