பயமே ஆட்சி புரிகின்றதா?

சுமார் 60 மனைவி வைத்திருந்தார்- பயமே! 2020/10/16

பயமே ஆட்சி புரிகின்றதா??

மேடான் என்ற இந்தோனேஷியா பகுதியில் உள்ள ஒரு இடத்தின் சரித்திர புகழ் அந்த நாட்டு மன்னன் சுமார் 60 மனைவி வைத்திருந்தார். எந்த மனைவியுடன் இரவை கழிக்க முடிவு மன்னன் செய்தால், ஒரு இசை அமைப்பாளர் இசை அமைப்பார். மன்னன் மனைவியுடன் அன்றய இரவை கழிப்பார்.

கீழே க்ளிக் செய்தால் 60 மனைவியர்களுடன் வாழ்ந்த அரண்மனையை, பார்க்கலாம்.
பயமே -அத்தனை மனைவியும்
பயமே -அத்தனை மனைவியும்

 

பயமே ஆட்சி புரிகின்றதா????

அத்தனை மனைவியும் உயிர் வாழ பயந்து அடிமைகளாகத்தான் மன்னனுக்கு பணிபுரிந்து இருக்க வேண்டுமே ஒழிய, கண்டிப்பாக பணிபுரிந்து இருக்க வேண்டும். இதை அறிய பெரிய ஞானம் தேவையில்லை.

 

அம்மன்னன் படு வீரம் நிறைந்தவன். பக்கத்துக்கு நாட்டை பிடித்தவன். பயம் பயம் பயம், அவனை பார்த்தாலே பயம். தெருவில் போகும் பெண்ணை இழுத்து மனைவியாகிய மன்னர்கள் இந்தியாவிலும் அதிகம் தான்.

மனித இனத்தை பயம்தான் இன்றும் ஆட்டுகிறது. அன்று உயிர் பயம். இன்று மக்கள் ஆட்சி வந்தாலும், மன்னர் ஆட்சியை ஒழித்துக்கட்டி விட்டாலும், இன்றும் பயமே ஆட்சி செய்கிறது.

பயத்தில் பலவகைகள் இருக்கிறது. 50 வருடம் முன்பு ஆசிரியர் அடிப்பார் என்று பயம். இன்று நவீன கற்பிக்கும் முறை கற்பது விளையாட்டாகிவிட்டது. குழந்தைகளுக்கு பயம் இல்லாமல் ஆகிவிட்டது.

இன்றய மக்கள் ஆட்சியில் சாதாறன மனிதனின் கல்வி வளர்ச்சி முதல் பொருள் வசதி இல்லாத மன்னன்தான் அத்தனை மனைவி. இன்றய மதுரையில் ஒரு தெருவின் முன்னேற்றம் கூட செய்யமுடியாத, அவன்மேல் உள்ள பயத்தை வைத்து மக்களையும், மனைவியர்களையும், பக்கத்துக்கு நாட்டையும் (என்பது மடத்தனம், பக்கத்துக்கு காட்டையும்) ஆட்சி புரிந்தான்.

கற்பிப்பது வருமானம் தரும் தொழில் என்பதால் கிரியேடிவிடி சிந்தனை மூலம் பயத்தை விரட்டிவிட்டனர்.

மற்றவர்களை சர்வ சுதந்திரமாக வாழ விடவேண்டும், என்னை கேட்டு தான் நீ 50 வயதானாலும் நீ பொருள் வாங்குவதிலிருந்து, நன்கொடை அளிப்பதுவரை முடிவு செய்ய வேண்டும் போன்ற கலாச்சாரத்தில் சிக்கிய குடும்பத்தினர்களும் மன்னனிடம் மாட்டிய மனைவி போன்று அடிமைகளாகத்தான் வாழ்கின்றனர்.

நெப்போலியன் ஹில் அவரில் நூலில் 6 வகை யாக பயங்களை பிரித்தார். அனால் பயத்தை மட்டும் வைத்து எழுதினால் பல லட்சம் நூல்கள் எழுதலாம்.

செடோனா மெத்தெட் (Sedona Method) என்ற நூலின் ஆசிரியர், நான் உன்னை கட்டுப்படுத்துவதும், நீ எனக்கு கட்டுப்படுவதும் மனோவியல் பயம் என்கிறார். மன நோய் என்கிறார்.

இதை குட்ட குட்ட குனிபவனும் மடையன், குனிய குனிய குட்டுபவனும் மடையன் என்பதை நமது கிராமத்தில் மனோவியல் படிக்காமல் சொல்லிவைத்துவிட்டனர்.

நாம் உலகத்தை திருத்துவதை கைவிட்டு விட்டு, தனது குடும்ப, பொருள், அறிவு, ஆன்மீக வளர்ச்சியில் நெறிப்படுத்திக்கொள்வோம். காரணம், யாரும் யாருடைய அறிவுரையை கேட்க தயாராக இல்லை என்று புரிந்து கொண்டால் நாமக்கு விளங்கி விடும்.

இப்படிக்கு

MKP பாண்டுரெங்கன்

இன்னும் வரும் ..

Leave a Reply