SSV உண்மைக்கதை 3: ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா? உண்மைக்கதை.-Oct 30, 2020
ஸ்ரீ செல்வ விநாயகர் – ஒரு மனிதனை உயர்த்திய தெய்வம் – அம்மனிதனின் மூத்த புதல்வனுக்கு தெரிந்த உண்மை தகவல்
1985 – 1986 காலக்கட்டத்தில் கட்டி முடித்தார்.
என்ன பலன்? என்ன நடந்தது? முழுமையான விபரம் சரியாக தெரியவில்லை. அங்கும் இங்கும் சேகரித்த தகவலின் படி….?????
SSV உண்மைக்கதை 3:
ஸ்ரீ செல்வா விநாயகரின் நோக்கமும் தெய்வத்திரு மு. கி. பாலுசாமி செட்டியாரின் அவர்களின் தெளிவின்மையும்.
தெளிவை பற்றி சில உதாரணங்கள்:
ஒரு 50 மாடி பிளாட்டில், ஒரு வீட்டின் உரிமையாளர் பேன் ஓடவில்லை என்று மதிய நேரத்தில் வயர் மேனுக்கு ரிப்பேர் செய்ய அழைப்பு கொடுத்தார். வயர் சரிசெய்ய முடியாமல், அவதிப்பட்டார். வெகு நேரம் கழித்து தெரியவந்தது அந்த பிளாட்டுக்கு தற்காலிக கரண்டு சப்பளை இல்லை என்று.
இக்கதையின் விஷயம் எங்கே பிரச்னை என்று வயர் மென் அடையாளம் கண்டுபிடிக்காமல் வேலை பார்த்தது ஒரு வகையான மூடத்தனத்தை வெளிப்படுத்திக்கறது.
தந்தையார் பாவம் அவர் ஸ்ரீ செல்வ விநாயகருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதிலும், கோவிலை கட்டி முடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார் – பிரச்னை என்று ஒன்று இருக்குமா என்று கனவிலும் யோசித்து இருக்க மாட்டார்.
பிரச்னை “தான்” எனும் ஆணவத்தின் மூலம் இருந்தது
நமது வயர் மென் கரண்டு சப்லை இல்லாத இடத்தில பேன் ரிப்பேர் செய்தது போல, ஸ்ரீ செல்வ விநாயகர் நாசமா போனாலும் பரவாயில்லை எனக்கு உரிய மரியாதைதான் முக்கியம் என்று அடம் பிடிக்கும், தான் என்ற அகங்காரம் மிக்க மக்கள் வாழும் இடத்தில அவர் கட்டியது மாபெரும் தவறுதானே?
இன்றெல்லாம் இஸ்கான் (ஹரே கிருஷ்ணா) கோவில்களில் ஆணவத்துக்கு இடம் இல்லை. ஆணவம் இருந்தால் கோவில் உள்ளே நுழையாதே என்று சொல்லிவிடுவார்கள். அங்கே கடவுளுக்கு சேவை செய்யவே கோவில், தனது ஆணவத்தையும், திமிரையும் காட்டும் இடம் இல்லை.
கோடீஸ்வரனாக இருந்தாலும், அதிக டொனேஷன் செய்து இருந்தாலும் அங்கே ஆணவம், திமிர் செல்லாக்காசுதான்.
நல்ல தரம் வாய்ந்த கோவில் களின் நிர்வாக முறை அப்படிதான் இருக்கும். எனது தந்தையார் சரியான நிர்வாக அமைப்பை உருவாக்காமல் செய்தது மாபெரும் தவறு என்றுதான் நினைக்கிறேன்.
கோவில் நிர்வகிக்கப்படவில்லை
நீ யாராக இருந்து விட்டுப்போ, நீயே முழு பணமும் கோவிலுக்கு போட்டவனாக இருந்து விட்டுப்போ. அனால் நாங்கள் தேங்காய் மூடிக்கும், ரூபாய் 5 மதிப்புள்ள துண்டுக்கு சண்டை போடுவோம். இதுவே மேல மருங்குரின் கலாச்சாரம், எங்களின் கொள்கை என்று பிரதிபலிக்கும்படி ஊர் மக்கள் நடந்து கொண்டதை முன்னிட்டு, கும்பாபிஷேகத்தோடு 1986ல் ஒதுங்கிக்கொண்டார், எனது தந்தையார்.
அது மட்டும் அல்ல. அப்பா, மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகரை வருடம் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும் என்று சொல்லி வாரிசுகளை வளர்க்கவில்லை. சொந்த குடும்ப உறுப்பினர்களிடம் கூட பிரச்சாரம் செய்யவில்லை. காரணம் மருங்கூர் மக்களின் செயல்கள்.
13 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று கும்பாபிஷேகம் செய்ய இயலவில்லை.
ஒரு தேங்காய் மூடிக்கும், ரூபாய் 5 துண்டுக்கும், அடித்துக்கொண்ட, ஒரு நபரும் 36 வருடமாக எதுவும் செய்யமுடியவில்லை. 13 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று கும்பாபிஷேகம் செய்ய இயலவில்லை.
நமது வயர் மென் அடிப்படையான விஷயமான கரண்டை சரி பார்க்காதது போல, எனது தந்தையார் எத்தனை பேருக்கு பிள்ளையார் அவசியம், பிள்ளையாரிடம் அர்ப்பணிப்பு இருக்கிறது என்று கேட்க தவறி விட்டார். பிள்ளையாருக்கு சேவை செய்ய தகுதியற்ற ஊரில் கோவில் காட்டியது மகா….(தந்தை என்பதால் திட்ட முடியவில்லை)
மேலே எனது தந்தையாரை எப்படியெல்லாம் திட்ட நினைக்கிறேனோ, அது போல 1000 மடங்கு அந்த மாதிரி என்னையும் திட்டிக்கொள்ள அடியேன் கடமை பட்டுள்ளேன். ஏன் எனில் நானும் அந்த தகுதி பற்றி ஆராயாமல், மலேசியாவில் வசூல் செய்து கொடுத்துவிட்டேன். நான் ஒரு படித்த முட்டாள் என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
தேங்காய் மூடி, மாலை, பொன்னாடை, மரியாதை – இவைகளை தவிர்த்து வேறு எதுவும் அறியாத, மூட நம்பிக்கையிலிருந்து வெளிவர முடியாத ஊரில் கோவில் கட்டவேண்டிய அவசியம் எனக்கு இல்லைதான். கிணற்றுத்தவளை போல, ஒரு வட்டத்தில் ஊர்ந்த, குறுகிய, விஸ்தாரமாகாத மனம் நிறைந்த ஊரில் நான் கோவில் கட்டவேண்டிய அவசியம் இல்லைதான்.
அனால், ஸ்ரீ செல்வ விநாயகர் மிகத்தெளிவாக இருக்கிறாரோ?
நான் பாட்டுக்கு அரப்பூர் காமாக்ஷி கும்பாபிஷேகத்துக்கு சென்றவனை, மருங்கூறார்கள் கோவிலை பாலடைய வைக்க முடியுமே தவிர, அவர்களுக்கு ஆக்க பூர்வமாக செயல் படுத்தும் திறன் கிடையாதப்பா, நீயே வாப்பா, எனக்கு ஒரு கோவிலை கட்டி தாடா என்று அழைப்பு விட்டு விட்டாரோ?
பணம் நிறைய இருக்கிறது என்றோ, பொழுது போகவில்லை என்றோ, செய்வதற்கு வேறு வேலை இல்லை என்றோ, நான் செயலில் இறங்க வில்லை.
மருங்கூரில் வாழும் மக்கள் கோவில் கட்டி கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டதை முன்னிட்டு தான் செயலில் இறங்கினேன். நான் கேட்டுக்கொண்டவர்களுக்கு தேங்காய் மூடியை தாண்டிய சிந்தனையும், தகுதி வந்துவிட்டதா என்று ஆராயாமல் இறங்கியது எனது தவறுதான்.
எனது தங்கை சித்ரா, அம்மா அசிங்கம், அசிங்கமாக மருங்கூர் காரவர்களை திட்டியதாக சித்திராவின் மகள் கோவிலுக்கு கட்ட முதல் பிள்ளையார் சுழி போடும் முன் எனக்கு சொல்லவில்லை, அதுவும் ஒரு தவறுதான்.
அப்பா ஒதுங்கிக்கொண்டது, 48 நாட்கள் பூஜை செய்ய தவறிய காரணங்களை அறியாமல் செயலில் இறங்கியது தவறுதான்.
எனக்கு படிப்படியாக கிடைத்த தகவல்கள் நான் செயலில் இறங்கியது தப்பா என்பது ஒரு பக்கம், பிள்ளையார் என்னை தேர்ந்து எடுத்து கோவில் காட்டும் பணியை கொடுத்துள்ளார் என்பது மரு பக்கமாக இருக்கிறது.
இன்றும் விரல் விட்டு என்னும் அளவில்தான் ஸ்ரீ செல்வ விநாயகருக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்கின்றனர். பாமர மக்கள் 100 % ஆதரவு தருகின்றனர். அவர்களுக்காக கோவில் கட்ட பிள்ளையார் அழைத்ததுக்கு சந்தோஷப்படுகிறேன்.
ஸ்ரீ செல்வ விநாயகர் என்ன நமது வயர் மேனா என்ன?
நான் அறிந்த உண்மை – பலி சுமத்தல்
30 லட்ச ரூபாயை கையில் கொடுத்து, கோவில் கட்டுங்கள் என்றாலும் விரல் விட்டு என்னும் அளவுக்குத்தான் செயல்படுத்தும் திறமை உள்ளவர்கள் உண்டு.
அதாவது வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்தாலும் செயல் படுத்த முடியாத கூட்டம் தான் பல பல சட்ட திட்டங்கள் போடுமாம்.
குறை மட்டும் கூறும் நபர்கள், கமிட்டியை ஒதுக்கி விட்டு குறை கூறும் நபர்கள் மட்டுமாவது ஒருங்கிணைந்து செயல் படும் திறனும் இல்லை என்றே எனக்கு கிடைத்ததகவல். அவர்களுக்குள்ளும் ஒற்றுமை இல்லை என்றே அறிகிறேன்.
செயல் படுத்த இயலாதவர்கள், ஆனால் செயல் படுத்துபவர்களை, குறை கூறுபவர்கள், ஆட்டையை போட்டு வீடு காட்டுகிறான், போன்ற பலி சுமத்துபவர்கள் தான் இருக்கின்றனர்.
செயல் படுத்தும் திறமை கடுகளவும் இல்லாதவர்களை, வயதை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, படித்த அர்ப்பணிப்புடன் செயல் படும் நபர்கள், திறன் இல்லாத வயதானவர்களை கேட்டு செயல் பட வேண்டும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறதாகவும்
கேள்வி.
பலி சுமத்தல்களில் சில உதாரணம்:-
பலி சுமத்தல் 1:
காட்டு கருவை, மற்றும் கண்மாய் மீன்களை விற்று மோசம் செய்தனர்.
36 ஆண்டுகளாக ஒரு நிர்வாக முறையை அமைக்க மூலையில் எதுவும் உதயமாகவில்லையா
இது கோவிலுக்கு அப்பாற்பட்ட து. நான் தலையிட அவசியம் இல்லை
பலி சுமத்தல் 2:
வசூல் பணத்தை ஆட்டையை போட்டு வீடு கட்டிவிட்டார்.
பதில்:
36 வருடமாக எங்கே செண்றீர்கள்? கோவிலில் முளைத்த ஒரு சின்ன செடியை கூட புடுங்க இயலவில்லை. இது வரை 3 கும்பாபிஷேகம் செய்திருக்க வேண்டிய கோவில், அதெல்லாம் செய்ய தகுதியற்றவர்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியத்தை விளங்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பலி சுமத்தல் 3:
இந்த சின்ன ஊருக்கு கமிட்டீ தேவையில்லை.
பதில்:
100% ஏற்றுக்கொள்ளலாம். அடுத்தவர் முழு பணம் போட்டு கட்டிய கோவில் கமிட்டீ தேவை இல்லை என்று சொல்லும் முன் எப்படி பராமரிக்க பழைய கோவிலுக்கு செயல் பட்டீர்கள், எத்தனை கும்பாபிஷேகம் செய்து வைத்தீர்கள் என்பதை எனக்கு தெளிவாக விளக்கினால், கமிட்டீயை ஒரு முடிவுக்கு கொண்டு வர நான் ஆதரவு தருகிறேன். எத்தனை, செடியையும் கொடியையும் கோவில் சேதமாவதை தடுக்க புடுங்குநீர்கள் என்ற விளக்கம் தந்த உடன் சட்டப்பூர்வமாக கமிட்டீ யை ரத்து செய்ய நான் செயல் படுகிறேன்.
நான் செயல் வீரன். ஆகையால், விளக்கம் கிடைத்த உடன், லாயர் வைத்து, உடனே கமிட்டீ யை ஒரு முடிவுக்கு கொண்டு வருகிறேன்.
உத்தரவிடுதல் 1
செட்டியார் குடும்பம் மட்டும்தான் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். உள்ளூரில் யாரும் செய்யக்கூடாது.
பதில்:
இதை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று பாமர மக்கள் அன்பில் என்னை எதிர்பார்ப்பது, அல்லது என்னால் கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்று விரும்புவது. இதற்கு நான் தலை வணங்குகிறேன்.
இரண்டு:- உள்ளூரில் பிறந்த எந்த மனிதனுக்கும் மாலை மரியாதை போய் விட கூடாது என்ற அடிப்படையில் ஒத்துழையாமல் செயல் படுவது. எதனை வருடமானாலும் பரவாயில்லை, செட்டியார் வரும்போது செய்யலாம் என்றால் இது ஒரு மடத்தனமான வேண்டுகோள்.
எவன் 30 லட்சம் செய்தான் என்றெல்லாம் நான் கவலை படவில்லை. பணம் கொடுத்தவருக்கு கும்பாபிஷேகம் செய்த வீடியோ அனுப்ப வேண்டும் என்பது எனக்கு முக்கியம் கிடையாது. உள்ளூரில் உள்ளவனுக்கு எந்த மாலையும் போய் விடக்கூடாது. அதுவே எனது லட்சியம்.
இது மிக சிறந்த, பாராட்டும்படியான, வரவேற்க வேண்டிய லட்சியம்தான்.
அப்படியென்றால் மற்றவரிடம் கய் நீட்டி பணம் கேட்கும் முன்னே அந்த மிக சிறந்த லட்சியத்தை தெரிவிக்க வேண்டும்.
செட்டியார் தான் எல்லா விஷயங்களிலும் தலைமை தாங்க வேண்டும் என்பது மிக வரவேற்க வேண்டிய விஷயம், ஆனால் செட்டியார் வர ஒரு ஜோடிக்கு சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்து தருவிக்க வக்கு இருக்க வேண்டும். அது தர முடிந்தால் அதிகாரமாக பேசலாம்.
அப்படியே வக்கு இருந்தாலும் எனக்கு பிறகு எனது பிள்ளைகள், எனது பிள்ளைகள் தொழிலை போட்டு விட்டு தேங்காய் மூடிக்கும், துண்டுக்கும் வர இயலாது.
மு கி பாலுசாமி செட்டியாரையே, ஒரு கோவில் இல்லாத ஊரில் கோவில் கட்டிய நபரை, அவமதித்து அனுப்பிய ஊரில் எனது பிள்ளைகள் வந்து என்ன பெற போறார்கள்?
இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் மருங்கூர் பெரியவர்களே, சிறியோர்களே. அப்புறம் எனது பிள்ளைகளுக்கு ஏன் மருங்கூர் போய் பிள்ளையாரை தரிசிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறேன். எனது தந்தையார், அவர் பிள்ளைகளுக்கு செய்ய தவறியதை ,நான் செய்கிறேன்.
யாருக்கு மாலையும் மரியாதையும்?
உலகத்தில் படிப்புத்துறையில், விளையாட்டு துறையில், தொழில் துறையில் , அல்லது எந்த துறையிலானாலும் சரி, சாதித்தவர்களுக்கு, உலகம் மரியாதையும், மாலையும் தரும்.
எனக்கு கோவில் கட்டும் வக்கு இல்லை. எனக்கு சுயமாக பணம் போடும் வசதியும், வக்கும் இல்லை. வசூல் செய்து கட்டும் திறனும், செயலாக்கமும் எனக்கு இல்லை. ஆனால் இந்த ஊரில் பிறந்த பண வசதியோ அல்லது செயல் திறன் உள்ளவனோ எவனும் இங்கே கோவில் கட்ட விட மாட்டேன். காரணம் அச்செயலை செய்தவனுக்கு மாலையும் மரியாதையும் போய்விடும். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒன்று தன்னால் இயங்கும் திறன் வேண்டும். அல்லது திறமை உள்ளவனை செயல் பட விட்டு வேடிக்கை பார்த்து ரசிக்க வேண்டும். இந்த இரண்டு வகையில் எதுவும் இல்லை என்றால், ஒதுங்கி இருக்க வேண்டும்.
எனது தங்கை சித்ரா கூறியது போல் ஒரு கோபுரத்தில் அப்பா அடித்த வர்ணம், மருங்கூர் மக்களால் புதுப்பிக்க முடிய வில்லை. ஒரு கண்ணாடி கூட மற்றவில்லையாம். நான் சரியாக கவனிக்க வில்லை.
எதுவும் செய்ய முடியாத மக்கள், புதிய தலைமுறைக்கு, வழியை விட்டு விலகி கொள்ள வேண்டியதுதான் பிள்ளையாருக்கு செய்யும் மாபெரும் சேவை.
பகடைக்காய்
இந்த மூடத்தனமான ஆணவத்துக்கும், அஹங்காரத்துக்கும் பலி ஆனது செட்டியார் குடும்பம். மருங்கூர் மக்கள் லட்சணம் தெரியாமல் அவர்களின் வலையில் சிக்கியது செட்டியார் குடும்பங்கள்.
கோவில் கட்டும் தேவை உள்ளதா; அற்பணிக்கும் மனம் உள்ளதா?
கோவில் கட்டாமல் கூட இருக்கலாம். அது தவறே இல்லை. அது மருங்கூர் மக்களின் விருப்பம்.
நான் குற்றம் சுமத்துவது, என்னிடம் கோவில் கட்டி கொடு என்று கிராம மக்கள் கேட்டுக்கொண்டதுதான் தவறு என்கிறேன். உங்கள் ஊரில் கோவில் கட்டினாலும் கட்டாவிட்டாலும், எனக்கு கவலை இல்லை.
உங்கள் வீட்டுக்கு நீங்கள் என்னை அழைத்தால், வர நான் முடிவு எடுத்தால், குறைந்த பட்சம் “வாங்க” என்று கூறி வரவேற்று, ஒரு காபி கொடுக்கும் தகுதி இருக்கும் என்ற எண்ணத்தில் தான் வர முடிவு எடுக்க முன்வருவேன்.
கோவில் கட்ட அழைத்த போது, அதற்கு தேவையான தகுதிகள் என்ன வேண்டும் என்று பரிசீலிக்க நேரம், மற்றும் அந்த ஊர் மக்களிடம் பழக்கமும் எனக்கு இல்லை. அதனால், நான் தேவையற்ற வலையில் சிக்கிக்கொண்டேன். எனது தந்தையார் செய்த அதே தவறை செய்து விட்டேன்.
அடுத்த கும்பாபிஷேகம்
வரும் 2021 ஏப்ரல் மாத கும்பாபிஷேகம் நடக்கும். அது கமிட்டீ நான் வசூல் செய்த பணத்துக்கு உத்தரவாதம் தந்துள்ளது.
அது செயல் படுத்த தவறினால், சபதியிடம் பத்திரத்தில் கட்டித்தர கையெழுத்திட்ட அதனை நபர்களையும் கோர்ட்டில் ஏற்றி மருங்கூர் மானம் கப்பல் ஏறி விடும்.
நான் ஒன்றும் மு கி பாலுசாமி செட்டியார் இல்லை. நான் பாண்டுரங்கன்.
இப்போது கமிட்டி கவலை, ஒற்றுமையும் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலுக்கும் தன்னை அர்ப்பணிக்கும் மனம் இல்லாத ஊரில் இந்த கோவில் மீண்டும் பாலடையாமல் தற்காத்து வழி நடத்த வழி இருக்குமா?
எனது ஆலோசனை:-
அந்த கோவிலை நாம் பிரசத்தி படுத்திவிட்டால், காளையார் கோவில், சருகனி, வலனை, ஆனந்தூர் போன்ற ஊர்களின் மக்கள், தன்னை அர்ப்பணிக்கும் மக்களை காமிட்டீ யில் போடுங்கள். திறமை உள்ளவர்களை போடுங்கள். அவர்களை செயல்பட சொல்லி மருங்கூர் மக்கள் வேடிக்கை பாருங்கள். இதுதான் எனது ஆலோசனை.
எனது தந்தைக்கும் ஸ்ரீ செல்வ விநாயகருக்கும் மட்டுமே உறவு. எனது தந்தை யின் வழியில் அந்த ஸ்ரீ செல்வ விநாயகரை பிரசித்தி படுத்துவதை தவிர, வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை.
மருங்கூர் மக்கள் 70% மேல் கோவிலை எனக்கு உரிமை செய்து தர முன் வந்துள்ளனர். சட்டப்படி கமிட்டி இன்னும் எது எது தேவையோ அதெல்லாம் அமைத்து கொடுத்தால் நான் என்னால் முடிந்த தை செய்து தருகிறேன்.
மருங்கூரில் செயல் திறன் இல்லாவிட்டால், செயல் திறன் உள்ள அடுத்த ஊர் காரர்களிடம் பதவியும் மாலையும் கொடுப்போம்.
முதல் மரியாதை என்ற பெயரில் ரூபாய் 50001 செலுத்தி வாங்கும் சக்தி படைத்த பக்கத்துக்கு ஊர் காரர்களை என் நிர்வாகம் செய்ய அனுமதிக்கக் கூடாது?
மருங்கூரில் எனக்கு தேங்காய் கொடு என்று பிரச்னை பண்ண முடியலாம். ருபாய் 50001 கொடுத்து மரியாதை வாங்கும் சக்தி இருக்காது.
வெறும் கை மூலம் போடாது. ஆண்டிகள் கூடி மடம் கட்ட முடியாது.
தொடரும் …..
*******************************************************************************
இப்படிக்கு
இன்னும் வரும் ..