ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா? உண்மைக்கதை.
ஸ்ரீ செல்வ விநாயகர் – ஒரு மனிதனை உயர்த்திய தெய்வம் – அம்மனிதனின் மூத்த புதல்வனுக்கு தெரிந்த உண்மை தகவல் Part 1

செல்வா விநாயகரின் அருளால் – அன்றய மலாயா, இன்றய மலேஷியா வந்த கதை.
1950 களில், வறுமையை தவிர வேறு எதுவும் தெரியாத காலம். அப்போது எனது தந்தைக்கு டீனேஜ் வயது. இளையான்குடி யில் வேலை பார்த்தார். பச்சை பயறை அவித்து எனது தந்தையும், அவரின் சித்தப்பா (கண் தெரியாதவர்) இருவரும் சிலுக்கப்பட்டி க்கு தலையில் சுமந்து நடந்தே சென்று விற்று பிழைப்பு நடத்தினர். மண்ணெண்ணெய் தலையில் சுமந்து சென்று தலை வழுக்கை அடைத்தது விட்ட கதையும் சொல்லியதுண்டு.
மேல மருங்கூர் கண்மாயில் வாழ்ந்த ஸ்ரீ செல்வ விநாயகர்; அத் தெய்வத்திடம் ஒரு சம்பாஷணை
எனது தந்தைக்கு ஒரு நல்ல உள்ளம் கொண்டவர், எங்களின் குடும்பத்தின் வறுமை நிலையை கண்டு எனது தந்தையை மலாயா வுக்கு தருவிக்க முன்வந்தார். எனது தந்தையாரின் பயணத்துக்கு எனது அத்தை தனது கழுத்தில் இருந்த நகையை கொடுத்து உதவினார்.
எனது தந்தை உடனே கண்மாயில் வாழ்ந்த ஸ்ரீ செல்வ விநாயகரிடம் ஒரு சம்பாஷணை செய்தார். எனது குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர ஒரு நல்ல வழியை காண்பி, நான் உனக்கு ஒரு கோவில் காட்டுகிறேன் என்று வாக்கு கொடுத்தார்.

Sree Selva Vinayagar in 80’s

Damaged Sree Selva Vinayagar Temple in 2019
ஸ்ரீ செல்வா விநாயகர் கோவிலை சுய முயற்ச்சியில் அப்பா வாக்கு கொடுத்தபடி, கட்டி முடித்தார்.
எனக்கு சுமார் 18 வயது இருந்த பொது அப்படி ஒன்றும் சொல்லும் அளவுக்கு வசதி இல்லை ஆனால் வறுமையும் இல்லை. என்னை ஒரு வயதில் மலாயா வுக்கு தூக்கிக்கொண்டு வந்து விட்டனர்.
எனது 18 வயதில் அப்பா அடிக்கடி கடன் பட்ட மனிதர் போல் அவரின் ஸ்ரீ செல்வா விநாயகர் கட்ட வேண்டிய பொறுப்பை பற்றி கூறி வந்தார். ஒரு வேலை அவர் வாக்கை காப்பாற்ற முடியாமல் காலம் முடிந்து விடும் என்று எண்ணி இருந்தாரோ எனக்கு த்தெரியாத.
அனால் 1985 – 1986 காலக்கட்டத்தில் கட்டி முடித்தார்.
தொடரும்………..
mela marungur sree selva vinayagar temple sree selva vinayagar