Napoleon Hill Works Which Influenced My Life 3

Sree Selva Vinayagar Old Temple
Sree Selva Vinayagar Old Temple

Napoleon Hill Works 3 is more about my life experience.

So, Napoleon Hill Works 3 elaborate, our on thinking pattern.

Napoleon Hill Works Which Influenced My Life 3

நான் எதார்த்தமாக (1985, 1986 இருக்கலாம்), புத்தக கடை சென்றேன். ஹிக்கின் போதம்ஸ் அக்கடையின் பெயர். மேலமாசி வீதியில், மதுரையில் அந்த புத்தகத்தை பார்த்தேன்.

வெறும் ரூபாய் 35க்கு வாங்கினேன். இன்று வரை மீண்டும், மீண்டும் படித்து வருகிறேன். முதல் முதல் வாங்கிய புத்தகம் காணாமல் போய் விட்டது.

அதன் பிறகு அந்த ஆசிரியரின் அதே புத்தகம், அதே தலைப்பில் பல தபால் வலி பாடங்கள், ஆடியோ என்று பல பல ஆயிரம் செலவு இல்லை முதலீடு செய்து விட்டேன்.

சென்ற வாரம் அதே தலைப்பில், மும்பையில் ஒரு ஒன்லைன் பாடம் எடுத்து, 4 நாட்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

 

வினோதமான சீக்ரெட் (இரகசியம்)

இரகசியம் என்று சுமார் 50, 60, 70 வருடத்துக்கு முன் சொன்னது இன்னும் எப்படி இரகசியமாக இருக்க முடியும்?

அன்று அவர் (Earl Nightingale), இதுதான் இரகசியம் என்று ஆடியோவில் பேசி பல ஆயிரம் விற்று விட்டார். நல்ல வரவேற்பை பெற்றது. இன்னும் இரகசியமா?

இன்று Facebook போன்ற பல சோசியல் மீடியாவில் இலவசமாக கிடைக்கும் தகவல் கிடைத்தும் இன்னும் இரகசியமா?

எண்ணமே வாழ்வு, விதைத்ததை அறுப்பான் போன்று பழமொழி குழந்தைக்கும் தெரியும். ஆனால், ஆழமான புரிதல் இருக்கும் என்பதில்லை.

நான் திருட விருப்புகிறேன், அடுத்தவன் மனைவி அல்லது பொருளாதாரத்தை அபகரிக்க விரும்புகிறேன் என்று வெளியில் சொல்ல விரும்பமாட்டோம்.

வெளியில் சொல்ல விரும்ப மாட்டோம் என்றால், உள்ளுக்கும் விரும்பினால் பரவாயில்லையா?

திருமணம் செய்து குழந்தை பெற்று குடும்பம் உருவாக்க போகிறேன் என்று சொல்ல வெட்கப்படலாம், ஆனால் குற்ற உணர்ச்சி இருக்காது.

நான் உழைத்து சம்பாதித்தது என்று பெருமை படலாம். நான், எனது முயற்சியில் கட்டிய கோவில் என்று பெருமை அடிக்கலாம்.

எத்தனை பேர், அவர்கள் முயற்சியில் கட்டிய கோவில் கும்பாபிஷேகம் நடத்த விடாமல், கெடுத்து விட்டேன் என்று பெருமை அடையமுடியும்?

நான் மனைவியுடன் தேனிலவு செல்கிறேன் என்று, நண்பர்களிடம் பெருமையாக, சந்தோஷமாக சொல்லலாம்.

எத்தனை கற்பழிப்பு குற்றவாளிகள், தான் செய்தது மிக சரி என்று சிறைச்சாலையில் பெருமை படுகின்றனர், அந்த குற்றவாளியை பெற்றவளோ, கட்டிக்கொண்டவளோ, அல்லது குற்றவாளிக்கு பிறந்தவர்களோ மிக பெருமை அடைகின்றனர்?

அது வினோதமான இரகசியம் தான். இன்றும், பல பல சோசியல் மீடியாவில் கிடைத்தாலும், இன்றும் மக்களால், அதிகமான மக்களால் அறியப்படாத இரகசியம்தான்.

சுய ஒழுக்கம் முதல் எண்ணங்களில் வேண்டும்

அடுத்தவன் மனைவியை தொட வேண்டும், அவன் பொருளை திருட வேண்டும், கோவில் கும்பாபிஷேகத்தை நிறுத்த வேண்டும், ஐயர் வராமல் மிரட்ட வேண்டும் போன்ற எண்ணங்கள் சுய எண்ண ஒழுக்கம் இல்லாதவர்களுக்கே உரித்தானது.

ஆங்கில வார்த்தை rich என்றால் பணம் என்று பொருள் இல்லை. அதையும் தாண்டிய பொருள். செழிப்பம், வளர்ச்சி போன்ற அர்த்தமும் வரும்.

அதாவது முதலில் செழிப்பமான எண்ணங்களில் உருவாகும் வாழ்வுக்கும், செழிப்பமற்ற எண்ணங்களில் உருவாகும் வாழ்வுக்கும் நிறைய வேற்றுமைகள் உள்ளது.

இப்படிக்கு,

MKP பாண்டுரங்கன்

Leave a Reply