You are currently viewing கலைச்செல்வி – பொறுப்பற்ற கணவனுக்கு வாக்கப்பட்டு படும் துன்பங்கள்-2
கலைச்செல்வி - பொறுப்பற்ற கணவனுக்கு

கலைச்செல்வி – பொறுப்பற்ற கணவனுக்கு வாக்கப்பட்டு படும் துன்பங்கள்-2

கலைச்செல்வி – பொறுப்பற்ற கணவனுக்கு வாக்கப்பட்டு படும் துன்பங்கள்-2

கலைச்செல்வி – பொறுப்பற்ற கணவனுக்கு 2 ல் கணவனின் பொறுப்பு என்றால் என்ன?

அந்த பொறுப்பை செய்யாதவனிடம் அவனுக்கு வாக்கப்பட்ட மனைவிக்கு என்ன உரிமை சட்டப்படி உள்ளது என்று எனது சற்று தூரத்து உறவினரிடம் விவாதித்தது பற்றி எழுதுகிறேன்.

கலைச்செல்வி – பொறுப்பற்ற கணவன் பற்றிய ஒரு காபி கடை பட்டி மன்றம்

சாலமன் பாப்பையா போன்றவர்கள், மேடையில் பல பெரிய பெரிய பேச்சாளர்களை வைத்து, உலக நாடுகளில் பட்டி மன்ற நிகழ்ச்சி செய்கின்றனர்.

அவர்களுக்கு, ரசிகர்கள் லட்ச கணக்கில் உள்ளனர், நடத்துகின்றனர்.

ஆனால், வேலை ஒன்றும் இல்லாதபோது, பொழுது போக்குக்காக ஒரு சாப்பாட்டு கடாயில், ஒரு டீ வாங்கி, உட்கார்ந்து நாங்கள் பட்டிமன்றம் நடத்தக்கூடாது என்று தடை யாரும் விதிக்கவில்லை.

ஆகவே பேசினோம். சாலமன் பாப்பையா நிகழ்ச்சிகளில், தலைப்பு ஒன்ராக இருக்கும், ஆனால், தலைப்பை தாண்டி பல கறுத்துக்களை அள்ளிவீசி, பாராட்டை பெறுவார்கள் பேச்சாளர்கள்.

எங்களின் காபி கடை பட்டிமன்றத்திலும் அப்படிதான் நடந்தது. இதில் யார் ஜெயித்தது தோற்றது என்ற கேள்விக்கே இடம் இல்லை.

கலைச்செல்வி – பொறுப்பற்ற கணவன் பற்றிய ஒரு காபி கடை பட்டி மன்றம் சுருக்கம்

கணவன் பொறுப்பை முழுதாக செய்யவில்லை

எனது வாழ்விலும், அவர் அவர் சுயநல அடிப்படையில், இந்தியா, அதுவும் நமது சமூக பெண்ணை தான் எடுக்க வேண்டும் என்று வற்பறுத்தினர்.

பயமுறுத்தும் வகையில் பேசினர். அந்த வயதில் முட்டாள்தனமாக சரி என்று கூறியிருந்தாலும், தாலி என்று ஒன்றை கட்டி விட்டால், போதும்.

உடனே சட்டம் கணவனின் பொறுப்பை அவன் தலையில் போட்டுவிடுகிறது.

மனைவிக்கும் பல பொறுப்புக்கள் இருக்கிறது. அந்த பொறுப்பை செய்ய தவறும் பொது என்ன என்ன உரிமைகளை, யார் யாருக்கு என்று சட்டம் தலையிடும்.

அந்த வகையில், எனது உறவினன் ஒருவன் கணவன் பொறுப்பை முழுதாக செய்யவில்லை.

ஒருவன் காட்டில் வாழும் பொழுது எதற்கும் கட்டுப்பட தேவையில்லை. உடை கூட உடுத்தாமல் வாழலாம். மதுரை, மலேசியா போன்ற சமூகத்தில் வாழும் ஒருவன், ஆடை உடுத்துவதிலிருந்து, வரி கட்டுவது, கணவன் கடமைகள் என்ன என்று அறிந்து, கட்டுப்பட வேண்டும்.

கணவன் மனைவி பிரச்னை வீட்டை தாண்டி வெளியாகும் பொழுது, ஒரு பிச்சைக்காரன் கூட ஏன் என்ற கேள்வி கேட்க உரிமை வந்து விடுகிறது.

பொறுப்பற்ற கணவன்பிள்ளை கொடுப்பது மட்டும் கணவன் கடமை இல்லை

மிருகங்கள். பறவைகள் பிள்ளை கொடுத்துவிட்டு, எஸ்கேப் ஆகிவிடும். மனிதனுக்கு அப்படி முடியாது. சுகம் வேண்டும் என்றால், பொறுப்பு ஏற்காமல், சுகம் பெற நிறைய வழிகள் உள்ளது.

தாலி காட்டும் முன், மனைவியை, குடும்பத்தை, பிள்ளைகளை சரியாக வழிநடத்த தயார் இல்லாத பட்சத்தில், திருமணம் வேண்டாம் என்று மறுத்து இருப்பது ஒரு பொறுப்புள்ள மனிதன் செய்யும் செயல்.

அப்படி தாலி கட்ட முடியாது என்று சொல்லியிருந்தால், அந்த பெண்ணின் வாழ்வு இப்படி நாசம் ஆகி இருக்காது.

நான் கூட கணவன் கடமையில் இருந்து தவறியவனை, சட்ட நடவடிக்கை எடுக்க உதவ முன் வந்துள்ளேன். அந்த மோசம் போன பெண் சரியான வாக்கு மூலம் கொடுத்தால் போதும் என்று எனது வக்கீல் கூறுகிறார்.

அந்த பெண் சார்பாக, சில உறவுகள், நான் போன்றவர்கள் சட்ட நடவடிக்கை எடுத்து, அந்த பெண்ணின் மன மற்றும் உடல் உளைச்சலுக்கு நஷ்ட ஈடு செய்ய மோசம் செய்த கணவனை சட்டப்படி வற்புறுத்தலாம்.

அந்த பெண் சரியாக செயல் பட்டால் அந்த பெண் ஜெயிப்பது உறுதி என்கிறார், எனது வக்கீல்.ஆலோசனை சொல்கிறார்.

இக்கட்டுரை முழுக்க முழுக்க கற்பனையே. பொழுது போகாமல் இருக்கும் பொழுது இது போன்ற வெட்டியான விஷயங்களை பாண்டிக்கதிரேசன் சொல்வதை எழுதி, எனது வெப்சைட்டில் பிரசுக்கிரேன்.

இப்படிக்கு

MKP பாண்டுரெங்கன்

மேலும் மற்ற தலைப்புக்களை படிக்க இந்த லிங்கில் கிளிக் செய்யலாம்.

எனது முகநூல்

நான் பிறந்த ஊரான மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் முகநூல்

இப்படிக்கு,

MKP பாண்டுரெங்கன்

மலேசியா..