What is the Right Motive in Each Situation?
ஒவ்வொரு சூழ்நிலையிலும் சரியான நோக்கம் என்ன?
Right Motive-ரைட் மோட்டிவ் என்பதன் சரியான பொருள் தமிழில் எனக்கு தெரியவில்லை.
சில அடிப்படை புரிதல் உருவாக்க சில கதை, சம்பவங்கள் சொன்னால் அனைவருக்கும் புரிந்து விடும்.
What is the right motive in any management decision making?
நிர்வாக முடிவுகளில் என்ன மோட்டிவ் இருக்க வேண்டியது அவசியம், என்பதை சரிபார்க்கிறோமா?
சில அடிப்படை புரிதல் உருவாக்க சில கதை, சம்பவங்கள் சொன்னால் அனைவருக்கும் புரிந்து விடும்.
திரௌபதி துகிலுரித்தல் – சேலை உரிதல் – யார் யாருக்கு என்ன என்ன மோட்டிவ்/உந்து சக்தி இருந்தது?
பீமன், அர்ச்சுனன் அண்ணனுக்கு கட்டுப்பட்டனர். மறை நூல்கள் சாஸ்திர அடிப்படையில் எது சரி, தப்பு என்று ஆராய்ந்து, அதன் அடிப்படையில் தர்மன், மூத்த அண்ணன் முடிவுகள் எடுத்தான். பாண்டவர்கள் மோட்டிவ் மறை நூல் & தர்மம்.
கர்ணனின் மோட்டிவ் நண்பன் துரியோதனன் விருப்பம்தான்.
துரியோதனன், தான் ஒரு முறை, கீழே விழுந்து, சற்று நிர்வாணமான போது திரௌபதி சிரித்து அவமானப்படுத்தியது.
பீஷமர், சேலை உரிவதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், சோறு போடும் இடத்தில் இருந்துகொண்டு எதிர்க்க முடியவில்லை, அல்லது அதிகாரம் சொல்லவில்லை.
சரியான மோட்டிவ் இல்லை
ஆக மொத்தத்தில், அங்கே ஒரு சரியான மோட்டிவ் இல்லை என்பது தெரியவரும்.
ஒருவேளை அவளின் அழகை ரசிப்பதாவது ஒரு சரியான மோட்டிவ் என்று ஏற்றுக்கொள்ளலாம். இங்கே சரி தப்பு என்று வாதம் செய்யவில்லை.
மோட்டிவ் பொருத்தம் இல்லாதது என்று சுட்டிக்காட்டுகிறேன்.
காட்டில், அஞ்சாவாசம் அனுபவிக்கும் போது, தர்மனை பார்த்து திரௌபதி கேட்பாள் :
“எனது சேலையை உரியும் போது, கேவலம் ஒரு மறை நூலிலும், பண்டைய முட்டாள் தனமான தர்மத்தையும், அடிப்படையில் எது சரி, தப்பு என்று யோசித்தாய். சுய முடிவு உன்னால் எடுக்க இயலவில்லை. நீ உன்னை இழந்த பிறகு, என்னை அடமானம் வைக்க உனக்கு என்ன உரிமை இருந்தது?”
விதிகள் & சட்டம்
செஸ், கபடி, கேரம் போர்டு விளையாட்டை உருவாக்கினவர்கள், அந்த விளையாட்டை விளையாட குறிப்பிட்ட நியதிகள் புகுத்தினர். அந்த நியதி கடைபிடித்து விளையாண்டாள் தான், அதில் ஒரு கேளிக்கை அல்லது fun கிடைக்கும்.
ஒவ்வொரு விளையாட்டுகளின் பின் நியதிகள் இருந்தே ஆகும். அனால் விளையாட்டு மனித இனத்துக்கு அவசியம் தேவை படடு கிறது. ஆனால், அதே விளையாட்டு, சூதாட்டமாக்கி, அடி கொலை, வன்முறை என்றும் போகத்தான் செய்கிறது.
ட்ராபிக் விளக்குகளில் நின்று பார்த்து போக வேண்டும் என்ற விதியை, நாம் சட்டம் என்று சொல்கிறோம். திருடுவது, மற்றவன் நிலத்தை அபகரிப்பது, மற்றவன் மனைவியை தொந்தரவு செய்வது எல்லாம் குற்றம் என்பது சட்டம். இவைகளும் மனித இனம் அமைதியாக வாழ அவசியம் ஆகிறது.
ஏன் பல வித சட்டங்கள் காலத்துக்கு பொருந்தும் வண்ணம் புதுப்பிக்கப்படுகிறது?
இன்றும் கிராமங்களில், ஒதுக்குப்புறமாக மலம் கழிப்பது, வழக்கத்தில் உள்ளது. அது ஒரு சுகமான அனுபவம். ஆனால், சென்னை போன்ற நகரங்களில், அப்படி செய்வது குற்றமாக்கி சட்டமாகி விட்டது.
அத்தனை லட்சம் மக்கள் வாழும் பகுதியில், அப்பழக்கம் வியாதிகளை உருவாக்கும்.
கோவிட் 19 வந்து முக கவசம் போடாவிட்டால் குற்றமாகியது.
யார் சட்டம் போடுவது? குறிப்பிட்ட நியதி, சட்டம் உருவாக்கிய சட்டத்தின் நோக்கம் என்ன? இன்னும் பழைய நியதிகளுக்கு வேள்யூ அல்லது மதிப்பு இருக்கிறதா?
கோழைகளையும் வீரனாக்கும் புரட்சி தலைவரின் பொன்னான பாடல், இசையரசர், T.M.சௌந்தரராஜன் அவர்களின் ஆண்மைக் குரலில், இப்பாடலை கேட்கும்போது பசுமையான நினைவுகள் நம்மை பின்னோக்கி இழுத்து செல்கிறது, அப்படி செல்லும்போது…மனதில் எப்போதும் மக்கள் திலகமே…!
பகுத்தறிவு பிறந்ததல்லாம் கேள்விகள் கேட்டதினாலே வரும் காலத்திலே நம் பரம்பரைகள்அடி மையில்லையே நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
இந்த நாயகன் இறைவனால் ஆசீர்வாதிக்கப்பட்டவன்
சீர் என்று கொடுத்ததை-கொடுத்து வந்த, பழமையான கலாச்சாரத்தை…
So…
முக கவசம் போடும் சட்டம், பொது இடத்தில் மனித கழிவை வெளியேற்றுவது தடுக்கும் நோக்கம் மனித நலன் கருதிதான்.
கணவன் இறந்ததும், மனைவி உடன்கட்டை ஏற எந்த அடிப்படையில் சட்டம் போடப்பட்டது?
சூதாட்டத்தில், மனைவியை அடமானம் வைப்பது சரி என்ற சட்டம் எப்படி உருவானது?
தன் மகளுக்கு பிரியப்பட்டு, சீர் என்று கொடுத்ததை-கொடுத்து வந்த, பழமையான கலாச்சாரத்தை, அதை ஒரு நியதியாக்கி, 80 களில், எத்தனை மருமகள்கள் கேஸ் வெடித்து இறந்தனர்?
அந்த சட்டத்தின் அடிப்படை நோக்கம் என்ன?
Thus…
துரியோதனன், கிருஷ்ணர் & பலராமன் சகோதரி சுபத்திரையையும், சுபத்திரை துரியோதனயயும் விரும்பியுள்ளனர். பலராமனுக்கு, துரியோதனனுக்கு பெண் கொடுக்க விருப்பம். கிருஷ்ணரின் சதியால் அர்ச்சுனன் பெண்ணை கடத்தி சென்றது தெரிந்த கதை.
அது மட்டும் அல்ல. சகுனி, அஸ்தினாபுரத்தை நாசம் செய்யும் ஒரே குறிக்கோளுடன் வாழ்த்த காரணம், அவன் 5 வயதில், பீஷ்மர், அங்க நாட்டு அரசன் முதல் பல நபர்களை கொன்று ஒரு காந்தாரியை தூக்கி சென்று, திருதராஷ்டனுக்கு கட்டி வைப்பார்.
யார் பெண்ணை கடத்தி, தூக்கி சென்று திருமணம் செய்து வை ப்பது சரி என்ற நியதி போட்டது. அந்த சட்டத்தின் அடிப்படை நோக்கம் என்ன?
பெண்களை ஒரு பொருளாக கருத்தப்பட்டதே, ஒழிய மனுஷியாக கருதவில்லை. அடிமைகளாக கருதப்பட்டனர் என்றும் சொல்லலாம். அவர்கள் வாழ்வுக்கு, ஆண்கள் நியதி வகுத்தனர்.
அடிமைத்தனத்துக்கும் எதிர்ப்பு.
நான் பெண்களுக்கு ஆதரவு தரும் ஹீரோ என்று என்ன வேண்டாம். நான் ஆக்ரமிப்புக்கும், அடிமைத்தனத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.
நான் பல பல, ஆக்கிரமிப்பை அனுபவித்து வந்ததால், அதை எதிர்க்கிறேன். அதை பற்றிய விழிப்புணர்வை வருங்கால அணைத்து இளைஞர், இளைஞிகளுக்கு, உருவாக்க ஒரு சிறிய முயற்சி.
இன்று நாம் அனைவரின் மண்டையிலும் மறை நூல்கள் உள்ளது.
So…
தனது பெண்ணை ஒரு நபருக்கு கொடுக்கப்பட்டது. அந்த தகப்பன் அத்தனை வசதி இல்லை. மருமகனின் நண்பனிடம் நான் பேசி உரையாடியபோது, குறிப்பிட்ட சீர் கொடுத்தே ஆகவேண்டும் என்றும் அதுவே நமது இனத்தில் வழக்கம் என்று கூறினார்.
மாமன் எப்படி கஷ்டப்பட்டாலும், நமது உருப்படாத நியதிக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்று சமுதாயம் வலியுறுத்திகிறது.
எது சரி எது தப்பு என்று நமது அனுபவம், நம்பிக்கை வைத்து தீர்மானம் செய்கிறோம்.
உதாரணம் என் விட்டு பெண்ணுக்கு நான் 100 பவுன் போட்டேன். நீ வந்தவள் என்ன சீர் கொண்டு வந்தாய் என்று எத்தனை மருமகள்கள் களை புண்படுத்தினர்? அந்த சீர் கொடுக்க வசதி இல்லா பெண்ணை எடுக்காமல் இருந்து விடலாமே. அந்த அறிவு கூடவா இல்லை?
நாம் எத்தனை மறை நூல்களுக்கு அடிமையாக இருந்தோம்? எனது தாய் மாமா, எம் ஜி ஆர் படங்கள் பார்ப்பது தவறு என்று நம்பினார். தடையும் செய்வார்.
மற்றவர்களிடம் நான் நட்பு வைத்தது, படிக்கும் பழக்கம் அனைத்தும் அவருக்கு ஒரு உள்ளூர கசப்பு இருந்தது. எம் ஜி ஆர், புரட்சி சிந்தனையை தூண்டுபவர். நட்பு, படிப்பு என்னை சுயமாக சித்திக்க வைக்கும். அவருக்கு கட்டுப்படாமல் போய் விடுவேன் என்ற பயமும் இருந்து இருக்கலாம்.
கட்டிங் டீ வாங்கி கொடுத்து, எனது திருமண வயதில்
Furthermore….
எனக்கு ரூபாய் 2க்கு, கட்டிங் டீ வாங்கி கொடுத்து, எனது திருமண வயதில், ஒரு எண்ணை வியாபாரி, அவர் மண்டையில் உள்ள மறை நூல் நியதிகளை நிறையவே போதித்தார். அவர் இன்று இல்லை. அவர் உடம்பை கூட பார்த்துக்கொள்ள போதிய திறமை இல்லாமல், போதிய வயோதிகம் ஆகாமல் இறந்து விட்டார்.
Moreover…
அவர் எனக்கு ஒரு வகை உறவும், அண்ணன் முறையும் வரும். நல்ல மனிதர் என்று சொல்லுவார்கள். அவர் மீது எனக்கு என்று தனிப்பட்ட விறுப்போ, வெறுப்போ கிடையாது.
அவருடன் ஏற்பட்ட சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டால், நான் சொல்ல விரும்பும் மோட்டிவ் க்கு தெளிவான விளக்கம் கொடுத்து விட முடியும் என்று நம்புகிறேன்.
எனது திருமண சம்பந்த விஷயங்களில் நிறைய ஆலோசனை சொன்னதை, முழுமையாக தமிழில் எழுதி விளக்க எனக்கு திறமை இல்லை.
ஆக ஒரு யோகா சம்பந்த அனுபவத்தை விளக்கி மோட்டிவ் தலைப்புக்கு ஒரு உயிர் கொடுக்கிறேன்.
ஒரு முறை அவரின் கடையில் சில மணி நேரங்கள் இருந்தேன். முதல் ஒரு டி வாங்கி தந்தார். ஒரு மணி நேரம் கழித்து 2 வது டீ ஆர்டர் செய்யும் போது, நான் வேண்டாம் என்றேன். சண்டைக்கு வந்து விட்டார். இதை பலர் அன்பு தொல்லை என்பார்கள்.
டீ வேண்டாம் என்பதுக்கு காரணம் கேட்டார். அணைத்து, யோகா ஆசிரியர்களும் டீ காபியை தவிர்க்க சொல்கின்றனர், என்றேன். அவர் வயதில் மூப்பு, வயதை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, அதிக உரிமையில், டி குடித்தே ஆக வேண்டும் என்று வற்பறுத்தி, வாதம் செய்து. என்னை குடிக்க சம்மதிக்க வைத்தார். அவர் ஜெயித்தார், பிறகு அவர் கடை பக்கம் போவதை தவிர்த்துக்கொண்டேன்.
யோகா ஆசிரியர்களின் அன்றய புத்தகங்களின் விலை ரூபாய் 20 முதல் 30 இருக்கும். ஏகப்பட்ட ஆரோக்கிய ஆலோசனை கொடுப்பார்கள். அவர்கள் வாழ்க்கையை யோகாவுக்காக, சமர்பித்தவர்கள் ஆலோசனைகளை கடைபிடிக்க சர்வ சுதந்திரம் எனது அண்ணன் முன்னுரிமை கொடுக்கவில்லை.
எனது அண்ணன், எனது ஆரோக்கியம் பற்றி ஒரு துளி சிந்தனையை போடவில்லை. அவர் சொல்வதை நான் கேட்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.
ஒரு பேஸ்புக்கில், இந்த கட்டுரை எழுத ஏகப்பட்ட ஆழ்ந்த சிந்தனை தேவை படிகிறது. எனது ஆரோக்கியம், எனது யோகா வின் மேல் உள்ள பற்று, காதல் பற்றி எதுவும் யோசிக்காமல், அவரின் டீ குடிக்கும் பழக்கத்தின் அடிமைத்தனத்தை, என்னை கடை பிடிக்க வற்புத்தியது, பெரிய ஒரு குற்றம் இல்லைதான். நான் ஒதுங்கிக்கொண்டேன்.
மற்றவர்களின் மனதை திருப்திப்படுத்துவது இல்லை.
And…
இப்படித்தான், காந்தாரியை கடத்த, பலரை கொன்றது, தனது தந்தைக்கு பிறந்த பிள்ளைகளான கௌரவர்களுக்கு ராஜ்ஜியம் கிடைக்காமல் போனது, குந்திதேவியின் அதிகார பூர்வ கணவனுக்கு பிறக்காத பாண்டவர்களுக்கு ராஜ்ஜியம் போனது போன்ற பல விஷயங்கள் நியாயப்படுத்தப்பட்டுள்ளது.
எனது டீ அனுபவத்தை கதையாக, சொன்னால், 100% எனது அண்ணண் செய்தது பற்றியும், அவரின் ஆழ்ந்த அன்பு பற்றியும் அவரை பாராட்டுவார்கள்.
எனது சிந்தனை சரி இல்லாதது என்பார்கள். இதில் சரி தப்பு என்று கருத்து நான் கூற முயலவில்லை. உனக்கு நல்லதை சொல்கிறேன், செய்கிறேன் என்று கண் மூடித்தனமாக தொல்லைகள் வரத்தான் செய்கிறது என்று சுட்டிக்காண்பிக்கிறேன்.
For example…
எனது பேச்சை கேள் என்ற மோடிவ்க்கு முதன்மை கொடுக்கிறோம். நான் சொல்வதே தாரக மந்த்ரம். நான் ஒரு தடவை சொன்னால், 100 தடவை சொன்னதுக்கு சமம். வேதத்துக்கு சமம். இந்த மாதிரி மோட்டிவ் அடிப்படையில் ஆலோசனை, அதிகாரம், ஆக்கிரமிப்பு வழியில் பேசுபவர்களை நான் நிறைய பார்த்துஇருக்கிறேன்.
ஒரு வகை ஆக்ரமிப்பு வலையில் சிக்கி விடவேண்டியதாகிறது. சில சில்லூண்டி விஷயங்களில், கவனம் போய் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, நான் தோத்து விடுவேன் (டீ சாப்பிட்டு தோத்து போனது போல்) அல்லது ஒதுங்கி கொள்வேன்.
காரணம், எனக்கு அல்லது எனது குடும்ப உறுப்பினர்கள். மற்றும் எனது தொழில் உறுப்பினர்களின் தேவைதான் முக்கியமே ஒழிய, மற்றவர்களின் மனதை திருப்திப்படுத்துவது இல்லை.
Spartacus (TV series)
Spartacus is an American television series produced in New Zealand that premiered on Starz on January 22, 2010, and concluded on April 12, 2013. The fiction series was inspired by the historical figure of Spartacus, ….
Thus…
அடிமை என்றால் என்ன? அகராதி பார்த்தல் முழுமையாக புரியாது. அடிமைத்தனத்தின் பல அம்சங்களை புரிந்து கொள்ள, பல மாதிரி தலைமைத்துவம், சரித்திரக் கதைகள், படிப்பதின் மூலம் அறியலாம்.
அதில் ஒரு சீரியல்:-
Spartacus (TV series)
அடிமைத்தனம் தெரிய ரோமானிய சரித்திரங்களை, பார்க்க வேண்டும். சர்வ சுதந்திரம் என்றால், அமெரிக்கா நோக்கி பார்க்க வேண்டும்.
பீஷ்மர், பலரை கொன்று, காந்தாரியை கடத்தி சென்று, ஒரு குருட்டு ஒன்று விட்ட சகோதரனின் மகனுக்கு , கட்டி வைத்தது, வீர செயல் என்று பாராட்ட படுகின்றதே ஒழிய, பெண்ணின் விருப்பு வெறுப்பு பற்றி கவலை இல்லை.
ரோமானிய ராஜ்ஜியம், பக்கத்துக்கு நாட்டு மக்களை, அல்லது குற்றவாளிகளை, ஒருவருடன் ஒருவர் சண்டை யிட்டு, ஸ்டேடியத்தில், பொது மக்களுக்கு, களிப்பு ஊட்ட வேண்டும்.
இன்று சூது, கொடூர சண்டை போட்டி ஒழிக்கப்பட்டு விட்டது. குற்றமாக்கப்பட்டது. பெண்ணின் விருப்பம் இன்றி திருமணம் செய்து வைக்கக்கூடாது.
எது சரியான மோட்டிவ்?
Furthermore..
மருமகள் தேடுபவர்கள், தன மகன் அவளுக்கும், அவள் இவனுக்கும் குடும்பத்தில் பெற வேண்டிய அணைத்து இன்பங்களும் கொடுத்து வாழ்வார்களா என்ற நோக்கம் இருந்தால் சரியான மோட்டிவ்.
அதை விடுத்தது, மாமனை, மாமியாரை, பார்த்து கொள்வாளா? நாத்தனார் மற்றும் மாமியார் சீர் சரியாக வருமா? இது பொருந்தாத மோட்டிவ்.
ஓஷோ சொல்வார், விழிப்புணர்வு பற்றி. தனது மனம் ஆரோக்கியமாக இருக்கிறதா? மன மக்களுக்கு, போதிய சர்வ சுதந்திரமாக, வாழ என் மனம் அனுமதிக்குமா? எனது மனம் எப்படி இயங்குகிறது?
மகன் மருமகள் தோளில் கை போட்டால், எனது மனம் எனது பழமை வாய்த்த நம்பிக்கை அடிப்படையில், தனது மறை நூல்களிலிருந்து, குற்றம் குறை கூறுகிறதா அல்லது ஏற்றுக்கொள்கிறதா?
கோவில் நிர்வாகம்
குடும்ப, தொழில், கோவில் என்று பல வித நிர்வாகம் இருந்தாலும், இதில் கோவில் நிர்வாகம் பற்றி, முக்கிய மோட்டிவ் பற்றி ஆராய்வோம்.
கோவில் நிர்வாகம் பற்றி 2 ம் பகுதியில் ஆராய்வோம்.
ஒவ்வொரு சூழ்நிலையிலும் சரியான நோக்கம் என்ன 2 ல் ஆராய்வோம்.
முக்கியமாக நிர்வாகிகளின் மோட்டிவ் எப்படி, எதுவாக இருக்க வேண்டும். எது ஆரோக்கியமான வளர்ச்சி தரும் நிர்வாகம் போன்ற விஷயங்களை ஆராய்வோம்.
கோவில் நிர்வாகிகளின் மோட்டிவ் பிள்ளையாரை திருப்தி படுத்துவதில் ஆணித்தரமான நோக்கம் உள்ளதா?
கிராமம் கோவில்தானே, அவரையும் இவரையும் திருப்தி படுத்துவது முக்கியம் என்று நினைக்கின்றனரா?
இன்று அவர்களின் நோக்கம் அடுத்த கும்பாபிஷேகத்தின் போது, அணைத்து பக்தர்களும் சாஸ்திரம் புரிந்து, பரிவட்டத்தை மறுக்கும், கலாச்சாரதை நிச்சயிக்கும். இது ஓர் நீண்ட கால போதனை திட்டம்.