மாதம் ஒன்றிரண்டு வாழ்வின் எனது அனுபவங்கள் ஜனவரி 2022/2, அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்

அனுபவங்கள் ஜனவரி 2022/2..

 
இதில் வரும் அணைத்தும் கற்பனையே. பொழுது போகவில்லை என்பதால், யாரையாவது நினைத்து நொந்து கொள்ள முழுக்க முழுக்க கற்பனையில் எழுதியது.

MKP Pandorangan

அந்த மனிதனின் துணைவியின் புலம்பல்கள்.

அனுபவங்கள் ஜனவரி 2022/2…

துணிந்து விட்டாள் ஒரு மருமகள்.

அந்த மருமகளின் பல கேள்விகள் 2019 க்கு பிறகு நிறைய வருகிறது.

ஏன் எனது தலைமகனுக்கு, தாய் மாமன் மடியில் வைத்து, தலை முடி இறக்க அடிப்படை உரிமை கொடுக்கப்படவில்லை?

ஒதுக்கப்பட்ட குடும்பத்தில் பெண் எடுத்தார்களோ?

அன்று எனக்கு பார்த்த மாப்பிள்ளைக்கு, பலர் பெண் கொடுக்க மறுத்ததை வைத்து, எனது அண்ணன்கள், அன்றய மாப்பிள்ளையின் தொழில் பார்ட்னர் பரமகுடியில் பாண்டுரங்கன் அவர்களின் உத்தரவாதமான பேச்சை நம்பித்தான் பெண் கொடுக்க முன்வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் பேச்சில் உத்தரவாதம் இல்லாவிட்டிருந்தால், அவர்களும் – எனது அண்ணன்களும் – பின் வாங்கி இருப்பார்கள்.

பாண்டுரங்கன் அவர்கள், அன்று நல்ல முறையில் மாப்பிள்ளை பற்றி சொல்லவில்லை என்றால், அன்றே முற்றுப்புள்ளி வைத்து இருப்பார்கள்.

என்னை பெண் எடுத்து, என்னையோ, எனது குடும்ப வசதியோ அடிப்படை கிடையாது. நல்ல வசதி படைத்தவர்கள் பெண் கொடுக்க முன் வந்து, பின் நோக்கி சென்று விட்டனர்.

வசதி பொருத்தம் இல்லை என்றால், பெண் எடுத்து எதற்காக உயிரை வாங்கி தொலையனும்?

ஏன் மாமனார் கட்டிய கோவில் கும்பாபிஷேகம் எனக்கு தெரியவில்லை?

(அந்த நேரத்தில், குடும்ப ஒற்றுமையை கருத்தில் கொண்டு, எத்தனை பிரச்னை இருந்து இருந்தாலும், சமாதானம் செய்து வலி நடத்தும் திறமை உள்ள மாற்று ஆண் உறுப்பினர் இல்லையோ என்ன கன்றாவியோ?)

ஏன் முதல் கட்டிய வடக்கு மாசி வீதி வீட்டுக்கு, கிரகப்ரவேசத்தன்று மன வருத்தங்கள் உருவானது?
மலேஷியா குடும்பத்துடன் செட்டில் செய்த பிறகு, சுமார் 10 விசேஷங்களுக்கு, நாங்கள் குடும்பமாக அல்லது, தனி ஒருவரோ செலவு செய்து வந்தோம், தமிழ் நாட்டுக்கு. எங்களின் வருகை, அழைத்தவர்களுக்கு, சிறப்பை தந்ததா, என்று எங்களுக்கு தெரியாது.

எந்த விஷேசங்களிலும், முக்கியமாக எங்களுக்கு அழைப்பு கொடுத்து, நாங்கள் கலந்து கொண்டுவிட்டாள் அதில், எங்களால் ஒரு குண்டுஊசி அளவு பிரச்னை இதுவரை வந்ததே இல்லை.

எந்த ஒரு மங்களகரமான, நல்ல விஷேசங்களிலோ, அல்லது ஆன்மீக நிகழ்ச்சிகளிலோ, அழைப்பு கொடுத்த குடும்ப உறுப்பினர்களிடமோ, அல்லது, வருகை தரும் யாரிடமும், பூவுக்கும், மேக்கப்புக்கும், அழுது ஆர்ப்பாட்டம் செய்தது இல்லை.

இது போன்ற அற்ப விஷயங்களுக்காக போட்டி போட்டு, அப்படி ஏமாற்றமாகி விட்டால், கேத வீட்டில் அழுவது போல் அழுது ஆர்ப்பாட்டம் செய்தது எனது வீட்டு பெண்கள் செய்தது இல்லை.

இதற்க்கு காரணம், காமென்சேன்ஸ்.

1) அவர்கள் அழைத்தது, நமது வருகை அவர்களுக்கு சிறப்பை தரும் என்ற அழைத்தவராய் எங்கள் குடும்பத்தினர் எப்பொழுதும் மதிப்பது.

2) அவர்கள் எங்களுக்கு, சேவை செய்யவோ, எங்களின் மனங்களை, திருப்தி படுத்த எங்களை அழைக்க வில்லை.

3) சமீபத்தில் மதுரையில் நான் கலந்த ஒரு திருமணத்தில் கூட என்னால் குறைந்த பட்சம் 100 குறைகள் கண்டு பிடிக்க முடியும். அழைத்தவர்கள், எனது மனைவியை, திருமண வேலைகள் பார்க்கவும், சிறப்பிக்கவும் கூப்பிட்டார்கள் என்பது எங்களுக்கு தெளிவாக புரிந்ததால், மட்டும் இல்லை. குறை காண்பதும், குறை சொல்லுவதும், அத்தனை செலவு செய்து, விஷேசம் நடத்துபவர்கள் மனம் புண் படும் என்ற காரணமும் இல்லை. நாங்கள் நாகரிகம் என்றால் என்ன என்பது தெரிந்த ஒரே காரணத்தால், குறை கூறுவது இல்லை. எந்த விஷேஷத்திலும் அறவே குறை இல்லாமல் அந்த கடவுள் கூட நடத்த இயலாது.

“நீ எனக்கு அவருக்கு கொடுத்த பூ மாதிரி, சிறந்த பூ கொடுக்கவில்லை” “பக்கத்துக்கு இலையில், 2 தடவை காய்கறி வைத்தாய், என்னை ஒழுங்காக கவனிக்க வில்லை” “என்னை மதிக்கவில்லை”-இது போன்று குறை சொல்லி முகம் சுளித்து வெளியேறியதே இல்லை. நாங்கள் மட்டும் அல்ல கலாச்சாரம் தெரிந்த அணைத்து மக்களும் அப்படி தான் நடந்து கொள்கின்றனர்.

 

Yaar Eppadi Pattavar

ஏன் நமது வீட்டு பிரச்னை என்றால் பலருக்கு நோக்காடு வந்து விடுகிறது? ஏன்? அல்லது வேறு மாதிரி கூறினால்,ஏன் ஆண் பிள்ளைகளின் வீட்டு விசேஷங்களில் அதிருப்தியில் ஆரம்பித்து, முகசுழிப்பின் வழியாக சென்று, சண்டை முதல் சாபம் வரை உருவாவது ஏன்?

(அந்த மனிதனின் துணைவியாரின்ன் புலம்பல்கள் தொடர்ச்சி)

இரண்டு ஆண்பிள்ளைகளின், கிரகப்ரவேசத்திலும் பிரச்னை.

ஷஷ்டிக்கு பட்டு எடுத்ததில் பிரச்னை.

திருக்கடையூர் விசேஷத்தில் பிரச்னை.

ஷஷ்டியிலும் பிரச்னை.

மிக சமீபத்தில், மேல மருங்கூர் கோவில் சம்பந்தமான பல விஷயங்களிலும் பல பிரச்சனைகள். ஏன்?

இன்னும் நிறைய வரிசை படுத்தலாம்.

pasi

இவர்களை யார் என்னை மருமகளாக தேர்ந்து எடுக்க சொன்னது? அனுபவங்கள் ஜனவரி 2022/2..

(அந்த மனிதனின் துணைவியாரின்ன் புலம்பல்கள் தொடர்ச்சி)

அனுபவங்கள் ஜனவரி 2022/2..

 

40 வருடம் குடும்பம் நடத்தி, சந்தோஷமாக இருந்தாலும், இவர்களின் குறைகளை ஆராயும் பொழுது, என்னை அவர்களின் அடிமையாக்கி வழி நடத்தியது போல் தெரிகிறது.

60 க்கு மேல் உள்ள வயது காரரான எனது வீட்டுக்காரராகட்டும், 55 தாண்டிய நான் ஆகட்டும், நாங்கள், எங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமகள்கள் சொல்வதைத்தான் கேட்போமே தவிர, மற்ற எங்கள் குடும்பத்தை தாண்டிய குடும்பங்களின் அறிவுரையை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்?

உறவு வேண்டும் என்றால், அதற்கு தகுந்த மாதிரி பழகவேண்டும். எல்லை மீறி/தாண்டி தலையிட கூடாது. பழக தெரியவில்லை என்றால் இன்று நிறைய புத்தகங்கள், யூ டியூப் மூலமாக கற்றுக்கொள்ளலாம்.

அல்லது ஒதுங்கிக்கொள்ள வேண்டும். நாங்கள் ஒதுங்கிபோவதை, புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

பேரன் பேத்தி உள்ளவர்கள், யாரும், யாருக்கும் கட்டுப்பட தயாராக இல்லை என்பதுதான் உண்மை.

அடிப்படை மையம்-2
Ajaya Book II Tamil

மஹா பாரதம்

பாண்டவர்களும், கவுரவர்களும் சண்டை போட்டதில், இரு படை வீரர்களும் அழிந்து, நிறைய கைம்பெண்களை உருவாக்கினார்கள்.

முட்டாள்தனமான சண்டையில், நிறைய மாய்ந்தது பொது படை வீரர்கள். எது தர்மம் என்று மக்களை முட்டாள் ஆக்கி, இதுதான் தர்மம் என்று மக்களை, முட்டாள் தனமாக எப்படி நம்ப வைக்கப்படுகிறது என்பதை, கௌரவன் நூல்களை படித்தாள் விளங்கும். மக்கள் முட்டாள் தனமாக எப்படி நம்புகிறார்கள் என்பது தெளிவாக புரியும்.

கௌரவர்கள், பாண்டவர்கள் யாரும் எனக்கு வேண்டியவர்கள் இல்லை. அவர்களின் கதைப்படி தான் இன்று சாதாரண குடும்பங்களில் நடக்கிறது.

அந்த குடும்பம் சொல்வதை கேட்கிறாய், அது தவறு. எனது குடும்ப உறுப்பினர்கள் சொல்வதில் ஞாயம், தர்மம் இருக்கிறது. நான் சொல்வதை கேள். நான் நல்லதுக்குதான் சொல்கிறேன். பணம் இருப்பதால், அவர்கள் பேச்சு எடுபடுகிறது.

இது ஒரு முட்டாள்தனமான மூட நம்பிக்கை.

வெற்றியின் உண்மை வழி

சமீபத்தில், ஒரு நபர் 50 கடை திறந்தவர்,

துவாரகா திருமண மண்டபத்தில், 7 நிமிடம் அந்த மனிதனிடம் பேசினார். அவர் பேசியதில், பல வியாபார விஷயங்கள் புரிந்தது. அவரின் பாதத்தை தொட்டு வாங்கணும் போல் இருந்தது, அந்த மனிதனுக்கு .

50 கடை திறந்தவர், அந்த மனிதனின் , 3 தலைமுறை வியாபாரத்தின் வளர்ச்சியை கேள்விக்குறியாக்கி விட்டார். ஒப்பிடவே முடியாது.

அதற்காக, அந்த மனிதனின் தந்தை மற்றும், மாமா போன்ற எனது சில மலேசியாவை சேர்ந்த வியாபார குரு மார்களை மதிக்காமல் இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அந்த மனிதனின் விதி படி, கர்ம பலன் படி அந்த மனிதன் பொருளாதார ரீதியில் வளர்ந்தான்.

ஒரு நதியை கடக்க, ஒரு ஓடத்தை பயன் படுத்தியதால், அந்த ஓடத்தை, வாழ்நாள் முழுவதும் தலையில் சுமந்து செல்ல அவசியம் இல்லை.

அதாவது, அந்த காலத்தில் அவசியமான வியாபார யுக்தி, இன்று அத்தனை பலன் தருவதில்லை. புதிய யுக்திகளை, இது போன்ற வெற்றி அடைந்தவர்களிடம் கற்க வேண்டியுள்ளது. வளர விரும்புபவர்களுக்கு இது அவசியம்.

புது புது யுக்திகள் புது ரத்தம் போல். பழையதை மறக்காதே, மாறிவிடாதே, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை, இது போன்ற நம்பிக்கைகளில் ஊறி போய் விட்டவர்கள், மாற முன் வரமாட்டார்கள், அடுத்தவன் மாறுவதை முட்டுக்கட்டை போடவும் செய்வார்கள்.

மாற தெரியாதவர்கள், அவர்களால் பொருளாதார ரீதியில் அப்படி ஒன்றும் சாதிக்க முடிவதில்லை. அதை விட முக்கியம், மாற்றத்தின் அவசியம் புரிவதும் இல்லை.

மாற்றம் தவிர எதுவும் நிரந்தரம் இல்லை. காலத்துக்கு தக்க மாறத்தெரியாதவர்கள், வாழ்வில் முன்னேற முடிவதில்லை.

Thunivu

மேலும் மாதம் ஒன்றிரண்டு வாழ்வின் எனது அனுபவங்கள் ஜனவரி 2022.

அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும் தொடர்பானவற்றை படிக்க விரும்பினால், கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:-

அனுபவங்கள் ஜனவரி 2022/1.
அனுபவங்கள் ஜனவரி 2022/3..

இன்னும் அனுபவங்கள் மனோவியல் சாஸ்திர ஆராய்ச்சிபூர்வமாக வரும்

இப்படிக்கு,

MKP பாண்டுரெங்கன்