SSV உண்மைக்கதை vii
Nov 28, 2020
ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா?
SSV உண்மைக்கதை vii
ஸ்ரீ செல்வ விநாயகர் கண்டிப்பாக கொடுப்பார். இதில் என்ன சந்தேகம்? அப்பாவுக்கு அவர் நினைத்ததை விட நிறைய கொடுத்தார். 1984 க்கு பிறகு எனது கணக்கில் லாப ஈவாக வரவு வைத்த தொகை நானும் நினைத்து பார்க்க, முடியாத தொகை.
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
-லியோ டால்ஸ்டாய்
அதன் பிறகு 13 வருடம் கழித்து மறு கும்பாபிஷேகம் செய்யாத விளைவோ என்னமோ, மற்ற வியாபாரிகள் வளர்ந்த வேகத்தில் நாங்கள் வளரவில்லை. எங்கள் தொழில் வளரவில்லை. நான் பிரிந்து தொழில் செய்த பிறகு சற்று பரவாயில்லை. வேகமான வளர்ச்சி இல்லை.
SSV உண்மைக்கதை 7…
ஸ்ரீ செல்வ விநாயகர் கொடுத்தார்,கொடுக்கின்றார், கொடுத்துக்கொண்டே இருக்கிறார், கொடுப்பார். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

“எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை, எத்தனை காரியம் சாதித்தோம் என்பதே முக்கியம் “
பெயர் தெரியாத ஞானி
அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.
– புத்தர்.
நமது மனோவியல் வளர்ச்சி சில விதங்கள்:-
நிலை 1) எனக்கு தெரியாது என்பது எனக்கு தெரியாது
இந்நிலையில் ஒரு மனிதன் வளர்வதில்லை. எனக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது என்பது எனக்கு தெரியாது, என்ற மனிதன் அடுத்த நிலைக்கு போக சாத்தியம் இல்லைதான்.
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
-ஐன்ஸ்டைன்
நிலை 2) எனக்கு தெரியாது என்பது எனக்கு தெரியும்
இந்நிலையில் உள்ளவர் முன்னேற்றத்துக்கு முதல் படி. எனக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது என்பது எனக்கு தெரியும். எனவே நான் எனது நண்பனை, அண்ணனை, உறவினரை கற்றுக்கொடுக்க கேட்க போகிறேன்.
நிலை 3) எனக்கு தெரியும் என்பது எனக்கு தெரியும்.
நான் சைக்கிள் கற்று இப்போ நன்றாக ஓட்டுகிறேன். சைக்கிள் ஓட்ட தெரியும் என்பது எனக்கு தெரியும்
நிலை 4) எனக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது.
மிக சிறப்பாக சைக்கிள் ஓட்டுவதில் தேர்ச்சி அடைந்து விட்டதால், நான் காதல் செய்து கொண்டே, நண்பர்களுடன் பேசி விளையாண்டுக்கொண்டே சைக்கிள் ஓட்டுவதால், எனது கவனம் சைக்கிள் பற்றி வராது. நான் சைக்கிள் ஓட்டுகிறேன் என்ற உணர்வே இருப்பதில்லை.
எனக்கு சைக்கிள் ஓட்ட தெரியும் என்பது எனக்கு தெரியாது.
இதுவே மிக உயர்ந்த நிலை.
இது சைக்கிள் மட்டும் அல்ல அத்தனை திறமைகளுக்கும் பொருந்தும்.
முதல் நிலையில் உள்ளவர்கள்
நிர்வாகம் பற்றி எனக்கு தெரியாது என்பது எனக்கு தெரியாது. நான் பொறுப்பேற்று வாழவில்லை என்பது எனக்கு தெரியாது என்பது எனக்கு தெரியாது.
எதுக்காக கோவில் கட்டவேண்டும் என்பது எனக்கு தெரியாது என்பது எனக்கு தெரியாது.
அப்பா கட்டிய கோவில் மட்டும் சரியாக பராமரித்து இருந்து இருந்தால் இன்று சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு கோவில் பட்ஜெட் இருந்திருக்கும் என்பது எனக்கு தெரியாது என்பது எனக்கு தெரியாது.
அலுவல்கள் ரீதியாக, குடும்ப ரீதியாக, பொது சமுதாய ரீதியாக, எனது சுய திறமை ரீதியாக இன்றய உலகில் புத்தகம், யு டியூப் மூலமாக உயர்த்திக்கொள்ள வாய்ப்பு இருந்தும் நான் முன்னேற விரும்பவில்லை என்பது எனக்கு தெரியாது என்பது எனக்கு தெரியாது..
எனது எந்த திறமையையும் உயர்த்துவது அவசியம் என்பது எனக்கு தெரியாது என்பது எனக்கு தெரியாது.இதுவே முதல் நிலை மனதில் வாழ்வோர்களின் நிலை – நமது மனோவியல் வளர்ச்சி
*******************************************************************************
இப்படிக்கு
இன்னும் வரும் ..