My Life Experience

ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில், மேலமருங்கூர் உருவான சரித்திரம் எழுதபட்டுள்ளது. அந்த சரித்திரம் எனது தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வையில் வழி

October 25, 2020 ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர் - தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வைய 0

ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில், மேலமருங்கூர் உருவான சரித்திரம்

 

ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர்

ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர்

மேலமருங்கூர்  ஶ்ரீசெல்வ  வினாயகர்

               தலமை உரை

Sree Selva Vinayagar in 80's

Sree Selva Vinayagar in 80’s Before Kumbabishegam

வணக்கம்

நான் பாண்டுரங்கன் என்ற பாண்டி வணக்கத்துடன் எழுதுகிறேன். இன்று  மேலமருங்கூர் கிராமத்தில் ஒரு சக்தி வாய்ந்த மூலவர் ஶ்ரீசெல்வ வினாயகர் அருள்பாலித்து வருகிறார்.

உலகத்தில் உள்ள மக்கள் தெரிந்து கொள்ளும் வண்ணம் தொழில் நுட்ப வசதியுடன்,மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில் உருவான சரித்திரம் எழுதபட்டுள்ளது.

அந்த சரித்திரம் எனது தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வையில் வழி எழுதி அனுப்பியள்ளார். அந்த சரித்திர பார்வையை எனது இணையத்தின் வழி சேர்த்துள்ளேன்.தமிழிழ் எழுதியது எனது தம்பி சிவஞானம். நன்றி.

இப்படிக்கு,

MKP பாண்டுரங்கன்

ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர்

ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர்

 

 ஶ்ரீசெல்வ  வினாயகர், மேலமருங்கூர்

 

மு. கி. பாலுச்சாமி செட்டியார் ,1933 ஆண்டு உலக தரிசனம் பெற்ற, எங்களது தந்தையுமான அவர் நல்ல மனிதர் என்ற போதும், சிறந்த  பக்தி மான் என்பது குறிப்பிட தக்கது.

முருகன் மீது அதீத பக்தி கொண்ட அவர், தான் பிறந்து வளர்ந்து மேலமருங்கூர் கிராமத்தின் பக்கத்து கிராமத்தில் தன் ஆரம்பக் கல்வியை முடித்த அவர்,மேல் படிப்பு படிக்க வாய்ப்பு கிட்டவில்லை.

மேலமருங்கூரில் வளர்ந்து வந்த காலத்தில், அந்த கண்மாய் கரை ஓரத்தில் அன்றைய பெரியவர்களாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஶ்ரீ செல்வ விநாயகர் விக்ரகம், எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமலும், வெயிலிலும், மழையிலும், வரட்சியிலும், பஞ்சத்திலும் கேட்பார் அற்று கிடப்பதை கண்டு , பல தடவை மனம் உடைந்த மு. கி. பாலுச்சாமி செட்டியார் அவர்கள், தன் வறுமை நிலமையும், பெரிய குடும்பம் என்பதாலும்,அப்பாவின் பெற்ரோர்கள் அவர்கள் செய்து வந்த   வணிகம் தொழில் காள் வயிற்றுக்கும் பற்றாக்குறையாக இருந்து வந்த கால சூழ்நிலை காரணமாகவும், கடன் வாங்கி அதனை செலுத்த மிகப்பெரிய அளவில் போராட்டம் நடந்தி வந்ததும்,தன் நிலை குலைத்தது என்று அப்பா பல தடவை எங்களிடம் தன் மனக்குமுறலை சொல்லி வருந்தியது உண்டு.

 

ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர்

ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர்

 

 ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர் 2

இந்தியாவுக்கு சுதந்திரம் அடையாத கால கட்டம். அயல் நாடுகளில் வேலை வாய்ப்புக்காக ஆட்கள் எடுக்கப்பட்ட நேரமும், வணிகத்திர்க்கும் ஆட்கள் முந்தியடித்த கொண்டிருந்த நேரம்.

1947 இந்தியா சுதந்திரம் அடைந்தது. அப்பாவுக்கு அன்று வயது 14ங்கு.அப்பா தினமும் மேலமருங்கூர் கண்மாயில் நண்பர்களுடன் சேர்ந்து குளிப்பது வழக்கம்.

அதுகும் ஶ்ரீசெல்வ வினாயகர் சிலை மீது ஏறி நின்று தண்ணீரில் குதித்து விளையாடுவதும் வழக்கமாக இருந்தது.

அந்த மாதிரி ஒரு நாள் குளித்துக்கொண்டு இருக்கையில், ஶ்ரீசெல்வ வினாயகருக்கும், மு. கி. பாலுச்சாமி செட்டியார் அவர்களுக்கும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை சொல்வார்கள், (கெமிஸ்ட்ரி என்று) அந்த  உள் உணர்வாக யாசித்துள்ளார் என்பதை என்னால் உணர முடிந்தது.  அந்த நிமிடம் அப்பா உள்வாங்கி அனுபவித்துள்ளார்.

தகப்பனார் மனதுக்குள் ஏதோ உந்து சக்தியாக உணரப்பட்டதின் நோக்கம், மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில் அமைய பெற்றது. தந்தை என்னிடம் குறிப்பிட்டு சொன்னது, நான் நல்ல நிலைக்கு வந்தால் ஶ்ரீசெல்வ வினாயகா! உனக்கு ஒரு கோவில் கட்டுகிறேன்! என்று வார்த்தையால் சொல்ல வில்லை, ஆள்மனதில் இருந்து வந்த வார்த்தையாக நான் உணர்கிறேன். இதை எழுதும் போது மெய்சிலிர்க்கிறது! ஆத்மார்த்தமான எண்ணங்கள் தோன்றிகிறது.

ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர்

ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர்

 

ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர் 3

 

1947இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு,  குடும்ப சூழ்நிலை காரணமாக ஆனந்தூர், சிலுக்கப்பட்டி,இளையாங்குடி கடைசியா முப்பையூர் வேலை பார்த்து வந்தார் மு. கி. பாலுச்சாமி செட்டியார் அவர்கள்.

அப்பா அவர்கள் ஆண் மகன் வீட்டின் மூத்தமகன், அப்பாவுக்கு முன் அத்தை அப்பாவின் அக்காள் தாய் மாமனுக்கு  வாக்கப்பட்டதால் அத்தையின் உதவியுடனும் மாமாவின்  உதவியுடனும் மலேசியா வந்துள்ளார்.

தனது 20வது வயதில், 1953ல் மலேசியா சுதந்திரம் அடைவதற்கு முன் ஸ்டேட்டைம் கப்பலில் பினாங்கு மாநிலத்தில் வந்து இறங்கிய  போது, தன் அழுக்கு வேஷ்டி, அழுக்கு சட்டையுடனும் மாத்து துணி இல்லாமல் என்ன செய்வது அறியாது, மலேசியா மண்ணில் பினாங்கு மாநிலத்தில் கால் பதித்தார்.

வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்பது போல், கேளுங்கள் கிடைக்க பெறும் தட்டுங்கள்  கொடுக்கப்படும் என்ற வாழ்வாதாரம் மேம்பட்ட பாதை அமைய பெற்றது. துன்பங்கள், துயரங்கள், சதி நாசங்கள், கடின உழைப்பு, நேர்மை, நாணயம்,கண்ணியம் ,கட்டுப்பாடு,ஒலுக்கநேரிகள் இவை அனைத்தும் மு. கி. பாலுச்சாமி செட்டியார் அவர்களுக்ககு வெற்றி படிகளாக  முன்னேற்றம் அடைந்தது.

ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர்

ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர்

ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர் 4

1957 ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம்  அடைந்தது. மேலமருங்கூர் செட்டியார்  குடும்ப உறுப்பினர்கள் மூன்று வேலை பசி இல்லாமல்  சாப்பிட தொடங்கிய காலங்கள்.இன்னும் தெளிவாக சொன்னால் கடன் இல்லாத முழுநேர கஞ்சி வயிறார கிட்டியது.

1957ல் அப்பா திருமணம் அம்மா பா. செல்லம்மாள் 1959ல் முதல் மகன் பாண்டுரங்கன், 1962 பத்மா மகள்,1965 சிவஞானம் மகன், 1968 சித்ரா தேவி மகள் . நான்கு பிள்ளைகள் நான்கு பேரும் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகிறார்கள்.

1984ல் தன் சொன்ன வாக்கை நிரைவு செய்யும் வகையில் , மேலமருங்கூர் கண்மாய் மேட்டில் கிழக்கு பார்த்து அன்றைய நிலையில் கிராமத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. “சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்கமாட்டார்” என்ற பலமொழிக்கு ஏற்றார் போல், கிராம மக்களின் வரட்டு கொளரவமும் முதல் மரியாதை என் இன சமுதாயத்திர்க்கே இருக்க வேண்டும் என்று குடமுழுக்கு அன்று சலசலப்பும் மனக்கஸ்டத்தையும் ஒரு வெறுப்பு தன்மையும் கலகம் செய்ததால்! அப்பா மன வேதனையுடன் அன்றே வெளியேற்றம் செய்தார். 1984ல் கும்பாபிஷேகத்துக்கு மு. கி. பாலுச்சாமி செட்டியார் சித்தப்பா, ஆதிமூலம் செட்டியார் அவர்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. பிறவி கண் தெரியாத தாத்தா ஊருக்கு ஒர் கோவில் வேண்டும் எண்ணம் செயலாக அமைந்தது. 

ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர்

ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர்

ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர் 4a

 

36ஆண்டுகள் வினாயகர் கோயில் மராமத்து பணிகள் கூட நடைபெறாத நிலைக்கும், பல ஆண்டுகளாக மழை இல்லாமல் அவதிக்கு தள்ளப்பட்டதையும் கிராம மக்கள் அறிவார்கள்.

1984ல் மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில் குடமுழுக்குக்கு  பிறகு அல்லது ஶ்ரீசெல்வ வினாயகருக்கு ஆலயம் அமைந்த பிறகு  மு.கி.பாலுச்சாமி செட்டியார் குடும்ப வாரிசுகளும் அவர் அவர் சக்திக்கு ஏற்ப நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஶ்ரீசெல்வ வினாயகர் அருளினால் நடந்து வருகிறது.

சக்தி வாய்ந்த ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர் மக்களுக்கு சில பல நல்ல வழியும் அருள் பாலித்துள்ளார். புரம் ஒன்று வைத்து முகம் ஒன்று பேசும் மேலமருங்கூர் மக்கள் ஒற்றுமை இல்லாமையினால், 36ஆண்டுகள் ஶ்ரீசெல்வ வினாயகர் பெரும் கொடுமைக்கு இலக்கானார்.

கிராம மக்கள் கோவிலை கட்ட முயற்சிகள் செய்தும் மனித மனம் ஏற்ற தாழ்வுகள் கொண்டதனால்  தடைபட்டு வந்தது.

ஶ்ரீசெல்வ வினாயகர், மேலமருங்கூர் 5

மு. கி. பாலுச்சாமி செட்டியார் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 11.3.1993ஆம் ஆண்டு மதுரையில் தனது 60வயதில் மரண தரிசனம் பெற்றார்.

அதன் பிறகு மு. கி. பாலுச்சாமி செட்டியார் வாரிசுகளுக்கும் மேலமருங்கூர் கிராமத்துக்கும் 36ஆண்டுகள் எந்த விதமான தொடர்பும் இல்லாது போனது குறிப்பிட தக்கது.

2019ல் காலம் சென்ற மு. கி. பாலுச்சாமி செட்டியார் அவர்களின் மூத்த மகன் பாண்டுரங்கன் செட்டியார் அவர்கள் சஷ்டியபூர்த்திக்காக தற்செயலாக மேலமருங்கூர் சென்ற அவர், பாண்டுரங்கன் செட்டியார் அவர்களுக்கும் ஶ்ரீசெல்வ வினாயகருக்கும் மீண்டும் என்ன கெமிஸ்ட்ரி அல்லது உந்துதல் நடந்தது? அவர்கள் இருவருக்கும் மட்டுமே வெளிச்சம்!

பாண்டுரங்கன் மேலமருங்கூர் சென்று வந்த இருமாதத்தில் பாலாலயம் ஶ்ரீசெல்வ வினாயகருக்கு செய்யப்பட்டது. ஶ்ரீசெல்வ வினாயகர் பாலாலயம் செய்யப்பட்ட தருனம் தொடர்ந்து நல்ல மழை பெய்து ஊர் மக்கள் மனம் குளிர்ந்து. மேலமருங்கூர் மக்கள் மனதில் செட்டியார் வாரிசுகளும் நீங்கா இடம் பெற்றுள்ளனர்.

கிருஷ்ணன் செட்டியார் வாரிசுகளும், மு. கி. பாலுச்சாமி செட்டியார் வாரிசுகளும், மேலமருங்கூர் கிராம மக்களும், உள்ளூர், வெளியூர், வெளி நாடு  வசூல் செய்து, செட்டியார் வாரிசுகள் அதிக அளவில் பங்கு வகித்து 30 லட்ச ரூபாய் செலவில் மீண்டும் புதுப்பொழிவுடன் கம்பீரமாக ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில் விரைவில் கட்டிமுடிக்கப்படவுள்ளது .

மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ வினாயகர் 6

2 .04 .2021 ல் மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

காளையார் கோவில் திரு ஸ்தபதி சண்முகநாதன் அவர்களின், கைவண்ணம் உயிர் பெற்றுள்ள மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில், நல்ல கலை நயமிக்க வேலை பாடுகளும், தோற்ற அழகு காணும் காட்சியாக நம் கண்முன் நிற்கிறது, கடைக்கோடி மேலமருங்கூர் கிராமத்தில்.

 

மற்றும் இந்த மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ வினாயகர் கோவில் பழய நிர்வாகம் போன்று இல்லாமல், புதிய கோவில், புதிய நிர்வாக அமைப்பு, முறைப்படி அரசாங்க பதிவு பெற்று, கமிட்டி அமைய பெற்ற முதல் அங்கீகாரம் பெற்ற கோவிலாக உரிமை பெறப்பட்டுள்ளது.

அதே போன்று குடமுழுக்கு அன்று முதல் மரியாதை திட்டம் யார் ஒருவர் ரூ 50001(ஐம்பதாயிரத்தி ஒன்று) கொடுக்கின்றார்களோ, அவர்களுக்கு தலப்பா கட்டி, பொண்ணாடை போத்தி,மாலை அனிந்து, முதல் காலாஞ்ஞி கொடுத்து சங்கல்பம் செய்து சபை மரியாதையுடன் செய்து கொடுக்கப்படும்.

இந்த வாய்ப்பு முதல் பத்து நபர்களுக்கு மட்டும் வழங்கப்படும். இன்னும் சிலருக்கு முதல் மரியாதை வாய்ப்பு கொடுக்க ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில் கமிட்டி உறுப்பினர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றார்கள். ஆர்வம் உள்ளவர்கள் கமிட்டி உறுப்பினர்களை தொடர்பு கொள்ளளாம்.
தொடர்புக்கு:

மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில் கமிட்டிநிர்வாக தலைவர்:-

உயர் திரு R. தனபாலன்அவர்கள். 
கை பேசி : +91 9843106984
………………………………………………..
மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில் கமிட்டி செயலாளர் :-

D. நிவாஸ் சக்ரவர்த்தி அவர்கள் 
கை பேசி: +919600460828

………………………………………………….
மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில் கமிட்டி பொருளாளர் :-

உயர் திரு K. சுப்பிரமணியன் அவர்கள்
கை பேசி : +919655228806
……………………………………………….

மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில் இறை தொண்டர் :

திரு பார்திபன்
கை பேசி : +919751504073 

மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ வினாயகர் 7

36ஆண்டுகள் கடந்து மீண்டும் ஒரு கோவிலை வியந்து பார்க்கும் அளவில் கட்ட வேண்டும் என்ற கடும் முயற்சி செய்து,சில நல்ல உள்ளம் கொண்ட மேலமருங்கூர் மக்களை நன்றி கூறி பாராட்டாமல் இருக்க முடியாது. வானம் பார்த்த பூமியாக ஒன்றும் அறியாத, எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் பாமரமக்களாக வாழ்ந்த காலம் கடந்து இன்று குறுகிய வளர்சி அடைந்த போதும், உலக நாடுகள் மேலமருங்கூர் கிராமத்தை எண்ணிப்பார்க்க வைத்தமைக்கு ஶ்ரீசெல்வ வினாயகரை எண்ணி நெகிழ்ந்து புகழ் பாடமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு ஶ்ரீசெல்வ வினாயகர் மேலமருங்கூர் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மீண்டு மீண்டும் நன்றிகள் கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம், வாழ்க வளமுடன் வளர்க வளமுடன், இன்பமே சூல்க எல்லோரும் வாழ்க.

இப்படிக்கு,

P. சிவஞானம்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *