My Life Experience

ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா? உண்மைக்கதை – Part 3

November 20, 2020 ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் – MKP பாண்டுரங்கன் கண்ணோட்டத்தில் 0

ஸ்ரீ செல்வ விநாயகர்மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும்ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா?

உண்மைக்கதை – Part 3

ஒழுங்கு & ஒழுக்கம்

எனது தந்தையார், காலையில் எழுந்ததும் குளித்து முடிந்ததும் ஏறு மயில் ஏறி …என்ற ஒரு பாடல் படி வலி படுவார். இது ஒரு வகையில் ஒரு ஒழுங்கு அல்லது ஒழுக்கம். ஆங்கிலத்தில் இதை டிசிப்ளின் என்று கூறுவர்.

மலையில் கணக்கு பார்ப்பது ஒரு ஒழுஙக்கம் அல்லது டிசிப்ளின். என் இந்த ஒழுக்கம்? சொன்ன அல்லது கொடுத்த வாக்கை காப்பாற்றுவது ஒரு பெரிய ஒழுக்கம். அவர் ஒன்றும் எம் பி ஏ படிக்கவில்லை. அவர் சொல்லி கொடுத்தது இந்த ஒழுக்கத்தைத்தான்.

இதுவே எனது 45 வது வயதில், நான் தொழில் பிரிந்து செய்யும் போது என்னை நம்பி பல லட்சம் வெள்ளி மதிப்பு சரக்குகள் பலர் கொடுத்து என்னை தூக்கி விட்டனர்.

 

எனது தம்பி மேற்கண்ட வீடியோ அனுப்பியதற்கு நன்றி. அந்த வசனத்தை பல தடவை கேட்டேன். நாம் சிந்திக்க தெரிந்ததால் மனிதன் என்று அழைக்கப்படுகிறோம். நாம் பலவித மிருகங்களில் நாமும் ஒரு மிருகம் என்பது மட்டும் அல்ல. நாம் பலவித குரங்கினத்தில், சிந்திக்க தெரிந்த குரங்கினம் 4, 5 இருந்து, அதில் மற்றவை அழிந்துவிட்டதாகவும், நாம் சேப்பியன் எனும் குரங்கினத்தை சேர்ந்தவர்கள் என்று விஞ்ஞானம் கூறுகிறது.

இதை பற்றி தெரிய விரும்பினால் அந்த நூல் வாங்கி படித்து அறியவும்.

புரிதல் மாறுபடுதல்

அந்த வசனத்தில் ஆர்யா புரிதல் பற்றி கூறுகிறார். எனது தந்தையின் புரிதலும், மருங்கூர் மக்களின் புரிதலும் நிறைய வேற்றுமை இருந்ததை அப்பா உணரவில்லை.

கடவுள் நிலை என்பது பெரிய நிலை. அப்பா புரிதல் மருங்கூர் மக்களுக்கு இருக்க வேண்டும் என்று வற்புறுத்தவோ, வலியுறுத்தவோ அப்பாவுக்கு உரிமை இல்லைதான். அவசியமும் இல்லைதான். அவர் ஒதுங்கிக்கொள்ள நிறைய உரிமை உள்ளது. ஒதுங்கிக்கொண்டார்.

உட்காந்து சிந்திக்கும் ஒழுங்கு

பத்மாசனத்தில் அமர்ந்து ஒழுங்குடன் சிந்தித்தவர்களை ஞானி என்கிறோம். எந்த ஒழுங்கும் இல்லாமல், சிந்திக்கவே மறுக்கும் நபர்களின் பேச்சை நாம் என் கேட்க வேண்டும்?

சிந்தனையில் ஒரு ஒழுங்கு இல்லை. மனம் போன போக்கில் பேசுவது. உதாரணத்துக்கு நிர்வாக முறைகள் என்ன என்பது தேர்ந்து கொள்ள மறுப்பது – அலட்சியம் செய்வது. ஏன் இவர்களின் பேச்சை கேட்க வேண்டும்? ஏன் இவர்களின் முடிவை ஏற்க வேண்டும்?

சிங்கப்பூரில், வேலையில் அமர வயது அடிப்படையில் அல்ல, திறமை அடிப்படையில்தான். அதனால் தான் சிங்கப்பூர் முன்னேறுகிறது.

மருங்கூர் பற்றி சொல்லும் எந்த உரிமையும் எனக்கு இல்லை. அனால், சுமார் 30 லட்ச செலவில் கோவில் காட்டும் நான் நிர்வாகம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை கூற நிறையவே உரிமை உள்ளது.

30 லட்சமும் எனது இல்லை, அதில் பணம் போட்ட நிறைய பேர் நான் கொண்டு போகும் வலி மிக சிறப்பாகவுள்ளது, என்றும் மறைமுக ஆதரவு தந்து வருகின்றனர்.

மண்ணை பண்படுத்தினால் தான் நல்ல பயிர் விளையும். மனதை கல்வி மூலமோ, அல்லது கற்றவர்களிடம் பழகியோ, பண்படுத்தாத மனதில் கோவில் நிர்வாக சிந்தனை என்ற பயில் வளராது.

நமது கோவிலுக்கு, மனம் பயன்படுத்தப்பட்ட இளைஞர்களும், அவர்களுடன் ஒத்துழைக்கும் அனுபவஸ்தர்களும்தான் தேவை.

இக்காலத்திலும் பழைய பஞ்சாங்கம் பாடும் சிந்தனை உபயோகமற்றது. தேங்காய், மாலை, மரியாதை, அதுவும் எனக்குதான் முதலில் மரியாதை செலுத்தவேண்டும், போன்ற சிந்தனைகளை குழி தோண்டி புதைக்கும் தருணம் வந்து விட்டது.

ஏன் எனில், 30 லட்சம் பணம் போட்டவர்கள், இந்த வறட்டு கவுரவத்துக்கு கட்டுப்பட இயலாது என்பது மட்டும் அல்ல. ஒரு முறை இது போன்ற வறட்டு கௌரவத்தில் கோவில் பாழாய் போய்விட்டது. இனி அப்படி பாழாய் போக விட வேண்டும் என்றால் முதலீடு செய்தவர்கள் சொல்லுங்கள். ஓட்டுக்கூட வைத்து கேட்போம்.

“நான் வாட்சப் குழுவில் உரையாடல்களை கேட்க மாட்டேன். நிர்வாக ரீதியான விஷயங்களில் பங்குகொள்ள மாட்டேன். சேவை செய்ய மாட்டேன்.”

“இன்றய உலக, அதுவும் மற்ற கோவில்கள் வழிநடத்தும் முறைகளை தெரிந்து கொள்ள மாட்டேன். கோவிலை நிர்வகிக்க ஒரு வழியும் எனக்கு தெரியாது. நிர்வகிக்கவும் தேவை இல்லை.”

“அவ்வளவு பணம் நம் கையிலிந்தா போட்டோம்? நிர்வாகம் அவசியம் இல்லை. கமிட்டீ நமது ஊருக்கு தேவை இல்லை.”

“அனால் நான் சொல்வதை கேட்க வேண்டும். எனக்கு ஒரு பதவி வேண்டும். இதெல்லாம் இக்காலத்தில் செல்லாது என்பது வருந்தத்தக்கதுதான்.”

செட்டியார் நினைத்தால் முழு கோவிலும் கட்டி தரலாம்

உண்மைதான். அன்று மருங்கூர் மக்கள் சொன்னது உண்மைதான். வழிய வந்து அப்படி ஒரு கோரிக்கை வைக்க தெரிந்த மனமே, ஏன், பார்த்திபன் அவர்கள் கேள்விகளுக்கு பதில் கூற வில்லை?

எத்தனை வசூல் புத்தகங்கள் கொடுக்கப்பட்டது? எத்தனை சதவிகித மக்கள் பதில் வந்தது? இதற்கெல்லாம் ஏன் பதில் கூறுவதில்லை? மருங்கூர் மக்களே வசூல் செய்தேன் எனலாம். வெறும் 100 ருபாய் வசூல் செய்யத்தான் முடிந்தது எனலாம்? அதுவும் இயலவில்லை, ஆனால் நான் கோவிலுக்கு ஆதரவு தருகிறேன் எனலாம். எதுவும் இல்லை.

பார்த்திபன் அவர்கள் மனிதர்களிடம் பேசுகின்றாரா, அல்லது குத்துக்களிடம் பேசுகின்றாரா? பதிலே வரவில்லை.

வசூல் செயகிறேன் என்ற அளித்த வாக்கு என்ன ஆனது? பொறுப்புள்ள வாக்கா, பொறுப்பற்ற வாக்கா? அதுவும் சுய விளம்பரம் தானா? சுய பெருமையா?

பொறுப்புள்ளவர்கள் நடந்துகொள்ளும் விதமும் (புரிதலும்), பொறுப்பற்றவர்களின் நடந்துகொள்ளும் விதமும் (புரிதலும்) ஏகப்பட்ட வேற்றுமை உள்ளது.
இதெல்லாம் ஆராயாமல் அப்பா கோவில் காட்டியது தவறுதானே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *