புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 9-Critizise or குறை கூறல்

Critizise or குறை கூறல்

Critizise or குறை கூறல், அதாவது மற்றவர்களை குறை கூறும் பழக்கம் வரவேற்க தக்கது அல்ல. இது நான் போடும் உத்தரவு இல்லை. அப்படி நான் போடும் உத்தரவை யாரும் கேட்கப்போவது இல்லை.

What is the benefit of criticizing to another or to the critic?
குறை கூறுவதால் மற்றவருக்கு அல்லது குறை கூறுபவர்க்கு என்ன பலன்?

சட்டப்படி ஒரு குற்றம் செய்தால், சட்டப்படி தண்டிக்கப்படுகிறோம்? இது நிர்பந்தம், நமது மேல் திணிக்கப்பட்டது. திருடுவது, கற்பழிப்பு கிரிமினல் குற்றம். வரி ஏய்ப்பு, அத்தனை கடுமை இல்லாத குற்றம்.

நடை முறை வாழ்வில் இது போன்று திணிக்கப்பட முடியுமா?

உதாரணம் என்னை “வாங்க” என்று வரவேற்க வில்லை என்று குறை சொல்லலாம்.

எனது உறவினர் அவர் வீட்டு திருமணம் போன்ற விசேஷத்துக்கு கூப்பிடவில்லை, அல்லது வாய் நிறைய கூப்பிடவில்லை என்று குறை கூறுவதால் யாருக்கு என்ன பலன்?

என்னை மதித்து வாய் நிறைய கூப்பிட வேண்டும் என்று நிர்பந்தம் செய்ய முடியாது? வற்புறுத்த முடியாது. அன்பை திணிக்கமுடியாது. மரியாதையை என்ற திரவத்தை ஊசி மூலம் செலுத்த முடியாது.

அனைத்தும் – அன்பு, மரியாதை, மதிப்பு – சம்பாதிக்கப்பட வேண்டியவை.

நான் முதலாளி, உனக்கு சம்பளம் தரும் முதலாளி, வீட்டு எஜமானி அம்மா, என்று சற்று கோபமாக பேசினால் வீட்டு வேலைக்காரியும் ஓடி விடுவாள்.

குறை கூறுதல்
குறை கூறுதல்
குறை கூறுதல்
குறை கூறுதல்
ஆக்கிரமிப்பு செய்த காலம் அந்த காலம், இன்றய காலம் மாறி விட்டது.

ஆக்கிரமிப்பு செய்த காலம் அந்த காலம், இன்றய காலம் மாறி விட்டது.

அந்தக்காலம் மலைஏறிவிட்டது

ஒரு உதாரணம், என்னை வாங்க என்று கேட்க வில்லை என்று எப்படி சொன்னால் கேட்பாரோ அப்படி கேட்க வேண்டும்.

தலைமைத்துவத்துக்கு தேவை படும் திறமைகள்
தலைமைத்துவத்துக்கு தேவை படும் திறமைகள்
1) செல்லாத அதிகாரம்

அதிகாரத்தோணியில், பேசினால் எவரும் இந்த சர்வ சுதந்திரத்தை நாடி வாழும் காலத்தில் யாரும் கேட்க மாட்டார்கள்.

நான் வயதில் பெரியவன், நான் அப்பா, தாத்தா, மாமியார் என்ற அதிகாரம் வாய்ந்த முறையை காரணம் காட்டி அது குற்றம், இது குற்றம் என்றால் யாரும் கேட்க மாட்டார்கள்.

2) தனது மரியாதையை காப்பது எப்படி?

“வாங்க” என்று கேட்க வேண்டும் என்று குழந்தைகளிடம் கொஞ்சியும், பெரியவர்களிட மரியாதையாகவும் அறிவுறுத்த வேண்டும்.
அப்படி “கவனிக்கவில்லை” போன்ற வருத்தம் தெரிவித்து பதில் சொன்னால் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.

இல்லை என்னை அவமானப்படுத்தத்தான் “வாங்க’ என்று கேட்கவில்லை, அழுத்தமாக பிடிவாதமாக பேசினால், பழி சுமத்தினால், சரி அப்படியே இருக்கட்டும் என்று சொல்ல யாரும் தயங்கப்போவது இல்லை.

அதாவது, உங்கள் கருத்துப்படி இருந்து விட்டு போகட்டும். அவமானப்படுத்தத்தான் நான் அப்படி செய்தேன். அதற்கு என்ன? இக்காலத்தில் இப்படி சொல்லவும் தயங்க மாட்டார்கள்.

எனது அப்பா சுருட்டு குடிப்பார், என்பதால் அவரின் சகலை அவர் சுய மரியாதையை காப்பாத்தி கொள்ள பெரிய சகலை ஒதுங்கிக்கொள்வார். சிரியவரை சுருட்டு குடிக்காதே என்று நிர்பந்தம் செய்ய முடியாது.

7 Habits of Highly Effective People
தலைமைத்துவத்துக்கு தேவை படும் திறமைகள்
தலைமைத்துவத்துக்கு தேவை படும் திறமைகள்

“Silence”என்ற தமிழ் சினிமாவின் மையக் கருத்து: நான் ஒழுக்கம் உடையவன். ஒழுக்கமில்லாத மனைவிகளை சர்வ சுதந்திரமாக கொலை செய்வேன்.

தனது கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவியை கொலை செய்வேன்.

திருவள்ளுவரின் திருக்குறள்
அதிகாரம்/Chapter: புறங்கூறாமை / Not Backbiting

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.பிறரை பழித்து பேசுபவர் தன்னை பழிப்பதற்க்கான காரணத்தையும் திறமையுடன் அறிந்து கூற வேண்டும்.

சமுதாயத்தில் உள்ள பிரச்னை என்ன? அவன் அவன் அல்லது அவள் அவள் சட்டம் போடுவது.

அப்படி பண்ணு இப்படி பண்ணு என்று சட்டம் போடுவது. கேட்காதவரை குறை சொல்லுவது.

இதற்கும், துரோகம் செய்யும் மனைவிகளை கொலை செய்வேன் என்ற இரண்டு மனப்பான்மைகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர சகோதரிகள் தான்.

ஒன்று குறை உள்ளவருக்கு மனம் பாதிக்கும், மற்றொன்றுக்கு குறை உள்ள மனைவிக்கு உயிர் போகும்.

தலைமைத்துவத்துக்கு தேவை படும் திறமைகள்
தலைமைத்துவத்துக்கு தேவை படும் திறமைகள்

நிர்வாக படிப்பு, ஞானம், அனுபவம்   இருந்தால் சற்று புரியவரும். ஒரு குழுவை வைத்து விவாகம் செய்து பார்த்தல் தெரியும்.

தலைமைத்துவத்துக்கு தேவை படும் திறமைகள்

எந்த அளவுக்கு பெரிய குழுவை தலைமைத்துவம் செய்ய முடியுமோ அந்த அளவு தொழிலும் விரிவாகும்.

 

தலைமைத்துவத்துக்கு தேவை படும் திறமைகள்
தலைமைத்துவத்துக்கு தேவை படும் திறமைகள்
தலைமைத்துவத்துக்கு தேவை படும் திறமைகள்

முதலாளி தொழிலாளியையோ, தொழிலாளி முதலாளியையோ திருப்தி படுத்த வாழவில்லை. இருவர்க்கமும் தொழில் மூலம் அவர் அவருக்கு தேவை பெறுவதால்தான் நிர்வாகம் நடைபெறுகிறது.

 

தொழிலாளிக்கு சம்பளமும் முதலாளிக்கு லாபமும் கிடைக்கும் வரைதான் தலைமைத்துவமும் நிர்வாகமும் தொழிலும் இயங்கும்.

இப்படிக்கு

MKP பாண்டுரங்கன்

Leave a Reply