What is the purpose behind the main purpose the Core Purpose Behind the Purpose?
முக்கிய நோக்கத்தின் பின்னால் இருக்கும் நோக்கம் என்ன?
ஒரு எறும்பு சட்டையில் ஊர்ந்தால் அதன் நோக்கம், அதன் கண்ணுக்கு இரை எங்கோ தெரிகிறது என்று பொருள். இரையை தேடி போகிறது என்று பொருள்.
அன்னதானம் கொடுப்பது, அன்னதானத்தை சாப்பிடுவது, கோவில் கட்டுவது, அணைத்து அசைவுகளும் நோக்கம் இருக்கும். அந்த நோக்கம் சரியான நோக்கமாக இருந்தால் சரிதான்.
தவறான நோக்கமாக இருந்தால் அதை சரி செய்ய வேண்டும்.
உதாரணம் கோவில் கட்டி தருகிறேன் என்று நான் சொல்லவில்லை. கட்டி கொடுக்க சொன்னவர் பல பல இடையூறுகள் செய்தார்.
இவர்களை நாம் சரி செய்யத்தான் வேண்டும். இந்த நோக்கம் என்ற ஒரு புரிதல் இதை படிப்பவர்களுக்கு வந்து விட்டால், இதை எழுதிய எனக்கு வெற்றி என்று கருதலாம்.
நிர்வாகம் பற்றிய ஒரு புரிதல்
நிர்வாகம் என்பது என்ன? சின்ன மீனை கொடுத்து பெரிய மீன் பிடிப்பவர் என்று பொருள்.
ஒரு மூட்டை நெல் போட்டு 100 மூடை நெல் எடுப்பவர் என்று பொருள். அதே ஒரு மூட்டை நெல்லில் 150 மூட்டை நெல் எடுத்தால் அவர் நல்ல சிறந்த நிர்வாகி என்று பொருள்.
நான் பணம் ஒன்னும் தர மாட்டேன், எனக்கு தலைவர் பதவி கொடு என்பவர். நானும் பணம் தர மாட்டேன், அனால் ஒரு லட்சம் வசூல் செய்கிறேன். எனது மரியாதையை விற்று முதல் மரியாதை திட்டத்தில் வசூல் செய்கிறேன் என்கிறார்.
இதில் யார் சிறந்த நிர்வாகி? நிர்வாகம், அதில் உள்ள வேலைப்பளு இதெல்லாம் புரியாதவர்களுக்கு நாம் புரிய வைத்து நேரத்தை வீண் செய்து விடக்கூடாது.
நிர்வாகம் பற்றிய ஒரு புரிதல் இருந்தால் தான் நான் எழுதியது ஆழமாக புரியும்.
Core Purpose Behind the Purpose-நோக்கத்தின் பின் மறைந்திருக்கும் நோக்கம்
Core Purpose Behind the Purpose-என்றால் நோக்கத்தின் பின் மறைந்திருக்கும் நோக்கம் என்று பொருள்.
முகூர்த்த மாதங்களில் திருமணங்கள் ஊர் உலகங்களில் நடைபெறுகின்றதே, ஏன்? இது பற்றி கிறுக்கன் தான் கேள்வி எழுப்புவான். ஆரோக்கிய மூளை உடையவன் இப்படி கேட்கவே மாட்டான்.

என் மனம் திருப்தி அடையவில்லை கலாச்சாரம்
என் மனம் திருப்தி அடையவில்லை என்ற கலாச்சாரத்தில் மூழ்கி அதிலே வாழ்ந்தால் எனது மனதை திருப்தி படுத்தத்தான் உலகமே இருக்கிறது என்ற மாயையில் சிக்கிக்கொள்வோம்.
திருவிளையாடல் திரைப்படத்தில் ஒரு அரசன், வேறு வேலை இல்லாமல், தனது மனைவியை கொஞ்சி குலாவி விட்டு, அவளின் கூந்தலில் நறுமணம் சம்பந்தமான பிரச்னைகளை அரசசபைக்கு கொண்டு வருவது டூ மச் இல்லையா?
நாட்டின் மக்கள் நல்லா இருந்தவர்கள் என்றால், வசதியாக அந்த நாடு இருந்து இருந்தால், கேவலம் கூந்தளுக்கு புலவர்கள் வர மாட்டார்கள்.
அதனால் தான் அரசாட்சியை ஒழித்துக்கட்டி மக்களாட்சி வர வேண்டியதாகி விட்டதோ? நாட்டு நிர்வாகம், தலைமைத்துவத்தின் நோக்கம் அறியாத அரசனோ? .
எட்வர்ட் டீ போனோ நாம் எப்படி சிந்திக்கிறோம், எப்படி சிந்திக்க வேண்டும் என்று சில டசன் புத்தகம் எழுதியுள்ளார். நாமோ நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.
எனக்கு கேட்க தோன்றுகிறது
எனக்கு கேட்க தோன்றுகிறது.அதுவும் எட்வர்ட் டீ போனோ வின் நூல்களை படித்த எனக்கு இப்படி கேள்வி கேட்க தோன்றுகிறது.
எட்வர்ட் டீ போனோ லேட்டரல் திங்கிங் போன்ற பல நூல்கள் எழுதியவர்.


சேபியன் என்ற மனித குரங்கிலிருந்து பல பல பரிணாம வளர்ச்சி
ஆழ்ந்து யோசித்தாள், நமது முன்னோர்கள் மனித குரங்காக இருந்த காலத்தில் திருமணம் செய்வதில்லை, அப்படி ஒன்று தேவை பட்டிருக்கவில்லை . பிறகு திருமணம் என்று கண்டுபிடித்து, என் கணவன்/கணவன்கள் என் மனைவி/மனைவிகள் என்று ஒரு வட்டத்தை உருவாக்கி இருக்க வேண்டும்.
மூளை வளர்ச்சி, கலாச்சார வளர்ச்சி படிப்படியாக சாட்சியுடம் திருமணம் நடத்தி வைக்கும் அவசியம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
இந்த அடிப்படையில்தான் திருமண சடங்குகள் உருவாகி இருக்க வேண்டும்.
இன்றய நிலையில், வசதிகள் கூடி விட்டதால், என் வசதி கூடவா, உன் வசதி கூடவா என்று காட்ட வேண்டும் என்று திருமணம் நடத்தி வைக்கின்ற நிலை வந்து விட்டது.
பணம் உள்ளவன் வசதியை காட்டுவது ஒன்றும் பிரச்சனை இல்லை. பணம் உள்ளவர், பணம் இல்லாதவர் திருமணத்தின் பின் மறைந்திருக்கும் நோக்கத்தை மறந்து அல்லது அது பற்றிய ஞானம் இல்லாமல் நடத்துவது ஆபத்தில் முடிய அதிக வாய்ப்பு உள்ளது.
சேபியன் என்ற மனித குரங்கிலிருந்து பல பல பரிணாம வளர்ச்சிக்கு பிறகு இன்றய நிலையில் இருக்கிறோம். நமது மைய தலைப்பு நோக்கத்தின் பின் மறைந்திருக்கும் நோக்கம். ஆக தலைப்பை தாண்டி ரெம்ப தூரம் போய் விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளதால், விஷயத்தை நச்சு என்று சொல்ல முயற்சிக்கிறேன்.
மற்ற மிருகங்கள் குட்டிகள் குறிகிய காலத்தில் இறை தேடி, அதன் வாழ்வை சர்வ சுதந்திரமாக வாழ்கிறது. நமது குழந்தைகள் பால் குடிக்கவே கற்பிக்க வேண்டியுள்ளது.
இதெல்லாம் கருத்தில் கொண்டு சமுதாயம். திருமணம் என்று வந்திருக்க வேண்டும்.
இன்று திருமணம் என்றால் பல பல நபர்களுக்கு வருமானம் தருகிறது. புரோகிதர், மண்டபம் வாடகை, சாப்பாடு என்று அனைவரும் வருமானம் அடைகின்றனர்.
சீர் என்ற பெயரில் ஒரு பக்கம் பெண்ணை பெற்றவர்கலின் பணத்தை உறுஞ்சி எடுத்துவிடுகிறோம். மற்றொரு பக்கம் ஜாதி என்ற போர்வையில், ஜாதி வெறியர்கள் மணமக்களை எரித்த கதைகள் நிறைய சினிமா வாக வெளிவருகிறது.
பிறரை குறை கூறும் முன்..நம்மிடம் உள்ள குறைகளை சரிசெய்வோம்
திருமணம் என்ற ஒரு கான்செப்ட்
திருமணம் என்ற ஒரு கான்செப்ட், அதன் உண்மையான நோக்கத்த்தின் பின் நோக்கம் நிறைவேற்றப்படுகிறதா?
எனது திருமண காலத்தில், எனக்கு நிறைய அறிவுரைகள் சொல்ல தூதுவர்களாக வந்தார்களே தவிர, மறந்தும் உனக்கு என்ன வேண்டும் என்று மட்டும் கேட்க வில்லை. வாழ போகும் உனக்கு என்ன வேண்டும் என்று மட்டும் கேட்கவே இல்லை. இது எனது கதை இல்லை, நோக்கம் பற்றிய ஒரு தலைப்பு. இது ஒரு சிறிய உதாரணம்.
ராமகிருஷ்ணர் பரமஹம்சருக்கு திருமணம் செய்த இரவில், தன் மனைவியை அம்பாளாக பார்த்தவருக்கு திருமணம் செய்து வய்த்த நபர்களின் நோக்கம் என்ன?
தனது மகன் வலிப்பு உள்ளவன் என்று தெரிந்தும், போதிய ஆண்மை யுடன் செயல் பட முடியாத வன் என்று அறிந்தும் சமீபத்தில் பெண்ணை சாமர்த்தியமாக மலேசியாவில் பேசி முடித்த மாப்பிள்ளையை பெற்றவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும்?
மேற்கண்ட உதாரணங்களில் சரியான நோக்கத்தின் அடிப்படையில் செயல்படவில்லை என்று புரியவரலாம்.
கௌரவத்தை, அந்தஸ்தை, ஜாதியை, காப்பாற்ற திருமணங்கள். தனது பிள்ளை க்கு வலிப்பு நோய் இருந்தாலும், வேறு எவனோ பெற்ற பிள்ளையை மிக மிக சாதுர்யமாக திட்டம் போட்டு மருமகளை சிக்க வைப்பது. இன்று படித்த பிள்ளை திருமணத்தை தூக்கி எரிந்து விட்டு வந்து விட்டது.
மாம்பழம் இந்த விதமான இனிப்பையும், தேனில் அந்த விதமான இனிப்பையும் எதிர் பார்க்கிறோம்.
ஏன் திருமணத்தில், கும்பாபிஷேகத்தில், என் மனதை திருப்தி படுத்த வேண்டும் என்ற எதிர் பார்ப்பு வருகிறது?
கோவில் கட்டிய நோக்கம் என்ன?அதன் நோக்கத்தின் பின் மறைந்திருக்கும் நோக்கம் தான் என்ன ?
What was the Core Purpose Behind the Purpose
இன்று திருமணம் செய்து வைத்தால் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ வேண்டும் என்ற அடிப்படை அறிவு பள்ளியில், சினிமாவில் கிடைத்து விடுகிறது.
கோவில் கட்டும் நபர்களின் நோக்கம் என்ன என்ற அறிவை எங்கே பெறுவது? ஊர் கூடி தேர் இழுப்பதை பற்றி போதித்த எத்தனை பேர் தேர் கட்டி முடிப்பதற்குள் கழண்டு கொண்டனர்?
36 வருடங்களாக கோவிலை கண்டுகொள்ளாதவர்கள் 45 லட்ச ரூபாயில் கட்டிய கோவிலுக்கு எத்தனை பேர் இன்று வரை உழைக்கின்றனர்?
கோவில் கட்ட சொல்லியவரின் நோக்கத்தின் பின் என்ன நோக்கம்? மாலை பதவியா? ஐயர்களை வராமல் தடுக்க முயன்ற நோக்கத்தின் பின் என்ன நோக்கம்?
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் அறிந்த எத்தனை பேருக்கு கோவில் நாமாக வலியக்க சென்று சேவை செய்யும் தளம் என்பதை புரிந்து கொள்ள மறுக்கின்றனர்?
அது தனக்கு மாலை, தேங்காய் கொடுத்து மதிக்க வேண்டிய தளம் என்று கருதும் கலாச்சாரத்துக்கு இன்னும் பரிணாம வளர்ச்சி வரவில்லையா?
என் கழுத்துக்கு மாலை தேங்காய் வேண்டும் என்பதற்காக 45 லச்ச செலவில் கோவில் கட்டுவதா? மாதா மாதம் மாலை கடை சென்று அடிக்கடி நாமே வாங்கி போட்டுக்கொள்ளலாமே?
கோவில் வழிபாட்டின் நோக்கம்
கோவில் வழிபாட்டின் நோக்கம் தனது ஆணவத்தை அலிப்பதுதான் தலையாய நோக்கம் என்பது எத்தனை நபர்களுக்கு தெரியும்?
கோவில் வழிபாடு a, b, c , d கற்கும் கிண்டர் கார்டன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? கிண்டர் கார்டன் தாண்டாமல் அடுத்த படிக்கு போக முடியாது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
சரியான நோக்கம் மையமாக வைத்து செயல் படுகிறதா?
சரியான நோக்கம் புழக்கத்தில் இருக்கிறதா என்பதை கண்காணித்து செயல் படுத்துவது/சரியாக இயக்குவது தான் நிர்வாகம் & தலைமைத்துவம்.
கோவில் வாட்ஸ் அப் குழு அதன் நோக்கம் சரியாக இருந்ததா என்பதே எனக்கு ரெம்ப நாட்களாக சந்தேகம் தான். மன வருத்தங்களும், பஞ்சாயங்களும் இருந்துஇருந்தால் அதன் சரியான நோக்கம் என்ற தண்டவாளத்தில் ஓட வில்லை என்று பொருள்.
பஞ்சாயம் செய்யும் இடம் புளிய மரத்தடி தான் சரியான இடம் என்று நடிகர் விஜயகுமாரும், விஜயகாந்தும் காட்டி இருக்கிறார். கண்டிப்பாக வாட்சப் குழு இல்லைதான்.
திருமணம் போன்ற குடும்ப வைபவங்களுக்கு என் அழைக்கப் படுகிறது?
நாம் அழைக்கப்படுகிறோம் என்றால் நாம் கலந்து கொள்வது அழைப்பவரின் குடும்பத்துக்கு சிறப்பு என்று கருதுவது தான்.
என்னை சில வியாபாரிகள் அவர்கள் வீட்டு வைபோகத்துக்கு மதுரை வரை வந்து கலந்து கொள்ள சொல்லி, நான் சென்றதுண்டு. வரவேற்பதாக எங்கள் கம்பெனி பேனர் செய்து போட்டு எங்களை திருப்தி படுத்தினார்கள்.
நமது நடத்தை, நாம் பழகும் விதம், முக்கியமாக இது போன்ற வைபோகங்களில் நாம் ஏற்படுத்தும் பிரச்சனைகள் மக்கள் நமது வரவை விரும்ப மாட்டார்கள்.
இவர்கள் வரவால் சிறப்பு என்று கருதுவதற்கு பதிலாக, இவர்களை அழைத்தாள் பிரச்னை, வைபரேஷன் பொசிட்டிவ் ஆக இருக்காது என்று அழைப்பவர் கருதாமல் இருக்க நாம் நம்மை சரியான பரிசுத்த நோக்கம் அறிந்து நடக்க வேண்டியுள்ளது.
வழிய வந்து பொறுப்பேற்கும் கலாச்சாரம் என்று வரும்?
எனது திருமண காலத்தில் அறிவுரை வந்தது போல், 45 லச்சத்தில் கோவில் கட்ட நான் வந்து ஊர் மக்கள் பற்றி தெரிய வேண்டும் என்று அறிவுரைகள் தந்த அளவுக்கு வழிய வந்து பொறுப்பு ஏற்ற மக்கள் மிக்க கம்மி தான்.
வழிய வந்து அறிவுரை கூறும் கலாச்சாரத்தை ஒளித்து கட்டிவிட்டு, வழிய வந்து நான் குறிப்பிட்ட பொறுப்பை ஏற்கிறேன் என்று கலாச்சாரம் என்று உருவாகும்?
யூ டியூபில், பேஸ் புக்கில் நான் பப்லிஷ் செய்கிறேன் என்று சொல்ல ஆள் இல்லையா?
சுமார் 8,10 மாதங்களுக்கு முன் கல் வெட்டில் பெயர் போட டைப் செய்து தரச்சொல்லி பல பல தடவை குழுவில் பேசியது எனக்கு தொண்டை வழித்ததுதான் மிச்சம்.
நான் வாட்ஸாப் குழுவுக்கு தலைமை ஏற்கிறேன் என்று எத்தனை பேர் வருகின்றனர்? குறை சொல்லிமட்டும் ஒரு காரியமும் சாதிக்க முடியாது.
மற்றவர் அறிவுரையையும் (எனது திருமண காலத்தில் 24 வயது), குறைகளையும் கேட்பதற்கும் நான் கோவில் கட்ட முயற்சிக்கவில்லை. இப்பொழுது வயது 60தை தாண்டிவிட்டது.
36 வருடம் முன்பு கிராமத்து காரர்கள் பிரச்னைகல் என்றும், இன்று செட்டியார் சார்ந்த வர்களிடம் பிரச்னை என்று கிராமத்தில் பேச்சு அடிபடுகிறது.
ஏன் எனில் பெரிய பிரச்னையாக இருந்த போலீஸ் சென்றவர்களை கமிட்டீ முறியடித்து விட்டதால், கிராமத்தில் காமிட்டிக்கு ஒத்துழைப்பு தரும் மக்கள் இம்முறை சரியாக செயல் படுவதாக கேள்வி.
இப்படிக்கு
MKP பாண்டுரங்கன்