You are currently viewing Think & Grow Rich Malaysian Thamila-திங்க் & குரோ ரிச் மலேசிய தமிழா 1
Think & Grow Rich தமிழா

Think & Grow Rich Malaysian Thamila-திங்க் & குரோ ரிச் மலேசிய தமிழா 1

Think & Grow Rich Malaysian Thamilaதிங்க் & குரோ ரிச் மலேசிய தமிழா-ஒரு அழைப்பு -1

<yoastmark class=

Think & Grow Rich தமிழா 1 என்பது ஒரு அழைப்பு. மலேசிய தமிழர்களுக்கு ஒரு அழைப்பு.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். (திருக்குறள்- 619)

தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்துவிடும்  (௬௱௰௯)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.  (௬௱௰௯)
— மு. வரதராசன்

விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.  (௬௱௰௯)
— சாலமன் பாப்பையா

கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்  (௬௱௰௯)
— மு. கருணாநிதி

Then…

மலேசிய தமிழர்கள், நிறைய செல்வந்த தொழில் அதிபர்கள் முதல் சிறு வியாபாரி வரை, நல்ல வேளைகளில் உள்ளவர்கள் நிறைய உண்டு. அவர்களுக்கு இந்த அழைப்பு பொருந்தாது என்றாலும் தொடர்வதில் ஒன்றும் பிரச்சனை இல்லை.

ஆனால் இது பொருளாதாரத்தில் அடி மட்டத்தில் உள்ளவர்கள், ஆனால் முன்னேற வேண்டும் எனும் ஒரு சிறு துளி ஆசை எனும் நெருப்புப்பொறி உள்ளத்தில் உள்ளவர்களை இதில் தீவிரமாக கலந்து கொள்ள அழைக்கிறேன். இதை தொடர அழைக்கிறேன்.

So…

“நான் ஒரு பூஜ்யம். இது வரை நான் எதிலும் ஜெயித்ததில்லை, ஒரு நல்ல வேலையில் அமர கூட தகுதி இல்லாதவன்/இல்லாதவள். நான் இதை தொடர்வதால் பலன் இருக்கிறதா?”

நீங்கள் பணம் செலவு செய்ய தேவை இல்லை. அனால் நீங்கள் உங்களை உயர்த்திக்கொள்ள தயார் என்றால், கண்டிப்பாக பலன் கிடைக்கும். மூலம் உங்களின் ஆசை மட்டுமே. போதிய முன்னேறும் ஆசை இருந்தால், அதில் இருந்து தொடரலாம். வாழ்வில் சாதிக்கலாம். ஜெயிக்கலாம்.

சென்ற மாதம், ஒரு நபரை வேலைக்கு அமர்த்தினேன். அந்நபரிடம் உனக்கு ஏதாவது ஒரு குறிக்கோள் இருக்கிறதா என்று கேட்டேன். “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைஅங்கிள் ” என்றார்.

Thus…

இந்த இடத்தில் ஒரு அற்புத ஆசிரியரை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அந்த ஆசிரியர், உலக செல்வந்தர் ஒருவரின் உதவியால், ஒரு மனிதனின் வெற்றிக்கும் தோல்விக்கும் எது காரணம் என்று 25 வருட ஆராய்ச்சி செய்து பல விஷயங்கள் உலகத்துக்கு கொடுத்து இருக்கிறார்.

தோல்விக்கு அல்லது ஒரு சீரான வாழ்வு வாழாத காரணம், தனக்கு என்ன வேண்டும் என்று தீர்மானிப்பது இல்லை, என்பதுதான்.

Again…

அதிலும், கீழ் நிலையில் வாழும் மலேசிய இந்தியர்கள் வளரும் பொழுது, இது போன்ற முக்கிய விஷயங்களை போதிக்கப்படாமல் வளர்க்கப்படுகின்றன.

பட்ட புண்ணிலே படும், கெட்ட குடியே கெடும்

பட்ட புண்ணிலே படும், கெட்ட குடியே கெடும் என்பது ஒரு பழமொழி. கெட்ட குடி, அதாவது, ஏழை ஏழை யாக போவதுக்கு நமது எண்ணங்களின் பழக்கம் என்பது, அந்த மனிதனின் உலகத்துக்கு கொடுத்த பொக்கிஷங்களில் அறிந்து கொள்ளலாம்.

So…

நிறைய ஏழைகள் செல்வந்தர்கள் ஆன கதைகள் நிறைய கேட்டு இருப்போம்.

and…

கெட்ட குடியே கெடும், எனும் பழமொழி பொய் என்று சொல்வது இயலாதுதான்.

But…

ஆனால், தனது ஏழ்மையை மாற்ற இயலாது என்று யாரும் சொல்ல வில்லை.

“நான் ஒரு படி உயர போகவேண்டும், போகப்போகிறேன்”

என்ற திடகாத்திரமான முடிவுக்கு வருபவன் ஜெயிக்கிறான். அது எப்படி? இதற்கான விடைகள் அந்த ஆசிரியரின் கற்பிப்பில் உணரலாம்.

நாம் அனைவரும் சமமா?

நாம் அனைவரும் சமமா? ஆணும் பெண்ணும் சமமா? பிரதமர், பில் கேட், போன்ற அனைவருடன் ஒப்பிட்டு பார்த்தால், தான் சமமா?

ஆண், பெண், மதம், ஜாதி என்ற வேற்றுமை நிறைய இருந்தாலும்:

அந்த பிரபஞ்சம், ஒரு விஷயத்தில் நாம் அனைவரும் சமம் என்று அந்த ஆசிரியரின் வேலைகளை படித்தால் உணரலாம்.

நாம் சமம் என்று உணர்வது மட்டும் பலன் இல்லை. அதை தெரிந்து என்ன சாதிக்க முடியும் என்றும் நாம் ஒரு முடிவுக்கு வர இயலும்.

Think & Grow Rich Malaysian Thamila-திங்க் & குரோ ரிச் மலேசிய தமிழா 1

இப்படிக்கு

MKP பாண்டுரெங்கன்

 

எனது முகநூல்

நான் பிறந்த ஊரான மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் முகநூல்

இப்படிக்கு,

MKP பாண்டுரெங்கன்