You are currently viewing பிரச்சனைகளின் மூலாதாரம் என்ன – 3
19 5 2022 சங்கடஹரசதுர்த்தி நிகழ்ச்சி

பிரச்சனைகளின் மூலாதாரம் என்ன – 3

பிரச்சனைகளின் மூலாதாரம் என்ன – 3 ல் நோக்கம் பற்றிய ஒரு ஆராய்வு

so..

பிரச்சனைகளின் மூலாதாரம் என்ன – 3 சரியான நோக்கம் இருக்கிறதா என்று ஆராயலாம் என்று நினைக்கிறேன். இதில் நிறைய தலைப்பில் எழுதலாம். ஆனால் தீர்வு வரவே இயலாது என்பது மட்டும் நிச்சயம்.

Similarly..

எனது அனுபவ அடிப்படையில், திருமணம் செய்து வைத்தலின் நோக்கம் முதல் கோவில் கட்டும் நோக்கம் முதல் நிறையவே எழுதலாம்.

இதற்கு முன் கட்டுரையை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்
பிரச்சனைகளின் மூலாதாரம் என்ன – 2

in the first place…

இதில் கோவில் கட்டும் நோக்கங்களை பற்றி மட்டும் கவனம் செலுத்துவோம். மற்ற அனுபவங்களை உதாரணத்துக்கு பயன் படுத்துவோம்.

So again…

யார் எதிரி?????????

கோவில் கட்டும் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? பிரச்சனைகளின் மூலாதாரம் என்ன – 3

குடும்ப உறுப்பினர்களின் சுய நல நோக்கங்கள்-குடும்ப சார்பாக ஒரு உதாரணம்.

தனது குடும்பத்தில், ஒரு உறுப்பினருக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பு வந்து விட்டால், குடும்பத்தில் ஏக மனதாக, திருமணம் செய்து கொள்ளவேண்டியவன் வாழ்வது தான் முதன்மையான குறிக்கோள் என்று ஒருமித்த, ஒருங்கிணைந்த கருத்தில், நோக்கத்தின் அடிப்படையில், செயல் படுவதில்லை.

ஒருவர் சீர், மற்றொருவர் கௌரவம், ஜாதி, அந்தஸ்து, நாத்தனார் சீர், தனது வருங்கால பாதுகாப்பு, இப்படி குளறு படியான குறிக்கோளில் செயல் படுத்தப்படுகிறது.

இளம் பிராய திருமணம், பெண் பிள்ளையை படிக்க வைக்காமை போன்ற பல மறைமுக குறிக்கோள், வெறுக்கத்தக்கது.

ராமநாத புறத்தில், மாற்று ஜாதியை காதல் செய்த ஜோடிகளை, உயிருடன் எரித்த சம்பவங்கள் இன்னும் பழமையான மூட பழக்கம் ஊறிப்போய் உள்ளது என்பது தெரிகிறது.

not only … but also…

கோவில் கட்டும் பின்னணி நோக்கம் என்னவாக அல்லது எதுவாக இருக்க வேண்டும்/கூடாது??

இதில் குடும்ப ஆராய்வு அதிகம் செய்ய இடம் இல்லை. நிறைய கோவில் கட்டும் பின்னணி நோக்கம் என்னவாக அல்லது எதுவாக இருக்க வேண்டும்/கூடாது என்பதை ஆராய்வோம்.

in like manner…

என்னை அவர், இவர் அழைக்க வில்லை

Thus..

என்னை அழைக்கவில்லை என்று குறை சொல்லும், நண்பர்கள், இன்னும் 1900 முதல் 1986 வரை உள்ள வருடங்களில் வாழ்கின்றனர். இன்னும் தூங்குகின்றனர். இன்னும் விழிப்பு நிலை வரவில்லை.

in the first place..

சமீபத்தில், விபூதி பாக்கெட் செய்து கோவிலுக்கு கொடுக்கப்படுகிறது தெரிந்த விஷயம். என்னால் இயன்ற அளவு சில குறைகள் சொல்கிறேன்.

 மூலாதாரம் என்ன - 3
விபூதி பிரசாதம் கவர் 1
 மூலாதாரம் என்ன - 3
விபூதி பிரசாதம் கவர் 2

1) சுய விளம்பரம் தேடுகிறார்.

2)இது ஒன்னும் பெரிய செலவில் செய்யவில்லை.

But…

ஆனால்,

1)விபூதி பாக்கெட் கொடுப்பவரை யாரும் செய்ய சொல்லவில்லை.
2)இவருக்கு தேங்காய் மூடி கொடுக்க போவது இல்லை
3)துண்டு போட்டு மரியாதை செய்ய போவது இல்லை

ஏன் என்னை அழைக்க வில்லை என்று குறை கூறுபவர்கள், 36 வருடமாக, இப்படி ஒரு ஆக மலிவான சேவை கூட செய்யவில்லை.

ஆளுக்கு ஒரு மிக மலிவான சேவை செய்து இருந்தாலே, கோவிலை ஒரு 36 வருட வளர்ச்சி ஏற்பட்டு இருக்குமே?

இப்பொழுது 2022 நடக்கிறது. விழித்து எழ சொல்கிறோம்.

அது மட்டும் அல்ல. கோவில் கமிட்டீ, கோவிலை நிர்வாகம் செய்ய அவர்களின் நேரத்தையும், பணத்தையும் செலவு செய்கின்றனர். பயண செலவுகள் போன்ற செலவுகளை, அறக்கட்டளை கொடுப்பது இல்லை.

கோவிலுக்கு தொண்டு செய்வது அவர்களாகவே வழிய வந்து செய்கின்றனர்.

இவரையும், அவரையும் அழைப்பது போன்ற மனித தொண்டுக்கு, யாரும் தயார் இல்லை என்று கருதுகிறேன்.

கடவுளுக்கு நாம் தான் வழிய சென்று தொண்டு செய்ய வேண்டும். அதுவே சாஸ்திரம். மற்றவர் வீட்டுக்கு அலையாமல் போகக்கூடாது. இதுவும், மனித உறவு சாஸ்திரம்.

எனது உறவினர்/வங்காளி கூட என்னை கோவில் போ என்று ஒரு வார்த்தை கூறவில்லை

கோவிலுக்கு தொண்டு செய்ய, கொஞ்சம் பண வசூல் போன்ற சேவைகள் செய்யலாம்.

அவர் அவருக்கு, ஆயிரம் வேலைகள் உண்டு. எவரும், மற்றவரை கவரவிக்க வாழவில்லை. வீட்டு விஷேசம் செய்தால், தேவை என்று அழைப்போம். அவ்வளவுதான்.

கீறுடி கோவிலுக்கு என்னை அழைக்கவும் இல்லை.

எனது வீட்டு தெய்வம் என்று சொல்லக்கூடிய கீறுடி கோவிலுக்கு எனக்கு கட்டியது முதல், கும்பாபிஷேகம் முதல், 2019 வரை எனக்கு எதுவும் தெரியாது. தெரியப்படுத்தவில்லை. என்னை அழைக்கவும் இல்லை.

in addition…

எனக்கு துண்டு போட்டு மரியாதை செய்யவில்லை

மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கமிட்டீ உறுப்பினர்கள் அத்தனை பாடுபட்டு, கோவிலை பிரசித்தி பெற வைப்பது அனைவருக்கும் தெரியும்.

36 ஆண்டுகளாக எந்த பெரிய மனிதர்களும் வளர விடாத, வளர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதும் தெரிந்த விஷயம்.

36 ஆண்டுகள் செய்யாத பூஜைகள், அன்னதானங்கள், திருவிழாக்கள் என்று, இந்த இரண்டு ஆண்டுகளில் தற்போதைய கமிட்டீ உறுப்பினர்கள் சாதித்து காட்டியதும் தெரிந்த விஷயம்.

அப்படி சாதித்தவர்களுக்கே துண்டு கொடுப்பது இல்லை. காரணம்

  • கோவில் நலன் மற்றும்
  • துண்டுக்கு உறுப்பினர்கள் போட்டி போட்டு விடாமல் இருக்கவும்
  • மக்கள் ஒற்றுமை தேவை என்றும்
  • கோவிலுக்கு வரும் பக்தர்கள் தொண்டு செய்வதுக்கு முதன்மை நோக்கம் உருவாக்கவும்

first…

பரிவட்டம், பொன்னாடை, போன்ற மரியாதை வெளியூர் மக்கள், நன்கொடை கொடுத்தவர்களுக்கு மட்டும் செய்ய கமிட்டீ தீர்மானித்துள்ளது.

Second..

காலப்போக்கில், விநாயகருக்கு தொண்டு செய்பவர்களை மட்டும் கோவிலுக்கு கவர்ந்ததால் போதுமானது. வீண் பிரச்சனைகள், மரியாதை பிரச்சனை செய்யும் மனிதர்கள் கண்டிப்பாக பக்தர்கள் இல்லை என்பது அறிவுபூர்வமான உண்மை.

Third..

பால்குடம் எடுத்து பக்தி செலுத்துவது, மாதாந்திர விஷேஷ பூஜைகளுக்கு வந்து கலந்துகொள்வது, அதற்க்கு முடித்தவர் நன்கொடை செய்வது, அன்னதானம் போடுவது போன்ற சேவைகள் செய்யும் தொண்டர்களையும், தான் என்ற அகங்காரத்தை ஒழித்துக்கட்ட பக்தி சேவையில் ஈடுபடும் உண்மை பக்தர்களை கவர்ந்ததால் போதுமானது.

Again..

ஸ்ரீ செல்வ விநாயகரின் பக்த பெருமக்கள், பால்குடம் எடுப்பவர்களின், ஜாதி, ஆண், பெண் வேற்றுமை பார்க்காமல் பால் குடம் எடுக்கும் பக்தர்களின் வெயிலில் நடந்து சுடும் கால்களுக்கு நீர் ஊற்றி தொண்டனுக்கு தொண்டனாக செயல் படலாம்.

(இந்த வழக்கம், சம்பிரதாயம், கலாச்சாரம் மலேஷியா தைப்பூச திருவிழாவில் காணலாம். என்பது குறிப்பிடத்தக்கது. கடவுளுக்கு தொண்டு செய்வதை விட, கடவுளின் தொண்டர்களுக்கு சேவை செய்வது இன்னும் சிறந்தது என்று சொல்லப்படுகிறது) 

Additionaly..

கண்டிப்பாக, அவருக்கும், இவருக்கும் பொன்னாடை போட்டு கவுரவிப்பது கோவிலுக்கு எந்த முன்னேற்றமும் வராது.

ஒருவேளை, முதல் அமைச்சர், பிரதமர், டாட்டா, பக்கத்துக்கு ஊர் வக்கீல் போன்றவர்களுக்கு மரியாதை செய்வது வேறு விஷயம்.

கோவில் கட்டிய நோக்கம், கமிட்டீ அமைத்த நோக்கமே புரிந்து கொள்ள இயலாத யாருக்கும் நாம் அவர்களின் அதிருப்திக்கு பொறுப்பேற்க இயலாது.

அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கோவில் பக்தர்களும், உறுப்பினர்களும் நிறைய முயற்சி செய்ய நேரமும் இல்லை, தேவையும் இல்லாதது. தூங்குபவர்களை எழுப்பிவிடலாம், தூங்குவது போல் நடிப்பவரை எழுப்பவே முடியாத காரியம்.