You are currently viewing SSV உண்மைக்கதை 4: ஸ்ரீ செல்வ விநாயகருக்காக இன்னும் எத்தனை பேர் சேவை செய்து வருகின்றனர்?
பாலஸ்தானம் நிகழ்வுகள்

SSV உண்மைக்கதை 4: ஸ்ரீ செல்வ விநாயகருக்காக இன்னும் எத்தனை பேர் சேவை செய்து வருகின்றனர்?

SSV உண்மைக்கதை 4

ஸ்ரீ செல்வ விநாயகருக்காக வந்தவரே இறுதி வரை சேவை செய்ய இயலும்; எனது தந்தையின் வேண்டுதல், இன்றும் இயங்கும் அவரின் புனிததன்மை வாய்ந்த நோக்கம்: “உனக்கு ஒரு இருப்பிடம் கட்டித்தருகிறேன்”- உண்மைக்கதை

Nov 2, 2020

எனது தந்தையின் வேண்டுதல், இன்றும் இயங்கும் அவரின் புனிததன்மை வாய்ந்த நோக்கம்: “உனக்கு ஒரு இருப்பிடம் கட்டித்தருகிறேன்”-SSV உண்மைக்கதை

SSV உண்மைக்கதை 4…

கீழ்கண்ட புகைப்படத்தில் பாலாலயத்தில் பங்கெடுத்த நபர்களில் இன்னும் எத்தனை பேர் ஸ்ரீ செல்வ விநாயகருக்கு சேவை செய்து வருகின்றனர்?

பாலாலயத்தில் பங்கெடுத்த நபர்களில் இன்னும் எத்தனை பேர் ஸ்ரீ செல்வ விநாயகருக்கு சேவை செய்து வருகின்றனர்?

*******************************************************************************

குடும்ப திருவிழா பதிவு 

காதுகுத்து, பிறந்தநாள், நிச்சயதார்த்தம் போன்ற சுமார் 100 கலக்கும் திருவிழாக்களுக்கு கோவிலில் இடம் பதிவு செய்துகொள்ளலாம்.

தொடர்புக்கு:-

செயலாளர்: நிவாஷ் +91 96004 60828

சேவகர்: திரு பார்த்திபன் +91 97515 04073

Sree Selva Vinayagar Arakkattalai

Indian Overseas Bank

KalayarKovil Branch

Account No. 187201000022405

IFSC Code: IOBA001872

இப்படிக்கு

MKP பாண்டுரெங்கன்

இன்னும் வரும் ..

  1. SSV உண்மைக்கதை 1
  2. SSV உண்மைக்கதை 2
  3. SSV உண்மைக்கதை 3
  4. SSV உண்மைக்கதை 4
  5. SSV உண்மைக்கதை 5
  6. SSV உண்மைக்கதை 6
  7. SSV உண்மைக்கதை 7
  8. SSV உண்மைக்கதை 8
****************************************************************************

ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், மேலமருங்கூர் ஸ்தல புராணம்-

SSV உண்மைக்கதை

SRI SELVA VINAYAGAR TEMPLE, MELAMARUNGUR Established By The Late Mr. M. K. Palusamy Chettiar Pictures Of Olden Temple

Sree Selva Vinayagar Temple New Temple
SRI SELVA VINAYAGAR TEMPLE, MELAMARUNGUR established by the late Mr. M. K. Palusamy Chettiar Pictures of Olden Temple

Sree Selva Vinayagar Temple Old Temple Kumbabishek In 1986-

உண்மைக்கதை SSV

ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், மேலமருங்கூர்
ஸ்தல புராணம்
மேலமருங்கூர் கிராமத்தைத் தமது பூர்வீகமாகக் கொண்ட திருவாளர் மு.கி. பாலுச்சாமி செட்டியார்
என்பவரால் உருவாக்கப் பட்டதுதான் இக்கோவில். தமது இளவயதில் இவர் வறுமையாலும்
அதிகக் கடன் தொல்லையாலும் பாதிக்கப்பட்டிருந்தவர். ஒரு சமயம் தமது கிராமதிலுள்ள
கண்மாயில் குளிக்கச் சென்றபொது அதில் ஒரு விநாயகர் சிலையைக் கண்டெடுத்துள்ளார்
Temple Founder M.K. Palusamy Chettiar!986

Mr. M. K. Palusamy Chettiar & Madam Chellamal- உண்மைக்கதை SSV

அருகாமையிலுள்ள உருவாட்டி கிராமத்திலிருந்து யாரோ அதை அங்கு விட்டுச்சென்றிருக்க

வேண்டும். அப்பொழுது அவர் அவ்விநாயகப் பெருமானிடம் தமது நிலையை எடுத்துக்கூறி

அவருக்கு அருள்பாலிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அப்படி வாழ்வில் வறுமை நீங்கி

முன்னேறி வந்தால் அவருக்கு ஒரு ஆலயம் எழுப்புவதாகவும் வாக்களித்தார்.

அதன் பிறகு அவர் வாழ்வாதாரம் தேடி 1950களில் தமது பதினாறாம் அகவையில் மலாயா

வந்தார்.

ஆரம்பதில் பினாங்கு நகரில் ஒரு கடையில் சாதாரண கூலி வேலையில் அமர்ந்த அவர்
பிறகு விக்டோரியா வீதியில் M.K. பாலுச்சாமி அண்ட் கோ என்ற பெயரில் ஒரு பழைய
மரச்சட்டங்கள், பலகைகள் விற்கும் கடையைத் திறந்தார். அதன் பிறகு பழைய இரும்பு, பழைய
சாமான்களெனப் பல வகையான வியாபாரங்கள் செய்து பார்த்தும் அவ்வளவு வெற்றிகாண
முடியவில்லை. அதன் பிறகு 1978-ம் ஆண்டு பட்டர்வர்த் பாகான் லுவார் என்ற இடத்தில் அதே
.

Athimoolam Chettiar

1986 Temple Construction

பெயரில் ஒரு மோட்டார் வாகன உபரிப் பாகங்கள் விற்கும் கடையை உருவாக்கினார். இதில்
நல்ல வெற்றி கண்ட இவர் 1986-ம் ஆண்டு தமது சொந்த ஊரான மேலமருங்கூர் சென்று
வினாயகப் பெருமானுக்கு வாக்களித்தபடி ஒரு சிறிய ஆலயத்தையும் நிறுவினார்
இவர்
மறைவிற்குப் பிறகு பட்டர்வர்த்திலுள்ள இவரது கடை தமது சகலரின் மகன் திருவாளர்
சுந்தரராஜன் என்பவரால் இன்றும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது.
அன்னாரின் மூத்த மகன் திருவாளர். MKP. பாண்டுரங்கன் அவர்கள் இதே ஊரில் Mkp
Auto Parts Sdn. Bhd. எனும் நிறுவனத்தை உருவாக்கிப் பராமரித்து வருகிறார். கடந்த 2019-ம்
ஆண்டு தமது சக வணிக நண்பரின் அழைப்பின் பேரில் இவர் தமது மனைவியோடு தமிழகத்தின்
அரப்பூர் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்குச் சென்றிருக்கிறார். அச்சமயம் சொத்து
விற்பனை நிமித்தமாக தமது சொந்த ஊரான மேலமருங்கூர் செல்ல வேண்டிய வாய்ப்பு
ஏற்பட்டது. சுமார் ஒரு மாத காலம் அங்குத் தங்கியிருந்த காலக் கட்டத்தில் தமது தந்தை அமைத்த
விநாயகர் ஆலயத்தைக் காணச் சென்றார். 2002-ம் ஆண்டிற்குப்பிறகு இவ்வாலயத்திற்கு இவர்
செல்வது இதுவே முதல் முறை.
அங்குச் சென்றபோது இவ்வாலயம் பராமரிக்கப்படாது காடுமண்டிக் கிடந்ததைக்
கண்டார். இவரைக் கண்ட அவ்வூர் மக்கள் மகிழ்ச்சியடைந்து இக்கோவிலைப் புதுப்பிக்கும்
திட்டத்தினை முன்வைத்தனர். பல பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சுமார் 30 இலட்சம் ரூபாய்
செலவில் திருப்பணி செய்வதென முடிவெக்கப்பட்டது. இதில் கோபுர செலவுக்கான 7 இலட்சம்
ரூபாயை திருவாளர் பாண்டுரங்கன் அவர்கள் பெருமனதுடன் ஏற்றுக் கொண்டார்கள்.
இப்பொழுது இத்திருப்பணி இனிதே நடைபெற்று தற்பொழுது பூர்த்திபெரும் தருவாயில் உள்ளது.
எதிர்வரும் 02.04.2021 அன்று மஹா கும்பாபிஷேகம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள்
தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பலகாலமாக அறவே தொடர்பில்லாமல் விட்டுப்போன இவ்வாலயத் தொடர்பு மீண்டும்
தமக்கு ஏற்பட்டிருப்பது குறித்து திரு. பாண்டுரங்கன் அவர்கள் அவ்விநாயகப் பெருமானே தம்மை
இத்திருப்பணிக்கு அழைத்து தம்முடன் இணைத்துக் கொண்டதாகக் கருதுகிறார். தமது
தந்தையால் தொடங்கப்பட்ட இந்நற்சேவையைத் தாம் தொடர்வதற்கு விநாயகப் பெருமான்
அருள்பாலித்திருப்பதாகப் பெருமிதம் கொள்கிறார். இத்திருப்பணியில் தாம் ஈடுபட்ட பிறகு தமது
நிறுவனத்திற்கு ஜப்பானிலிருந்து நேரடியாக உபரிப் பாகங்களை இறக்குமதி செய்து விற்கும்
வாய்ப்பும் ஏற்பட்டிருப்பதற்காக விநாயகப் பெருமானுக்கு தமது நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கிறார்.
இத்திருப்பணியில் தமக்கு ஆதரவாக மலேசியாவில் வசிக்கும் தமது இளைய சகோதரர்
MKP சிவஞானம் அவர்களும் மற்றும் மதுரையைச் சேர்ந்த பத்மாவதி, சென்னயைச் சேர்ந்த
சித்ராதேவி ஆகிய இளைய சகோதரிகளும் நல்லாதரவு வழங்கி வருகின்றனர். இக்கோவில்
உருவாவதற்கு முன்பு இவ்வூரில் எந்தக் கோவிலும் இருந்ததில்லை. ‘கோயில் இல்லாத ஊரில்
குடியிருக்காதே’ எனும் முதுமொழிக்கிணங்க தமது தந்தை இவ்வூரில் இவ்விநாயகர் ஆலயத்தை
உருவாக்கியுள்ளார். இதனால் இவ்வூர் மக்கள் விநாயகப் பெருமானை வழிபட்டு பல
நன்மைகளையும் அடைந்துள்ளனர். தங்கள் தந்தையார் விட்டுச் சென்ற இத்தெய்வீகச்
சேவையைத் தொடர்வதே தங்களின் தலையாயக் கடமையெனக் கூறும் இவர்கள், இப்புனிதக்
காரியத்திற்கு இவ்வூர் மக்கள் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து நல்லாதரவு தரவேண்டுமெனக்
கேட்டுக்கொள்கின்றனர்.
‘மேலமருங்கூர் விநாயகப் பெருமான் போற்றி’
‘இன்பமே சூழ்க, எல்லாரும் வாழ்க’

Leave a Reply