The Thinkers And Idiots is a article to stimulate how we think and understand.
The Thinkers And Idiots is about what I remember a story told by Srila Parapupad-the Founder of ISCKON.
I will write this in Tamil language.
Creating Awareness to the Village 2
அறிவில்லாதவன் VS அறிவுள்ளவன் – இதில் உள்ள ஆயிரக்கணக்கான வகைகளும் வேறுபாடுகளும்
ஸ்ரீமத் பாகவதமா அல்லது ஸ்ரீமத் பகவத் கீதை யா என்று நினைவில்லை. அதில் பிரபுபாதா ஒரு கதை சொல்லுவார்.
அந்த கதை கேவலம் ஆறு வயது குழந்தைக்கு சொல்லும் கதை. கருமம் அதை நான் படித்து தொலைத்தேன். அன்று படித்து தொலைத்தேன்.
இப்பொழுது தான் புரிகிறது பிரபுபாதா 6 வயது குழந்தைக்கு சொல்லும் கதைகளை சொல்லித்தான் பெரிய பெரிய விஷயங்களை மக்களுக்கும் பக்தர்களுக்கும் புரிய வைத்து இருக்கிறார்.
அவர் கூறிய 6 வயது குழந்தை கதையில் பெரிய பெரிய மனோவியல் இருக்கிறது, ஆனால் அந்த அளவுக்கு போதிய அறிவு இருந்தால் நமக்கு அவரின் கதை தேவையில்லை.
மாயாப்பூர் இஸ்கான் விக்கிப்பீடியா
அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்
பிரபுபாதா கூறிய திருடன் கதை 1-Thinkers & Idiots
ஒருவன் பிழைப்பு தேடும் வயது வந்ததும் அவன் திருட்டு தொழில் செய்ய முடிவு செய்தான்.
இதை அறிந்த ஒரு பெரியவர் அது தப்பு என்று உணர்த்த முயன்றார்.
அவன் அவர் புத்திமதியை புறக்கணித்து திருட்டு தொழிலில் ஈடுபட்டான். ஒரு நாள் பிடிபட்டு அடியும் மிதியும் வாங்கி அவதிக்குள்ளானான்.
சில காலம் கழித்து, உடல் நலம் பெற்றதும் மீண்டும் திருட ஆரம்பித்தான். மீண்டும் புத்திமதி பெரியவர் சொல்ல, இவன் வழக்கம் போல் புறக்கணித்து விட்டு திருட்டு தொழிலில் ஈடு பட்டான்.
இது போல் பல பல தடவை இவன் திருட, பெரியவர் புத்திமதி சொல்ல, இவன் புறக்கணிக்க, அடியும் மிதியும் வாங்க தொடர்ந்து நடந்தது
இவன் அறிவு இல்லாதவன் என்று அடையாளம் கண்டுகொள்ளலாம்.
பிரபுபாதா கூறிய திருடன் கதை 2-Thinkers & Idiots
ஒருவன் பிழைப்பு தேடும் வயது வந்ததும் அவன் திருட்டு தொழில் செய்ய முடிவு செய்தான்.
இதை அறிந்த ஒரு பெரியவர் அது தப்பு என்று உணர்த்த முயன்றார்.
அவன் அவர் புத்திமதியை புறக்கணித்து திருட்டு தொழிலில் ஈடுபட்டான். ஒரு நாள் பிடிபட்டு அடியும் மிதியும் வாங்கி அவதிக்குள்ளானான்.
மறுபடியும் திருட முடிவு எடுக்கும் போது, பெரியவர் புத்திமதி சொல்ல,அவன் சற்று யோசித்து, அடியும் மிதியும் வாங்கிய அனுபவத்தை வைத்து திருட வேண்டாம் என்ற ஒரு முடிவுக்கு வந்தான்.
இவனுக்கும் அறிவு இல்லை. அடியும் மிதியும் வாங்கிய அனுபவம், இவனை திருட்டு தொழிலை நிறுத்த வைத்தது.
இவன் பட்டு திருந்துபவன். சுய அறிவு இல்லாதவன்.
பிரபுபாதா கூறிய திருடன் கதை 3
ஒருவன் பிழைப்பு தேடும் வயது வந்ததும் அவன் திருட்டு தொழில் செய்ய முடிவு செய்தான்.
இதை அறிந்த ஒரு பெரியவர் அது தப்பு என்று உணர்த்த முயன்றார்.
அவன் அவர் புத்திமதியை ஆராய்ந்து புரிந்து கொண்டு, அவரின் புத்திமதியை ஏற்றுக்கொண்டான்.
பெரியவர் கண்ட இடங்களில் அடியும் மிதியும் விழும், வலிக்கும் என்று வாயினால் சொன்னதும் அவன் வலி என்றால் என்ன என்று உணர்ந்து. திருட்டு தொழில் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தான்.
இவனுக்கு சுய அறிவு இல்லை. சொல் புத்தி கேட்டுக்கொள்ளும் பக்குவம் இருந்தது.
இவன் சொல் புத்தி தேவை படுபவன்.
பிரபுபாதா கூறிய திருடன் கதை 4
ஒருவன் பிழைப்பு தேடும் வயது வந்ததும் அவன் திருட்டு தொழில் செய்ய முடிவு செய்தான்.
ஆனால் தானே முன்வந்து பல பல நல்ல வேதக்கதைகளும், வேதங்களும் கற்றறிந்ததால், இவன் திருடுவதால் பிடி பிடிபட்டு அடியும் மிதியும் வாங்க பயப்படவில்லை.
திருடுவது பாவம் என்று உணர்ந்ததால், இவனே தனது திருடும் நோக்கத்தை அறுத்து, தீ வைத்து கொளுத்தி விட்டான்.
இவன் பல பல ஞானி களுடனும், நல்ல நல்ல மனிதர்களுடனும் பழக்கம் உள்ளதால், இவன் இவனிடமே கீழ் கண்டபடி பேசிக்கொண்டான்:-
நான் சிறிய வயதுக்காரன். மனப்பக்குவம் அடையாதவன்.
மிருகங்கள் இன்ஸ்டிங்க் (INSTINCT) எனப்படும் உந்துதலில் செயல் படுகிறது. பறவைகளுக்கு தாய்மை வந்ததும் தான் கூடு அறிவே இல்லாமல் கட்டிக்கொள்ளும்.
பருவ வயது வந்த பிறகுதான் இனப்பெருக்க முயற்சிகள் செய்கின்றது. அவைகள் வயதுக்கு முன் கற்பழிப்பு போன்ற விஷயம் செய்யாது.
நான் மிருகம் இல்லை, நான் வேதம் கற்றவன். என் பக்குவமடையாத மனம் திருட சொல்கிறது, மற்ற பெண்களை பார்த்து ரசிக்க, வாய்ப்பு கிடைத்தால் தொடவும் சொல்கிறது.
நான் மனம் சொல்வதை கேட்க மாட்டேன். எனது அறிவை பயன் படுத்திதான் முடிவுகள் எடுப்பேன்.”
இவன் அறிவு உடையவன். இவனே மனித இனத்தில் உயர்ந்த இனம். இவனுக்கு புத்திமதிகள் தேவை இல்லாதது. ஆலோசனை தேவை படலாம், அறிவுரை தேவையற்றது.
என்னால் இது போன்று 4 என்ன 4000 கதை உருவாக்க முடியும்.
என்னால் இது போன்று 4 என்ன 4000 கதை உருவாக்க முடியும். அவசியம் இல்லை. நமது மனோ நிலைமையை அறிய அவரின் 4 கதைகளை படித்தால் போதாது.
நிறைய சிந்தித்து உணர வேண்டும். அந்த 4 கதைகளும் கற்பனைதான். பல வித மனோவியல்களை விளக்கி கூற அந்த கதைகள் தேவை படுகின்றது.
பிரபுபாதா திருடர்களுக்கு எழுதவில்லை, நம்மை போன்ற சாதாரண மக்கள் படித்து…
பிரபுபாதா திருடர்களுக்கு எழுதவில்லை, நம்மை போன்ற சாதாரண மக்கள் படித்து தரமான பக்தர்களாக மட்டும் ஆகவில்லை. உலகம் முழுதும் 100 கோவில்கள் அவர் தலைமையில் கட்டினார்கள்.
போர்ட் வாகன உரிமையாளர் மாயாப்பூரில் கோவில் கட்ட பெரிய பங்கு வகிக்கிறார்.
எனக்கு எந்த ரக கதை பொருந்தும்? ஒவ்வொரு மனிதனும் கேட்டுக்கொண்டாள் நமது நிலை புரிய வரும்.
அன்று கோவிட் 19 ஊசி போட யாரும் முன்வரவில்லை. இன்று ஊசி கிடைக்கவில்லை என்று புகார்.
அதே கோவிட், அதே ஊசி, ஆனால் ஒவ்வொரு மனிதனும் எந்த கதை ரகத்தை சேர்ந்தவன் என்று நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். சிந்தனையில்தான் மற்றம், ஊசியில் இல்லை.
எனக்கு கோவிட் வராது என்று அனைவரும் சொல்லி, சுடு காட்டில் இடம் இல்லாமல், தவித்த கதை எத்தனை?
இவர்கள் எல்லாரும் முதல் கதையில் உள்ள இனமாகத்தான் இருக்கவேண்டும்.
ஓலா டாக்ஸி ஓட்டுநர் பாதுகாப்பு பெல்ட் போட தேவையில்லை என்று கூறினால் அவன் அறிவு முதல் கதையை சேர்ந்த “அறிவு இல்லாதவன்” இனத்தை சேர்ந்தவன் என்று பொருள்.
உலக நாடுகள் அனைத்தும் மாஸ்க் போட சொன்னாலும் நமக்கு தேவையில்லை என்று சொல்லும் நபரும் முதல் கதையை சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும்.
கேதத்துக்கு அவசியம் போக வேண்டும். அது எப்படி போகாமல் இருக்கலாம்?
அந்த குடும்பம் யார்? அவர் குடும்ப திருமண/வளைகாப்பு வைபோகம் போகாமல் எப்படி இருக்கலாம்?
கலந்து கொள்பவர் குடும்பத்தில் அனைவரும் கோவிட் 19 வந்து அவதி படட்டுமா? இறக்கட்டுமா?
என்ன முட்டாள் மாதிரி பேசுகிறான்? திமிராக பேசுகிறான்?
இவர்கள் எல்லாரும் முதல் கதையில் உள்ள இனமாகத்தான் இருக்கவேண்டும்.
கரை ஏறுவதை மறந்த …..
அறிவில் உயரும் படிகளும் வித்தியாசங்களும்
முதல் கதை திருடனுக்கு அறிவு என்று ஒரு பகுதியே கிடையாது.
இரண்டாவது கதை திருடனுக்கு பட்டால் திருத்தலாம்,
ஆனால் நிச்சயமில்லை. யாராவது நினைவூட்டல், அறிவுரை கூறல் செய்து கொண்டு இருக்க வேண்டும். இவன் சுய சார்தல் பற்றாதவன். அடுத்தவர்கள் அல்லது வெளி சூழ்நிலையை சார்ந்தவன்.
மூன்றாவது கதையில் உள்ள திருடனுக்கு சுய அறிவு இல்லாவிட்டாலும், புத்திமதியை அவன் கற்பனாசக்தி மூலம் ஆராயும் திறமை உள்ளவன்.
அடியும் மிதியும் எந்த மாதிரி வழிகளை தரும் என்பதை கற்பனை செய்து, தனது பள்ளியில் அடி வாங்கிய மற்றும் தவறி கீழே விழுந்த வாழ்கை அனுபவங்களை வைத்து புரிந்து கொண்டான்.
நான்காவது கதையில் வரும் மைந்தனே மிக உயர்ந்த இனம். சுய அறிவை கொண்டவன். இவன் இன்ஸ்டிக்ட் (INSTINCT) என்ற உந்து சக்திக்கு ஆளாக மாட்டான்.
இவனுக்கு ஒரு பெண்ணை தொட ஆசை வரலாம். ஆனால் சாஸ்திரத்தை அறிந்து, இவன் இச்சையின் மூலத்தை அறிந்து, திருமணம் என்று ஒன்றை செய்து, இவனின் சட்டத்துக்கு புறம்பான இச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுவான்.
காம இச்சை போல், தேங்காய் மற்றும் மாலை மேல் இச்சை வரலாம். அதற்க்கு தேவையான முயற்சி கூட செய்யலாம். கோவில் கும்பாபிஷகத்தை தடுக்க கூட செய்ய தோன்றலாம். இவன் சாஸ்திரத்தை பார்த்து, நல்ல குரு மார்களிடம் ஆலோசனை கேட்பான்.
நல்ல ஆலோசகர்களின் ஆலோசனை அடிப்படையில் இவன் சட்டத்துக்கு புறம்பான இச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுவான்.
காரணம் இவனிடம் அறிவு இருக்கிறது.
இந்திரன் கெட்டதும் பெண்ணாலே சந்திரன் கெட்டதும் பெண்ணாலே கண்ணதாசன் கெட்டது கருணாநிதி யால-By:Garuda.07 Garuda
இப்படிக்கு
பாண்டுரங்கன்